தினம் தினம் திருக்குறள் 06

Share:திருக்குறள் பகுதி 06

அறத்துப்பால்:
அறத்துப்பால் 38 அதிகாரங்களையும் 4 இயல்களையும்  உடையது.

பாயிரவியல் = 4 அதிகாரங்கள்

இல்லறவியல் = 20 அதிகாரங்கள்

துறவறவியல் = 13 அதிகாரங்கள்

ஊழியல் = 1 அதிகாரங்கள்பொருட்பால்:

பொருட்பாலில் 70 அதிகாரங்களையும் 3 இயல்களையும்  உள்ளது.

அரசியல் = 25 அதிகாரங்கள்

அங்கவியல் = 32 அதிகாரங்கள்

குடியியல் = 13 அதிகாரங்கள்


இன்பத்துப்பால்:
 இன்பத்துப்பால் 25 அதிகாரங்களையும் 2 இயல்களையும்  உடையது.

களவியல் = 7 அதிகாரங்கள்

கற்பியல் = 18 அதிகாரங்கள்


திருக்குறளின் உரைகள்:
திருக்குறளுக்குப் பத்து பேர் உரை உள்ளது எனப் பழம்பாடல் ஒன்று கூறுகிறது.

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்

 பரிதி பரிமே லழகர்-திருமலையர்

மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு

எல்லையுரை செய்தார் இவர் 


இவர்களில் பரிமேலழகர்மணக்குடவர்காலிங்கர்பரிதிபரிப்பெருமாள் ஆகிய ஐவர் உரைகள் வெளிவந்துள்ளன. தருமர்தாமத்தர்நச்சர் ஆகிய மூவரின் உரைகள் சில குறட்பாக்களுக்கு மட்டும் கிடைத்துள்ளன. திருமலையர்மல்லர் ஆகிய இருவர் உரை கிடைக்கவில்லை.

கிடைத்துள்ள இந்த உரைகளில் காலத்தால் பிந்திய பரிமேலழகர் உரை 13 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. பரிப்பெருமாள் காலம் 11 ஆம் நூற்றாண்டு எனத் தெளிவாகத் தெரிகிறது. 


·இவரது உரை மணக்குடவர் உரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. எனவே மணக்குடவர் காலம் 10 ஆம் நூற்றாண்டு என்பதாகிறது. ஏனைய மூவர் உரைகளைக் காலிங்கர்பரிப்பெருமாள்பரிமேலழகர் எனக் கால வரிசைப்படுத்தலாம். பரிதியார் உரை காலிங்கர் உரையைத் தழுவிச் செல்கிறது.

கருத்துகள் இல்லை