தினம் தினம் திருக்குறள் 01

Share:


தமிழ் இலக்கண வரலாறு.



திருக்குறள் 

நூல் குறிப்பு:

•    திருக்குறள் உலகப்புகழ் பெற்ற இலக்கியமாகும்.

•    உலகப்பொதுமறை என்றும் அதனை அழைக்கிறோம்.

•    இதனை இயற்றியவர் திருவள்ளுவர்

•    பாவகை – வெண்பா

•    திருக்குறளில் 133 அதிகாரங்களும், அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக் 1330 குறட்பாக்கள் உள்ளன.

•    திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது.

•    அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்

•    பொருட்பால் - 70 அதிகாரங்கள்

•    இன்பத்துப்பால் - 25 அதிகாரங்கள்

•    பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது


வேறு பெயர்கள் :  

•    திருவள்ளுவம், 

•    தமிழ் மறை, 

•    உலக பொதுமறை,

•    முப்பால், 

•    பொய்யாமொழி, 

•    தெய்வநூல், 

•    வாயுறைவாழ்த்து, 

•    உத்தரவேதம், 

•    திருவள்ளுவப் பயன் (நச்சினார்க்கினியர்), 

•    தமிழ் மாதின் இனிய உயர் நிலை, 

•    அறஇலக்கியம், 

•    அறிவியல் இலக்கியம்,  
   
•    குறிக்கோள் இலக்கியம், 

•    நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு, 

பெயர்க்காரணம்:

•    திரு + குறள் = திருக்குறள்

•    குறுகிய அடிகளை கொண்டதால் இப்பெயர் பெற்றது.

•    திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”


ஆசிரியர் குறிப்பு:

•    திருவள்ளுவர் வாழ்ந்த காலம்: கி.மு 31 

திருவள்ளுவரின் வேறு பெயர்கள் : 
•    நாயனார்

•    தேவர் (நச்சினார்க்கினியர்)

•    முதற்பாவலர்

•    தெய்வப்புலவர் (இளம்பூரனார்)

•    நான்முகன்

•    மாதானுபாங்கி

•    செந்நாப்போதார்

•    பெருநாவலர்

•    பொய்யில் புலவன்

9 கருத்துகள்:

  1. தரமாக இருக்கிறது ... நன்றி சார்

    பதிலளிநீக்கு