நடப்பு நிகழ்வுகள் (June 21 – 27) weekend slip test

Share:


ஜூன் – 21

...


உலக யோகா நாள் (2015 முதல்) உலக இசை நாள் ; அமைப்பு - யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டீஸ் நெட்வொர்க் (UCCN) உலக தந்தையர் நாள்

1. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக சோவியத் ரஷியா வெற்றி பெற்ற 75 வது நினைவைக் குறிக்கும் வகையில் மாஸ்கோவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் இந்தியா சார்பில் கலந்து கொண்டவர்

...


விடை : ராஜ்நாத் சிங் (பாதுகாப்புத் துறை அமைச்சர்)

2.பசுவதைக்கு தண்டனை அளிக்கும் அவஸ்ர சட்ட வரைவு எந்த மாநிலத்தில் கொண்டுவரப்பட்டது

...


விடை : உத்திரபிரேதேசம்

3.லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தின் எத்தனையாவது படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்

...


விடை : 16வது பீகார் படைப் பிரிவினர்

4.முதலாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு

...


விடை : 1952

5.மாநிலங்களவை நடைமுறைக்கு வந்த நாள்

...


விடை : ஏப்ரல் 3, 1952

6.மாநிலங்களவையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள்

...


விடை : மே 13, 1952

7.சட்டங்களை இயற்றவும் திருத்தங்களை மேற்கொள்ளவும் நாடாளுமன்றத்தில் இரண்டு வெவ்வேறு அவைகள் இருக்க வேண்டும் எனக் கூறும் கோட்பாட்டின் பெயர்

...


விடை : ‘பைகேமரிலிசம்’ எனும் ஈரவைக் கோட்பாடு

8. 1950இல் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து, மாநிலங்களைவையின் முதல் தலைவராக இருந்தவர்

...


விடை : சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

9.‘பிரதிநிதித்துவ அரசாங்கம் குறித்த சிந்தனைகள்’ என்ற நூலின் ஆசிரியர்

...


விடை : ஜான் ஸ்டூவர்ட் மில்

10.நாடாளுமன்றத்தில் இதுவரை எத்தனை முறை கூட்டு அமர்வுகள் கூட்டப்பட்டுள்ளன

...


விடை : 3 முறை

ஜூன் – 22 11. முப்படையின் தலைமைத் தளபதி

...


விடை : விபின் ராவத் (ராணுவம் - எம்.எம். நரவனே, கடற்படை – கரம்விர் சிங், விமானம் - ஆர்.கே.எஸ்.பதௌரியா)

12.‘பிரதமர் பாசல் பீம் திட்டம் 2016’

...


விடை : பயிர்க் காப்பீடு

13.‘பிரதமர் கிசான் சம்மன் நிதி’

...


விடை : விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ. 6000/-

14.‘பிரதமர் கிசான் ஓய்வூதியத் திட்டம்’

...


விடை : குறு – சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.3000/-

15. சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க தமிழகத்திற்கு நடுவண் அரசு ஒதுக்கியுள்ள நிதி

...


விடை : ரூ. 1428.27 கோடி

16.சீன ஏற்றுமதியில் எத்தனை சதவீதம் இந்தியாவுக்கு வருகிறது?

...


விடை : 14%

17.ஜூன் 21னை சர்வதேச யோகா தினமாக ஐநா அறிவித்த நாள்

...


விடை : 2014 டிசம்பர் (2015 முதல்)

18. இந்திய – ஜப்பானிய கலைநயத்தில் ‘ருத்ராக்ஷ்’ என்ற சர்வதேச மாநாட்டு மையம் எங்கு அமையவுள்ளது?

...


விடை : வாரணாசி (‘காசி விஸ்வநாதர் தாம்’ திட்டத்தின் மூலம்)

19. இந்தியாவும் சீனாவும் பஞ்சசீல ஒப்பந்தம் செய்து கொண்ட ஆண்டு

...


விடை : 1954

20. திபெத்திலிருந்து தலாய் லாமா இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்த ஆண்டு

...


விடை : 1959

21. ஜம்மு காஷ்மீருடன் லடாக் இணைக்கப்பட்ட ஆண்டு

...


விடை : 1947

22. சிக்கிமை இந்தியாவுடன் இணைத்து 22 வது மாநிலமாக அறிவித்த பிரதமர்

...


விடை : இந்திராகாந்தி (1975)

23. உலகின் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி

...


விடை : 9வது இடம்

 ஜூன் – 23

...


• முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவ் 100வது பிறந்த நாள் • உலக விதவைகள் நாள் (2005 முதல்), ஐநா பொதுப்பணிகள் நாள், மாலுமிகள் நாள்

24. அமெரிக்க அரசு கடன் பத்திர முதலீட்டில் இந்தியாவின் இடம்

...


விடை : 12 (1.ஜப்பான், 2.சீனா, 3.பிரிட்டன்)

25. மத்திய அரசின் ஆசிரியர் கல்வியியல் (பிஎட்) நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு

...


விடை : 1947இல் டெல்லியில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களால் தொடங்கப்பட்டது. (இந்தியாவின் முதல் கல்வித் துறை அமைச்சர், பிறந்த நாள் நவம்பர் 11, தேசிய கல்வி நாள் 2008 முதல் கடைபிடிக்கப்படுகிறது)

ஜூன் – 24
26. டெல்லியில் ஒரு லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்டு கட்டப்பட்ட பிரம்மாண்ட மருத்துவமனையின் பெயர்

...


விடை : சர்தார் வல்லபாய் பட்டேல்

27. ஆக்கபூர்வமான சிந்தனைகளை வரவேற்கும் விதமாக “அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின்” புதிய கண்டுபிடிப்புகள் பிரிவு தொடங்கியுள்ள இணையதளத்தில் பெயர்

...


விடை : யுக்தி 2.0, இதன் முந்தைய பெயர் Massive Indian Novelty Depository (MIND), இந்தத் தளம் ஆன்லைன் சந்தை போல இயங்கும். இங்கே ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வாங்கவும், விற்கவும் முடியும்.

28. வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பத் துறையில் சிறப்புப் பணிகளை மேற்கொள்பவர்களுக்காக அமெரிக்கா வழங்கி வந்த விசா

...


விடை : H1B விசா

29. கார்கில் போர் நினைவு நாள்

...


விடை : ஜூலை 26

30. பாரதிய ஜனசங்கம் கட்சியை (1951) நிறுவியவர்

...


விடை : சியாமா பிரசாத் முகர்ஜி, 1977இல் பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது.

 ஜூன் – 25

...


• உலக வெண்புள்ளிகள் நாள் (மைக்கேல் ஜாக்சன் மறைந்த நாள், மருந்து – லூகோஸ்கின் என்ற மூலிகை மருந்து) • ஒலிம்பிக் நாள் (ஜூன் 23, 1894இல் உருவாக்கம், இந்நாள் 1948இல் ஏற்பு)

31. பாகிஸ்தானில் முதல் கிருஷ்ணர் கோவில் அமையவுள்ள இடம்

...


விடை : இஸ்லாமாபாத் (10 கோடி நிதி), பெயர் – கிருஷ்ணா மந்திர்

32. இந்தியாவுக்கு வெளியே அமையவுள்ள உலகின் முதலாவது யோகாப் பல்கலைக்கழகத்தின் பெயர்

...


விடை : விவேகனந்தர்

 ஜூன் – 26

...


• உலக போதைப் பொருளுக்கு எதிரான நாள் • சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான உலக நாள்

33. அமெரிக்காவின் கிளியட் நிறுவனம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்துள்ள மருந்து

...


விடை : ஹேபடைடிஸ் சி

34. சீனாவின் பணக்காரர்கள் பட்டியல்

...


விடை : 1- போனி மா (50 பில்லியன் டாலர்), 2- ஜாக் மா (48 பில்லியன் டாலர்)

 ஜூன் – 27

...


• நுண்ணிய, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நாள்

35. அமெரிக்காவின் உயரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய-அமெரிக்கர்

...


விடை : விஜய் சங்கர் (அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றமாக இது கருதப்படுகிறது.)

36. உலகின் மிக நீண்ட நேர மின்னல் ஏற்பட்ட நாடு

...


விடை : பிரேஸில் , ஆர்ஜெண்டீனா (16.73 விநாடிகள்

37. உலகின் மிக நீளமான மின்னல் ஏற்பட்ட நாடு

1 கருத்து: