ஆரஞ்சு அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம்-பரணம்,அரியலூர் மாவட்டம்.

Share:
ஆரஞ்சு அம்மாள் நல்வழி(GOODWAY)
பயிற்சி மையத்தின் 33 இலவச பாடக்குறிப்புகளை
1 மாதத்தில் தயார் செய்ய நாங்கள் செய்த செலவுத் தொகை ரூ.15,000/-பயிற்சி மையத்தை இலவசமாக சிறப்பாக நடத்தி வருகிறோம் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் எம் பயிற்சி மைய பாடக்குறிப்புகளை pdf வடிவில் இலவசமாக வழங்கி வந்தோம்...

இனிவரும் காலங்களில் அவ்வாறு செய்ய முடியாது .ஏனென்றால் மாதம் 15,000/- ஊதியம் கொடுத்து இலவச பாடக்குறிப்புகளை ஏன் தயார் செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டியுள்ளது.

நான் மிகவும் ஏழ்மையானவன்.
நான் பட்ட கஷ்டத்தை யாரும் படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த இலவச பயிற்சி மையத்தை நடத்தி வருகிறேன்.

10ம் வகுப்பில் 452 மதிப்பெண்ணும் 12ம் வகுப்பில் 949 மதிப்பெண் எடுத்தும் என்னால் மேற்படிப்பை தொடர முடியவில்லை.பிறகு கூலி வேலைக்கு சென்று தான் ஒரு டிகிரி முடித்தேன்.அதுவும் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே படித்தேன்...
2008-2012 வரை நான் பட்ட இன்னல்களை இந்த உலகில் யாருமே அனுபவித்து இருக்க முடியாது.

2012ல் காவலர் தேர்வில் வெற்றி பெற்று 2013ல் காவலராக பணியில் சேர்ந்த போது தான் போட்டித்தேர்வு ஒன்று இருக்கு என்பதை உணர்ந்தேன்.

நான் காவலர் பணியில் சேர்ந்ததால் நான் செய்து வந்த இலவச Tuition ஐ என்னால் தொடர முடியவில்லை அதனால் 50,000/-வரை ஊதியம் கிடைக்கும் உதவி ஆய்வாளர் (SI Of Police)பணியை கூட விரும்பாமல் 20,000/- ஊதியத்தில் அரசு பள்ளியில் ஆய்வ உதவியாளராக (Lab assistant)2017ல் பணியில் சேர்ந்தேன்.

என்னுடைய  IAS கனவை நிறைவேற்றும்விதமாக பயிற்சி பெற விரும்பிய நான் பிரபல தனியார் பயிற்சி மையத்தில் சேர விரும்பினேன்.ஆனால் ஒரு அரசு பணியில் இருந்தும் பயிற்சிக்கு உண்டான பெருந்தொகையை என்னால் கட்ட முடியவில்லை. இந்த ஏமாற்றத்தின் விளைவாக உருவானது இந்த இலவச பயிற்சி மையம்....

வாழும் தெய்வங்களின்(ஆசிரியர்கள்,நன்கொடையாளர்கள்) உதவியால் இந்த இலவச பயிற்சி மையம் சிறப்பானதொரு வளர்ச்சி அடைந்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமடைந்த பயிற்சி மையமாக உருவெடுத்துள்ளது.

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவ மாணவிகள் எம் இலவச பயிற்சி மையத்தில் பயின்று வருவது கூடுதல் சிறப்பாகும்.

வெளிமாவட்ட மாணவ மாணவிகள் இலவசமாக தங்கி படிக்க  வசதியாக ரூ.15,00,000/-மதிப்பீட்டில் கட்டிட பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இலவச தங்குமிடத்துடன் இலவச பயிற்சி அளித்து வரும் ஒரே பயிற்சி மையம் எம் இலவச பயிற்சி மையமாகும்.(தேவையெனில் பயன்படுத்திகொள்ளலாம்)

மிகவும் ஏழ்மையான மாணவர்களுக்கு உணவும் இலவசமாக வழங்கி வருகிறோம்...

தேர்வை எழுதிவிட்டு வருத்தப்படுவதைவிட எம் இலவச பயிற்சி மையத்தை தேர்ந்தெடுத்துவிட்டு சந்தோசப்படுங்கள் வாழ்நாள் முழுவதும்..

       💪💪💪💪💪

கருத்துகள் இல்லை