Type Here to Get Search Results !

25 ஜூன் 2020 - வியாழன் தினசரி நடப்பு நிகழ்வுகள்

0

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்
1.அனைத்து நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் இனி இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.


2.இ-பாஸ் இல்லாமல் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு ஒரு மாவட்டத்திற்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று முதல்வர் கே.பழனிச்சாமி தெரிவித்தார். இதேபோல மாவட்டங்கள் இடையே பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துக்கும் தடை செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.



3.சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் இருபதாயிரம் கோடி கடன் உதவி வழங்குவதற்காக கடன் உறுதியளிப்பு திட்டத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தொடங்கிவைத்தார்.


4.தொடர்ந்து 18 நாட்கள் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வின் காரணமாக தலைநகர் தில்லியில் நாட்டிலேயே முதன் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 79.76 க்கும் டீசல் லிட்டருக்கு 79.88 க்கு விற்பனையானது.


5.ரஷ்யாவில் நடைபெறும் சோவியத் யூனியன் வெற்றியின் 75 நினைவு தின இராணுவ அணிவகுப்பில் இந்திய படைகளையும் பங்கேற்றது மிகுந்த பெருமை அளிக்கிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.


6.புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்த பிரதமரின் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் என்ற வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற பொதுப்பணித் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக அரசு மூத்த அதிகாரிகளைக் கொண்ட 116 சிறப்பு அதிகாரிகளை (நோடல் அதிகாரிகள்) மத்திய அரசு நியமித்தது.


7.சிப் பொருத்தப்பட்ட மின்னணு கடவுச் சீட்டுகளை (இ-பாஸ் போர்ட்) அறிமுகப்படுத்தி அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


8.குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள டயபர் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர 48 மணி நேரம் ஆகும் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.


9.கரோனா நோய்த்தொற்று அபாயத்தை எதிர் கொள்வதில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை என்று ஐ.நா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டெரஸ் குற்றம்சாட்டினார்.


10.பொது முடக்க காலத்தில் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை கல்வித்துறை அறிமுகப்படுத்தியது. அவை e-learn.tnschools.gov.in .

கருத்துரையிடுக

0 கருத்துகள்