23 ஜூன் 2020 - செவ்வாய் தினசரி நடப்பு நிகழ்வுகள்

Share:
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.சென்னையை தொடர்ந்து மதுரை மாவட்ட பகுதிகளிலும் வரும் 24ம் தேதி முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.


2.ரயில்வேயில் தனியார்கள் வர்த்தகம் செய்ய பெரும் வாய்ப்பு உள்ளது. பயணிகள் போக்குவரத்தையும் சரக்கு ரயில் நிலையம் ரயில்வே அமைச்சகம் குத்தகைக்கு விட தயாராக இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.


3. சீனாவுடனான எல்லையில் 32 சாலை திட்ட பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


4.ஒடிசாவில் பிரசித்தி பெற்ற புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையை பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


5.நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 56% பேர் இதுவரை மீட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.


6.கிராமங்களின் வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட பிரதமரின் மாதிரி கிராமத் திட்டம் (சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா) அதன் நோக்கத்தை நிறைவேற்ற வில்லை என்றும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


7.தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் விற்பனை இல்லாததால் ரூபாய் 800 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை