19 ஜூன் 2020 - வெள்ளி தினசரி நடப்பு நிகழ்வுகள்

Share:
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.உத்தரபிரதேசத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து காண வழித்தடத்தில் சமிக்கைகள், தொலைத்தொடர்பு வசதிகளை அமைப்பதற்கான சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.


2.பொது முடக்கத்தால் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் ரூபாய் 50,000 கோடி கிராமப்புற பொதுப்பணி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.3.பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை படிப்பதற்கு 18 பேர் கொண்ட குழுவுக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


4.சீனாவின் ஆயுதப்படைகளின் திறனை மேம்படுத்துமாறு ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.


5.கரோனா நோய் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை முதல் மேலும் மூன்று மாதங்களுக்கு ரேஷன் பொருள்களை விலையில்லாமல் வழங்கி தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


6.கரோனா நோய் தொற்றும் தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட மாவட்ட வாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மண்டல வாரியாக குழுக்களும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு மட்டும் கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்படவில்லை.


7.ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மற்ற உறுப்பு நாடுகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்தியா வெற்றி பெற்றது. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா தேர்ந்தெடுக்கப்படுவது இது எட்டாவது முறையாகும்.


8.பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 12வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 80.86 லிருந்து 81.32 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் 73.69 லிருந்து 74.23 ஆக அதிகரித்துள்ளது.


9. நேபாளத்தில் இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய வரை படத்திற்கு ஒப்புதல்
தரும் அரசமைப்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


10.காரைக்கால் பகுதி கோட்டுச்சேரி சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி சிசே.சேவியர் காலமானார்.


11. நாட்டின் முதலாவது நடமாடும் கரோனா ஆய்வகத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தில்லியில் தொடங்கிவத்தார்.


12.இயற்கையை மனிதர்கள் அழிப்பதால் கரோனா நோய் தொற்று போன்ற கொள்ளை நோய்கள் உருவாகின்றன என்று உலக வனவாழ்வு நிதியம் தெரிவித்தது.


13.கரோனா நோய்தொற்றுக்கு தடுப்பு நடவடிக்கைக்கான முழு பொது முடக்கம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகின்றனர்.


14.தமிழகத்தின் ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போலவே ஆங்கிலத்திலும் எழுத உத்தரவிடப்பட்ட அரசாணை திரும்ப பெறப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் தறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

1 கருத்து: