Type Here to Get Search Results !

11 ஜூன் 2020 - வியாழன் தினசரி நடப்பு நிகழ்வுகள்

0
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்


1.தமிழகத்தின் வருவாய் நிதி பற்றாக்குறை கூடுதல் மானியமாக குறு நீர்ப்பாசனத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூபாய் 814 கோடி ஒதுக்கியுள்ளது.


2.தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தை விவாதிப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, இதை எடுத்து அந்த விவகாரம் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.


3.மத்திய சுகாதார திட்ட (சி.ஜி.ஹெ.எஸ்) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் அந்த திட்ட பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


4.கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் காலமானார்.


5.அவசர கால தேர்தல்களை எதிர்கொள்வதற்கு நிதியைத் திரட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்த பிஎம் கேர் நிதியை தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டு வர பிரதமர் அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்தது.


6.எதிர்கட்சியினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புக்கிடையே அதிரப்பள்ளி நீர் மின் திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு அனுமதி அளித்தது.


7.தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக பள்ளி கல்வி துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியம் தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவினர் குழு தமிழக அரசிடம் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது.


8.நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 85 சதவீதம் பேர் இந்தியாவில் இருந்து திரும்பியவர்கள் என்று அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஓலி தெரிவித்தார்.


9.அசாமில் பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியாவுக்கு சொந்தமான எண்ணெய் கிணற்றில் பற்றிய தீ இரண்டாவது நாளாக கொழுந்துவிட்டு எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் இருவர் பலியானார்.


10.கரோனா நோய் தோற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரேசில் தங்கள் நாட்டை அந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை மீண்டும் வெளியிடத் தொடங்கியது.


11.பொது முடக்கத்தில் முன்பு இந்தியா விற்க்கப்பட்டுள்ள உள்நாட்டு வெளிநாட்டு செல்லிடப்பேசியில் விலை தற்போது 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. செல்லிடப்பேசி களின் உதிரிபாகங்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.


12. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 87 வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்