Type Here to Get Search Results !

07 ஜூன் 2020 - ஞாயிறு தினசரி நடப்பு நிகழ்வுகள்

0
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வரிசையில் இத்தாலியை விஞ்சி ஆறாவது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது.


2.கிழக்கு வட எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய சீன ராணுவத்தின் துணைத்தளபதி நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.


3.பொது முடக்கம் காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை உருவாக்கித் தர முழுமையான புள்ளி விவரங்கள் திரட்டுவது அவசியம் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.


4.நிலக்கரி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.


5.இந்தியாவில் கரோனா நோய் தொற்று பாதிப்பு இன்னும் தீவிரம் அடையவில்லை என்று உலக சுகாதார அமைப்பு, அதற்கான அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.


6.தாய்மை வயது மற்றும் பிரசவ நேர இறப்பு விகிதம் குறித்து ஆய்வு செய்து சட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்பது குறித்து பரிந்துரை செய்ய பணிக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. அரசியல்வாதியும், எழுத்தாளருமான ஜெயா ஜெட்லி தலைமையிலான இந்த பத்து பேர் பணிக்குழு திருமண வயது, தாய்மை அடையும் போது பிரசவ நேர இறப்புக்கான காரணங்களை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து மத்திய அரசிடம் ஜூலை 31 ஆம் தேதி அறிக்கை சமர்பிக்க உள்ளது.


7.கேரளத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஜூன் 8 தேதி முதல் ஆன்டிபாடி பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.


8. மிசோரம், மணிப்பூர், ஜார்கண்ட் மாநிலங்களில் ஆளுநராக பதவி வகித்து இருந்த வேத் மார்வா (87) காலமானார்.


9.இந்தியாவில் முதன் முறையாக மொபைல் செயலி மூலமாக நடப்பு கணக்கு தொடங்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக இன்டஸ் இண்ட் வங்கி தெரிவித்துள்ளது.


10.மத்திய அரசு உருளைக் கிழங்கினை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கி, இது தொடர்பாக அறிக்கை வெளியான நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உருளைக் கிழங்கு விவசாயம் செய்து வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்