Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC Gr 1, 2, 2A, 4 அறிவியல்

அறிவியலில் இந்த 3 TOPICS படிங்க கம்பமா 6 QUESTIONS வரும்
lab assistant
TNPSC Gr I, II, IIA, IV
இதை மட்டும் படித்தால் போதுமானது




அமிலம் காரம் உப்பு




அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 9th New School Book



Click here to Download PDF


1. (03.04.2020)Archaeological Officer in Archaeology Department in the Tamil Nadu General Subordinate Service
Click here to Download PDF

2. (26.02.2020)Veterinary Assistant Surgeon in Tamil Nadu Animal Husbandry Service


3. (14.01.2020)Assistant Section Officer (Translation) in Tamil Development and Information Department in Tamil Nadu Secretariat Service




 10 - ம் வகுப்பு அறிவியல் - வேதிவினைகள்
 வேதிவினைகள்

  • வேதிவினையில் பங்கு பெறும் பொருள்கள் வினைபடு பொருட்கள் எனப்படும். அதனால் உருவாகும் பொருட்கள் வினைவிளை பொருட்கள் எனப்படும்

வேதிவினைகளின் வகைகள்
i)கூடுகை வினை
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்கள் சேர்ந்து ஒரு வினை விளை பொருளை உருவாக்குவது கூடுகை வினை எனப்படும்
  • எடுத்துக்காட்டு:
நிலக்கரி எரிதல்: C + O—> CO2 
ஹைட்ரஜன் எரிதல்: 2H2 + O2 —>2H2O
ii)சிதைவுறுதல் வினை

  • ஒரு சேர்மம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களாக பிரிவது சிதைவுறுதல் வினை எனப்படும்
  • எடுத்துக்காட்டு:
சுண்ணாம்புக்கல் சிதைவுறுதல் :
CaCO3 —Δ> CaO + CO2அம்மோனியம் டைகுரோமேட் சிதைவுறுதல் :
          (NH4)2Cr2O7Δ Cr2O+ N2 +4H2O
  • அம்மோனியம் டைகுரோமேட் மிக அதிக வெப்ப நிலையில்  உடனடியாக சிதைவுற்று நீராவியுடன் பச்சை நிற வாயு உருவாகிறது. இவ்வாறு நிகழ்வது ஒரு எரிமலை வெடிப்பது போல் இருப்பதால் இது வேதி எரிமலை என அழைக்கப்படுகிறது

iii)இடப்பெயர்ச்சி வினை

  • ஒரு வினைத்திறன் மிக்க தனிமம் வினைத்திறன் குறைந்த தனிமத்தை அதன் சேர்மத்திலிருந்து இடப்பெயர்ச்சி செய்யும் வினை இடப்பெயர்ச்சி வினை எனப்படும்
  • எடுத்துக்காட்டு:
           Pb + CuCl2 —> PbCl+Cu                   
காரியத்திற்கு தாமிரத்தை அதன் உப்பு கரைசல் களிலிருந்து இடப்பெயர்ச்சி செய்ய முடியும். ஆனால் தாமிரம், துத்தநாகத்தையோ, காரியத்தையோ அவற்றில் கரைசலில் இருந்து இடப்பெயர்ச்சி செய்ய முடியாது. ஏனெனில் துத்தநாகம், காரியம் ஆகியவற்றைவிட தாமிரம் குறைந்த வினைத்திறனைக் கொண்டுள்ளது

iv)இரட்டை சிதைவு வினை (இரட்டை இடப்பெயர்ச்சி வினை)

  • இரண்டு வினைபடு பொருட்களின் அயனிகளுக்கு இடையே இட மாற்றம் நிகழ்ந்து வேறு இரண்டு வினை விளை பொருட்களைத் தரும் வினை இரட்டை இடப்பெயர்ச்சி வினை எனப்படும்
  • எடுத்துக்காட்டு:
Na2SO4 + BaCl—> BaSO4 +2NaCl

v)ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம்

  • துணிகளின் நிறம் மங்குதல், சமையல் எரிவாயு, நிலக்கரி எரிதல், இரும்பு சாமான்கள் துருப்பிடித்தல் ஆகிய எல்லா நிகழ்வுகளும் ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் என்ற வினைகளினால் ஏற்படுகின்றன
  • தொழிற்சாலைகளின் மின் பூச்சு செய்யவும், அலுமினியம் போன்ற உலோகங்களை பிரித்தெடுக்கவும் ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை பயன்படுகிறது

ஆக்சிஜனேற்றம்

  • ஒரு வேதிவினையில் ஆக்சிஜன் சேர்க்கப்படுவதோ அல்லது ஹைட்ரஜன் நீக்கப்படுவதோ அல்லது எலக்ட்ரான்கள் நீக்கப்படுவதோ நிகழும்போது அந்த வினை ஆக்சிஜனேற்றம் எனப்படும்
2Mg +O—> 2MgOஇந்த வினையில் ஆக்சிஜன் சேர்க்கப்படுகிறது
H2S + Br2 —>2HBr + Sஇந்த வினையில் ஹைட்ரஜன் நீக்கப்படுகிறது
Fe2+ —> Fe3+ + e-இந்த விலையில் எலக்ட்ரான் நீக்கப்படுகிறது

ஒடுக்கம்

  • ஒரு வேதிவினையில் ஹைட்ரஜன் சேர்க்கப்படுவதோ அல்லது ஆக்சிஜன் நீக்கப்படுவதோ அல்லது எலக்ட்ரான் ஏற்கப்படுவதோ நிகழும் போது அந்த வினை ஒடுக்கம் எனப்படும்
2Na +H—> 2NaH
இந்த வினையில் ஹைட்ரஜன் சேர்க்கப்படுகிறது
CuO +H—> Cu + H2Oஇந்த வினையில் ஆக்சிஜன் நீக்கப்படுகிறது
 Fe3+ + e—> Fe2+இந்த வினையில் எலக்ட்ரான் சேர்க்கப்படுகிறது

ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை

  • ஆக்ஸிஜனேற்றமும், ஒடுக்கமும் ஒரே நேரத்தில் நிகழக்கூடிய வினை ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை எனப்படும்
Zn + CuSO4 —> Cu + ZnSO4   

vi)வெப்ப உமிழ் வினை, வெப்ப கொள்வினை
  • வேதிவினைகளின் போது வெப்பம் வெளியிடப்படவோ அல்லது வெப்பம் உட்கொள்ளப்படவோ செய்கிறது
வெப்ப உமிழ் வினைகள்
  • வெப்ப ஆற்றல் வெளியேறுவதுடன் நிகழும் வினை வெப்ப உமிழ் வினைகள் எனப்படும்
  • எடுத்துக்காட்டு:
N2 +3H—> 2NH3 + வெப்பம்
  • அனைத்து எரிதல் வினைகளும் வெப்ப உமிழ் வினைகள் ஆகும். இந்த வினைகள் நிகழும் போது வெப்பம் வெளியேற்றப்படுகிறது
வெப்ப கொள் வினைகள்
  • வெப்பத்தை ஏற்று நிகழும் வினைகள் வெப்ப கொள்வினைகள் எனப்படும்
2NH3 + வெப்பம் —> N2 +3H 

வேதிவினையின் வேகம்
  • ஓரலகு நேரத்தில் வினைபடு பொருட்கள் அல்லது வினை விளை பொருட்கள் இவற்றில் ஏதாவது ஒன்றின் செறிவில் ஏற்படும் மாற்றம் வினை வேகம் எனப்படும்


வேதிவினைகளின் வேகத்தை பாதிக்கும் காரணிகள்

1.வினைபடு பொருட்களின் இயல்பு
2.வினைபடு பொருட்களின் செறிவு
3.வினைபடு பொருட்களின் புறப்பரப்பு
4.வெப்பநிலை
5.வினையூக்கி

அமிலங்கள்
  • நீரில் கரையும் பொழுது Hஅயனிகளையோ அல்லது H3O+அயனிகளையோ தரும் பொருட்கள் அமிலங்கள் எனப்படும்
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜன் அணுக்களை அமிலங்கள் கொண்டுள்ளன
  • புளிப்புச் சுவையைக் கொண்ட எலுமிச்சம் சாறு, காடி, திராட்சைச் சாறு ஆகியவை அமிலத்தன்மை உடையவை
  • நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது
  • அமிலத்துடன் பினாப்தலின் சேர்க்கும்போது நிறமற்றதாகவும், மெத்தில் ஆரஞ்சு சேர்க்கும் போது இளஞ்சிவப்பு நிறமாகவும் காணப்படுகிறது
  • ஆப்பிளில் காணப்படும் அமிலம் மாலிக் அமிலம்
  • எலுமிச்சையில் காணப்படும் அமிலம் சிட்ரிக் அமிலம்
  • திராட்சையில் காணப்படும் அமிலம் டார்டாரிக் அமிலம்
  • தக்காளியில் காணப்படும் அமிலம் ஆக்சாலிக் அமிலம்
  • காடி (உணவு பதப்படுத்தி) - ல் காணப்படும் அமிலம் அசிட்டிக் அமிலம்
  • தயிரில் காணப்படும் அமிலம் லாக்டிக் அமிலம்


அமிலங்களின் வகைகள்

1.மூலங்களின் அடிப்படையில் அமிலங்கள்

i)கரிம அமிலங்கள்
ii)கனிம அமிலங்கள்

i)கரிம அமிலங்கள்
  • உயிரினங்களில் காணப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எனப்படும்
  • எடுத்துக்காட்டு
HCOOH, CH3COOH

ii)கனிம அமிலங்கள்

  • பாறைகள், கனிம பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எனப்படும்
  • எடுத்துக்காட்டு
HCl, HNO3 , H2SO4
2.காரத்துவத்தின் அடிப்படையில் அமிலங்கள்
  • காரத்துவம் என்பது ஒரு மூலக்கூறு அமிலத்தில் உள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை ஆகும்
  • எடுத்துக்காட்டு
          அசிடிக் அமிலத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும் ஒரே ஒரு ஹைட்ரஜனை மட்டுமே இடப்பெயர்ச்சி செய்ய முடியும். எனவே இது காரத்துவம் உடையது
i) ஒரு காரத்துவ அமிலம்
ii) இரு காரத்துவ அமிலம்
iii) முக்காரத்துவ அமிலம்

i) ஒரு காரத்துவ அமிலம்
  • இது நீர்க் கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியைத் தருகிறது
  • எடுத்துக்காட்டு
HCl, HNO

ii) இரு காரத்துவ அமிலம்

  • இது நீர்க் கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு இரண்டு ஹைட்ரஜன் அயனிகளைத் தருகிறது
H2SO4, H2CO3

iii) முக்காரத்துவ அமிலம்

  • இது நீர்க் கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு மூன்று ஹைட்ரஜன் அயனிகளைத் தருகிறது
  • எடுத்துக்காட்டு
H3PO4

3.அயனியுறும் அடிப்படையில் அமிலங்கள்


i) வலிமைமிகு அமிலங்கள்
ii) வலிமை குறைந்த அமிலங்கள்

i) வலிமைமிகு அமிலங்கள்
  • இவை நீரில் முழுவதுமாக அயனியுறுகின்றன
  • எடுத்துக்காட்டு
HCl

ii) வலிமை குறைந்த அமிலங்கள்
  • இவை நீரில் பகுதி அளவே அயனியுறுகின்றன
  • எடுத்துக்காட்டு
CH3COOH

4.செறிவின் அடிப்படையில் அமிலங்கள்
i) செறிவுமிகு அமிலங்கள்
ii) நீர்த்த அமிலங்கள்

i) செறிவுமிகு அமிலங்கள்

  • இவை நீரில் அமிலங்களின் சதவீதத்தை அதிக அளவில் கொண்டுள்ளன


ii) நீர்த்த அமிலங்கள்

  • இவை நீரில் அமிலங்களின் சதவீதத்தை குறைந்த அளவில் கொண்டுள்ளன


அமிலங்களின் வேதிப் பண்புகள்

1.உலோகங்களுடன் அமிலத்தின் வினை

  • துத்தநாக துகள்கள் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து துத்தநாகக் குளோரைடு, ஹைட்ரஜன் வாயுவையும் தருகிறது
  • Zn + 2HCl —> ZnCl2+H2
  • உலோகம் + அமிலம் —> உப்பு + ஹைட்ரஜன்
  • சில உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுவதில்லை
  • எடுத்துக்காட்டு
Cu,Ag
  • சுண்ணாம்புக் கல்,சுண்ணக்கட்டி, சலவைக்கல் ஆகியவை கால்ஷியம் கார்பனேட்டின் பல்வேறு இயற்பியல் உருவங்கள் ஆகும். இது அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பு, நீர், கார்பன்-டை-ஆக்சைடு வாயுவைத் தருகிறது


2.உலோக கார்பனேட்டுகளும், உலோக பைகார்பனேட்டுகளும் அமிலங்களுடன் புரியும் வினை
உலோக கார்பனேட் அல்லது உலோக பைகார்பனேட் + அமிலம் —> உப்பு + நீர் + கார்பன்-டை-ஆக்சைடு
MgCO3 + 2HCl —> MgCl2+H2O+CO2

3.உலோக ஆக்சைடுகளுடன் அமிலங்களின் வினை

உலோக ஆக்சைடு + அமிலம் —> உப்பு + நீர்
CaO + 2HCl —> CaCl2+H2O




4.நீருடன் அமிலங்களின் வினை


  • ஓர் அமிலம் நீருடன் சேர்ந்து ஹைட்ரஜன் அயனிகளைத் தருகிறது
  • ஹைட்ரஜன் அணுக்கள் தனித்து காணப்படுவது இல்லை. இவை நீருடன் சேர்ந்து ஹைட்ரோனியம்(H3O+) அயனிகளாக உள்ளன
  • நீர் இல்லாத போது அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அயனியை தனியாகப் பிரிக்க முடியாது
HCl + H2O —> H3O+ + Cl-



அமிலங்களின் பயன்கள்


1.கந்தக அமிலம் (வேதிப்பொருட்களின் அரசன்) கார் மின்கலன்கள், பல சேர்மங்களை தயாரிப்பதற்கு பயன்படுகிறது
2.நைட்ரிக் அமிலம் விவசாயத்தில் உரமாக பயன்படும் அமோனியம் நைட்ரேட் தயாரிக்க பயன்படுகிறது
3.ஹைட்ரோ குளோரிக் அமிலம் கழிவறைகளை தூய்மைப்படுத்தும் பொருளாக பயன்படுகிறது
4.டார்டாரிக் அமிலம் ரொட்டிச்சோடாவில் உள்ள ஒரு பகுதி பொருளாகும்
5.பென்சாயிக் அமிலத்தின் உப்பு (சோடியம் பென்சோயேட்) உணவுப் பொருட்களை பதப்படுத்தப் பயன்படுகிறது
6.காற்று அடைக்கப்பட்ட பானங்களில் கார்பானிக் அமிலம் பயன்படுகிறது

காரங்கள்

  • நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு (OH-) அயனிகளை தரும் சேர்மங்கள் காரங்கள் எனப்படும்
  • கசப்பு சுவையும், சோப்பு போன்ற வழுவழுப்புத் தன்மையையும் கொண்டுள்ளன
  • எடுத்துக்காட்டு 
  • சலவை சோடா, எரிசோடா, எரி பொட்டாஷ்
  • இவை சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றுகிறது
  • இவை பினாப்தலீனுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும், மெத்தில் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தையும் தருகிறது


காரங்களின் வகைகள்

1.அயனியாதல் அடிப்படையில் காரங்கள்

i) வலிமைமிகு காரங்கள்
ii) வலிமை குறைந்த காரங்கள்

i) வலிமைமிகு காரங்கள்

  • இவை நீரில் முழுவதுமாக அயனியுறுகின்றன
  • எடுத்துக்காட்டு
         NaOH,KOH

ii) வலிமை குறைந்த காரங்கள்

  • இவை நீரில் பகுதி அளவில் அயனியுறுகின்றன
  • எடுத்துக்காட்டு
      NH4OH,Ca(OH)2



2.அமிலத்துவத்தின் அடிப்படையில் காரங்கள்


  • அமிலத்துவம் என்பது ஒரு காரத்தின் ஒரு மூலக்கூறில் உள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ராக்சில் தொகுதிகளின் எண்ணிக்கை ஆகும்
i)ஓர் அமிலத்துவக்காரம்
ii) ஈர் அமிலத்துவக்காரம்
iii) மூன்று அமிலத்துவக்காரம்

i) ஓர் அமிலத்துவக்காரம்

  • இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு ஒரு ஹைட்ராக்சைடு அயனியைத் தருகிறது
  • எடுத்துக்காட்டு
          NaOH,KOH

ii)ஈர் அமிலத்துவக்காரம்
  • இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு இரண்டு ஹைட்ராக்சைடு அயனியைத் தருகிறது
  • எடுத்துக்காட்டு
          Ca(OH)2,Mg(OH)2



iii)மூன்று அமிலத்துவக்காரம்

  • இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு மூன்று ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருகிறது
  • எடுத்துக்காட்டு
       Al(OH)3,Fe(OH)3



செறிவின் அடிப்படையில் காரங்கள்

i) செறிவுமிகு காரங்கள்
ii) நீர்த்த காரங்கள்

i) செறிவுமிகு காரங்கள்
  • இவை நீரில் காரங்களின் சதவீதத்தை அதிக அளவில் கொண்டுள்ளன

ii) நீர்த்த காரங்கள்

  • இவை நீரில் காரங்களின் சதவீதத்தை குறைந்த அளவு கொண்டுள்ளன


காரங்களின் வேதிப் பண்புகள்

1.உலோகங்களுடன் காரத்தின் வினை

உலோகம் + காரம் —> உப்பு + ஹைட்ரஜன்
Zn + 2NaOH —> Na2ZnO2+H2

2.அலோக ஆக்சைடுகள் காரத்துடன் வினை

காரம் +அலோக ஆக்சைடு —>  உப்பு + நீர்
2NaOH + CO—> Na2CO+ H2O

3.நீருடன் காரங்களின் வினை 

நீரில் கரைக்கும் போது காரங்கள் ஹைட்ராக்சைடு அயனியைத் தருகிறது
NaOH —> Na+ + OH-

4.காரங்கள் அமிலங்களுடன் புரியும் வினை

காரம் + அமிலம் —> உப்பு + நீர்
NaOH+ HCl —> NaCl+ H2O

காரங்களின் பயன்கள்

  1. சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பு தயாரிக்க பயன்படுகிறது
  2. கால்சியம் ஹைட்ராக்சைடு கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கப் பயன்படுகிறது
  3. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு வயிற்றுக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது
  4. அம்மோனியம் ஹைட்ராக்சைடு துணிகளில் உள்ள எண்ணெய் கறைகளையும், பிசுக்குகளையும் நீக்க பயன்படுகிறது

PH அளவீடு

  • ஒரு கரைசலின் அமிலம் அல்லது காரத்தின் வலிமையை ஹைட்ரஜன் அயனிகளின் செறிவு அடிப்படையில் அளவிடுதல் Pஅளவீீீடு எனப்படும்
  • Pமதிப்புகள் ஒரு கரைசலின் தன்மை அமிலமா, காரமா, நடுநிலையா என்பதை தீர்மானிக்க பயன்படுகிறது
  • Pஅளவீட்டை அறிமுகப்படுத்தியவர் S.P.L.சாரன்சன்
  • நடுநிலைக் கரைசலின் PH = 7 
  • அமிலக் கரைசலின் P<7
  • காரக் கரைசலின் P >7
  • எலுமிச்சைச் சாறின் Pமதிப்பு 2.2 - 2.4
  • தக்காளிச் சாறின் Pமதிப்பு 4.1
  • காபியின் Pமதிப்பு 4.4 - 4.5
  • மனிதனின் உமிழ்நீரின் Pமதிப்பு 6.5 - 7.5
  • வீட்டில் பயன்படுத்தும் அம்மோனியாவின் Pமதிப்பு 12.0


அன்றாட வாழ்வில் PH - ன் முக்கியத்துவம்

1.மனித உடலில்  PH 

  •  PH மதிப்பைக் கொண்டு மனிதனின் உடல் நலம் கணிக்கப்படுகிறது
  • PH - ன் மதிப்பு 6.9 ஆக இருக்கும் போது மனித உடல் குளிர், இருமல் மற்றும் ப்ளூ ஆகியவற்றின் தாக்கத்திற்கு உள்ளாகிறது
  • மனித உடலில் PH 5.5 ஆக இருக்கும்போது புற்றுநோயை உருவாக்கும் செல்கள் உடலில் தோன்றி உயிர் வாழ ஏதுவாகிறது
  • ஒரு உடல் நலம் மிக்க மனிதனின் உடலில் உள்ள தோலின் P4.5-லிருந்து 6 ஆக இருக்கும்
  • நம் வயிற்றில் உணவை செரிமானம் செய்ய சுரக்கும் திரவத்தின் Pமதிப்பு ஏறக்குறைய 2 ஆகும்
  • மனித இரத்தத்தின் Pமதிப்பு 7.4 ஆகும்
  • உமிழ்நீரின் Pமதிப்பு 6.5-லிருந்து 7.5 க்குள் இருக்கும்
  • நம் உடலில் மிகவும் கடினமான பகுதி பற்களில் உள்ள எனாமல் என்னும் வெள்ளைப்படலம் ஆகும். இது கால்சியம் பாஸ்பேட் என்ற சேர்மத்தினாலானது. இது நீரில் கரைவதில்லை. உமிழ்நீர் Pமதிப்பு 5.5 க்கு கீழே குறையும் போது இந்த எனாமல் அரிக்கப்படுகிறது


2.மண்ணின் P

  • சிட்ரஸ் பழங்கள் காரத்தன்மையுடைய மண்ணிலும், அரிசி அமிலத்தன்மை கொண்ட  மண்ணிலும்,கரும்பு நடுநிலைத் தன்மை கொண்ட மண்ணிலும் அதிகமாக விளைகின்றன


3.மழைநீரின்  P

  • மழைநீரின் Pமதிப்பு ஏறக்குறைய 7 ஆகும். ஆனால் SO2 ,NOபோன்ற வாயுக்களினால் மாசுபடும் போது இதன் Pமதிப்பு 7-ஐ விட குறைந்து அமில மழை உருவாகிறது


உப்பு

  • அமிலங்களுக்கும், காரங்களுக்கும் இடையே நிகழும் நடுநிலையாக்கும் வினையின் மூலம் கிடைக்கும் விளைபொருட்கள் உப்புக்கள் என்ப்படும்
  • உப்புகள் நீரில் கரைந்து நேர்,எதிர் அயனிகளை உருவாக்குகின்றன


உப்புகளின் வகைகள்

1.சாதாரண உப்புகள்

  • ஒரு அமிலத்தையும், காரத்தையும் முழுமையாக நடுநிலையாக்கல் செய்யும் போது சாதாரண உப்பு கிடைக்கிறது
        NaOH + HCl —> NaCl + H2O


2.அமில உப்புகள்

  • உலோகங்கள் அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் பகுதியளவை வெளியேற்றுவதால் உருவாகின்றன
        NaOH +  H2SO—> NaHSO+ H2O


3.கார உப்புகள்

  • இரு அமிலத்துவ அல்லது மூன்று அமிலத்துவ  காரங்களிலுள்ள ஹைட்ராக்சைடு அயனிகளை ஓர் அமிலத்தால் பகுதியளவு வெளியேறச் செய்து பெறப்படுகிறது
       Pb(OH)+ HCl —> Pb(OH)Cl + H2O


4.இரட்டை உப்புகள்

  • சமமான மூலக்கூறு எடை விகித அளவுகளில் இரண்டு எளிய உப்புகளின் நிறைவுற்ற கரைசல்களைச் சேர்த்து படிகமாக்கும்போது இரட்டை உப்புக்கள் கிடைக்கின்றன
  • எடுத்துக்காட்டு
         பொட்டாஷ் படிகாரம்

உப்புகளின் பயன்கள்

1.சாதாரண உப்பு(NaCl)


  • இது நம் அன்றாட உணவிலும், உணவைப் பாதுகாப்பதற்கும் பயன்படுகிறது

2.சலவை சோடா( Na2CO3)

1.இது கடின நீரை மென்னீராக மாற்ற பயன்படுகிறது
2.இது வீடுகளில் சுத்தப்படுத்தும் பொருளாகப் பயன்படுகிறது

3.சமையல் சோடா(NaHCO3)

1.இது ரொட்டி சோடா தயாரிக்கப் பயன்படுகிறது ரொட்டி சோடா என்பது சமையல் சோடாவும், டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவையாகும்.
2. இது அமில நீக்கியில் உள்ள ஒரு பகுதி பொருள். இது காரத் தன்மையைப் பெற்றிருப்பதால் வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை நடுநிலையாக்குகிறது

4.சலவைத்தூள்( CaOCl2 )

1.இது குடி நீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுகிறது
2.பருத்தி, லினன் துணிகளை வெளுக்க பயன்படுகிறது

5.பாரிஸ் சாந்து(CaSO4.1/2H2O)

இது முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கவும், சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யவும் பயன்படுகிறது




 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் ( காரங்கள்)
 காரங்கள்:

நீரில் கரைந்து ஹைட்ராக்ஸைடு அயனிகளைத் தருபவை காரங்கள் எனப்படுகின்றன.

காரங்கள் கசுப்புச் சுவையையும், சோப்பு போன்ற வழவழப்புத் தன்மையையும் கொண்டுள்ளன.

காரங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை நீலநிறமாக மாற்றுகின்றன.

காரங்கள் பீனாஃப்தலினுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும், மெத்தில் ஆரஞ்சுடன் மஞ்சள் நிறத்தையும் தருகின்றன.

உலோக ஆக்சைடு மற்றும் ஹைட்ராக்சில் சேர்மங்கள் காரங்களாகும்.

காரங்கள் நீருடன் சேர்ந்து ஹைட்ராக்ஸைடு அயனிகளைக் கொடுக்கும்.

நீரில் கரையும் காரங்களுக்கு "அல்கலிஸ்" என்று பெயர்.
எ.கா. Ca, Na, K - ஆகியவற்றின் ஹைட்ராக்ஸைடுகள்.

எல்லா அல்கலிசுகளும் காரங்களாகும். ஆனால் எல்லா காரங்களும் அல்கலிசுகள் அல்ல.

"அல்கலி" - என்ற வார்த்தை அராபிக் சொல்லிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் "மரச்சாம்பல்" என்பதாகும்.

மரச்சாம்பலில் உள்ள வேதிப்பொருள் Na  மற்றும் K - ன் கார்பனேட்டுகளாகும்.

வலிமைமிக்க காரங்கள் அரிக்கும் தன்மையுடையவை.

காரங்கள் சிறந்த மின்கடத்திகளாகும்.

எரிசோடா (அ) காஸ்டிக் சோடா என்பது -  சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH).

 எரிபொட்டாஷ் (அ) காஸ்டிக் பொட்டாஷ் என்பது  -பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH).

 சலவை சோடா என்பது - சோடியம் கார்பனேட் ( Na2 CO3).

சமையல் சோடா (அ) ரொட்டி சோடா என்பது - சோடியம் பை கார்பனேட் (NaHCO3).

 சுட்டச் சுண்ணாம்பு என்பது -  கால்சியம் ஆக்சைடு (CaO).

 நீற்றுச் சுண்ணாம்பு என்பது- கால்சியம் ஹைட்ராக்சைடு ( Ca(OH)2.

மெக்னீசியா பால்மம் (அ)  அமில நீக்கி என்பது - Mg(OH)2.

மென்சோப்பில் உள்ள காரங்கள் - NaoH, KOH.

 காரங்களின் வகைகள்: 

1. அயனியாதல் அடிப்படையில், 

அ. வலிமைமிகு காரங்கள்.

      இவை நீரில் முழுவதுமாக அயனியுறுகின்றன.
எ.கா. NaOH, KOH போன்றவை.

ஆ. வலிமை குறைந்த காரங்கள்.

      இவை நீரில் பகுதியளவே அயனியுறுகின்றன.
எ.கா. NH4OH, Ca(OH)2  போன்றவை.

2. அமிலத்துவத்தின் அடிப்படையில், 

அ. ஓர் அமிலத்துவ காரங்கள்.

      இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு ஒரு ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை.
எ.கா. NaOH, KOH  போன்றவை.

ஆ. ஈர் அமிலத்துவ காரங்கள்.

      இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு இரண்டு ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை.
எ.கா. Ca(OH)2, Mg(OH)2  போன்றவை.

இ. மூன்று அமிலத்துவ காரங்கள்.

இவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு மூன்று ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை.
எ.கா. Al(OH)3, Fe(OH)3 போன்றவை.

3. செறிவின் அடிப்படையில், 

அ. செறிவுமிகு காரங்கள்.

     இவை நீரில் காரங்களின் சதவீதத்தை அதிகளவு கொண்டுள்ளன.

ஆ. செறிவுகுறைந்த (அ) நீர்த்த காரங்கள்.

இவை நீரில் காரங்களின் சதவீதத்தை குறைந்தளவு கொண்டுள்ளன.

காரங்களின் வேதிப்பண்புகளின்:

1. உலோகங்களுடன் காரத்தின் வினை:

உலோகங்கள் காரங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியிட்டு, அதனுடைய ஆக்ஸைடுகளைத் தருகின்றன.

எ.கா. துத்தநாகம், NaOH  உடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியிட்டு சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது.( except Cu, Ag and Cr ).

   Zn   +   2NaOH    ➡   Na2ZnO2   +  H2⬆

2. அலோக ஆக்சைடுகள் காரத்தின் வினை:

அலோக ஆக்சைடுகள் அமிலத்தன்மை உடையவை. இவை காரத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.

எ.கா. சோடியம் ஹைட்ராக்சைடு, கார்பன் - டை - ஆக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் கார்பனேட்டையும், நீரையும் தருகிறது.

        2NaOH  + CO2   ➡  Na2CO3   +   H2O.

3. நீருடன் காரங்களின் வினை: 

நீரில் கரைக்கும்போது காரங்கள் ஹைட்ராக்சைடு அயனியைத் தருகிறது.

              NaOH   ➡  Na+  +   OH ¯

4. காரங்கள் அமிலங்களுடன் வினை: 

அமிலத்திற்கும், காரத்திற்கும் இடையே ஏற்படும் வினையை நடுநிலையாக்கல் வினை என்கிறோம்.

    NaOH   +   HCl    ➡   NaCl    +   H2O.

காரங்களின் பயன்கள்:

1. NaOH  -  சோப்புத் தயாரிக்கப் பயன்படுகிறது.

2. Ca(OH)2  -  கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கப் பயன்படுகிறது.

3. Mg(OH)2   -  வயிற்று உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

4. NH4OH   -    துணிகளில் உள்ள எண்ணெய் கரை மற்றும் பிசுக்கினை நீக்கப் பயன்படுகிறது.

                                                      

அமிலங்கள், காரங்கள், உப்புகள் ( அமிலங்கள்)

 அமில, கார கொள்கைகள்:

1. அர்ஹீனியஸ் கொள்கை.
2. லௌரி - பிரான்ஸ்டெட் கொள்கை.
3. லூயிஸ் கொள்கை.

1. அர்ஹீனியஸ் கொள்கை :

அமிலம் :
                நீர்க்கரைசலில் ஹைட்ரஜன் (H+) அயனியைக் கொடுக்கக்கூடிய பொருள்.
காரம் :
             நீர்க்கரைசலில் ஹைட்ராக்சைடு (OH- ) அயனியைக் கொடுக்கக்கூடிய பொருள்.

2. லௌரி - பிரான்ஸ்டெட்  கொள்கை:

அமிலம் :
                 புரோட்டானை( H+) கொடுக்கக்கூடிய பொருள்.
காரம் :
            புரோட்டானை (H+)ஏற்கக்கூடிய பொருள்.

3. லூயிஸ் கொள்கை :
அமிலம் :
                 எலக்ட்ரான் ஜோடிகளை ஏற்கக்கூடிய பொருள்.
காரம் :
            எலக்ட்ரான் ஜோடிகளை வழங்கக்கூடிய பொருள்.

அமிலங்கள் :

அமிலங்கள் என்ற வார்த்தை "அசிடஸ்" என்ற இலத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டது. இதன் பொருள் புளிப்பு சுவை என்பதாகும்.

நீரில் கரையும்பொழுது ஹைட்ரஜன் அயனிகளையோ (H+) அல்லது ஹைட்ரோனியம் அயனிகளையோ (H3O+) தரும் பொருள் அமிலங்கள் என்கிறோம்.

அமிலங்கள் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜனை பெற்றுள்ளது.

அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகின்றன. (அநீசி)

அமிலங்கள் பீனாஃப்தலீனை சேர்க்கும்பொழுது நிறமற்றதாகவும், மெத்தில் ஆரஞ்சு சேர்க்கும்பொழுது இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறுகின்றன.

அமிலங்களின் வகைகள் :

1. மூலங்களின் அடிப்படையில்

     அ. கனிம அமிலங்கள்
     ஆ. கரிம அமிலங்கள்

அ. கனிம அமிலங்கள் :

       இவை உயிரற்ற மூலங்களிலிருந்து.  ( மண், தாதுக்கள், பாறை படிவங்கள் போன்ற கனிமப்பொருள்களிலிருந்து ) பெறப்படுபவை.
எ.கா. ஹைட்ரோகுளோரிக் அமிலம்(HCl), நைட்ரிக் அமிலம் (HNO3), கந்தக அமிலம் (H2SO4) போன்றவை.
இவை மண்பாண்டங்கள், கண்ணாடி போன்றவற்றை அரிப்பதில்லை. எனவே கண்ணாடி குவளையில் வைத்து பாதுக்காக்கப்படுகிறது.

. கரிம அமிலங்கள்:

       இவை உயிருள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படுபவை.
எ.கா.
எலுமிச்சை  ~ சிட்ரிக் அமிலங்கள்
வினிகர்        ~ அசிட்டிக் அமிலம்
ஆப்பிள்        ~ மாலிக் அமிலம்
தக்காளி       ~ ஆக்சாலிக் அமிலம்
தயிர்             ~ லாக்டிக் அமிலம்
குளிர்பானம் ~ கார்போனிக் அமிலம்
திராட்சை     ~ டார்டாரிக் அமிலம்
தேனீர்          ~ டானிக் அமிலம்
எறும்பின் கொடுக்கில் ~ பார்மிக் அமிலம்.

2. காரத்துவத்தின் அடிப்படையில் :

அ. ஒரு காரத்துவ அமிலம்:

       இவை நீரில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியைத் தருபவை.
எ.கா. ஹைட்ரோகுளோரிக் அமிலம்(HCl) , நைட்ரிக் அமிலம் (HNO3).

ஆ. இரு காரத்துவ அமிலம் :

      இவை நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு இரண்டு ஹைட்ரஜன் அயனியைத் தருபவை.
எ.கா.
கந்தக அமிலம் (H2SO4), கார்போனிக் அமிலம் (H2CO3).

இ. முக்காரத்துவ அமிலம் :

       இவை நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு மூன்று ஹைட்ரஜன் அயனியைத் தருபவை.
எ.கா.
பாஸ்பாரிக் அமிலம் (H3PO4)

3. அயனியுறும் தன்மையின் அடிப்படையில்:

அ. வலிமை மிகு அமிலங்கள்:

       இவை நீரில் முழுவதுமாக அயனியுறுகின்றன.
எ.கா.
ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCl).

ஆ. வலிமை குறைந்த அமிலங்கள் :

       இவை நீரில் பகுதியளவே அயனியுறுகின்றன
எ.கா.
அசிட்டிக் அமிலம் (CH3COOH).

4. செறிவின் அடிப்படையில் :

அ. செறிவு மிகு அமிலங்கள் :

       இவை நீரில் அமிலங்களின் சதவீதத்தை அதிகளவு கொண்டுள்ளன.

ஆ. செறிவு குறைந்த (அ) நீர்த்த அமிலங்கள்:

        இவை நீரில் அமிலங்களின் சதவீதத்தை குறைந்தளவு கொண்டுள்ளன.

அமிலத்தின் இயற்பண்புகள்  :

~ புளிப்புச் சுவை உடையவை.

~ அரிக்கும் தன்மை உடையவை.

~ எல்லா அமிலங்களிலும் ஹைட்ரஜன் இருக்கும். இருந்தாலும் ஹைட்ரஜன் உள்ள சேர்மங்களும் அமிலங்கள் அல்ல.
எ.கா.
மீத்தேன் (CH4) ,
அம்மோனியா (NH3),         
 குளுக்கோஸ் ( C6H12O6 ).

~ அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகின்றன. இருப்பினும் Cu, Ag போன்ற உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து வாயுவை வெளியேற்றுவதில்லை.

~ அமிலங்கள் மின்சாரத்தை நன்கு கடத்துக்கூடியது.


அமிலத்தின் வேதிப்பண்புகள் :

அ. உலோகங்களுடன் அமிலத்தின் வினை :

உலோகங்கள் அமிலத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுகிறது.
எ.கா.
          Zn  + 2HCl    →  ZnCl2   +  H2⬆

ஆனால் எல்லா உலோகங்களும் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுவதில்லை.
எ.கா. காப்பர் ( Cu ), வெள்ளி ( Ag )

ஆ. உலோகக் கார்பனேட்டுகள் மற்றும் உலோக பை கார்பனேட்டுகள் அமிலங்களுடன் வினை :

உலோகக் கார்பனேட்டுகள் மற்றும் உலோக பை கார்பனேட்டுகள் அமிலங்களுடன் வினைபுரிந்து, அவ்வுலோகத்தின் உப்பு, நீரை தருவதுடன் கார்பன் - டை - ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுகிறது.

Na2CO3  +  2HCl   →  2NaCl  + H2O  + CO2⬆

NaHCO3   +  HCl   →  NaCl   +   H2O   +  CO2⬆

வெளிவரும் கார்பன் - டை - ஆக்சைடு வாயுவை தெளிந்த சுண்ணாம்பு நீரினுள் செலுத்தும்போது அது பால்போல் மாறுகிறது.

Ca(OH)2   +   CO2   →   CaCO3   +   H2O.

3. உலோக ஆக்ஸைடுகளுடன் அமிலங்களின் வினை :

 உலோக ஆக்ஸைடுகள் காரத்தன்மை பெற்றிருப்பதால் அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.
எ.கா.
கருப்பு நிற தாமிர (II) ஆக்ஸைடானது பச்சை நிற தாமிர (II) குளோரைடாக மாறுகிறது.

CuO(கருப்பு) +2HCl →CuCl2(பச்சை) + H2O

4. நீருடன் அமிலங்களின் வினை :

ஓர் அமிலம் நீருடன் சேர்ந்து ஹைட்ரஜன் அயனிகளைத் தருகிறது.

HCl  +   H2O  →  H3O+  +   Cl¯

 ஹைட்ரஜன் அனிகள் தனித்து காணப்படுவதில்லை. இவை நீருடன் சேர்ந்து ஹைட்ரோனியம் அயனிகளாக உள்ளன. நீர் இல்லாதபோது அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அயனியைத் தனியாகப் பிரிக்க முடியாது.

அமிலத்தின் பயன்கள் :

கனிம அமிலத்தின் பயன்கள்:

கந்தக அமிலம் :

கார்மின்ககலன்கள் மற்றும் பல சேர்மங்களை தயாரிக்கப் பயன்படுகிறது.

நைட்ரிக் அமிலம் :

 அம்மோனியம் நைட்ரேட் என்ற உரம் தயாரிக்கப் பயன்படுகிறது.

ஹைட்ரோகுளோரிக் அமிலம்:

கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுகிறது.

வேதியியல் ஆய்வுக்கூடங்களில் பயன்படுகிறது.

சாயம், மருந்து, உரம், வெடிப்பொருள் மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

உலோகத்தை அதன் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதற்கும் மற்றும் எலும்புகளில் இருந்து பிசினைப் பிரிப்பதற்கும் பயன்படுகிறது.

அமிலங்கள், கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் சல்பைடு, ஹைட்ரஜன், சல்பர் டை ஆக்சைடு போன்ற வாயுக்களை தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.

பெட்ரோலியம் சுத்திகரிப்பதற்கும் பயன்படுகிறது.

~ கண்ணாடியை அரிக்கவல்ல அமிலம் ஹைட்ரோ ஃப்ளூரிக் அமிலம்.

கரிம அமிலத்தின் பயன்கள் :

~ உணவைப் பதப்படுத்த,

~ வைட்டமின் - C தயாரிக்க,

~ சமையல் சோடா தயாரிக்க,

~ டார்டாரிக் அமிலமானது சமையல் சோடாவின் ஒரு பகுதிப்பொருளாகும்.

~ பென்சோயிக் அமிலத்தின் உப்பு               ( சோடியம் பொன்சோயேட்) உணவுப் பொருட்கள்களை பாதுகாக்கப் பயன்படுகிறது.

~ காற்று அடைக்கப்பட்ட பானங்களில் கார்பானிக் அமிலம் பயன்படுகிறது.





கருத்துரையிடுக

0 கருத்துகள்