| 1) பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க. |
|---|
|
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று 'காங்கேயம்' கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர் பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வினாக்கள் 1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக. அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை? ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது? இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது? ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது? – அ) காங்கேயம் இனக் காளைகள்
ஆ) காங்கேயம் இனக் காளைகள் இ) காங்கேயம் இனக் காளைகள் ஈ) காங்கேயம் இனக் காளைகள் 2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக. அ) கர்நாடகம் ஆ) கேரளா இ) இலங்கை ஈ) ஆந்திரா –இ) இலங்கை 3. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன இ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன ஈ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன – அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன 4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகைத் தொடர்? அ) வினாத்தொடர் ஆ) கட்டளைத்தொடர் இ) செய்தித்தொடர் ஈ) உணர்ச்சித்தொடர் – இ) செய்தித்தொடர் |
| 2) நிகழ்வினைப் படித்து, வினாக்களுக்கு விடையளிக்க. அண்ணாவின் வாழ்க்கையில்... |
|---|
|
தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்று அறியாமலே சோதனை செய்தார். மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று," தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் " என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், "இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக்கொள்ளுங்கள் என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாகக் கெஞ்சினார். உடனே, அண்ணா. "நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர்பதவிக்கு வரவேண்டும். அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்" என்றார். வினாக்கள் 1. மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்? – மகிழுந்தின் பின்பக்கம் இருந்த மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்ததைப் பார்த்த பிறகுதான் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் அறிந்தார். 2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக்கொள்ளச் சொன்னார்? – முதலமைச்சரின் மகிழுந்து என்று தெரியாமல் மகிழுந்தை நிறுத்தி சோதனை செய்ததால் வருவாய் அலுவலர் அண்ணாவிடம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார். 3. அண்ணா, வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்? - உங்களைப் போன்றவர்கள் தாம் உயர்பதவிக்கு வரவேண்டும் எனக் கூறி அவரின் பெயரைக் குறித்துக்கொள்ளச் சொன்னார். 4. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பு இடுக. – அண்ணாவும் அலுவலரும் |
| 3) கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படிக்கக் கேட்டு, வினாக்களுக்கு விடையளிக்க. |
|---|
|
அறிஞர் அண்ணாவின் சிறுவயதில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. ஒருநாள் இவரின் பெற்றோர் வெளியில் சென்றிருக்க, வீட்டில் பாட்டி மட்டுமே இருந்தார். அப்போது அவர், தம் நண்பர் சிலரை அழைத்துக்கொண்டு, வீட்டின் பின்புறம் சென்றார். அங்கு அனைவரும் சேர்ந்து 'அரிச்சந்திரா' நாடகம் நடத்தத் திட்டமிட்டனர். அறிஞர் அண்ணா, அரிச்சந்திரன் வேடம் புனைந்து நடிக்கத் தொடங்கினார். வீட்டின் பின்புறத்திலிருந்து ஏதோ பேரொலியைக் கேட்ட அவர்தம் பாட்டி, என்னவென்று அறிய அங்கு விரைந்து சென்றார். அவரைக் கண்டதும் அண்ணாவின் நண்பர் சிட்டாகப் பறந்துவிட்டனர்; அதனால், நாடகம் இடையிலேயே நின்றது. அண்ணா மட்டும் பாட்டியிடம் தனியாக மாட்டிக் கொண்டார். அவர் அண்ணாவிடம், 'இங்கு என்ன நடந்தது ? கூச்சல் ஏன் ஏற்பட்டது?' என வினவினார். 'ஒன்றுமில்லை' எனக் கூறி, பாட்டியிடமிருந்து அண்ணா தப்பித்துக் கொண்டிருக்கலாம். நண்பர் யாரும் அவருடன் இல்லாததனால் அண்ணா கூறுவதனைப் பாட்டியும் நம்பியிருக்கலாம்; ஆனால், 'அரிச்சந்திரன் வேடம் போட்டவராயிற்றே, பாட்டியிடம் எப்படிப் பொய் கூறுவார்?' அதனால், அண்ணா உண்மையைக் கூறிவிட்டார். 'படிக்கிற பையனுக்கு நாடகம் என்னடா வேண்டியிருக்கு?' எனக் கூறி, அண்ணாவின் முதுகில் அடித்தார், பாட்டி. அன்று நாடகம் போட்டதற்காக அடி வாங்கிய அறிஞர் அண்ணாதான் பிற்காலத்தில் ஆசிரியர் கல்கி அவர்களால் 'தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா' எனப் பாராட்டப்பட்டார். (அயர்லாந்து நாட்டைச் சார்ந்த ஜார்ஜ் பெர்னாட்ஷா புகழ்பெற்ற எழுத்தாளரும் சிறந்த நாடக ஆசிரியரும் ஆவார்.) வினாக்கள் 1. அறிஞர் அண்ணா, தம் நண்பருடன் வீட்டின் பின்புறம் ஏன் சென்றார்? – அரிச்சந்திரா நாடகம் நடத்துவதற்காக. 2. நாடகத்தில் அறிஞர் அண்ணா புனைந்த வேடம் என்ன? - அரிச்சந்திரன் 3. நாடகம் இடையில் நிற்கக் காரணம் யாது? – அண்ணாவின் பாட்டி வந்ததால் நாடகம் இடையில் நின்றது. 4. அறிஞர் அண்ணா, பாட்டியிடம் உண்மையை மறைக்காதது. ஏன்? – அரிச்சந்திரன் வேடம் போட்டவராயிற்றே அதனால் பாட்டியிடம் உண்மையை மறைக்கவில்லை. |
| 4) கீழுள்ள உரைப்பத்தியைப் படிக்கக் கேட்டு வினாக்களுக்கு விடையளிக்க. |
|---|
|
பதினான்கு வயது சிறுவன், ஏரிக்கரையில் உள்ள வேப்பமரத்தின் நிழலில் உட்கார்ந்து, நீரில் மீன்குஞ்சு துள்ளிக்குதித்து நீந்திச் செல்வதனையும், அது நீருக்குள் தலைகீழாகச் சென்று மறைவதனையும் காண்கிறான். இக்காட்சியைக் கண்டு உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளைச் சிறுவன் கவிதையாக எழுதுகிறான். “ஒடிப்போ ஒடிப்போ கெண்டைச் குஞ்சே கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே தூண்டில் காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே”. இதுவே அச்சிறுவனின் முதற்கவிதை. அச்சிறுவன்தான் இன்றைய தலைமுறையின் 'மக்கள் கவிஞர்' எனப் போற்றப்படும் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் ஆவார். பாவேந்தர் பாரதிதாசனிடம் முறையாகப் பாடம் கேட்ட இவர், பாடல் இயற்றும் ஆற்றலைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டார். 1954ஆம் ஆண்டில் 'படித்த பெண்' என்னும் திரைப்படத்துக்கு முதன்முறையாகப் பாடல் எழுதினார். இவர் பாடிய,“தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது” என்னும் பாடல் வரிகளைக் கேட்ட தோழர் ஜீவானந்தம், 'நீ மீண்டும் தோன்றிய பாரதியடா' எனக் கல்யாணசுந்தரத்தைப் பாராட்டினார். வினாக்கள் 1. கல்யாணசுந்தரம் எந்த வயதில் தன் முதற்கவிதையை இயற்றினார்? -14 வயதில் 2. கல்யாணசுந்தரத்துக்கு வழங்கப்படும் அடைமொழி என்ன? – மக்கள் கவிஞர் 3. கல்யாணசுந்தரம் யாரிடம் பாடம் கேட்டார்? – பாவேந்தர் பாரதிதாசன் 4. கல்யாணசுந்தரத்தைத் தோழர் ஜீவானந்தம் எவ்வாறு பாராட்டினார்? – நீ மீண்டும் தோன்றிய பாரதியடா 5. கல்யாணசுந்தரத்தின் சொந்த ஊர் எது? - பட்டுக்கோட்டை
|
| 5) கீழுள்ள உரைப்பத்தியைப் படிக்கக் கேட்டு வினாக்களுக்கு விடையளிக்க. |
|---|
|
செய்யுள், உரைநடை, பேச்சு ஆகியன இயல்தமிழ் ஆகும். இசையோடு பாடுவதற்கென்றே எழுதப்பட்ட தமிழ்ப்பாடல்கள் இசைத்தமிழ் எனப்படும். இசையை இசைத்தமிழ் என்று மயங்குகின்றனர் சிலர். இசை வேறு; இசைத்தமிழ் வேறு. இசைக் கலைஞர்கள் குழல், யாழ் போன்ற கருவிகளில் வாசிப்பது இசை. ஒதுவார் பாடும் தேவாரப்பாடல் இசைத்தமிழ். நாட்டியம் ஆடும்போது பாடுவதற்கென்றே இயற்றப்பட்ட பாடல்களே நாடகத்தமிழ் எனப்படும். நாடகம் என்பது இக்காலத்து நாடகம், திரைப்படங்களில் பேசப்படும் உரையாடல் என்று சிலர் கருதுகின்றார்கள். நாடகத்தமிழ்ப் பாடல்கள் நாட்டியத்துக்குரிய மெய்ப்பாடுகளுக்கு இடம்தரும் வகையில் அமைந்திருக்கும்.
வினாக்கள் 1. தமிழின் முப்பிரிவுகள் யாவை? – செய்யுள் உரைநடை பேச்சு 2. இசை என்பது எது? – இசைக்கலைஞர்கள் குழல், யாழ் போன்ற கருவிகளில் வாசிப்பது இசை ஆகும். 3. நாடகத்தமிழ் எத்தன்மையது? நாடகத்தமிழ்ப் பாடல்கள் நாட்டியத்துக்குரிய மெய்ப்பாடுகளுக்கு இடம்தரும் வகையில் அமைந்திருக்கும் தன்மையுடையது. 4. தேவாரப்பாடல்கள் எவ்வகைத் தமிழைச் சாரும்? - இசைத்தமிழ் |
| 7) கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படிக்கக் கேட்டு, வினாக்களுக்கு விடையளிக்க. |
|---|
|
மூன்று வயது குழந்தையொன்றை அம்மை நோய் தாக்கியது. நோயின் தாக்கத்தால் அக்குழந்தை கண்ணொளி இழந்தது. குழந்தையின் நிலை கண்ட பெற்றோர் கலங்கினர்; கண்ணீர் பெருக்கினர். குழந்தையின் எதிர்காலத்தை எண்ணி விம்மி விம்மி அழுதனர். ஆண்டுகள் உருண்டோடின. குழந்தைக்கு ஐந்து வயதாயிற்று. தொடக்கக் கல்வி கற்பிக்க எண்ணினார் குழந்தையின் தந்தை முத்தையா. குழந்தையைத் தன் மடியில் குப்புறப் படுக்கவைத்து, அதன் முதுகில் தமிழ் எழுத்துகளை எழுதிக் கற்பித்தார். தமிழின் வரிவடிவங்கள் குழந்தையின் மனத்துள் வரிவடிவங்களாகப் பதிந்தன. தந்தையின் மடியே குழந்தையின் தொடக்கப் பள்ளி ஆனது. மடியில் கிடத்திக் கல்வி கற்பித்த தந்தை, குழந்தைக்கு எட்டு வயதானபோது தமிழ் இலக்கிய இலக்கணம் கற்பிக்க மாரிமுத்துக்கவிராயரிடம் சேர்ப்பித்தார். இலக்கண இலக்கியங்களைக் கவிராயர் குரலில் கேட்டுக் கற்று உள்ளத்திலும் உணர்விலும் தமிழை நிறைத்துக் கொண்ட அக்குழந்தை, வியக்கத்தக்க கவியாற்றலும் தமிழாற்றலும் பெற்றது. பெற்றதன் விளைவாகத் தம் பதினேழாம் வயதிலேயே பழனிப் பதிகம், குமரகுரு பதிகம், சிவகிரிப் பதிகம், திருச்செந்தில் பதிகம் என நற்றமிழ் இலக்கியங்களைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு அணிசேர்த்தது. பழனி என்னும் இயற்பெயர் கொண்ட அக்குழந்தையைத்தான், தமிழுலகம் மாம்பழக்கவிச் சிங்க நாவலர் எனப் பாராட்டிப் போற்றியது. வினாக்கள் 1. மாம்பழக்கவிச் சிங்க நாவலரின் இயற்பெயர் என்ன?- பழனி 2. மாம்பழக்கவிச் சிங்க நாவலருக்குத் தொடக்கக் கல்வி கற்பித்தவர் யார்? - அவரது தந்தை முத்தையா 3. மாம்பழக்கவிச் சிங்க நாவலருக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பித்தவர் யார்? - மாரிமுத்துக் கவிராயர் 4. மாம்பழக்கவிச் சிங்க நாவலர் இயற்றிய நூல்களுள் இரண்டனைக் கூறுக. – பழனிப்பதிகம், குமரகுரு பதிகம் |
| 8) கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க. |
|---|
|
நல்ல பாம்பு கடித்தால் உடனே வாழைமரம் இருக்குமிடத்துக்கு அரிவாளுடன் ஓடுங்கள். அடியில் ஒரு வெட்டு, நுனியில் ஒரு வெட்டுப் போட்டுத் துண்டத்தை எடுத்துவாருங்கள். பட்டையாக உரித்து மண் சட்டியில் அல்லது பீங்கான் கோப்பைகளில் சாறு பிழியுங்கள். காற்படி சாற்றைக் கடிபட்டவனுக்குக் கொடுங்கள். நல்ல பாம்புவின் நஞ்சு ஒன்றும் பண்ணாது. ஆள் கட்டாயம் பிழைத்துக் கொள்வான்.
உங்களுக்குச் செய்தி வர நேரமாகிவிட்டாலும், வாழைமரம் கொண்டுவர நேரம் ஆகிவிட்டாலும், கடி பட்டவன் பல் கிட்டிவிடும். வாழைப்பட்டைச் சாற்றை இவன் குடிக்கமுடியாது. ஆகவே, பற்றுக் குறடால் பல்லை விலக்கி மருந்தை விடச்செய்யாதீர்கள். இதனைவிட அறியாமை வேறில்லை. பல்லை விலக்கினாலும் தொண்டையை விலக்கமுடியாது. பாம்பு கடிபட்டவன் பற்கள் கிட்டியிருந்தால், சில வாழைப்பட்டைகளை முதலில் உரித்து, கீழே சரியாக விரித்து, அதன்மேல் அவனைப் படுக்கவைத்து விடுங்கள்; பிறகு சாறு பிழியுங்கள். சாறு பிழியவும் அவன் வாய் திறக்கவும் நேரம் சரியாக இருக்கும். பிறகு சாற்றைக் குடிப்பான்; எழுந்து நடப்பான். கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழ் மருந்துகள்
வினாக்கள் 1. பாம்பு கடிக்குப் பயன்படும் மரம் எது? - வாழைமரம் 2. பாம்பு கடிக்குக் கொடுக்கப்படும் சாறு எது? - வாழைச்சாறு 3. பாம்பு கடிபட்டவனுக்குப் பற்கள் கிட்டிவிட்டால், மருந்து உட்கொள்ள முடியுமா? முடியாதெனில், காரணம் கூறுக. – முடியாது. ஏனெனில் தொண்டையை விலக்கமுடியாது. 4. பாம்பு கடிபட்டவனுக்குப் பற்கள் கிட்டியிருந்தால், எவ்வாறு மருந்து கொடுத்தல் வேண்டும்? -சில வாழைப்பட்டைகளை முதலில் உரித்து, கீழே சரியாக விரித்து, அதன்மேல் அவனைப் படுக்க வைத்து விடுங்கள், பிறகு சாறு பிழியுங்கள், சாறு பிழியவும் அவன் வாய் திறக்கவும் நேரம் சரியாக இருக்கும். பிறகு சாற்றைக் குடிப்பான். |
| 9) விளம்பரத்தைப் புரிந்து வினாக்களுக்கு விடையளிக்க. |
|---|
|
வினாக்கள் 1. விளம்பரம் எதனைப் பற்றிக் கூறுகிறது? – குற்றாலம் சுற்றுலா பற்றிக் கூறுகிறது. 2. சுற்றுலாவுக்கான நாள்கள் எத்தனை? – 4 நாட்கள் 3. பயணம் எங்கிருந்து, எத்தனை மணிக்குத் தொடங்குகிறது? - சென்னையிலிருந்து மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. 4. நீ உனது தந்தையுடன் சுற்றுலாவுக்குச் செல்ல செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு? - ரூ.2950. 5. விளம்பரம் செய்துள்ள கழகம் எது? - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
|
| 10) கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படிக்கக் கேட்டு, வினாக்களுக்கு விடையளிக்க. |
|---|
|
உரிமை என்பது பிறர் கொடுப்பதுமன்று; மற்றொருவர் வாங்குவதுமன்று. அஃது எவரிடத்தும் எல்லாவிடத்தும் இயல்பாய் அமைந்து கிடப்பது. உரிமையாவது, உயிர்கட்குக் கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு பெரும் இயற்கைக்கொடை. உரிமை எல்லார்க்கும் பொதுவானது. வானத்தில் மேகம் தவழ்வது போலவும், கடலில் அலை எழுவது போலவும், பறவை அழகிய சிறகை வீசிப் பறப்பது போலவும் பெண் தனது உள்ளத்தெழும் விருப்பவழி நடக்கும் உரிமையுடையவளாதல் வேண்டும். அவ்வுரிமையைச் சிறைப்படுத்துதல் பெரும்பாவம். பெண், அடிமை வாழ்வு நடத்த நேரிடின் அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையும் அடிமையுணர்வுடன் பிறக்கும். பெண்ணுரிமை என்பது ஆணுடன் போர் புரிவதன்று. ஆணுடன் வாழ்ந்து அன்பை வளர்ப்பது பெண்ணின் உரிமைக்கடன்.
திரு.வி.க., பெண்ணுரிமை
வினாக்கள் 1. உரிமை என்பது எத்தன்மைத்து? - உரிமை என்பது பிறர் கொடுப்பதுமன்று; மற்றொருவர் வாங்குவதுமன்று. அஃது எவரிடத்தும் எல்லாவிடத்தும் இயல்பாய் அமைந்து கிடப்பது. 2. பெண்ணுரிமையை விளக்க ஆசிரியர் கையாளும் உவமைகள் யாவை? - கடலில் அலை எழுவது போல, பறவை அழகிய சிறகை வீசிப் பறப்பது போல 3. பெரும்பாவம் என ஆசிரியர் எதனைக் குறிப்பிடுகிறார்? - பெண்ணுரிமையை சிறைப்படுத்துதல் பெரும்பாவம். 4. பெண்ணுக்குரிய கடமை யாது? - ஆணுடன் வாழ்ந்து அன்பை வளர்ப்பது பெண்ணின் கடமையாகும். 5. உரைப்பத்திக்கு ஏற்புடைய தலைப்பைத் தருக. - பெண்ணுரிமை
|
| 11) கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படிக்கக் கேட்டு, வினாக்களுக்கு விடையளிக்க. |
|---|
|
ஒழுக்கமே ஒருவற்குப் பெருமையும் சிறுமையும் தருவதாகும். ஒழுக்கம் இல்லாதவன் உயர்குடிப் பிறப்பினனாயினும் அச்சிறப்பினை இழப்பான். இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் என்றே வள்ளுவரும் குறிப்பார். வேதியன், கற்ற வேதத்தை மறந்தாலும் பின்னும் ஓதி அவ்வறிவைப் பெற்றுக்கொள்ளலாம். அவன் குலவொழுக்கம் குன்றுவானாயின் எல்லா நலங்களும் இழந்தொழிவான். ஆதலின், ஒழுக்கம் உடைமையே உயர்குடிப் பிறப்பாகும். அதுவே எல்லார்க்கும் சிறப்பினைத் தருவது. உயிரினும் மேலாக ஓம்பத்தக்கது என்பர். அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து தெளிந்தாலும் இருமைக்கும் துணையாவது ஒழுக்கமேயாகும். இந்த உண்மைகளை அறிந்த சான்றோர் என்றும் ஒழுக்கத்தில் தவற மாட்டார்கள். தவறுவாராயின் அடையத் தகாத பெரும்பழி வந்து சாரப் பெறுவர். அன்னார் மறந்தும் தீய சொற்களை வாயால் கூறார்.
வினாக்கள் 1. உரைப்பத்தியின் மையக்கருத்து யாது? - ஒழுக்கமுடைமை
2. உரைப்பத்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள எதிர்ச்சொற்களைக் கூறுக. - ஒழுக்கம், இழுக்கம் |
| 12) கீழ்க்காணும் விளம்பரத்தைப் புரிந்துகொண்டு வினாக்களுக்கு விடையளிக்க. |
|---|
|
வினாக்கள் 1. மேற்கண்ட விளம்பரம் எதனைப் பற்றியது? – நுால் வெளியீட்டு விழா 2. யாருடைய கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடப்படுகிறது? – கவிஞர் நிலவொளியில் கவிதைத் தொகுப்பு நுால் வெளியிடப்படுகிறது. 3. விழா எங்கு நடைபெறுகின்றது? - பாவேந்தர் கலைக்கூடம், 112, கலையரசன் சாலை, சென்னை- 600001 4. கவிதை நூலை வெளியிடுபவர் யார்? – கவிஞர் மாணிக்கனார் |
10th New Book
| 1) கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க. |
|---|
|
கதிரவன் வந்தான். கதிரவா வா என அழைத்தாள் சீதா. சீதையைக் கண்டேன் எனக் கூறிய கதிரவன், அம்மா நலமா? எனக் கேட்டான். அம்மா நனி நலம்; நேற்றுதான் வந்து போனாள்; உன்னை விசாரித்தாள் என சீதா கூறினாள். இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சீதாவின் கழுத்தில் கத்தியை வைத்தான் கதிரவன். உன் சங்கிலியைத் தா என்றான். அவள், அவன் கையைத் தட்டிவிட்டு வெளியே ஓடிப்போனாள். திருடன், திருடன் என அவள் கூச்சலிட்டதைக் கேட்ட ஊர் மக்கள் அனைவரும் திரண்டனர்; கதிரவனைப் பிடித்தனர். பின் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர் காவலர் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். நம்பிக்கை துரோகி ஒருவனிடமிருந்து தான் காப்பாற்றப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி கூறினாள்.
வினாக்கள் 1. கதிரவன் வந்தான், அம்மா நலமா?, சீதா கூறினாள், அனைவரும் திரண்டனரா? - எழுவாய்த் தொடர்கள் 2. கதிரவா வா - விளித்தொடர் 3. திருடன் திருடன் - அடுக்குத்தொடர் (அச்சம் காரணமாக) 4. அழைத்தாள் சீதா - வினைமுற்றுத் தொடர் 5. நனிநலம் - உரிச்சொல் தொடர்
6. கூறிய கதிரவன், கேட்ட ஊர் மக்கள் - பெயரெச்சத் தொடர்கள் 7. வந்து போனாள் - வினையெச்சத் தொடர் 8. சீதையைக் கண்டேன், உன்னை விசாரித்தாள், கத்தியை வைத்தான், கதிரவனைப் பிடித்தனர், சங்கிலியைத் தா - இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் 9. கழுத்தில் கத்தி, சிறையில் அடைத்தனர் - ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் 10. காவல் நிலையத்திற்குத் தகவல், இறைவனுக்கு நன்றி - நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள்
|
| 2) கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக. |
|---|
|
மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர் பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பர். வினாக்கள் வினாக்கள்- தொடர் கண்டறி. இறங்கினார் முகமது, அவர் பாடகர், பாடுவது கேட்பது, கேட்ட பாடல்கள், கேட்காத பாடல்கள், அடுக்கு அடுக்காக. விடை : இறங்கினார் முகமது - வினைமுற்றுத் தொடர் அவர் பாடகர் - எழுவாய்த் தொடர் பாடுவது கேட்பது - கூட்டு வினையெச்சத் தொடர் கேட்ட பாடல்கள் - பெயரெச்சத் தொடர் கேட்காத பாடல்கள் - எதிர்மறைப் பெயரெச்சத் தொடர் அடுக்கு அடுக்காக - அடுக்குத் தொடர் |
| 3) பத்தியைப் படித்துப் பதில் தருக. |
|---|
|
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறித்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்று நிலைபெறும் படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
-
வினாக்கள் 1. பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை எடுத்து எழுதுக. – மீண்டும் மீண்டும். 2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது? – தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. 3. பெய்த மழை இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக. –பெய்மழை. 4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது? – பருப்பொருள்கள் சிதறுதல் (பெரு வெடிப்புக் கொள்கை). 5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை? – நிலம்,நீர்,காற்று.
|



minnal vega kanitham