சமூகநீதி (11 ஆம் வகுப்பு – அரசியல் அறிவியல்)
- சமத்துவ
ஆட்சியில் முன்னுரிமை தரும் கொள்கைக்கு என்ன பெயர்? உறுதிப்படுத்தும் நடவடிக்கை
அல்லது நேர்மறை பாகுபாடு.
- சமூகமேலாதிக்க
உணர்வால் என்ன உருவாகிறது? இன, மத, மொழி, சாதி பிரிவுகளில் சமூக முரண்கள் உருவாகின்றன.
- சமூகநீதி
எனப்படுவது என்ன? தனக்கு
உரிய உரிமைகளை எதிர்மறை அணுகுமுறையை எதிர்த்து சமமாகக் பெறும் போராட்ட
உணர்வு.
- இந்திய
வரலாற்றில் வருணாசிரம தர்மம் உருவாக்கிய அமைப்பு எது? சதுர் வருண அமைப்பு (அந்தணர்,
சத்திரியர், வைசியர், சூத்திரர்)
- இந்த
நான்கு வருணங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் யார்? பஞ்சமர் அல்லது அவர்ணர்,
பழங்குடியினர்
- இன, மத, மொழி
சிறுபான்மையினருக்கான ஐ.நா. பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு? டிசம்பர் 18, 1992
- ஐ.நா.
சிறுபான்மை பிரகடனத்தின் முக்கிய அம்சம் என்ன? தனி மற்றும் பொதுவாழ்வில்
குறுக்கீடின்றி தங்கள் பண்பாடு, மதம், மொழியை பின்பற்ற உரிமை.
- சிறுபான்மையினர்
உருவாக்கும் அமைப்புகள் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது? உருவாக்கவும், பராமரிக்கவும் உரிமை உண்டு.
- இந்திய
அரசமைப்புச் சட்டம் பிரிவு 15(4)
என்ன கூறுகிறது? கல்வி மற்றும்
சமூகத்தில் பின்தங்கியோர் முன்னேற்றத்திற்கு சிறப்பு திட்டங்கள் உருவாக்க
அனுமதி.
- பிரிவு
29(2) எந்த
தடையாக இருக்காது? சிறப்புச் சட்டங்கள்
உருவாக்குவதற்கான தடையாக இருக்காது.
- அரசுப்பணியில்
பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் பிரிவு எது? பிரிவு 16 (4)
- சமூகநீதியின்
அடிப்படையாக அரசமைப்புச் சட்டம் வழங்குவது என்ன? வளர்ச்சி மற்றும் தன்னிறைவு
பெற்ற சமூகத்திற்கு வழிகாட்டுதலான சிறப்புச் சட்டங்கள்.
- சமூக
மக்களாட்சியில் சம வாய்ப்பு என்பதன் பொருள் என்ன? பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, அதிகார பகிர்வு
- இந்திய
சமூக அமைப்பில் பாகுபாடுகள் எதன் அடிப்படையில் உருவாகின? வைதீக புராணங்களில் நால்வருண
அமைப்பின் அடிப்படையில்.
- பொருளாதார
அடிப்படையில் உருவாகும் சமூக பிரிவுகள் எவை? முதலாளி மற்றும் தொழிலாளி
- நவீன
சமூக நீதியை உறுதிப்படுத்தும் செயல்முறை என்ன? மாற்று நடவடிக்கைகள், சமூக விடுதலை, சமூகநீதி.
- சமத்துவம்
நிலவ வேண்டுமெனில் என்ன தேவை? சமூகநீதி தேவை
- சமத்துவத்தை
விரும்பினாலும் அதை பாதிக்கின்றவை என்ன? ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாகுபாடுகள்
- சமத்துவமின்மை
வாழ்வில் எதை உருவாக்குகிறது? தவிர்க்க முடியாத நிலை மற்றும் நிரந்தரமான
அம்பலங்கள்.
- வாய்ப்புகள்
இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும்? கூடுதல் வாய்ப்புகள்
வழங்கவேண்டும்
- சமத்துவம்
குறித்து எழும் முக்கியமான கேள்வி எது? எந்த மாதிரியான சமத்துவத்தை நாம் நிலைநாட்ட
முயல்கிறோம்?
- சமத்துவம்
யாருக்கானது? எல்லா
மக்களுக்கும், குறிப்பாக பின்தங்கியோருக்கானது.
- ஏழ்மையில்
பிறந்த குழந்தைக்கு தரமான வசதிகள் இல்லாத நிலை எதைக் காட்டுகிறது? அநீதி
- ஒரு
நபரின் மதம், சாதி,
பாலினம் போன்ற அடையாளங்களால் வாய்ப்பு மறுக்கப்படுவது எத்தைக்
குறிக்கும்? சமத்துவமின்மை மற்றும் அநீதி
- சமூக
அடையாளங்களை முன்னிறுத்தி வாய்ப்பு மறுப்பது எதை உருவாக்கும்? பாகுபாடும் அநீதியும்
- மக்களாட்சி
என்பதன் உண்மையான கருத்து என்ன? எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் அமைப்பு
- மக்களாட்சியில்
பன்மைத்துவம் எதனை உறுதிசெய்கிறது? பிரதிநிதித்துவம், சகிப்புத்தன்மை
மற்றும் சகவாழ்வு
- இந்திய
அரசமைப்புச் சட்டம் சமூகத்தில் யாருக்கெல்லாம் அதிகாரம் பகிர்ந்தளிக்கிறது? பின்தங்கிய சாதிகள், மத, இன, மொழிப் பிரிவுகள்
- ஐரோப்பிய
சமூக அமைப்பில் பாகுபாடுகளுக்குக் காரணம் என்ன? பொருளாதாரம்
- இந்திய
சமூக அமைப்பில் பாகுபாடுகள் எதன் அடிப்படையில்? வைதீக நால்வருண முறையின்
அடிப்படையில்.
- இந்திய
வருண அமைப்பின் சிறப்பு என்ன? – பிறப்பின் அடிப்படையில் வருணத்தை மாற்ற முடியாத
நிலை
- வருண
அமைப்பு யாருடைய உரிமைகளை மறுக்கிறது? தனி நபரின் மாண்பும் உரிமைகளையும்
- இந்திய
அரசமைப்புச் சட்டம் எந்தக் கோட்பாடுகளுடன் இயங்குகிறது? சமத்துவக் கண்ணோட்டமும்,
சட்டப்பூர்வமான நீதி வழங்கும் முறையும்.
- சமத்துவம்
நிலவ வேண்டுமெனில் அரசாங்கத்தின் பங்கு என்ன? சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும்
நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
- சமூகத்தில்
ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டுமென்றால் என்ன அவசியம்? சமூக, கலாச்சார
ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் அல்லது குறைத்தல்.
- தரமான
மருத்துவ வசதி, கல்வி,
ஊதியம் ஆகியவை யாருக்கு வழங்கப்பட வேண்டும்? அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி
37. சமூகநீதி இல்லாமல் சமம் என்றோ சம வாய்ப்பு
என்றோ கருத முடியுமா? முடியாது
38. இந்தியாவில் சாதி, மத பெயரால் நீண்ட காலமாக நிலவும்
நம்பிக்கைகள் எதை உருவாக்குகின்றன? சமத்துவத்திற்கு
தடையாக
39. பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை
போன்ற உரிமைகள் மறுக்கப்படுவது எதை காட்டுகிறது? பெண்களின்
நிலை கவலையளிக்கக்கூடியதாக உள்ளது.
40. பண்பாடு என்ற பெயரில்
ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்வது எத்தைக் குறிக்கிறது? சமத்துவ பயணத்திற்கு தடையாகும்
அபாயம்
41. பெரியாரின் நோக்கம் என்ன? சாதி, மத,
பாலின பேதமற்ற உயரிய சமுதாயம் உருவாக்குதல்.
42. பொருளாதார சமத்துவத்தை அளவிட என்ன
பயன்படுத்தப்படுகிறது? சொத்து மதிப்பு,
வருமானம்
43. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும்
இடையிலான வேறுபாடு எதை விளக்கும்? பொருளாதார சமத்துவமின்மை
44. வறுமைக் கோட்டிற்குக் கீழ்
வாழ்வோரின் எண்ணிக்கை எத்தைக் குறிக்கிறது? சமூகத்தின் பொருளாதார நிலையை
45. பண்பாட்டு பாகுபாடுகள் எப்போது
பிரச்சனையானவையாகின்றன? அவை
நியாயப்படுத்தப்படும் போது
46. புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கான
விழிப்புணர்வில் யார் பங்களித்தனர்? சீர்திருத்தவாதிகள்
47. பெரியார் மனிதனை எவ்வாறு பார்க்க
வேண்டும் என்றார்? மனிதனாகவே
பார்க்க வேண்டும் என்றார்
48. பெரியார் எதை வன்மையாகக்
கண்டித்தார்? பெண்கள்
அடிமைப்படுத்தும் சமூக அமைப்புகளை.
49. மொழி மற்றும் பண்பாட்டு தீவிரம
கொண்டவர்கள் பற்றி பெரியார் என்ன கூறினார்? நவீன சமூகத்தை உருவாக்க முடியாது
50. சமூகத்தில் பிறப்பு, குடும்ப மரபு அடிப்படையில் ஏற்படும்
உயர்வு எதைக் காட்டுகிறது? சமத்துவமின்மையின் பிரதான
அம்சமாகும்
51. சமத்துவத்திற்கான முதல் படி எது? பொதுவான தேர்வு முறையை
பின்பற்றுவது
52. உலகில் ஏழைகளுக்கு வாக்குரிமை
மறுக்கப்பட்ட நாடுகள் உண்டா? ஆமாம்
53. கல்வி, வேலை, பதவிகளில்
சாதி அடிப்படையில் தடைகள் யாருக்கு இருந்தன? பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு
54. சிறப்பு கவனத்தின் தேவை எப்போது
ஏற்படுகிறது? புறக்கணிக்கப்பட்ட
சமூகங்களுக்கு தொடர்ந்த பாதிப்புகள் இருக்கும்போது.
55. இடஒதுக்கீடு என்ன? கல்வி, வேலைவாய்ப்பில்
முன்னுரிமை அளிக்கும் அரசின் நடவடிக்கை.
56. இடஒதுக்கீட்டை சிலர் எவ்வாறு
எதிர்க்கின்றனர்? திறமையின்மை
மற்றும் புதிய பாகுபாடாக வாதிடுகின்றனர்.
57. சமூக, பண்பாட்டு மாற்றம் எவ்வளவு காலத்தில்
நடக்கக்கூடும்? ஒரு அல்லது இரண்டு தலைமுறைகளில் நடக்காது.
58. சமூகம் 'தர்மம்' என ஏற்ற
செயல்கள் எத்தைக் குறிக்கும்? நீதியின் அடிப்படையை
59. பிளாட்டோ நீதி பற்றி என்ன கூறினார்? சமூகம் ஏற்ற நல்ல செயல்கள் நீதியை
உருவாக்கும்.
60. சாக்ரடீஸ் நீதியை எவ்வாறு வரையறை
செய்தார்? சமூகத்திற்கும்
மட்டுமே நன்மை தரும் செயலாக இருக்க வேண்டும்.
61. நீதி தனிநபருக்கான பலன் மட்டுமா? இல்லை, முழு
சமூகத்திற்காகவே இருக்க வேண்டும்.
62. சமூகநீதி என்றால் என்ன? காலம் காலமாக ஏற்படுத்திய
அநீதிக்கு மாற்றாக வழங்கப்படும் இடஒதுக்கீடு.
63. விகிதாச்சார நீதியின் நோக்கம் என்ன? வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின்
முன்னேற்றத்திற்கு உதவிக்கரம் அளிப்பது.
64. இந்திய சமூகத்தில் ஏற்றத்தாழ்வின்
மூல காரணியாக இருப்பது என்ன? சாதிய அடிப்படையிலான படிநிலை அமைப்பு
65. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முதல்
முறையாக எப்போது அமைக்கப்பட்டது? 1953
ஆம் ஆண்டு, காகா கலேல்கர் தலைமையில்.
66. ஐந்தாம் அட்டவணையின் படி அரசியல்
சட்டம் அரசு எதை அனுமதிக்கிறது? பிற்படுத்தப்பட்டோருக்கான சிறப்பு சட்டங்களை
67. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்
பிரிவு 15(4) மற்றும் 16(4)
எதை உறுதிப்படுத்துகின்றன? சமத்துவம்
மற்றும் நேர்மறை பாகுபாடு.
68. தமிழகத்தில் 1971 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு எப்படி
மாற்றப்பட்டது? பிற்படுத்தப்பட்டோர் 31%, தாழ்த்தப்பட்டோர் 18% என உயர்த்தப்பட்டது.
69. தமிழக அரசின் GO Ms.No.1156 (1979) என்ன கூறுகிறது?
குடும்ப ஆண்டு வருமானம் ₹9000 வரை உள்ளோருக்கு இட ஒதுக்கீடு.
70. புதிய அரசாணையின்படி இடஒதுக்கீடு
எவ்வாறு மாற்றப்பட்டது? பிற்படுத்தப்பட்டோருக்கு
50%, தாழ்த்தப்பட்டோருக்கு 18%.
71. மொத்தமாக தமிழகத்தில் இட
ஒதுக்கீட்டு வீதம் எவ்வளவு? 68%
72. 1989 இல்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இட ஒதுக்கீடு எவ்வாறு மாற்றப்பட்டது? பிற்படுத்தப்பட்டோர் 30%, மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் 20%, தாழ்த்தப்பட்டோர் 18%, பழங்குடியினர் 1%.
73. இதனால் தமிழகத்தின் புதிய இட
ஒதுக்கீடு வீதம் என்ன ஆனது? 69%
74. மண்டல் ஆணையம் எப்போது
அமைக்கப்பட்டது? 1979 ஆம் ஆண்டு
மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு.
75. மண்டல் ஆணையத்தின் செயலாளராக
இருந்தவர் யார்? எஸ். எஸ். கில்
76. மண்டல் ஆணையத்தின் பரிந்துரை என்ன? பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%
இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
77. மண்டல் ஆணையத்தின் அடிப்படையில்
எத்தனை சாதிகள் அடையாளம் காணப்பட்டன? 3743
78. மண்டல் ஆணையத்தின் அறிக்கை எப்போது
சமர்ப்பிக்கப்பட்டது? 1980, டிசம்பர்
மாதம்
79. மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை
முதலில் ஏற்ற அரசாங்கம் எது? வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு (1990).
80. மண்டல் ஆணையத்தின் அறிக்கையை
எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட பெயர்? இந்திரா சவாணி வழக்கு
81. உச்சநீதிமன்றம் மண்டல் ஆணையம்
குறித்து என்ன தீர்ப்பு அளித்தது? 27%
இட ஒதுக்கீடு செல்லும், ஆனால் 50% மீறக்கூடாது.
82. தமிழக அரசு 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க என்ன
செய்தது? தனிச்சட்ட மசோதா கொண்டு வந்து IX அட்டவணையில் சேர்த்தது.
83. IX அட்டவணையில்
சேர்க்கப்பட்ட நாள்கள் எது? சட்டமன்றம்: 30.12.1993,
குடியரசுத் தலைவர் ஒப்புதல்: 19.07.1994.
84. IX அட்டவணைச் சட்டம்
அமல்படுத்தப்பட்ட தேதி எது? 16 நவம்பர் 1992 (முன்தேதியிட்டு நடைமுறை).
85. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பூர்வமான
பாதுகாப்பு எப்போது கிடைத்தது? 1994
86. சென்னை மாகாணத்தில் பிராமணர்கள்
எந்த துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தினர்? சமூகம், பொருளாதாரம், அதிகாரம், வேலைவாய்ப்பு
87. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தமிழக
அரசு முதன்முறையாக எடுத்த நடவடிக்கை எது? 1885 இல் நிதி உதவித் திட்டங்கள் அறிவித்தது.
88. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின்
பெயர் என்ன? திரிமென்கீரே
89. திரிமென்கீரே தனது அறிக்கையில்
என்ன பரிந்துரைத்தார்? தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு நிலம், வீடு, கல்வி வழங்க
வேண்டும்.
90. 1892 இல் அரசு எந்த
முக்கிய நடவடிக்கை எடுத்தது? பஞ்சமி நிலம் என 12 லட்சம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
91. பஞ்சமர் பள்ளிகள் என்பதற்குப்
பதில் என்ன பெயர் பரிந்துரைக்கப்பட்டது? ஆதிதிராவிடர் பள்ளிகள்
92. பஞ்சமர் என்றால் யாரை குறிக்கும்? நான்கு வருணங்களுக்கு வெளியே
நிராகரிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை.
93. 1916 ஆம் ஆண்டு
உருவாக்கப்பட்ட பிராமணரல்லாதோர் அமைப்பின் பெயர் என்ன? தென்னிந்தியர்
சுதந்திர சங்கம் (South Indian Liberal Federation).
94. ஜஸ்டிஸ் கட்சி சார்பாக
வெளியிடப்பட்ட இதழின் பெயர் என்ன? ஜஸ்டிஸ்
95. பிராமணரல்லாதோர் அறிக்கையை
வெளியிட்டவர் யார்? சர் பி.
தியாகராயர்
96. மக்களிடையே வகுப்புவாரி உரிமை
விழிப்புணர்வு ஏற்படுத்திய கட்சி எது? நீதிக்கட்சி (Justice Party)
97. இந்திய வரலாற்றில் முதல்
வகுப்புவாரி அரசாணை எப்போது? 1921,
சென்னை மாகாணத்தில்
98. அந்த அரசாணையின் பெயர் என்ன? வகுப்புவாரி பிரதிநிதித்துவ
அரசாணை
99. பெரியார் எப்போது காங்கிரஸில்
இருந்து வெளியேறினார்? 1925
100.
பெரியார் எந்த கோரிக்கையை காங்கிரஸில் முன்வைத்தார்? கல்வி, வேலைவாய்ப்பில்
வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
101. 1928-ல் நீதிக்கட்சி
ஆட்சி காலத்தில் அரசாணை வழியாக என்ன செய்யப்பட்டு வந்தது? பணியிடங்களில் வகுப்புவாரி நியமனம்
102.
முதல் சட்ட திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது? 1951
103.
சட்ட திருத்தத்தின் காரணமாக அரசமைப்பில் எந்த
பிரிவுகள் இணைக்கப்பட்டன? 15(4) மற்றும் 16(4)
104.
1951 இல் பிற்படுத்தப்பட்டோருக்கு
அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு என்ன? 25%
105.
தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு வீதம் எவ்வளவு? 16%
106.
1957 இல் சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடர்ந்தவர் யார்? செண்பகம் துரைராஜன்
107.
செண்பகம் வழக்கில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தது? வகுப்புவாரி இட ஒதுக்கீடு
அரசமைப்புக்கு முரணானது.
108.
அந்த வழக்கின் பின் பெரியார் என்ன செய்தார்? அரசமைப்புச் சட்ட திருத்தம்
கோரினார்.
109.
தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து எடுத்த நடவடிக்கை
என்ன? அரசமைப்புச்
சட்டத்தில் முதல் திருத்தம்.
110. இந்த சட்ட திருத்தம்
பிற்படுத்தப்பட்டோருக்கு என்ன செய்தது? மீண்டும் இடஒதுக்கீட்டுக்கு சட்டப்பூர்வ உரிமை அளித்தது.
111. அமெரிக்காவில் முதலாவது
உறுதிப்படுத்தும் ஆணையை வெளியிட்டவர் யார்? குடியரசுத் தலைவர் ஜான் எஃப். கென்னடி (1961).
112. அதன் நிர்வாக ஆணை எண் என்ன? 10925
113. 1965 இல் எந்த புதிய
ஆணை மூலம் முன்னேற்றம் செய்தது? நிர்வாக ஆணை 11246
114. 1964 இல்
அமெரிக்காவில் என்ன சட்டம் இயற்றப்பட்டது? சிவில் உரிமை
சட்டம்
115. அமெரிக்காவில் பெண்களுக்கு
உறுதிப்படுத்தும் நடவடிக்கை எப்போது விரிவாக்கப்பட்டது? 1967
116. ஐக்கிய நாடுகள் அனைத்து இனவெறி
வகைகளையும் ஒழிக்க ஏற்கனவே ஏற்பாடு செய்த மாநாடு எது? உலகளாவிய சிறப்பு கருத்தரங்கம்
117. ஐ.நா. கருத்தரங்கத்தின்
வலியுறுத்தல் என்ன? திட்டங்களில்
எந்த இனக்குழுவுக்கும் சமத்துவமின்மை ஏற்படக்கூடாது.
118. தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கலை
எதிர்த்து எந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது? 1994
119. தென் ஆப்பிரிக்க சமூகநீதி
சட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன? இன ஒதுக்கலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவு.
120.
தென்னாப்பிரிக்க அரசு 50 பேருக்கு மேற்பட்ட நிறுவனங்களில் என்ன பணி
திட்டத்தை வகுத்தது? பாதிக்கப்பட்ட வகுப்பினருக்கான
பிரதிநிதித்துவ திட்டம்.
121. தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றம்
என்ன தீர்ப்பு வழங்கியது? கருப்பினத்தவருக்கு
முன்னுரிமை தவறில்லை
122.
சீனாவில் சிறுபான்மை இனத்தினருக்கு வழங்கப்படும்
முன்னுரிமை எதனில உள்ளது? கல்வியில்
123.
சோவியத் ஒன்றியத்தில் யாரெல்லாம் அரசு பதவிகளுக்கு
ஒதுக்கீடு பெற்றனர்? இனக்குழு
சிறுபான்மையினர், பெண்கள், தொழிலாளர்கள்.
124.
ரஷ்யாவில் பல்கலைக்கழக நுழைவு மற்றும் அரசு பதவிகளில்
யாருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது? தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு
125.
பி.பி. மண்டல் ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு
எது? 1980
126.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்ற முதல் அரசு எது? வி.பி. சிங் தலைமையிலான அரசு (1990).
127.
மண்டல் ஆணையத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு மத்திய
அரசுப் பணிகளில் எவ்வளவு? 27%
128.
மண்டல் பரிந்துரை எதிராக வழக்கு தொடரப்பட்ட வழக்கின்
பெயர் என்ன? இந்திரா சவாணி
வழக்கு
129.
1992 இல் உச்சநீதிமன்றம் மண்டல் விவகாரத்தில்
என்ன தீர்ப்பு வழங்கியது? இட ஒதுக்கீடு செல்லும்,
50% வரம்புடன்







minnal vega kanitham