Type Here to Get Search Results !

MEGA BLUEPRINT 2026 TNPSC GROUP 2/2A பொதுத்தமிழ்

🔥 2026 TNPSC GROUP 2/2A – பொதுத்தமிழ் MEGA BLUEPRINT 🔥

முதல்நிலைத் தேர்வு: 01-11-2026

💯 100 வினாக்களில் 60–75 வினாக்கள் வரை எதிர்பார்ப்பு!

29 முக்கியத் தலைப்புகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பொதுத்தமிழ் Blueprint.

தலைப்புவாரியாக எந்தெந்த பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும்? எத்தனை வினாக்கள் கேட்கப்பட வாய்ப்புள்ளது? முழுமையான பட்டியல் இதோ!

📚 தலைப்புவாரியான வினாக்கள் கணிப்பு

1. திருக்குறள் தொடர்பான செய்திகள்

I. 6–7ஆம் வகுப்பு புதிய புத்தகங்கள் – 2 வினாக்கள்

II. 8–10ஆம் வகுப்பு புதிய புத்தகங்கள் – 2 வினாக்கள்

2. அறநூல் தொடர்பான செய்திகள் – 3–4 வினாக்கள்
3. நிறுத்தல் குறியீடுகள் – 3 வினாக்கள்

கூடுதலாக 1 வினா Out of Source-லிருந்து கேட்கப்படவும் வாய்ப்புள்ளது.

4. கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் – 3–4 வினாக்கள்
5. வேர்ச்சொல் அறிதல்

வேர்ச்சொல்லிலிருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர் – 3 வினாக்கள்

6. பழமொழிகளின் பொருளறிதல் – 3 வினாக்கள்

2 வினாக்கள் Out of Source-லிருந்து கேட்கப்படவும் வாய்ப்புள்ளது.

7. உவமைத்தொடரின் பொருளறிதல் – 3 வினாக்கள்

2 வினாக்கள் Out of Source-லிருந்து கேட்கப்படவும் வாய்ப்புள்ளது.

8. மரபுத்தொடரின் பொருளறிதல் – 3 வினாக்கள்

2 வினாக்கள் Out of Source-லிருந்து கேட்கப்படவும் வாய்ப்புள்ளது.

9. செய்வினை, செயப்பாட்டு வினை, தன்வினை, பிறவினை – 2–3 வினாக்கள்
10. ஓரெழுத்து ஒருமொழியின் உரிய பொருளைக் கண்டறிதல் – 1–2 வினாக்கள்
11. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுதல் – 1 வினா
12. பிழை திருத்துக – 3–5 வினாக்கள்

i. பிழை திருத்துக (எ.கா. ஒரு – ஓர்)

ii. பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம்; பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு

iii. ஒருமை, பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்

iv. சந்திப்பிழை

v. எழுத்துப்பிழை

vi. ஒற்றுப்பிழை அறிதல்

13. வேறுபாடு அறிதல் – 3–4 வினாக்கள்

i. குறில், நெடில் வேறுபாடு

ii. லகர, ளகர, ழகர வேறுபாடு

iii. னகர, ணகர வேறுபாடு

iv. ரகர, றகர வேறுபாடு

v. இரண்டு வினைச்சொற்களின் வேறுபாடு அறிதல்

14. இனவெழுத்துகள், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் – 2–3 வினாக்கள்

i. இனவெழுத்துகள் அறிதல்

ii. சுட்டு எழுத்துகள்

iii. வினா எழுத்துகள்

15. பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல் – 3–4 வினாக்கள்

i. பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல்

ii. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

iii. சொல்லும் பொருளும் அறிதல்

16. சொற்களின் பொருள் தொடர்பான வினாக்கள் – 3–4 வினாக்கள்

i. ஒருபொருள் தரும் பல சொற்கள்

ii. ஒருபொருள் பன்மொழி

iii. இருபொருள் குறிக்கும் சொற்கள்

iv. ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்

v. சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்

vi. பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக

17. வினைச்சொல், பெயரெச்சம் – 1–2 வினாக்கள்

i. வினைச்சொல்

ii. பெயரெச்சம் வகை அறிதல்

18. பொருந்தா சொல் மற்றும் பொருத்தமான சொல்லைக் கண்டறிதல் – 1–2 வினாக்கள்

i. பொருந்தா சொல்லைக் கண்டறிதல்

ii. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்

iii. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல்

iv. கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்

19. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் – 1–2 வினாக்கள்
20. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல், ஒருமை–பன்மை – 1–2 வினாக்கள்

i. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்

ii. ஒருமை, பன்மை அறிதல்

21. மரபுத்தமிழ் – 2–3 வினாக்கள்

திணை மரபு, பால் மரபு, காலம்

22. இளமைப் பெயர், ஒலிமரபு, வினைமரபு, தொகை மரபு – 1–2 வினாக்கள்
23. திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் – 1 வினா

9ஆம் வகுப்பு புதிய புத்தகம்

24. தமிழ் அறிஞர்கள் தொடர்பான செய்திகள் – 1–2 வினாக்கள்

உ.வே. சாமிநாத ஐயர், தேவநேய பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார்

25. ஆளுமைகள் தொடர்பான செய்திகள் – 1–2 வினாக்கள்

ஜி.யு. போப், வீரமாமுனிவர், காயிதே மில்லத், வேலுநாச்சியார்

26. கவிஞர்கள் தொடர்பான செய்திகள் – 1–2 வினாக்கள்

பாவேந்தர், கண்ணதாசன், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், முடியரசன், நாமக்கல் கவிஞர்

27. எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் தொடர்பான செய்திகள் – 1–2 வினாக்கள்

டி.கே. சிதம்பரனாதர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், தாராபாரதி, தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா. ஜகந்நாதர்

28. அரசு சார்ந்த செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசித்துப் புரிந்துகொள்ளும் திறன் – 1–2 வினாக்கள்
29. அயற்சொல் – தமிழ்ச்சொல் – 1 வினா

🎯 முழுமையான Blueprint – முக்கிய அறிவிப்பு

இந்த 29 தலைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, தேர்வுக்குப் பயன்படும் முக்கிய வினாக்களைத் தொகுத்துள்ளோம்.

100 வினாக்களில் 60–75 வினாக்கள் வரை எதிர்பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்ட எங்கள் கணிப்பு Blueprint!

தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படித்து, தேர்வுக்குத் திட்டமிட்டுத் தயாராகுங்கள்.


📌 Blueprint தயாரித்த முறை:

புதிய பாடத்திட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற 8 TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களின் அடிப்படையில், தலைப்புவாரியான வினா எண்ணிக்கை மற்றும் முக்கியத்துவம் ஆய்வு செய்யப்பட்டு இந்த Blueprint தயாரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: இது கடந்த தேர்வுகளின் அடிப்படையிலான கணிப்பு. எதிர்வரும் தேர்வில் வினாக்களின் எண்ணிக்கை மாறுபடலாம்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.