Type Here to Get Search Results !

SEATING ARRANGEMENT Part - 1-1 (15 to 17 Questions)

15) A, B, C, D, E, F ஆகியோர் அறுகோண வடிவத்தில் சமமான தூரத்தில் அமர்ந்துள்ளனர். A-யும் B-யும் அருகாமையில் இல்லை, அதே போல் Aயும், Cயும் அருகாமையில் இல்லை. D-யும் C-க்கும், E-க்கும் அருகாமையில் இல்லை. B-யும் Cயும் அருகில் உள்ளனர், F என்பது D-க்கும், C-க்கும் நடுவில் உள்ளது. கீழே உள்ளவற்றுள் எது அருகாமையில் இல்லாத ஜோடி? (12-01-2019 TNPSC)
(A) A-யும் F-ம்
(B) D-யும் F-ம்
(C) B-யும் E-ம்
(D) C-யும் F-ம்
Answer (A) A-யும் F-ம் ✔

16) A முதல் E முடிய வெவ்வேறு வீடுகள் ஒரே கிடைமட்ட வரிசையில் உள்ளன. இதில் A என்பது B இன் வலதுபுறத்திலும், E என்பது C இன் இடதுபுறத்திலும் மற்றும் A இன் வலதுபுறத்திலும் உள்ளன. மேலும் B என்பது D இன் வலதுபுறத்திலும் உள்ளன. மேற்கண்ட வரிசையில் நடுவில் உள்ள வீடு எது? (2024 TNPSC)
(A) A
(B) B
(C) D
(D) E
Answer (A) A ✔

A முதல் E வரை ஒரு வரிசையில் ஐந்து வீடுகள் உள்ளன. A என்பது B ன் வலதிலும், E என்பது C ன் இடதிலும், A வின் வலதிலும் உள்ளது. B என்பது D ன் வலதில் உள்ளது எந்த வீடு நடுவில் உள்ளது ? (2022 TNUSRB SI)
(A) A
(B) B
(C) C
(D) D
Answer (A) A ✔

17) ஓர் அணிவகுப்பில் ஒரு வரிசையில் 7 பேர் நிற்கிறார்கள். Q ஆனவர் R க்கு இடப்புறமாகவும் P க்கு வலப்புறமாகவும் நிற்கிறார். O ஆனவர் N க்கு வலப்புறமாகவும் P க்கு இடப்புறமாகவும் நிற்கிறார். இவ்வாறே S ஆனவர் R க்கு வலப்புறமாகவும் T க்கு இடப்புறமாகவும் நிற்கிறார். அந்த வரிசையின் நடுவில் நிற்பவர் யார்? (2024 TNPSC)
(A) P
(B) Q
(C) R
(D) O
Answer (B) Q ✔

Shortcut Video

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.