Type Here to Get Search Results !

தனிவட்டி Type - 7.1 (95 to 99 Questions)

Type - 7.1
95) ரியா என்பவர் மகிழுந்து வாங்குவதற்காக ₹ 15,000 ஐ 10% தனிவட்டி என்ற வீதத்தில் கடனாகப் பெற்றார் அவர் ₹ 9,000 ஐக் கடனை முடிக்கும் தருவாயில், வட்டியாகச் செலுத்தினார் எனில், கடனைப் பயன்படுத்திய காலத்தைக் கணக்கிடுக. (7th New Book)
(A) 3 ஆண்டுகள்
(B) 4 ஆண்டுகள்
(C) 5 ஆண்டுகள்
(D) 6 ஆண்டுகள்
Answer (D) 6 ஆண்டுகள்✔

96) ₹3,000 அசலுக்கு ஆண்டுக்கு 8% என வழங்கப்படும் தனிவட்டியானது ₹4,000 அசலுக்கு ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனிவட்டிக்கு நிகராகும் காலம் என்ன? (7th New Book)
(A) 6 ஆண்டுகள்
(B) 7 ஆண்டுகள்
(C) 8 ஆண்டுகள்
(D) 9 ஆண்டுகள்
Answer (C) 8 ஆண்டுகள்✔

97) 5 ஆண்டுகளில் அசல் ₹20000 மேல் கிடைக்கும் தனிவட்டியானது அசல் ₹15000 மேல் கிடைக்கும் தனிவட்டியை விட ₹3000 அதிகம் எனில் ஆண்டு வட்டி வீதம் காண்க. (13-07-2024 TNPSC)
(A) 9.8 %
(B) 10%
(C) 12%
(D) 12.5%
Answer (C) 12% ✔

98) அருண் என்பவர் பாலாஜிக்கு ₹5000 ஐ 2 ஆண்டுகளுக்கு சார்லஸ் என்பவருக்கு ₹3000 ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரே தனி வட்டி வீதத்தில் வழங்கியதால் மொத்தமாக ₹2200 ஐ வட்டியாக பெற்றால், வட்டி வீதம் என்ன? (07-01-2024 TNPSC), (7th New Book)
(A) 5%
(B) 7.5%
(C) 10%
(D) 12.5%
Answer (C) 10%✔

99) இரமேஷ் ரூ. 15,600 ஐ வைப்புத் தொகையாக 10% தனிவட்டி விகிதத்தில் முதலீடு செய்கிறார். ஒவ்வொரு இரண்டாண்டின் முடிவிலும் அவர் வட்டித் தொகையை அசலுடன் இணைக்கிறார் எனில் நான்காம் ஆண்டின் முடிவில் இணைக்கப்படும் வட்டித் தொகை ________ ஆகும். (15-06-2025 TNPSC)
(A) ரூ. 1,716
(B) ரூ. 1,560
(C) ரூ. 3,744
(D) ரூ. 1,872
Answer (C) ரூ. 3,744✔

Shortcut Video -1
Shortcut Video -2

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.