Type Here to Get Search Results !

பாரதிதாசன் 6-12 வரை தமிழ் புதிய மற்றும் பழைய புத்தகம்

பாரதிதாசன்
6-12 வரை தமிழ் புதிய மற்றும் பழைய புத்தகம்
1. பாரதிதாசனின் இயற்பெயர்? கனகசுப்புரத்தினம்
2. பாரதிதாசன் பிறந்த ஊர்? புதுச்சேரி, 29.4.1891-21.4.1964
3. பாரதிதாசன் பெற்றோர்கள்? கனகசபை இலக்குமி அம்மையார்
4. பாரதிதாசன் யாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்? -அ.பெரியசாமி
5. பாரதிதாசன் நடத்திய இதழ்? குயில், பொன்னி
6. பாரதிதாசன் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய கல்லூரி? புதுவை அரசு
7. பாரதிதாசன் பாரதியாரை முதன் முதலில் சந்தித்த இடம்? வேணிநாயக்கர் வீட்டுத் திருமணம்
8. யாரின் பகுத்தறிவு சிந்தனைகளை பாரதிதாசன் கவிதை வடிவில் தந்தார்? பெரியார்
9. பாரதிதாசன் தலைமுறைக் கவிஞர்களுள் மூத்தவர் யார்? முடியரசன்
10. பாரதிதாசன் தலைமாணாக்கர்களுள் ஒருவர் யார்? பெருஞ்சித்திரனார்
11. பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? வாணிதாசன், முடியரசன், சுரதா
12. பாரதிதாசன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஆண்டு? 1991
13. பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துக்களைப் பாடுபொருளாக கொண்டு பாடியவர் யார்? பாரதிதாசன்
14. தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ் என்று பாராட்டப்பட்டவர் யார்? பாரதிதாசன்
15. பாரதிதாசன் பாடல்கள் எந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன? செக் மொழி
16. பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? திருச்சி (1982)
17. பாரதிதாசன் "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? 1969
18. 1937 ஆண்டு வடமொழியில் உள்ள “பில்கணியம்" என்னும் நூலைத் தழுவி பாரதிதாசனால் இயற்றப்பட்ட நூல்? புரட்சிக்கவி
19. மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றி தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர், என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டவர்? பாரதிதாசன்
20. பிரேஞ்சு மொழியில் உள்ள தொழிலாளர் சட்டத்தை தமிழில் தந்தவர் யார்? பாரதிதாசன்
21. "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" எனப் பாராட்டியவர்? பாரதிதாசன்
22. "வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே" என்ற பாடலை தனது தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக ஏற்றுக்கொண்ட அரசு? புதுவை
23. "பாரதிக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு உண்மையான கவி பாரதிதாசன்" என்றுக் கூறியவர்? கு.ப.இராஜகோபாலன்
24. "அழகின் சிரிப்பு" என்ற நூலை செக் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்? டாக்டர்.கமில் சுவலபில்
25. "பாரதிதாசன்பாடலைப் படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான்" என்று கூறியவர்? அ.சிதம்பரநாத செட்டியார்
26. "பாரதிதாசன் கவிதைகளில் வேகம் உண்டு, விடுதலை தாகம் உண்டு, பண்டுப் உண்டு, பயனும் உண்டு" என்று கூறியவர்? ரா.பி.சேதுப்பிள்ளை
27. "எனக்கு குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அரிவியின் முழவும் இனிக்கும், பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்” என்று கூறியவர்? திரு.வி.க
28. "புரட்சிக் கவிஞர்" எழுதிய மொத்த நூல்கள் எண்ணிக்கை? 73
29. பாரதிதாசனார் தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர் என்று யாரால் பாராட்டப்பட்டார்? - பெரியார்
30. அறிஞர் அண்ணா அவர்களின் முயற்சியால் 1946 ஆம் ஆண்டு ரூபாய் 2500 பொற்கிழியும், புரட்சிக் கவிஞர் என்ற விருதும் பெற்றவர் யார்? பாரதிதாசன்
31. பாரதிதாசன் சிறப்புபெயர்கள்:
☞ பாவேந்தர்
☞ இயற்கைக் கவிஞர்
☞ பரட்சிக் கவிஞர்
☞ புதுவைக் கவிஞர்

32. புதிவையில் பாரதியின் கட்டளைக்கிணங்க பாரதிதாசன் பாடிய பாடல்? "எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி"
33. பாரதிதாசனின் முக்கியமான மேற்கோள்கள்:
☞ "தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை"
☞ "சாதிக் கொடுமையை வேருடன் களைந்தெரிய வேண்டும்"
☞ "புதியதோர் உலகம் செய்வோம்"
☞ "தமிழுக்கு அமுதென்று பேர்"
☞ "கல்வி இல்லாத பெண் களர்நிலம்"
☞ "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு"
☞ "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்”
☞ "மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு"

☞ "பெண்ண்டிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்" என்ற வரியை இயற்றியவர் யார்? - பாரதிதாசன்
"நல்லொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்றவர்? பாரதிதாசன்
34. பாரதிதாசனின் முக்கியமான நூல்கள்:
☞ குடும்ப விளக்கு
☞ இருண்ட வீடு
☞ பாண்டியன் பரிசு
☞ தமிழியக்கம்
☞ கண்ணகி புரட்சிக்காப்பியம்
☞ சேரதாண்டவம்
☞ தமிழச்சியின் கத்தி
☞ குறிஞ்சித்திரட்டு
☞ இளைஞர் இலக்கியம்
☞ புதிய ஆத்திச்சுடி
☞ பிசிராந்தையார்
☞ எதிர்பாராத முத்தம்
☞ அழகின் சிரிப்பு
☞ இசையமுது
☞ புரட்சிக்கவி

35. பாரதிதாசன் நூல் கரும்பொருள்:
☞ பாரதிதாசன் கற்ற பெண்ணின் குடும்பமே பல்கழைக்கழகமாக மிளிரும் என்பதை எந்த நூலில் கூறுகிறார்? குடும்ப விளக்கு
☞ பாரதிதாசன் எந்த நூலில் இயற்கையை வலியுறுத்துகிறார்? அழகின் சிரிப்பு
☞ பாரதிதாசன் எந்த நூலில் கல்லாத பெண்களின் வரலாற்றை வலியுறுத்துகிறார்? இருண்ட வீடு

36. பாரதிதாசன் முக்கிய பாடல் வரிகள்:
6ம் வகுப்பு:
☞ தமிழுக்கு அமுதென்றுபேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

7ம் வகுப்பு
☞ "ஏடெட்த்தேன் கவி ஒன்று வரைந்திட
எண்ணெய் எழுதென்று சொன்னது வான்"
☞ "சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுத்
தோகை மயில்வரும் அன்னம் வரும்"
☞ "இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்"

9ம் வகுப்பு:
☞ கல்வி இல்லாத பெண்கள்
களர்நிலம் அந்தி லத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை" - குடும்ப விளக்கு
☞ "வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுதி மளத்தல்
ஆன எச் செயலும் ஆண்பெண்
அனைவருக்கும் பொதுவே! இன்று" - குடும்ப விளக்கு
☞ "உணவினை ஆக்கல் மக்கட்கு!
உயிர்ஆக்கல் அன்றோ? வாழ்வு"
☞ "பெண்எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது"
☞ "அம்மா என் காதுக்கொரு தோடு -நீ
அவசியம் வாங்கி போடு"

11ம் வகுப்பு
☞ "ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பாநீ"

12ம் வகுப்பு:
☞ "தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
வேங்கட சாமி என்பேன்
விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டேன்
வீங்கிட மாட்டான் கல்வி
விளம்பரம் விழைதல் இல்லான்" - பாவேந்தர் பாரதிதாசன்
☞ "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானுட சமுத்திரம் நானென்று கூவு" என்ற பாடலை இயற்றியவர் யார்? பாரதிதாசன்
☞ "மழையே மழையே வா வா - நல்ல
வானப் புனலே வா வா"
☞ "எளியநடைமுறையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றதலும் வேண்டும்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.