Type Here to Get Search Results !

8th வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை, கிராம சமூகமும் வாழ்க்கை முறையும், ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்புறம் மாற்றங்கள்

8th வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

 8th வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

1.    வாஸ்கோடாகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்த ஆண்டு – 1498.

2.    பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு- 1757 ஜூன் 23 - சிராஜ் - உத் - தெளலா+ பிரெஞ்சு கூட்டணி – ஆங்கிலேயர்கள்.

3.    இருட்டறை துயர சம்பவம் நடைபெற்ற ஆண்டு 1756.

4.    இருட்டறை துயரச் சம்பவம் சிராஜ் - உத் - தெளலாவின் படைவீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்தனர் அவர்களுள் 123 பேர் மூச்சுத்திணறி இறந்திருந்தனர்.

5.    பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு - 1764 அக்டோபர் 22.

6.    பிளாசிப் போருக்குப்பின் ஆங்கிலேயர்கள் தடையில்லா வணிக உரிமை பெற்ற பகுதிகள் - வங்காளம் பீகார், ஒரிசா.

7.    பிளாசிப் போருக்குப்பின் வங்களத்தின் அரியணை ஏறியவர் – மீர்ஜாபர்.

8.    தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்க வரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது கோபமடைந்து கலகத்தில் ஈடுபட்டவர் – மீர்காசிம்.

9.    சுஜா - உத் - தெளலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கியவர் – மீர்காசிம்.

10.   பீகார் பகுதியில் பாட்னாவிற்கு மேற்கே 130 கி.மீ. தொலைவில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பாதுகாக்க பட்டஒரு சிறிய நகரம் – பக்சார்.

11.   அலகாபாத் உடன்படிக்கையின்படி பக்சார் போர் முடிவுக்கு வந்த ஆண்டு -1765 பிப்ரவரி 20 .

12.   வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர்- இராபர்ட் கிளைவ்.

13.   கர்நாடக போர்கள் நடைபெற்ற காலகட்டம் - 1746 – 1763.

14.   முதல் கர்நாடகப் போர்            - 1746 – 1748. அய் - லா - சப்பேல் (1748)

15.   இரண்டாம் கர்நாடகப் போர்     - 1749 – 1754. பாண்டிச்சேரி உடன்படிக்கை (1755)

16.   மூன்றாம் கர்நாடகப் போர்       - 1756 – 1763. பாரிசு உடன்படிக்கை (1763)

17.   முதல் கர்நாடகப் போர் ஏற்பட காரணம் - ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசுரிமை போர்.

18.   இரண்டாம் கர்நாடகப் போர் ஏற்பட காரணம் - கர்நாடகம், ஹைதராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனை.

19.   மூன்றாம் கர்நாடகப் போர் ஏற்பட காரணம் - ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டு போர்.

20.   கர்நாடக நவாப் அன்வருதீனுக்கும் - பிரஞ்சு படைக்கும் இடையே நடைபெற்ற போர் - அடையாறு போர்  -1746.

21.   ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1749 ஆகஸ்ட் 3.

22.   ஆற்காட்டு போர்     நடைபெற்ற ஆண்டு 1751.

23.   வந்தவாசி போர்     நடைபெற்ற ஆண்டு - 1760 ஜனவரி 22.

24.   இரண்டாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சு படையை வழி நடத்தியவர்- டியூப்ளே.

25.   மூன்றாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சு படையை வழி நடத்தியவர் – கவுண்டிலாலி.

26.   ஹைதர் அலி மைசூர் சமஸ்தானத்தின் உண்மையான ஆட்சியாளரான ஆண்டு 1761.

27.   முதல் ஆங்கிலேய மைசூர் போர் -1767 – 1769. மதராஸ் உடன்படிக்கை 1769.

28.   இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் -1780-1784 மங்களூர் உடன்படிக்கை 1784 மார்ச் 7.

29.   மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் -1790 -1792. ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை 1792.

30.   ஹைதர் அலி இறந்த ஆண்டு -1782.

31.   ஹைதர் அலி மகன் - திப்பு சுல்தான்.

32.   ஆங்கிலேயருக்கும் திப்பு சுல்தான் க்கும் இடையே கையெழுத்தானது- மங்களூர் உடன்படிக்கை.

33.   பிரஞ்ச் அலுவலர்கள் ஸ்ரீரங்கப் பட்டணத்திற்கு வருகை புரிந்து - ஜாக்கோபியன் கழகத்தை நிறுவினார்கள். அங்கு சுதந்திர மரம் ஒன்றும் நடப்பட்டது.

34.   நான்காம் மைசூர் போருக்குப் பின்னர் மைசூரில் அரியணை ஏறியவர்- மூன்றாம் கிருஷ்ணராஜா உடையார்.

35.   நான்காம் மைசூர் போருக்குப் பின்னர் திப்புவின் குடும்பத்தினர் அனுப்பப்பட்ட இடம் – வேலூர்.

36.   முதல் ஆங்கிலேய மராத்திய போர் - 1775 – 1782 . சால்பை ஒப்பந்தம் (1782 மே 17)

37.   இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர் - 1803 – 1805 . பஸ்ஸீன் உடன்படிக்கை 1802.

38.   மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வழங்கப்பட்ட வருடாந்திர ஓய்வூதியம்  - 8 லட்சம் ரூபாய்.

39.   வெல்லெஸ்லி பிரபு இந்திய கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்ற ஆண்டு 1800.

40.   வெல்லெஸ்லி பிரபு கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவிய ஆண்டு 1800.

41.   போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஆண்டு பட்டய சட்டம் 1833.

42.   குடிமைப் பணித் தேர்வு எழுத வயது :


1858 ல் - 23 வயது

1860 ல் - 22 வயது

1866 ல் - 21 வயது

1876 ல் - 19 வயது


43.   பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய ஆட்சி பணி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு- 1861.

44.   இல் ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மூன்று இந்தியர்கள் :


சுரேந்திரநாத் பானர்ஜி

ரமேஷ் சந்திர தத்

பிகாரி லால் குப்தா


45.   1863 ல் ஜ.சி.எஸ், தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் - சத்தியேந்திரநாத் தாகூர் - இரபிந்திநாத் தாகூரின் மூத்த சகோதரர்.

46.   ஐசிஎஸ் தேர்வு எழுதுவதற்கான வயது 21 -  23 ஆக உயர்த்தப்பட்ட ஆண்டு-1892.

47.   அரசு பள்ளியை பற்றி ஆராய்வதற்காக இஸ்லிங்டன் பிரபு என்பவரின் தலைமையில் ஒரு ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு-1912. 1917 -தனது பரிந்துரையை வெளியிட்டது.

48.   1918 இந்திய ஆட்சிப் பணியில் 33% இந்தியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் படிப்படியாக அதிகரிக்கவும் பரிந்துரைத்தவர்கள்-மாண்டேகு மற்றும் செம்ஸ்போர்டு.

49.   இந்திய அரசு சட்டம் மத்தியில் கூட்டாட்சி அரசு பணியாளர் தேர்வாணையம் ஒன்றும் மாகாணங்களில் மாகாண அரசு பணியாளர் தேர்வாணையம் ஒன்றும் உருவாக வழிவகை செய்த ஆண்டு 1935.

50.   1856 ம் ஆண்டு மூன்று இந்திய படை வீரர்கள் மாத சம்பளம் மொத்தம் ரூபாய் -300.

51.   1857 ல் இந்திய ராணுவத்தில்3,11,400 வீரர்களில் -265900 வீரர்கள் இந்தியர்களாக இருந்தனர்.

52.   நகரங்களை நிர்வகிக்கும் காவல் அலுவலர்களாக இருந்தவர்கள் – கொத்வால்.

53.   இந்தியாவில் முதன்முதலில் காவல் துறையை உருவாக்கியவர் -காரன்வாலிஸ் பிரபு.

54.   1791 ல் முறையான காவல்துறையை உருவாக்கியவர் – காரன்வாலிஸ் பிரபு.

55.   தரோகா என்பவரைத் தலைவராகக் கொண்ட சரகங்கள் (அ) தானாக்கள் என்ற காவல் பகுதிகளை ஏற்படுத்தியவர் - காரன்வாலிஸ் பிரபு.

56.   கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள் – சௌளகிதார்கள்.

57.   இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு வரி வசூல் செய்வதையும் நீதி வழங்கும் அதிகாரத்தையும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக்கொண்ட ஆண்டு -1772.

58.   சிவில் நீதிமன்றம் என்று அழைக்கப்பட்ட திவானி அதாலத் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் என்றழைக்கப்பட்ட பௌளஜ்தாரி அதாலத் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு -1772.

59.   1773 ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் படி ஒரு உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்ட இடம் – கல்கத்தா.

60.   மதராஸ் உச்ச நீதி மன்றங்கள் நிறுவப்பட்ட ஆண்டு -1801.

61.   பம்பாய் உச்ச நீதி மன்றங்கள் நிறுவப்பட்ட ஆண்டு -1823.

62.   ஜூரி - நீதி அதிகார முறையை வங்காளத்தில் கொண்டுவந்தவர் - வில்லியம் பெண்டிங் பிரபு.

63.   1861 ஆண்டு இந்திய உயர் நீதிமன்ற சட்டத்தின்படி கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய இடங்களில் பழைய உச்சநீதி மன்றங்களுக்கு பதிலாக 3 உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

64.   வங்காளத்தின், வில்லியம் கோட்டையில் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி - சர் எலிஜா இம்பே.

65.   மதராஸ் உயர் நீதிமன்றத்தின் முதல் இந்தியத் தலைமை நீதிபதி - சர் திருவாரூர் முத்துசாமி.

66.   1798 துணைப்படை திட்டத்தை கொண்டு வந்தவர் - வெல்லெஸ்லி பிரபு.

67.   இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு என்பதை "இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு" என்று மாற்றியவர் - வெல்லெஸ்லி பிரபு.

68.   துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் சுதேச அரசு – ஹைதராபாத்.

69.   துணைப்படை திட்டத்தை ஏற்றுக் கொண்ட ஆண்டு:


ஹைதராபாத் - 1798

தஞ்சாவூர்  - 1799

அயோத்தி - 1801

பேஷ்வா - 1802

போன்ஸ்லே - 1803

குவாலியர் – 1804

இந்தூர் - 1817

ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜேதபூர்- 1818


70.   1848 வாரிசு இழப்பு கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் - டல்ஹெசி பிரபு.

71.   வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் டல்ஹெளசி பிரபு இணைத்துக் கொண்ட பகுதிகள்:


சதாரா - 1848

ஜெய்த்பூர், சல்பல்பூர் - 1849

பகத் - 1850

உதய்பூர்-  1852

ஜான்சி - 1853

நாக்பூர் - 1854


72.   இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட காரணமானவர்களில் முதன்மை சிற்பியாக செயல்பட்டவர் - டல்ஹெசி பிரபு.

73.   1757 ம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்- சிராஜ் - உத்- தெளலா.

74.   பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு- 1757.

75.   பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - அலகாபாத் உடன்படிக்கை.

76.   பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது- இரண்டாம்  கர்நாடகப் போர்.

77.   ஹைதர் அலி மைகசூர் அரியணை ஏறிய ஆண்டு 1761.

78.   மங்களூர் உடன்படிக்கை கையெழுத்து- ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்.

79.   மூன்றாம் ஆங்கிலேய - மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் -காரன் வாலிஸ்.

80.   ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் - இரண்டாம் பாஜிராவ்.

81.   மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா - இரண்டாம் பாஜிராவ்.

82.   அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு ஆண்டு -  1757 பிப்ரவரி 9.

83.   சிராஜ் உத் தெளலாவின் தலைமைப் படைத்தளபதி -  மீர் ஜாபர்.

84.   இரண்டாம் கர்நாடகப் போர்க்கான முக்கிய காரணம் - கர்நாடகம் (ம) ஹைதராபாத் வாரிசுரிமை போர்.

85.   பொருத்துக:

அய் - லா - சப்பேல் உடன்படிக்கை - முதல் கர்நாடகப் போர்.

சால்பை உடன்படிக்கை - முதல் மராத்திய போர்.

பாரிசு உடன்படிக்கை - மூன்றாம் கர்நாடகப் போர்.

ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை - மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்.

மெட்ராஸ் உடன்படிக்கை - முதல் ஆங்கிலேய மைசூர் போர்.


8th கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

 8th கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

1.    காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது - வேளாண்மையை அடிப்படையாக கொண்ட பொருளாதாரமாக இருந்தது.

2.    மக்களின் முதல்நிலைத் தொழில்- வேளாண்மை.

3.    வேளாண்மை சார்ந்த பிற தொழில்கள்:


நெசவுத் தொழில்

சக்கரை தொழில்

எண்ணெய் தொழில்


4.    ஆங்கிலேய அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்திய மூன்று பெரிய நில வருவாய் மற்றும் நில உரிமை திட்டம்:


நிலையான நிலவரி திட்டம்

மகல்வாரி திட்டம்

இரயத்துவாரி திட்டம்


5.    1765 ல் வங்காளம், பீகார், ஓரிசா ஆகிய பகுதிகளில் ஓராண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் - இராபர்ட் கிளைவ்.

6.    ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை ஐந்தாண்டு நிலவருவாய் திட்டமாக மாற்றிய பின்பு ஓராண்டு திட்டமாக மாற்றிய ஆளுநர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்.

7.    நிலையான நிலவரி திட்டத்தை பிறகு பத்தாண்டு நிலவருவாய் திட்டமாக மாற்றியவர் - காரன் வாலிஸ் பிரபு.

8.    காரன் வாலிஸ் நிலையான நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு -1793.

9.    நிலையான நிலவரி திட்டம் கொண்டுவரப்பட்ட பகுதிகள்:


வங்காளம்,

பீகார்

ஒரிசா,

வடக்கு கர்நாடகம்

உத்திர பிரதேசத்தில் (வாரணாசி)


10.   நிலையான நிலவரி திட்டம் இந்தியாவில் மொத்த - 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

11.   நிலையான நிலவரி திட்டத்தின் வேறு பெயர்கள்:


ஜமீன்தாரி

ஜாகீர்தாரி

மல்குஜாரி

பிஸ்வேதாரி


12.   ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை  - ஜமீன்தாரி முறை.

13.   ஜமீன்தார்கள் விவசாயிகளிடமிருந்து வசூலித்த வரியினை எத்தனை பங்கு ஆங்கில அரசுக்கு செலுத்தினர் - 10/11 பங்கு.

14.   ஆங்கிலேயர்களால் நிலவுடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள்- ஜமீன்தார்கள்.

15.   விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக செயல்பட்ட வர்கள்- ஜமீன்தார்கள்.

16.   ஜமீன்தார்கள் வணிகக் குழுவிற்கு செலுத்தும் வரி நிர்ணயிக்கப்பட்டு எந்த சூழ்நிலையிலும் உயர்த்தப்படமாட்டாது என உறுதியளிக்கப்பட்டது.

17.   ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு பட்டா வழங்கினர். இதன்மூலம் விவசாயிகள் அந்நிலத்தை உழும் காலம் வரை குத்தகைதாரர்களாக கருதப்பட்டனர்.

18.   1820 ல் இரயத்துவாரி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் - தாமஸ் மன்றோ, கேப்டன் ரீ்ட்.

19.   இரயத்துவாரி முறை கொண்டுவரப்பட்ட பகுதிகள்:


பம்பாய்

அசாம்

மதராஸ்

கூர்க்


20.   நிலத்தின் உரிமையானது விவசாயிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டது முறை- இரயத்துவாரி முறை.

21.   இரயத்துவாரி முறையில் தொடக்கத்தில் நில வருவாய் நிர்ணயிக்கப்பட்டது- விளைச்சலில் பாதி.

22.   இரயத்துவாரி முறையில் விளைச்சலில் 1/3 பங்கு குறைத்தவர் - தாமஸ் மன்றோ.

23.   இரயத்துவாரி முறையில் 20 மற்றும் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலத்தின் மீதான குத்தகை மாற்றியமைக்கப்பட்டது.

24.   ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தபடாத பகுதி – வங்காளம்.

25.   மகல்வாரி முறை யாருடைய சிந்தனையில் உதித்த ஜமீன்தாரி முறையின் மாற்றப்பட்ட வடிவம் - ஹோல்ட் மெகன்சி.

26.   மகல்வாரி முறையை 1833 இராபர்ட் மெர்கின்ஸ் பர்ட் என்பவரின் வழிகாட்டுதலின் படி மாற்றியமைத்தவர்- வில்லியம் பெண்டிங் பிரபு.

27.   1822 ல் மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பகுதி:


கங்கை சமவெளி

வடமேற்கு மாகாணங்கள்

மத்திய இந்தியாவில் சில பகுதிகள்

பஞ்சாப்


28.   மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் - வில்லியம் பெண்டிங் பிரபு. மகல்வாரி முறையில் "மகல்'என்றால் - கிராமம்.

29.   மகல்வாரி முறையையில் நிலவருவாய் தொடக்கத்தில் மொத்த விளைச்சலில் அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது - 2/3 பங்கு.

30.   மகல்வாரி முறையையில் மொத்த விளைச்சலில் நிலவருவாய் 50% என குறைத்தவர்- வில்லியம் பெண்டிங் பிரபு.

31.   மகல்வாரி முறையில் நில வருவாயை கிராமம் முழுவதும் வசூல் செய்து அரசுக்கு செலுத்த நியமித்தவர்  - கிராமத் தலைவர்.

32.   1833-ல் மகல்வாரி முறை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பகுதிகள் - ஆக்ரா, அயோத்தி.

33.   மகல்வாரி முறையில் அரசுக்கும், கிராம மக்களுக்குமிடையே இடைத் தரகராக செயல்பட்டவர்- கிராமத் தலைவர்.

34.   ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறை - மகல்வாரி முறை.

35.   ஆங்கிலேயர்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் எதிராக விவசாயிகள் பல புரட்சிகளில் ஈடுபட்ட நூற்றாண்டு. – 19 , 20 ஆம் நூற்றாண்டு.

36.   ஜமீன்தார்கள், மக்களுக்கும் ஆங்கிலேயர் அரசுக்கும் இடைத்தரகராக செயல்பட்ட திட்டம் - நிரந்தர நிலவரி திட்டம்.

37.   விவசாயிகளுக்கும், ஆங்கிலேயர் அரசும் நேரடி தொடர்பு- இரயத்துவாரி முறை.

38.   1855-1856 விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம் - சாந்தல் கலகம்.

39.   சாந்தல் மக்கள் வேளாண்மை செய்து வந்த பகுதி – பீகார், ராஜ்மகால்.

40.   சாந்தல் கிளர்ச்சியினை தலைமை தாங்கிய சாந்தல் சகோதரர்கள் – சித்து, கங்கு

41.   1856 ல் ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச் சென்ற விவசாயிகளின் கலகம் - சாந்தல் கலகம்.

42.   சாந்தலர்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டம் - சாந்தல் மண்டலம், சாந்தல் பர்கானா மண்டலம்

43.   இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு -1859 செப்டம்பர்.

44.   இண்டிகோ கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது- திகம்பர் பிஸ்வாஸ், பிஸ்ணு பிஸ்வாஸ்.

45.   இண்டிகோ கலகம் நடைபெற்ற இடம் - வங்காளம் - நாதியா மாவட்டம்.

46.   இண்டிகோ கலகத்தின் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு அவுரி ஆணையத்தை அமைத்த ஆண்டு -1860.

47.   அவுரி ஆணையத்தின் பரிந்துரைப்படி 1862 சட்டம் - பாகம் VI யை உருவாக்கியது.

48.   ஜரோப்பிய பண்ணையாளர்களின் அடக்குமுறைக்கு பயந்து வங்காளத்தின் அவுரி விவசாயிகள் குடியேறிய பகுதிகள்- பீகார், உத்திரபிரதேசம்.

49.   இண்டிகோ சாகுபடியாளர்களின் துயரங்களை வெளிப்படுத்திய பத்திரிகை - இந்து, தேசபக்தன்.

50.   வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வர - நீல் தர்பன் என்ற ஒரு நாடகத்தை எழுதியவர்- தீனபந்து மித்ரா.

51.   பாப்னா கலகம் (1873-76) வங்காளத்தில் யாரால் ஆரம்பிக்கப்பட்டது- கேசப் சந்திர ராய்.

52.   தக்காணத்தில் விவசாயிகளின் குறைகளை போக்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டம்- தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம்.

53.   பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தக்காண கலகத்தில் ஈடுபட்ட ஆண்டு -1875.

54.   பஞ்சாப் விவசாயிகளை பாதுகாப்பதற்காக பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு – 1900.

55.   ஆங்கிலேய இராணுவத்திற்குகு வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட இடம் – பஞ்சாப்.

56.   1917-1918 சம்பரான் சத்தியாகிரகம் நடைபெற்ற மாநிலம் - பீகார்.

57.   சம்பரான் விவசாயிகள் தங்களது மொத்த நிலத்தில் - 3/20 பங்கில் அவுரியை சாகுபடி செய்தனர்

58.   ஐரோப்பிய தோட்டக்காரர்களுக்கு அவர்கள் நிர்ணயித்த விலைக்கே விற்க - சம்பரான் தீன்கதியா என்ற நடைமுறைக் கொண்டு வரப்பட்டது.

59.   மகாத்மா காந்தி அவர்கள் எந்த மக்களுக்கு உதவ முன்வந்தார் – சம்பரான்.

60.   கேடா (கைரா) சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு-1918 சர்தார் வல்லபாய் படேல் முக்கிய தலைவராக உருவானார்.

61.   சம்பரான் விவசாய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - மே 1918.

62.   மாப்ளா விவசாயிகள் ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆண்டு-1921 ஆகஸ்ட்.

63.   மாப்ளா கிளர்ச்சியின் போது அரசு தலையீட்டின் விளைவாக 2337 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 1650 காயமடைந்தனர், 45000 சிறைபிடிக்கப்பட்டனர்.

64.   1937-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபொழுது – விவசாயிகளின் நிலம் அனைத்தும் அவர்களுக்கே திரும்பி தரப்பட்டது – பர்தோலி.

65.   பொருத்துக:

நிரந்தர நிலவரி திட்டம் - வங்காளம்

மகல்வாரி முறை - வடமேற்கு மாகாணம்

இரயத்துவாரி முறை - மதராஸ்

நீல் தர்பன் - வங்காளம் இண்டிகோ விவசாயிகளின் துயரம்

சந்தால் கலகம் - முதல் விவசாயிகள் கிளர்ச்சி.


8th ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்புறம் மாற்றங்கள்

 8th ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்புறம் மாற்றங்கள்

1.    பண்டைய காலத்தில் புகழ்பெற்ற நகரங்கள் - ஹரப்பா, மொகஞ்சதாரோ, அலகாபாத், வாரணாசி,  மதுரை.

2.    இடைக்காலத்தில் புகழ்பெற்ற கோட்டை மற்றும் துறைமுக நகரங்கள் - டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர் ,லக்னோ, ஆக்ரா,நாக்பூர்.

3.    யாருடைய வருகை நகரங்களின் வளர்ச்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது- ஐரோப்பியர்கள்.

4.    ஆங்கிலேயரின் நிர்வாக தலைநகராகவும் வணிக மையங்களாகவும் இருந்த நகரங்கள் - மும்பை, சென்னை, கொல்கத்தா.

5.    புகழ்பெற்ற பழைய உற்பத்தி நகரங்கள் – டாக்கா, மூர்ஷிதாபாத், சூரத், லக்னோ

6.    இந்தியாவில் இரும்பு பாதைகளை அறிமுகப்படுத்திய ஆண்டு – 1853.

7.    மதராஸ் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு  - 1639.

8.    பம்பாய் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு    - 1661.

9.    கல்கத்தா நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1690.

10.   பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு  - 1757

11.   நிர்வாக நோக்கத்திற்காக காலனித்துவ இந்தியா எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டன 3.

12.   புனித ஜார்ஜ் கோட்டை உள்ள இடம் - சென்னை .

13.   புனித வில்லியம் கோட்டை உள்ள இடம் - கல்கத்தா.

14.   முகலாய பொழுதுபோக்கு மையமாக இருந்த நகரம் - ஸ்ரீநகர்.

15.   இந்து சமய மையங்களாக இருந்த நகரம் - கேதர்நாத், பத்ரிநாத்.

16.   கூர்க்கர்களுடன் நடைபெற்ற போரின் போது நிறுவப்பட்டது - சிம்லா 1814 – 1816

17.   சிக்கிம் ஆட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதி – டார்ஜிலிங்.

18.   படையினர் ஓய்வெடுப்பதற்கும், நோய்களிலிருந்து மீள்வதற்கான இடமாக இருந்தது- டார்ஜிலிங்.

19.   மதராஸ் மாநகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு – 1688.

20.   மதராஸ் மாநகராட்சி உருவானதற்கு காரணமாக இருந்தவர் - சர் ஜோசியா சைல்டு.

21.   எந்த ஆண்டின் பட்டயச் சட்டம் மூன்று மாகாண நகரங்களில் நகராட்சி நிர்வாகத்தை நிறுவியது 1793.

22.   அயோத்தி மற்றும் பம்பாயில் நகராட்சிகள் சட்டப்படி அமைக்கப்பட்ட ஆண்டு -1850.

23.   யாருடைய தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கியது - ரிப்பன் பிரபு.

24.   'உள்ளாட்சி அமைப்பின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் - ரிப்பன் பிரபு.

25.   உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம் என்று கருதப்படுகிறது யாருடைய தீர்மானம் - ரிப்பன் பிரபு.

26.   மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்திய ஆண்டு 1919.

27.   மாகாண சுயாட்சியை இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்திய ஆண்டு 1935.

28.   இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சி நிலைகள் :

முதல் கட்டம் - 1688 - 1882

இரண்டாம் கட்டம்   - 1882 - 1920

மூன்றாம் கட்டம்    - 1920 - 1950

29.   ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு - 1600.

30.   1612 ல் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலையை அமைத்த இடம் - சூரத்.

31.   தொழிற்சாலை அமைப்பிற்கு ஏற்ற இடம் மதராசப்பட்டினம் என குறிப்பிட்டவர் - பிரான்சிஸ் டே.

32.   கூவம் நதிக்கும் எழும்பூருக்கும் இடையில் ஒரு சிறுபகுதி நிலத்தை பிரிட்டிஷாருக்கு வழங்கியவர் - தமர்லா வெங்கடபதி - சந்திரகிரி அரசரின் பிரதிநிதி.

33.   பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரு கோகன் ஆகியோருக்கு வணிகதளத்துடன் தொழிற்சாலைக்கும் மதராசபட்டினத்தில் ஒரு கோட்டையை அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்ட ஆண்டு 1639.

34.   வெள்ளை நகரம் என அழைக்கப்படுவது - புனித ஜார்ஜ் குடியிருப்பு.

35.   வெள்ளை நகரம் மற்றும் கருப்பு நகரம் என சேர்த்து அழைக்கப்பட்டது – மதராஸ்.

36.   ஆங்கிலேயருக்கு மதராசபட்டனத்தை மானியமாக வழங்கியவர் - தமர்லா வெங்கடபதி.

37.   ஆங்கிலேயர்களின் புதிய கோட்டை மற்றும் குடியேற்றங்கள் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்பியவர் - வெங்கடபதி.

38.   ஆங்கிலேயர்களின் புதிய கோட்டை மற்றும் குடியேற்றங்கள் மதராசப் பட்டினம் என அழைக்கவேண்டும் என விரும்பியவர் –ஆங்கிலேயர்கள்.

39.   1956 ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் மாற்றப்பட்ட மாநிலங்கள் - ஆந்திரா, கேரளா, மைசூர்.

40.   மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு 1969.

41.   மதராஸ் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1996 ஜூலை 17

42.   பம்பாய் எத்தனை தீவுகளைக் கொண்டது 7.

43.   எந்த ஆண்டிலிருந்து பம்பாய் போர்த்துகீசிரியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது - 1534.

44.   1661 ஆண்டு இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்த்துகீசிய மன்னரின் சகோதரியை திருமணம் செய்து கொண்டதற்கு சீதனமாகப் பெற்ற பகுதி – பம்பாய்.

45.   ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து பம்பாய்க்கு மாற்றிய ஆண்டு – 1687.

46.   ஆங்கில வணிகர்கள் சுதநூதியில் ஒரு குடியேற்றத்தை நிறுவிய ஆண்டு 1690.

47.   1698 ஆங்கில வணிகர்கள் ஜமீன்தாரி உரிமைகளைப் பெற்ற இடங்கள் - சுதநூதி, கல்கத்தா, கோவிந்தபூர்.

48.   பொருத்துக:

பம்பாய் - ஏழு தீவு

இராணுவ குடியிருப்புகள் - கான்பூர்

கேதர்நாத் - சமய மையம்

டார்ஜிலிங் - மலை வாழிடங்கள்

மதுரை - பண்டைய நகரம்


2023 TNTET Paper – 2 Previous Year Question Papers

 










Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.