| 1. பாரதிதாசன் |
|---|
|
தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! * தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! * தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! * தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! - பாரதிதாசன் |
| 2. காசி ஆனந்தன் |
|---|
|
தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் அமிழ்தே நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும் தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் - காசி ஆனந்தன் |
| 3. பெருஞ்சித்திரனார் |
|---|
|
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி - நிலம் எட்டுத் திசையிலும் செத்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! ஊழி பலநாறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் பெரும் அழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்! பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர் மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த மேதினி வாழ்வழி காட்டிருக்கும் ! - பெருஞ்சித்திரனார் |
| 4. வாணிதாசன் |
|---|
|
வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி
மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள் தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! - வாணிதாசன் |
| 5. அறிவுமதி |
|---|
|
நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்- நீ, வளர்ந்து வாழ வேண்டும்! அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்! உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்! சர்க்கரைத் தமிழ் அன்னி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்! பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்! இனிய பிறந்ததாள் வாழ்த்துகள்! - அறிவுமதி |
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் |
|---|
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் |
|---|
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் |
|---|
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் |
|---|
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் |
|---|
| 6 ஆம் வகுப்பு தமிழ் இயல் 6 வளரும் வணிகம் |
|---|
|
தெரிந்து தெளிவோம். • தந்நாடு விலைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி ............. உமணர் போகலும் நற்றிணை-183 • பாலொடு வந்து கூழொடு பெயரும் ............. குறுந்தொகை - 23 • பொன்னொடு வந்து கறியொடு பெயரும்..... அகநானூறு 149 • வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் திருக்குறள் - 120 என்னும் திருக்குறள் வணிகரின் நேர்மையைப் பற்றிக் கூறுகிறது. • "நடுவு நின்ற நன்னெஞ்சினோத்" என்று பட்டினப்பாலை பாராட்டுகிறது. |
| 6th தமிழ் இயல் 1 தமிழ்க்கும்மி |
|---|
|
• கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி - நிலம் எட்டுத் திசையிலும் செத்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! • ஊழி பலநாறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் பெரும் அழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்! • பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர் மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த மேதினி வாழ்வழி காட்டிருக்கும் ! - பெருஞ்சித்திரனார் |
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் |
|---|
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் |
|---|
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் |
|---|
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் |
|---|
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் |
|---|

minnal vega kanitham