Type Here to Get Search Results !

விழுக்காடு TNPSC 2024 ஆண்டு கண்ணோட்டம்

 


1) குறள்மதி 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின் கோட்டை வாங்கி 25 ஐ சேமித்தால் எனில் ரெயின் கோட்டின் அசல் விலை (07-01-2024 TNPSC)
(A) 120
(B) 125✔
(C) 80
(D)
75

 

2) 7/4 ஐச் சதவீதமாக மாற்றுக? (07-01-2024 TNPSC)
அ) 125%                  
ஆ) 175%✔                          
இ) 75%                     
ஈ)
25%

 3) கவின் 25க்கு 15 மதிப்பெண் பெற்றால் அதன் சதவீதம் (06-01-2024 TNPSC)
அ) 60%✔             
ஆ) 15%                
இ) 25%                          
ஈ) 90%

 
4) மொத்தமுள்ள 20 மணிகளில் 5 மணிகள் சிவப்பு எனில் சிவப்பு மணியின் சதவீதம் என்ன? (21-01-2024 TNPSC)
அ) 10%
ஆ) 15%
இ) 20%
ஈ) 25%✔

 
5) ஒரு தேர்வை 900 மாணவர்களும் 600 மாணவிகளும் எழுதினார்கள். அந்த தேர்வில் 70 சதவீத மாணவர்களும் 85 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர் எனில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவியர்களின் சதவீதத்தைக் காண்க? (05-02-2024 TNPSC)
அ) 22%
ஆ) 24%✔
இ) 26%
ஈ) 32%

 
6) ஒரு தேர்வை 900 மாணவர்களும் 600 மாணவிகளும் எழுதினர். அந்த தேர்வில் 70% மாணவர்களும் 85% மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர் எனில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவியர்களின் சதவீதம் காண்க? (07-02-2024 TNPSC)
அ) 30%
ஆ) 24%✔
இ) 28%
ஈ) 26%

7) குமரன் 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி 25 ஐ சேமித்தார் எனில் ரெயின்கோட்டின் அசல் விலை என்ன? (09-06-2024 TNPSC)
அ) 125✔
ஆ) 250
இ) 175
ஈ) 150

8) கயல் 7 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 45 முட்டைகள் நல்ல முட்டைகள் எனில் கெட்டுவிட்ட முட்டைகளின் சதவீதத்தைக் காண்க? (09-06-2024 TNPSC)
அ) 45%
ஆ) 35%
இ) 25%✔
ஈ) 15%

 
9) 37 1/2ல் எத்தனை 1/8 க்கள் இருக்கும்? (12-09-2024 TNPSC)
அ) 300✔
ஆ) 400
இ) 500
ஈ) கணக்கிட இயலாது

 
 
 
10) 8000ன் 25% மதிப்பின் 20% சதவீதம் மதிப்பின் 10% சதவீதம் என்பது என்ன? (12-08-2024 TNPSC)
அ) 2000
ஆ) 500
இ) 400
ஈ) 40✔

11) கோபி ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும் அதை 1200க்கு கூடுதலாக விற்றிருந்தால் இலாபம் 20 ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க? (14-09-2024 TNPSC)
அ) 15000✔
ஆ) 16000
இ) 14000
ஈ) 15500

 
12) 500 இன் 30% மதிப்பில் 20% என்ன? (14-09-2024 TNPSC)
அ) 30✔
ஆ) 150
இ) 75
ஈ) 100

13) ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில் இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடி சதவீதம் என்ன? (26-10-2024 TNPSC)
அ) 30%
ஆ) 50%
இ) 40%✔
ஈ) 20%

14) ஒரு பின்னத்தின் தொகுதியை 50% அதிகரித்தும் பகுதியை 20% குறைத்தால் அந்த பின்னமானது 3/5 ஆக மாறுகிறது எனில் அந்த பின்னத்தைக் காண்க? (26-10-2024 TNPSC)
அ) 3/4
ஆ) 8/25✔
இ) 24/25
ஈ) 3/8

15) தேர்வில் மாணவர்கள் அறிவியலில் 80% கணிதத்தில் 85% தேர்ச்சி பெற்றனர். அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய இரு பாடங்களிலும் 75% தேர்ச்சி பெற்றனர். 40 மாணவர்கள் இரண்டு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை எனில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? (26-10-2024 TNPSC)
அ) 100
ஆ) 200
இ) 300
ஈ) 400✔

16) ஒரு மாணவன் ஒரு தேர்வில் 92% மதிப்பெண்களைப் பெற்றான். அவன் பெற்றது 644 மதிப்பெண்கள் எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க. (09-11-2024 TNPSC)
அ) 600
ஆ) 700✔
இ) 750
ஈ) 800

 
17) ஒரு மாணவர் 31% மதிப்பெண்களைப் பெற்று 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் தேவை எனில் தேர்வின் மொத்த மதிப்பெண்களை காண்க? (09-11-2024 TNPSC)
அ) 100                                   ஆ) 150                                  இ) 200                                   ஈ) 300✔

18) Aன் வருமானம் Bன் வருமானத்தைவிட 25% குறைவு எனில் Bன் வருமானம் Aன் வருமானத்தை விட எத்தனை சதவீதம் அதிகம்? (18-11-2024 TNPSC)
அ) 33 1/3 %✔
ஆ) 25%
இ) 25 1/3 %
ஈ) 33 %

19) ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்குச் சென்று உணவுக்காக 350ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5 சதவீதம் செலுத்தியது எனில் அதில் மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக செலுத்தப்படும் தொகை என்ன? (05-02-2024 TNPSC)     
அ) 10.5 மற்றும் 7
ஆ) 7 மற்றும் 10.5           
இ) 8.75 மற்றும் 8.75✔ 
ஈ) 8 மற்றும் 9      

 
20) வணிகர் ஒருவர் ஒரு தண்ணீர் கொதிகலனை 18% ஜீ.எஸ்.டி.யுடன் சேர்த்து 10502க்கு விற்கிறார். தண்ணீர் கொதிகலனின் ஜி.எஸ்.டி. வரியைக் காண்க. (13-09-2024 TNPSC)  
அ) 1802     
ஆ) 1602✔
இ) 1620     
ஈ) 1820       

 
21) முட்டைகள் நிரம்பிய ஒரு கூடையிலிருந்த 20 சதவீத முட்டைகள் உடைந்துவிட்டது. 25 சதவீத முட்டைகள் விருந்தினர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது. மீதமிருந்து 22 முட்டைகள் குடும்ப உறுப்பினர்களால் உண்ணப்பட்டது எனில் கூடையிலிருந்த மொத்த முட்டைகளின் எண்ணிக்கை யாது? (07-02-2024 TNPSC)         
அ) 23
ஆ) 40✔
இ) 55
ஈ) 67  

 
 
 
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.