Type Here to Get Search Results !

10th சமூக அறிவியல் பொருளியல்

10th அரசாங்கமும் வரிகளும்

1. அரசாங்கம் எதன் மூலம் நிதி ஆதாரங்களை திரட்டுகிறது:

i) நேர்முக வரி

ii) மறைமுக வரி

2. அரசின் வருமானம் எதை சார்ந்து உள்ளது:

i) நேர்முக வரி

ii) மறைமுக வரி

3. இந்தியாவில் மக்கள் மற்றும் சமூகத்தின் நலனுக்காக செயல்படும் நிலையிலான அரசாங்கங்கள் எத்தனை: 3.

i) மத்திய அரசு.

ii) மாநில அரசு.

iii) உள்ளாட்சி.

4. மத்திய அரசு பணத்தின் அளிப்பு, வட்டி வீதம், பணவீக்கம் மற்றும் அந்நிய செலவாணி எதன் மூலம் கட்டுப்படுத்தப்படுறது- இந்தியமைய வங்கி.

5. இந்திய பங்குமற்றும் பரிவர்த்தனைவாரியம் (SEBI) மற்றும் இந்திய போட்டி ஆணையம் (CCI) போன்ற பல்வேறு முகவர்கள் மூலம் மத்திய அரசு எதனை கட்டுப்படுத்துகிறது- பொருளாதாரத்தை.

6. வரிவிதிப்பு முறை எந்த கருத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது - நல அரசு.

7. வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாகச் செலுத்தும் செலுத்து தொகை.  அரசிடமிருந்து எந்த நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல்  கட்டாயமாக செலுத்த வேண்டிய வரி  என்று கூறியவர் - செலிக்மேன்.

8.  இந்தியாவில் வரிவிதிப்பின் வேர்கள் எந்த காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது:

i) மனுஸ்மிருதி

ii) அர்த்தசாஸ்திரம்.

9. தற்கால இந்தியாவில் வரி முறையானது - பண்டையகால வரி முறையை அடிப்படையாகக் கொண்டது.

10. ஆடம் ஸ்மித் வரிவிதிப்பு கொள்கை:

i) சமத்துவ விதி

ii) உறுதி விதி

iii) சிக்கன மற்றும் வசதி விதி

iv) உற்பத்தி திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி

11. பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்த வேண்டும் - சமத்துவ விதி.

12. அரசாங்கம் வரி முறையை அடிக்கடி மாற்றக்கூடாது மற்றும் வரி அமைப்பில் திடீர் மாற்றங்களை அறிவிக்க கூடாது - உறுதி விதி.

13.  வரி எளிமையாக இருந்தால் வரி வசூலிக்க செலவு மிக குறைவாக இருக்கும் - சிக்கன விதி.

14. ஒரு நபருக்கு வரி செலுத்த போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்க பட வேண்டும் - வசதி விதி.

15. நிறைய வரிகளுக்கு பதிலாக அதிக வருவாயை பெறக்கூடிய சில வரிகளை தே‌ர்‌வு செய்ய வேண்டும் - உற்பத்தி திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி.

16. நேர்முக வரி என்பது யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும். வரி செலுத்துபவரே வரிச்சுமையை ஏற்க வேண்டும் என்று கூறியவர் - பேராசிரியர் ஜே. எஸ். மில்.

17. ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படும் வரி-நேர்முக வரி.

18. இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரி- வருமான வரி.

19. இந்தியாவில் முதன் முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது- சர் ஜேம்ஸ் வில்சன்.

20. இந்தியாவில் அனைத்து நேரடி வரிகள் எந்த அரசால் வசூலிக்கப்படுகிறது – மத்தியஅரசு.

21. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி எந்த அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது- மத்திய மற்றும் மாநில அரசு.

22. சொத்து வரி எந்த அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது - உள்ளாட்சி அரசு.

23. இந்தியாவின் முக்கிய மறைமுக வரி - சுங்கவரி, GST.

24. தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் வரி- வருமான வரி.

25. பங்குதாரர்களிடம் இருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி - நிறுவன வரி.

26. சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படும் வரி - சொத்து வரி.

27. நேர்முக வரி வகை:

i) வருமான வரி.

ii) நிறுவன வரி .

iii) சொத்து வரி.

28. ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது - மறைமுகவரி

29. மறைமுக வரி:

i) முத்திரைத்தாள் வரி

ii) பொழுதுபோக்கு வரி

iii) சுங்கத் தீர்வை வரி  

iv) பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரி

30. இந்திய நிறுவனங்கள் வருமானம் 50 கோடிக்குள் இருந்தால் வரி- 25%.

31. இந்திய நிறுவனங்கள் வருமானம் 50 கோடிக்கு மேல் இருந்தால் வரி - 30%.

32.   அயல்நாட்டு நிறுவனங்கள் வருமானம் 50 கோடிக்குள் இருந்தால் வரி - 40%.

33.   அயல்நாட்டு நிறுவனங்கள் வருமானம் 50 கோடிக்கும் மேல் இருந்தால் வரி - 40%.

34.   திருமண பதிவு, சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்த பத்திரங்கள் மீது விதிக்கப்படும் வரி- முத்திரைத்தாள் வரி.

35. திரைப்படங்கள், கட்டணம் கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்க படுகின்ற வரி - பொழுது போக்கு.

36. விற்பனையை விட உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரி - சுங்கத் தீர்வை (அல்லது) கலால் வரி.

37. GST - இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் - மார்ச் 29-2017.

38. GST - நடைமுறைக்கு வந்த நாள் - ஜூலை 1 2017

39. GST - ன் குறிக்கோள்- ஒரு நாடு - ஒரு அங்காடி - ஒரு வரி.

40. நுகர்வோர் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்கும் போது விதிக்கப்படும் வரி- GST.

41. 1954-ஆம் ஆண்டு முதன் முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு - பிரான்ஸ்.

42. ஐரோப்பிய நாடுகள் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை எப்போது அறிமுகப்படுத்தியது- 1970-80.

43. மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): மாநிலத்திற்குள்.

i)  மதிப்பு கூட்டு வரி

ii) விற்பனை வரி

iii) கொள்முதல் வரி 

iv) பொழுதுபோக்கு வரி

v) ஆடம்பர வரி

vi) பரிசு சீட்டு வரி

vii) மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.

44. மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): மாநிலத்திற்குள்.

i) மத்திய சுங்கவரி

ii) சேவை வரி

iii) ஈடுசெய் வரி 

iv) கூடுதல் ஆயத்தீர்வை

v) கூடுதல் கட்டணம்

vi) கல்வி கட்டணம் (இடைநிலை, மேல்நிலைக் கல்வி வரி)

45. ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி - மாநிலங்களுக்கு இடையே IGST எத்தனை வரி விகிதங்கள் உள்ளன: 4 .

i) 5%

ii) 12%

iii) 18%

iv) 28%

46. வருமானம் அதிகரிக்கும்போது வரியும் அதிகரிக்கும் இந்த வரிவிதிப்பு முறை -வளர் வீத வரி விதிப்பு முறை.

47. வருமானத்தின் அளவை பொருட்படுத்தாமல் வரி விதிப்பு விகிதம் ஒரே மாதிரியாக வரிவிதிப்பு விதிக்கும் முறை -விகித வரி விதிப்பு முறை.

48. அதிக வருமானம் ஈட்டுபவர்களைவிட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடம் அதிக வரி விகிதம் விதிக்கும் வரிமுறை - தேய்வு வீத வரிவிதிப்பு முறை.

49. வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம்- கருப்பு பணம்.

50. கருப்பு பணத்திற்கான காரணங்கள்:

i) பண்டங்கள் பற்றாக்குறை

ii) உரிமம் பெறும் முறை

iii) தொழில் துறையின் பங்கு

iv) கடத்தல்

v) வரியின் அமைப்பு

51. கருப்பு பணம் மற்றும் வரி விதித்தல் சட்டம் – 2015.

52. பண மோசடி சட்டம் 2002 மூலம் நிதி சட்டம் – 2015.

53. பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தச்சட்டம்-2016.

54. லோக்பால் லோக் ஆயுக்தா சட்டம் -2013.

55. ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் -2016.

56.   சுத்தமான பண செயல்பாடு operation of money ஜனவரி - 31-2017

57. GST - ஒரு முனை வரி.

58. GST நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது- ஜூலை 1, 2017.

59. GST இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.

60. தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும், அறக்கட்ட ளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது - வரி ஏய்ப்பு.

61. வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை:

i) வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்.

ii) விலக்குகள் (அ) செலவுகளை உயர்த்துவது.

iii) மறைக்கப்பட்ட பணம்.

iv) கடல்கடந்த கணக்குகளில் விபெரங்களை மறைத்தல்.

62. வரி ஏய்ப்புக்குகான அபராதமும் தண்டனையும் :

i) 5 ஆண்டுகள் ஆண்டுகள் வரை சிறை.

ii) அதிக அளவு அபராதம் விதிக்கப்படும்.

63. வரி விதிப்பால் ஏற்படும் பொருளாதார நிகழ்வுகள்:

i) அரசாங்கத்திற்கு வரி வருவாயை திரட்ட உதவுகிறது.

ii) வருமான ஏற்றத் தாழ்வுகளை குறைத்து சமத்துவ முறையை உருவாக்கலாம்.

iii) சமூக நலனை, உருவாக்குகிறது மற்றும் பாதுகாக்கிறது.

iv) ஏற்றுமதியை ஊக்குவிப்பதுடன் இறக்குமதியை தடுக்கிறது.

v) வட்டார வளர்ச்சியில் வரி விதிப்பு முக்கிய பங்கினை வகிக்கிறது.

vi) பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் கருவிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.

64. இந்தியாவில் உள்ள மூன்று நிலையிலான அரசுகள்:

i) மைய அரசு 

ii) மாநில அரசு

iii) உள்ளாட்சி துறை

65. இந்தியாவில் உள்ள வரிகள்:

i) நேர்முக வரிகள்

ii) மறைமுக வரிகள்

66. வளர்ச்சி கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு:

i) பாதுகாப்பு

ii)  வெளிநாட்டு கொள்கை

iii) பொருளாதாரத்தை கட்டுப்படுத்துதல்

67. இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி- விற்பனை வரி.

68. ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது - GST பண்டங்கள் மற்ற பணிகள் வரி.

69. இந்தியாவில் வருமான வரி சட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1860.

70. கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளங்கள்:

i) பண்டங்களின் பற்றாக்குறை

ii) அதிக வரி விகிதம்

iii) கடத்தல்

71. வரி ஏய்ப்பு என்பது சட்டவிரோதமானது, எதன் மூலம் வரிஏய்ப்பு மேற்கொள்ளப்படுகிறது:

i) தனிநபர்கள்

ii) பெருநிறுவனங்கள்

iii) அறக்கட்டளைகள்

72. கட்டணங்கள் என்பது:

i) கட்டணங்கள் மற்றும் அபராதங்கள்.

ii) அபராதங்கள் மற்றும் பறிமுதல்.

73. வரி:

i) வளர் வீத வரி விதிப்பு - வருமான வரி.

ii) விகித வரி விதிப்பு - நிறுவன வரி.

iii) தேய்வுவீத வரிவிதிப்பு - விற்பனை வரி.

iv) வரி என்பது எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசாங்கத்திற்கு கட்டாயமாக செலுத்துகின்ற செலுத்துகையாகும்.

v) பொதுவாக அரசாங்கத்தின் வருமான இனங்களில் ஒன்றாக வரி மேலோங்கியுள்ளது.

vi) வரி என்பது கட்டாய செலுத்துகை ஆகும்.

vii) ஒரு தனிப்பட்ட நபரின் மீது வரி விதிக்கப்பட்டால், அதனை அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர் தண்டிக்கப்படுவார்.

viii) வரி செலுத்துபவர்கள் நேரடியாக எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது.

ix) உதாரணம்: வருமான வரி, அன்பளிப்பு வரி சொத்து வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி (VAT).

74) கட்டணம்:

i) கட்டணம் என்பது பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்துவதாகும்

ii) கட்டணம் என்பது ஒரு குறிப்பிட்ட நன்மைகளுக்கான தனிச் சலுகைகளைப் பெற்றிருந்தாலும், பொது நல ஒழுங்கு முறையின் சிறப்பான முதன்மை நோக்கமாகும்.

iii) கட்டணம் (Fee) என்பது தன்னார்வக் கட்டணமாகும்.

iv) மாறாக, பணிகளை பெற விருப்பமில்லை எனில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

v) கட்டணம் செலுத்துவதன் மூலம் நுகர்வோர்கள் நேரடியாக சலுகைகளைப் பெறுகின்றனர்.

vi) உதாரணம்: முத்திரை வரி, ஓட்டுநர் உரிமக் கட்டணம், அரசாங்க பதிவுக் கட்டணம்.


10th உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
  1. தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் எனும் புதிய பொருளாதாரக் கொள்கை  (LPG) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது1991
  2. உலகமயமாக்கல் என்ற சொல்லை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் யார்பேராசிரியர் தியோடர் டெவிட்.
  3. சுமர் மற்றும் சிந்து சமவெளி நாகரீகத்தின் இடையேயான வர்த்தக உறவுகள் உலகமயமாக்கல் என்ற வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டுகளில் உருவாக்கியது என்று கூறியவர் யார்ஆன்ட்ரோ குந்தர் பிராங்க்.
  4. பட்டு சாலையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்திய பேரரசுகள் யாவைரோம் பார்த்தியா மற்றும் ஹன் பேரரசு
  5. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு எது1600
  6. டச்சு கிழக்கிந்திய நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு எது1602
  7. பதினாறாம் நூற்றாண்டில் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா மற்றும் பிரேசில் வரை வர்த்தக நிறுவனங்களை நிறுவியவர்கள் யார்போர்ச்சுகீசியர்கள்
  8. சிவப்பு வண்ண கல் அலங்கார பொருட்களை வர்த்தகத்திற்கு கொண்டுவந்தவர்கலிங்க வர்த்தகர்கள் AD 1053
  9. ஆலய வளாகத்தில் மட்டும் சந்தித்து வர்த்தகத்தை மேற்கொண்டு வர்த்தகக் குழுவினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்தொகராஸ் மற்றும் கோவாரஸ்
  10. ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் பாதையை கண்டுபிடித்தவர் யார்வாஸ்கோடகாமா
  11. வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் வந்து இறங்கிய ஆண்டு எதுகிபி 1498 மே 17
  12. கிபி 1500 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்பெட்ரோ ஆல்வாரோஸ்
  13. வாஸ்கோடகாமா இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்த ஆண்டு எதுகிபி.1502
  14. இந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் தலைநகரம் எதுகொச்சின்
  15.  மசூலிப்பட்டினம் நிஜாம் பட்டினம் தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தை நிறுவியவர் யார்அட்மிரல் வான் டெர் ஹகேன்
  16. கிபி 1610 ஆம் ஆண்டு சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி புலி காட்டில் தொழிற்சாலையை நிறுவியவர் யார்அட்மிரல் வான் டெர் ஹகேன்
  17. இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைமையிடம் எதுபுலிகாட்
  18. டச்சுக்காரர்கள் போர்ச்சுகீசியர்களிடமிருந்து நாகப்பட்டினத்தை  கைப்பற்றிய ஆண்டு எதுகி.பி1659
  19. ஆங்கிலேயர்களுக்கு கோல்டன் ஃபயர் மேன் என்ற பட்டத்தை வழங்கிய இந்திய மன்னர் யார்கோல்கொண்டா சுல்தான்
  20. சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு எதுகிபி 1639
  21. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் தலைமையகமாக இருந்தது எதுமசூலிப்பட்டினம்
  22. டேனிஷ்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு எதுகிபி 1616
  23. டேனிஷ்காரர்களின் தலைமையிடமாக அமைந்த இடம் எதுடிராங்குபார்
  24. டச்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை கைப்பற்றிய ஆண்டு எதுகிபி.1693
  25. எந்த ஆண்டு பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் தலைமை இடமாக மாற்றப்பட்டதுகிபி 1701
  26. தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளனநாங்குநேரி எண்ணூர் கோயம்புத்தூர்
  27. டங்கல் வரைவு கையெழுத்திடப்பட்ட ஆண்டு எது1994 ஏப்ரல் 15
  28. இந்தியா தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய ஆண்டு எது1991 ஜூலை
  29. அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் எது1974 ஜனவரி 1
  30. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது1999
  31. சுங்கவரி வாணிபம் குறித்த பொது உடன்பாடு (காட் ஒப்பந்தம்) கையெழுத்திடப்பட்ட ஆண்டு எது1947
  32. காட்டின் GATT முதலாவது சுற்று எங்கு நடைபெற்றதுஜெனீவா ஸ்விட்சர்லாந்து 1947
  33. காட் இரண்டாவது சுற்று எங்கு நடைபெற்றதுஅன்னிசி பிரான்ஸ்
  34. காட் ஒப்பந்தத்தின் மூன்றாவது சுற்று எங்கு நடைபெற்றதுடார்க்குவே  இங்கிலாந்து
  35. காட் ஒப்பந்தத்தின் ஏழாவது சுற்று எங்கு நடைபெற்றதுடோக்கியோ ஜப்பான்
  36. காட் ஒப்பந்தத்தின் எட்டாவது மற்றும் இறுதிச்சுற்று எங்கு நடைபெற்றதுபண்டாடெல் எஸ் டீ , உருகுவே. இது உருகுவே சுற்று என்றும் அழைக்கப்படுகிறது.
  37. உலக வர்த்தக அமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது1995 ஜனவரி 1
  38. உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளதுஜெனீவா சுவிட்சர்லாந்து
  39. ஜி7 நாடுகள் என்று அழைக்கப்படுபவை எவைகனடா பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி ஜப்பான் இங்கிலாந்து அமெரிக்கா
  40. உலக வர்த்தக அமைப்பில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? 5 பேர் (4+1)

Choose the correct answer:

  1. உலக வர்த்தக அமைப்பின் தலைவர் யார்?தலைமை இயக்குனர்
  2. உலக வர்த்தக அமைப்பில் தற்போது உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை யாது164
  3. இந்தியாவில் காலனி ஆதிக்க வருகையின் கால முறையை வரிசைப்படுத்துக. போர்த்துக்கீசியர் டச்சு ஆங்கிலேயர் டேனிஷ் பிரெஞ்சுக்காரர்கள்
  4. வர்த்தக நோக்கத்திற்காக இந்தியாவிற்கு முதலில் வந்தவர்கள் யார்போர்ச்சுகீசியர்
  5. போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் எப்போது குடியேறினார்கள்1498
  6. காட் ஒப்பந்தத்தின் முதல் சுற்று நடைபெற்ற இடம் எதுஜெனிவா
  7. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது1994
  8. 1632 ஆங்கிலேயர்களுக்கு கோல்டன் பைனல் விருது வழங்கியவர் யார்கோல்கொண்டா சுல்தான்
  9. வெளிநாட்டு முதலீட்டு கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு எதுஜூலை ஆகஸ்ட் 1991
  10. இந்திய அரசாங்கம் 1991இல் அறிமுகப்படுத்திய கொள்கை எதுபுதிய பொருளாதார கொள்கை

Fill in the blanks:

  1. டச்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை கைப்பற்றிய ஆண்டு எது1693
  2. ஒரு நல்ல பொருளாதாரம் நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
  3. கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் கட்டியமைத்த  தொழிற்சாலை எவ்வாறு அழைக்கப்படுகிறதுசெயின்ட் ஜார்ஜ் கோட்டை
  4. உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் அமலுக்கு வந்த நாள் எது?1995 ஜனவரி 1
  5. உலகமயமாக்கல் என்ற பதத்தை கண்டுபிடித்தவர் யார்பேராசிரியர் தியோடர் டெவிட்
  6. பிரஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் தமது இரண்டாவது தொழிற்சாலையை நிறுவிய இடம் எதுபாண்டிச்சேரி

10th மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
  1. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளில் அங்காடி மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறதுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
  2. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளை அளவிடுவது  எதுமொத்த உள்நாட்டு உற்பத்தி 
  3. மற்றப் பண்டங்கள் உற்பத்தி செய்யப் பயன்படும் அல்லது மற்ற பண்டங்கள் உற்பத்தி செய்ய ஒரு பகுதியாக பயன்படும் பண்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனஇடைநிலை பண்டங்கள்.
  4. இடைநிலை பண்டங்கள் பற்றிய விளக்கம் அளித்த பொருளியல் வல்லுநர் யார்டைலர் கோவன் மற்றும் அலெக்ஸ் டாபர்ராக்
  5. இடைநிலை பண்டத்தின் மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கும் பொழுது அதன் விளைவு எவ்வாறு அழைக்கப்படுகிறதுஇருமுறை கணக்கிடுதல்.
  6. ஒரு நாட்டில் ஒரு ஆணின் உற்பத்தி செய்யப்பட்ட பந்தங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறதுநாட்டு வருமானம்
  7. மொத்த நாட்டு உற்பத்தி அல்லது நாட்டு வருமான ஈவு என்று அழைக்கப்படுவது எதுநாட்டு வருமானம்
  8. நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறதுமொத்த நாட்டு உற்பத்தி
  9. GNP=C+I+G+(X-M) + NFIA.                                       

C-consumer, I Invester, G-Government spent, XM- Export Import,  NFIA

  1. மொத்த நாட்டு உற்பத்தியில் இருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கியபின் கிடைக்கும் பண மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறதுநிகர நாட்டு உற்பத்தி (NNP)
  2. NNP= GNP- தேய்மானம்
  3. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கழித்த பின் கிடைப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறதுநிகர உள்நாட்டு உற்பத்தி
  4. NDP=GDP- தேய்மானம்
  5. நாட்டு வருமானத்தை மக்கள்தொகை இயல்பாகப் அதன் மூலம் கிடைப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறதுதலா வருமானம்
  6. தலாவருமானம்=நாட்டு வருமானம்/ மக்கள்தொகை
  7. இந்தியாவின் வறுமை மற்றும் ஒரு பிரிட்டிஷ் இல்லாத ஆட்சி என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?  தாதாபாய் நவரோஜி
  8. தனிநபர் வருமானத்தை பற்றி முதன் முதலாக கூறியவர் யார்தாதாபாய் நவரோஜி
  9. தனிநபர்கள் மற்றும் குடும்பங்களில் உண்மையான வருமானத்தில் உயர்வுக்கு செலவிடப்படுகின்றது பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறதுசெலவிட தகுதியான வருமானம்
  10. DPI=தனிப்பட்ட வருமானம் -நேர்முக வரி (நுகர்வு முறையில் =நுகர்வுசெலவு +சேமிப்பு)
  11. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு எத்தனை முறை கணக்கிடப்படுகிறதுகாலாண்டுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை என இரண்டு வகையில் கணக்கிடப்படுகிறது.
  12. இந்தியாவில் நிதியாண்டின் முதல் காலாண்டு எந்த மாதத்தில் வரும்ஏப்ரல் மே ஜூன்
  13. இந்தியாவின் நிதி ஆண்டில் இரண்டாம் காலாண்டு எந்த மாதத்தில் வருகிறதுஜூலை ஆகஸ்ட் செப்டம்பர்
  14. இந்தியாவின் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் எந்த மாதத்தில் வரும்அக்டோபர் நவம்பர் டிசம்பர்
  15. இந்தியாவின் நிதி காலாண்டில் நான்காவது காலாண்டு எந்த மாதத்தில் வரும்ஜனவரி பிப்ரவரி மார்ச்
  16. GDP=C+I+G+(X-M)
  17. GDP யின் முதல் நவீன கருத்து யாரால் உருவாக்கப்பட்டது.சைமன் குஸ்நட் 1934
  18. ஜிடிபி சம்மந்தப்பட்ட ஆவணங்களை பாதுகாக்கும் அமைப்பு எதுமத்திய புள்ளியில் துறை
  19. தொழில்துறை உற்பத்தி குறியீடு மற்றும் குறியீடு போட்டோ எடுத்து வெளியிடும் அமைப்பு எதுமத்திய புள்ளியல் அமைப்பு
  20. முதன்மை துறை என்றழைக்கப்படும் துறை எதுவேளாண்மை துறை
  21. இரண்டாம் துறை என்றழைக்கப்படும் துறை எதுதொழில்துறை
  22. மூன்றாவது பயன்படுத்தப்படும் துறை எதுபணிகள் துறை அல்லது சேவை துறை
  23. சர்க்கரை ஜவுளி தொழில் ஆகியவை எந்த துறையைச் சார்ந்ததுஇரண்டாம் துறை
  24. சுரங்கங்கள் நிலக்கரி போன்ற மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் துறை எந்த துறைமுதன்மை துறை
  25. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய துறை எதுபணிகள் துறை
  26. விவசாய பண்டங்கள் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறதுஇரண்டாவது இடம்
  27. தொழில் துறையில் இந்தியா உலக அளவில் எத்தனையாவது இடம் வகிக்கிறதுஎட்டாவது இடம்
  28. சேவைகள் துறையில் இந்தியா உலக அளவில் எத்தனையாவது இடம் வகிக்கிறதுஆறாவது இடம்
  29. GVA=GDP+மானியம்-வரிகள் (நேர்முக வரி, விற்பனை வரி)
  30. ஒரு பொருளாதாரத்தில் ஒரு பகுதி தொழில் அல்லது துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறதுமொத்த மதிப்பு கூடுதல் (GVA)
  31. பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு அம்சமாகும் பொருளாதார வளர்ச்சி மனிதனின் பொருள்சார் தேவைக்கு மட்டும் கவனம் செலுத்துகிறது என்று கூறியவர் யார்அமர்த்தியா சென்
  32. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறதுஆறாவது இடம் 2.8 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்
  33.  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எதுஅமெரிக்கா 19 டிரில்லியன் அமெரிக்க டாலர்
  34. இந்தியாவில் உழைக்கும் மக்களின் பங்கு எவ்வளவு சதவீதம்? 64 சதவீதம்
  35. மனித மேம்பாட்டு குறியீடு (HDI)என்பதை அறிமுகப்படுத்தியவர் யார்முகஹப் உல் ஹிக். 1990
  36. இந்தியாவில் மென்பொருள் வணிகங்களில் சிறந்து விளங்கும் நகரம் எதுபெங்களூர்
  37. மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற குறியீட்டை பூடான் சட்டபூர்வமாக்கிய நாள் எது2008 ஜூலை 18
  38. மொத்த தேசிய மகிழ்ச்ச என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்ஜிகமே சிங்கயே வாங்ஹக் 1972
  39. வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு மகிழ்ச்சி என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை எந்த ஆண்டு நிறைவேற்றியது2011
  40. 1996 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார சீர்திருத்த கொள்கை எவ்வாறு அழைக்கப்படுகிறதுதாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் உலகமயமாக்கல் (LPG)
  41. உலக வங்கியின் கூற்றுப்படி 2019 20 ஆம் ஆண்டு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி எவ்வளவு? 7.5%
  42. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறதுஐந்தாவது இடம்
  43. உள்நாட்டு உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதி அந்த பணிகளுக்கும் மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத்தொகை எவ்வாறு அழைக்கப்படுகிறதுசெலவின முறை
  44. பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை கூறும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறதுவருமான முறை
  45. வருமானம்=கூலி +வாரம் +வட்டி +லாபம்
  46. ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டுவதன் மூலம் இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறதுமதிப்புக்கூட்டு முறை.

Choose the correct answer:

  1. GNP யின் சமம் ஜிடிபி மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
  2. நாட்டு வருமானம் அளவிடுவது எது?பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
  3. முதன்மைத் துறை இதனை உள்ளடக்கியது வேளாண்மை
  4. இந்த முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பு கூட்டும் போது இறுதி பணத்தின் மதிப்பை கணக்கிடலாம் மதிப்புக்கூட்டு முறை
  5. ஜிடிபியில் எந்த துறை மூலம் அதிகமான வேலை வாய்ப்பு ஏற்படுகிறதுபணிகள் துறை
  6. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 எத்தனை கோடி என மதிப்பிட்டுள்ளது92.26 லட்சம் கோடி
  7. வேளான் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறதுஇரண்டாவது இடம்
  8. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள் ஆகும்?65 ஆண்டுகள்
  9. கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கைஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
  10. இந்திய பொருளாதாரம் என்பது வளர்ந்து வரும் பொருளாதாரம்

Fill in the blanks:

  1.  இந்தியாவின் மிகப்பெரிய துறை எது சேவை துறை
  2. ஜிடிபி என்பது நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு குறியீடாகும்.
  3. இரண்டாம் துறையை வேறுவிதமாக தொழில்துறை என அழைக்கலாம்.
  4. இந்தியா பொருளாதார வளர்ச்சி எந்திரம் சேவை துறையாகும்.
  5. இந்தியா உலகத்தில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்.
  6. இந்தியா ஐந்தாவது மிக வேகமாக வளரும் நாடாகும்.

Match the following:

  1. மின்சாரம் எரிவாயு மற்றும் நீர் -=வேளாண்மை
  2. விலைக் கொள்கை =தொழில்துறை
  3. GST                    =பண்ட மற்றும் பணிகள் மீதான வரி 
  4. தனிநபர் வருமானம். = நாட்டு வருமானம்/ மக்கள் தொகை 
  5. C+I+G+(X-M).       =மொத்த நாட்டு உற்பத்தி










10th உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

10th உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

1. ஒரு நபர் போதுமான அளவு சாப்பிடுவதையும் சுறுசுறுப்பாக இருப்பதையும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதையும் குறிப்பது எது? உணவு பாதுகாப்பு

2. "சரிவிகித உணவு என்பது பாதுகாப்பான குடிநீர் சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆரம்ப கல்வி ஆகியவற்றிற்கான உடல் பொருளாதாரம் மற்றும் சமூக அணுகல் என்பது ஊட்டச்சத்து பாதுகாப்பாகும்" என குறிப்பிட்டவர்? விவசாய விஞ்ஞானி முனைவர் எம்எஸ் சுவாமிநாதன்

3. உணவு பாதுகாப்பு என்ற கருத்து ஆரம்பத்தில் எதனைக் குறிக்கிறது? ஒட்டுமொத்த உணவு வழங்கள்

4. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படை கூறுகள் எத்தனை? அவை யாவை ? 3 அவை

கிடைத்தல்

அணுகல்

உறிஞ்சுதல்

5. உள்நாட்டு உற்பத்தி இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடு எது? உணவு கிடைத்தல்

6. முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூற்று எது? உணவுக்கான அணுகல்

7. பிரபலமாக "கப்பலுக்கு வாயில்" இருப்பு என்று அழைக்கப்பட்ட திட்டம் எதனோடு தொடர்புடையது? அமெரிக்கா

8. 1960களில் முற்பகுதியில் அமெரிக்கா எந்த திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு உணவு வழங்கியது? பொது சட்டம் 480

9. சுகந்திர காலத்திற்கும் தற்போதைக்கும் இடையில் உணவு தானியங்களின் விளைச்சல் எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது? நான்கு

10. அறுவடை செய்யப்பட்ட தானியங்களை அரசு எதன் மூலம் கொள்முதல் செய்கிறது? இந்திய உணவு கழகம்

11. குறைந்தபட்ச ஆதரவு விலை யாரால் நிர்ணயம் செய்யப்படுகிறது? நிபுணர் குழு

12. அறுவடை காலங்களில் எந்த ஒரு விலை வீழ்ச்சிக்கும் எதிராக விவசாயிகள் எதன் மூலம் பாதுகாக்கப்படுகிறார்கள்? குறைந்தபட்ச ஆதரவு விலை

13. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட இந்திய மாநிலம்? தமிழ்நாடு

14. பசுமைப் புரட்சியின் மூலம் பயிரிடப்பட்ட பயிர்? நெல் மற்றும் கோதுமை

15. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு? 2013

16. தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் எப்போது துவங்கப்பட்டது? நவம்பர் 1 2016

17. தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக பயோமெட்ரிக் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என அறிவித்த அரசு எது? தமிழ்நாடு அரசு

18. இந்தியாவில் எத்தனை அடுக்கு அமைப்புகளில் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன? மூன்று

19. தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலை கடைகளில் எத்தனை சதவீதம் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன? 94 சதவீதம்

20. உணவு தானியங்கள் சமூகத்தின் ஏழ்மையான பிரிவினருக்கு சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? வெளியீட்டு விலை

21. உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசி அரசாங்கத்தால் வழங்கப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? தாங்கி இருப்பு

22. உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை வாங்குவது எந்த அமைப்பு? இந்திய உணவு கழகம்

23. எந்த ஒரு அட்டைதாரரும் எத்தனை கிலோமீட்டருக்கு மேல் நடந்து செல்லாத வகையில் புதிய நியாய விலை கடைகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது? 1.5 கிலோமீட்டர்

24. இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்? 1.7 சதவீதம்

25. வாங்கும் சக்தியை கண்காணிப்பதற்கான ஒரு முறை எது? நுகர்வோர் விலை குறியீட்டு எண்

26. 2018 மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய விவசாயக் கொள்கை எதனை அடிப்படையாகக் கொண்டது? விவசாய பொருட்களின் ஏற்றுமதியை

27. 2018ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய விவசாயக் கொள்கை எவற்றையெல்லாம் நீக்க உறுதி செய்தது?

ஏற்றுமதி வரி

ஏற்றுமதி தடை

ஒதுக்கீடு கட்டுப்பாடு

28. வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் இந்தியா? மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆக மாறி உள்ளது (சீனா - முதலிடம், அமெரிக்கா - இரண்டாவது இடம்)

29. புதிய விவசாய கொள்கை மத்திய அரசால் எப்போது அறிவிக்கப்பட்டது? 2018

30. பலப்பரிமான வறுமை குறியீடு எப்போது தொடங்கப்பட்டது? 2010 (ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு)

31. பல பரிமாண வறுமை குறியீடு 2018 அறிக்கையின் படி இந்தியா 10 ஆண்டுகளில் வறுமை விகிதத்தை எத்தனை சதவீதம் குறைத்துள்ளது? 28 சதவீதம்

32. 2015-16ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்த ஏழை மக்களின் எண்ணிக்கை? 364 மில்லியன்

33. 2015-16ஆம் ஆண்டில் வறுமையால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மிக ஏழ்மையான மாநிலம் எது? பீகார்

34. 196 மில்லியன் பல பரிணாம வறுமை குறித்துள்ள ஏழை மக்களை கொண்டுள்ள இந்தியாவின் மாநிலங்கள் எவை?

பீகார்

ஜார்க்கண்ட்

உத்தரபிரதேசம்

மத்திய பிரதேசம்

35. வறுமையின் பரிமாணங்கள் எவை?

சுகாதாரம்

கல்வி

வாழ்க்கை தரம்

36. 2006 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த ஏழ்மை வட்டாரங்களில் ஒன்றாக இருந்த மாநிலம் எது? கேரளா

37. பல பரிமாண வறுமை குறித்த சுமார் எத்தனை சதவீதம் குறைத்துள்ளது? 96 சதவீதம்

38. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் பல பரிமாண வறுமை குறியீட்டின்படி எத்தனை வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன? மூன்று

39. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் உள்ள மாவட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? உயர் வறுமை மாவட்டங்கள்

40. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகையில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மக்கள் உள்ள மாவட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகறது? மிதமான ஏழை மாவட்டங்கள்

41. 30 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாவட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? குறைந்த அளவிலான வறுமை மாவட்டங்கள்

42. எந்த ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டின் கிராம புற மற்றும் நகர்ப்புறங்களில் வறுமை படிப்படியாக குறைந்துள்ளது? 1994

43. 2014 முதல் 2017 வரையிலான காலங்களில் வறுமை ஒழிப்பு திட்டங்களில் முன்னிலை வகிக்கும் மாநிலம்? தமிழ்நாடு

44. தமிழகத்தில் அதிக MPI உடைய மாவட்டங்களில் முதல் தரவரிசை கொண்ட மாவட்டம் எது? காஞ்சிபுரம்

45. தமிழ்நாட்டில் அதிக MPI கொண்ட மாவட்டங்கள் வரிசைப்படுத்துக.

முதல் ஐந்து மாவட்டங்கள்

காஞ்சிபுரம்

சென்னை

கடலூர்

கோயம்புத்தூர்

நாகப்பட்டினம்

46. தமிழகத்தில் குறைந்த MPI உடைய மாவட்டங்களில் தரவரிசைப்படுத்துக

கடைசி ஐந்து மாவட்டங்கள்

தர்மபுரி

பெரம்பலூர்

இராமநாதபுரம்

விருதுநகர்

அரியலூர்

47. 2015-16ஆம் ஆண்டில் 27 சதவீத கிராமப்புற பெண்களும் 16 சதவீத நகர்புற பெண்களும் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என எந்த கணக்கெடுப்பின் மூலம் அறியப்பட்டது? தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு

48. இந்தியாவில் கிராம புற மற்றும் நகர்ப்புற இனப்பெருக்க வயது குழுவில் 15 முதல் 49 வயது வரை பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் எந்த நோய்க்கு உள்ளானவர்கள்? ரத்த சோகைக்கு

49. குழந்தைகளிடையே வயது தொடர்பான எடையை விட, எடை குறைவாக இருப்பதற்கு காரணம்? ஊட்டச்சத்து குறைபாடு

50. இந்தியாவில் பசி என்ற ஒன்று மட்டுமே அரசியல் முன்னுரிமைக்கு போதுமானதாக இல்லை என்பதை உற்று நோக்கியவர் யார்? அமர்த்தியா சென்

51. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலம் என்ற நிலையை அடைவது போன்ற குறிக்கோள்களை அமைப்பதன் மூலம் இந்த பிரச்சனையை சமாளிப்பதற்கான அரசியல் விருப்பத்தையும் அர்ப்பணிப்பையும் அமர்த்தியா சென் எந்த மாநிலங்களில் மட்டுமே காண்கிறார்? தமிழ்நாடு

52. ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எவை?

மதிய உணவுத் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள்

மேம்பாட்டு சேவைகள் இனப்பெருக்க மற்றும் குழந்தைகள் சுகாதாரத் திட்டம்

53. ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான வரவு செலவுத் திட்ட செலவினங்கள் நாட்டிலேயே அதிகமாக கொண்ட மாநிலம் எது? தமிழ்நாடு

54. ஊட்டச்சத்து குறைபாடு அச்சுருதல்காக மாநிலத்தின் நீண்ட கால பல்துறை கொள்கைகளை செயல்படுத்தும் தமிழ்நாட்டின் திட்டம்? ஒரு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாடு

55. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் எதனை உள்ளடக்கியது? மேம்பட்ட ஒதுக்கீடுகள் அணுகப்படாத பகுதிகளுக்கு நிலையான விரிவாக்கம் ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் பாதுகாப்பு சேவைகளின் விரிவாக்கம்

56. ICDS திட்டம் என்பது எவற்றோடு தொடர்புடைய துறைகளுடன் ஒன்றிணைக்கப்படுகிறது?

சுகாதாரம்

கல்வி

குடிநீர்

57. குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் தொடக்கப்பள்ளி சேர்க்கையை அதிகரிப்பதற்கும் இடைநீற்றல் விகிதங்களை குறைப்பதற்கும் நாட்டின் மிகப்பெரிய மதிய உணவு திட்டமாக கருதப்படுவது எது? புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சத்துணவு திட்டம்

58. பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கும் மாற்றத்தின் தூண்டுதலான வினையூக்களாக மாற்றுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி எது? பதுமையர் குழு

59. ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்? டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத்திட்டம்

60. முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளியின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்? 72 ஆயிரம்

61. தமிழ்நாடு அரசு எந்த திட்டத்தின் மூலம் இலவசமாக ஆம்புலன்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது? தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள்

62. விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துவது எது? பள்ளி சுகாதார திட்டம்

63. அனைத்து தொழு நோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டம்? தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்

64. எம்ஜிஆர் ஊட்டச்சத்து உணவு திட்டம் கிராமப்புறங்களில் எப்பொழுது தொடங்கப்பட்டது? ஜூலை 1 1982

65. எம்ஜிஆர் ஊட்டச்சத்து உணவு திட்டம் நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு எப்பொழுது தொடங்கப்பட்டது? 1984

66. எம்ஜிஆர் ஊட்டச்சத்து உணவு திட்டம் ஓய்வூதியதாரர்களுக்கு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு எப்போது செயல்படுத்தப்பட்டது? 1983 ஓய்வூதியதாரர்களுக்கும் 1995 கர்ப்பிணி பெண்களுக்கும் செயல்படுத்தப்பட்டது

67. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் யாருடைய உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது? உலக வங்கி

68. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது? 1991

69. 6 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு உணவில் ஊட்டச்சத்து வழங்கப்படாத கிராமங்களில் வழங்கப்படும் திட்டம் எது? பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்

70. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் எந்த ஆண்டு தொடங்கியது? 1980

71. தாங்கி இருப்பு என்பது? உணவு பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை FCP மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது

72. • HYV - அதிக விளைச்சல் தரும் வகைகள்

MSP - குறைந்தபட்ச ஆதரவு விலை

PDS - பொது விநியோக முறை

FCI - இந்திய உணவு கழகம்

73. எந்த புரட்சி இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது? பசுமை புரட்சி



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.