| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | 
|---|
| 8th ஐரோப்பியர்களின் வருகை 1) இந்தியாவில் ஆவணக் காப்பகங்கள், வரலாற்றுத் தகவல்களின் பெட்டகம் உள்ள இடங்கள்: i) லிஸ்பன் ii) கோவா iii) பாண்டிச்சேரி iv) சென்னை 2) இந்தியாவின் ஏராளமான செல்வத்தைப் பற்றி மார்க்கோபோலோ மற்றும்
சில வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளிலிருந்து அறிந்து கொண்டவர்கள்- ஐரோப்பியர்கள். 3) பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தவர்-
ஆனந்தரங்கம். 4) இந்திய தேசிய ஆவணக்காப்பகம் NAI அமைந்துள்ள இடம் – புதுடெல்லி. 5) இந்திய அரசின் ஆவணங்களை பாதுகாக்கும் முதன்மை காப்பகம்- இந்திய
தேசிய ஆவணக்காப்பகம். 6) ஆசியாவில் உள்ள ஆவணக் காப்பகங்களிலேயே மிகவும் பெரியது- இந்திய
தேசிய ஆவணக்காப்பகம். 7) இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் -
ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட். 8) தமிழ்நாடு ஆவணக் காப்பகம் உள்ள இடம் – சென்னை. 9)
1642 ம் ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள்
உள்ள இடம் - தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில். 10) டாட்வெல் என்பவரின் பெரும் முயற்சியால் 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' வெளியிடப்பட்ட ஆண்டு – 1917. 11) தமிழ்நாடு ஆவணக்காப்பக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி
வைத்தவர் – டாட்வெல். 12) புனித பிரான்சிஸ் ஆலயம் உள்ள இடம் – கொச்சி. 13) புனித லூயிஸ் கோட்டை உள்ள இடம் – பாண்டிச்சேரி. 14) புனித டேவிட் கோட்டை உள்ள இடம் – கடலூர். 15) புனித ஜார்ஜ் கோட்டை உள்ள இடம் – சென்னை. 16) இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அருங்காட்சியகம் உள்ள இடம் – டெல்லி. 17) டெல்லி தேசிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட ஆண்டு – 1949. 18) நவீன இந்தியாவின் முதல் நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு – 1862. 19) எந்த மன்னர் தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார்- ஏழாம்
எட்வர்டு. 20) இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு – 1935. 21) மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் நோட்டு ரிசர்வ்
வங்கியால் வெளியிடப்பட்ட ஆண்டு - 1938 ஜனவரி. 22) கடலூரில் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஆண்டு-
1690. 23) வாஸ்கோடகாமாவின் கடல் வழிப் பயணம் - லிஸ்பன் முதல் கோழிக்கோடு
வரை பயணம் செய்த காலம் - 1497 – 1498. 24) துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு
இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான நிலவழி மூடப்பட்ட ஆண்டு – 1453. 25) போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி - மாலுமி ஹெண்றி என அறியப்படுகிறார். 26) உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும் சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும்
நாட்டு மக்களை ஊக்குவித்தவர் - மாலுமி ஹென்றி. 27) போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின்
தெற்கு முனையை அடைந்த ஆண்டு – 1487. 28) பார்த்தலோமியோ டயஸ் என்ற மாலுமியை ஆதரித்த மன்னர் - இரண்டாம்
ஜான். 29) வாஸ்கோடகாமா கள்ளிக் கோட்டையை அடைந்த ஆண்டு – 1498. 30)
1500 ம் ஆண்டு வாஸ்கோடகாமாவின் கடல் வழியைப்
பின்பற்றி 13 கப்பல்களில் 100 வீரர்களுடன் கள்ளிக்கோட்டையை வந்தடைந்த
இரண்டாவது போர்ச்சுகீசிய மாலுமி - பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல். 31) வாஸ்கோடகாமா 20 கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்த - ஆண்டு –
1501. 32) வாஸ்கோடகாமா வர்த்தக மையத்தை நிறுவிய இடங்கள்: i) கள்ளிக்கோட்டை ii) கொச்சின் iii) கண்ணனூர் 33) போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரம் –
கொச்சின். 34) வாஸ்கோடகாமா 3 - வது முறையாக இந்தியா வந்து நோய்வாய்ப்பட்டு காலமான ஆண்டு - 1524 டிசம்பர் – கொச்சி. 35)
1505 ல் இந்தியாவிலிருந்த போர்ச்சுகீசிய
பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் - பிரான்சிஸ்கோ - டி – அல்மெய்டா. 36) கப்பற்படையை பலப்படுத்த அல்மெய்டா பின்பற்றிய கொள்கை – நீலநீர்க்கொள்கை. 37) பீஜப்பூர், குஜராத் சுல்தான்கள்
போர்ச்சுகீசியருக்கு எதிராக - எகிப்து, துருக்கி சுல்தான்களுக்கு ஆதரவளித்தனர். 38) இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர்
- அல்போன்சோ - டி – அல்புகர்க். 39) அல்போன்சோ – டி அல்புகர்க் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை
கைப்பற்றிய ஆண்டு - 1510 நவம்பர். 40) இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்-
அல்போன்சோ - டி – அல்புகர்க். 41) விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டவர்- அல்போன்சோ -
டி – அல்புகர்க். 42)
1515 ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ்
துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தியவர்- அல்போன்சோ
- டி – அல்புகர்க். 43) அல்புகர்க்குவிற்குப் பிறகு வந்த கவர்னர் - நினோ - டி –
குன்கா 44) நினோ - டி குன்கா தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றிய
ஆண்டு -1530. 45) இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தியவர்கள்-போர்ச்சுக்கீசியர்கள். 46) போர்ச்சுக்கீசியர்கள் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்ட
ஆண்டு – 1556. 47) ஐரோப்பிய எழுத்தாளர் கோவாவில் இந்திய மருத்துவ தாவரங்கள் என்ற
நூலை அச்சிட்டு வெளியிட்ட ஆண்டு -1563. 48) நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு
– 1602. 49) டச்சுக்காரர்கள் இந்தியாவில் வர்த்தக மையத்தை நிறுவிய இடம் –
மசூலிப்பட்டினம். 50) ஆரம்பத்தில் டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்த நகரம் – பழவேற்காடு. 51) டச்சுக்காரர்களின் முக்கிய வர்த்தக மையங்கள் இருந்த இடங்கள்: i) பழவேற்காடு ii) சூரத் iii) சின்சுரா  iv) காசிம்பஜார் v) பாட்னா vi)  நாகப்பட்டினம் vii) பாலசோர் viii)
கொச்சின் 52) டச்சுக்காரர்கள் அம்பாய்னாவில் 10 ஆங்கில வியாபாரிகள் மற்றும் 9 ஜப்பானியர்களை இரக்கமின்றி கொன்ற
ஆண்டு – 1623. 53) ஆங்கிலேயர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் பெடரா போர் நடைபெற்ற
ஆண்டு-1759. 54) பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் கெல்டிரியா கோட்டையைக் கட்டிய
ஆண்டு-1613. 55) இங்கிலாந்து இராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம்
செய்ய அனுமதி பெறப்பட்ட ஆண்டு - 1600 டிசம்பர் 31. 56) ஜஹாங்கிர அவைக்கு மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் அனுப்பிவைக்கப்பட்ட
ஆண்டு – 1608. 57) கேப்டன் நிக்கோலஸ் டவுண்டன் போர்ச்சுக்கீசியரை வென்ற ஆண்டு –
1614. 58) ஜஹாங்கீர் அவைக்கு இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் அவர்களால் சர்
தாமஸ் ரோ அனுப்பிவைக்கப்பட்ட ஆண்டு – 1615. 59) ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில்
உள்ள மசூலிப்பட்டினத்தில் நிறுவிய ஆண்டு - 1611. 60) பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் சந்திரகிரி மன்னரான சொன்னப்ப
நாயக்கர் என்பவரிடமிருந்து மெட்ராசை குத்தகைக்குப் பெற்ற ஆண்டு – 1639. 61) போர்ச்சுக்கீசிய இளவரசி காதரினை திருமணம் செய்து கொண்டவர்- இங்கிலாந்து
மன்னர் இரண்டாம் சார்லஸ். 62) திருமண சீராக பம்பாய் தீவை பெற்றவர்- இங்கிலாந்து மன்னர் இரண்டாம்
சார்லஸ். 63) ஜாப் சார்னாக் சுதாநுதி என்ற இடத்தில் வர்த்தகமையம் நிறுவப்பட்ட
ஆண்டு- 1690. 64) 1696 ல் சுதாநுதியில் ஒரு
கோட்டை கட்டப்பட்டு 1700 வில்லியம் கோட்டை என அழைக்கப்பட்டது. 65) பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு – 1756. 66) பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு – 1764. 67) இந்தியா அங்கில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஆண்டு
– 1858. 68) டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன் டேனிஷ் கிழக்கிந்திய
நிறுவனத்தை உருவாக்கிய ஆண்டு – 1616 மார்ச் 17. 69) டேனியர்கள் குடியேற்றங்களை நிறுவிய இடங்கள் - 1620
- தரங்கம்பாடி (தமிழ்நாடு), 1676 – செராம்பூர் (வங்காளம்). 70) டேனியர்களின் இந்தியத் தலைமையிடமாக இருந்த நகரம் – செராம்பூர். 71) தரங்கம்பாடியை டேனியர்கள் எவ்வாறு அழைத்தனர்- டான்ஸ்பெர்க். 72) தரங்கம்பாடியில் ஒரு அச்சுக் கூடத்தை நிறுவியவர்- சீகன்பால்கு. 73) பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1664. 74) மன்னர் 14 ம் லூயியின் அமைச்சர் கால்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது-
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம். 75) வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள்
கடைசி ஐரோப்பிய நாடு – பிரான்சு. 76) இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை நிறுவியவர் – கரோன். 77) மார்காரா என்பவர் கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று பிரான்சின்
இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவிய ஆண்டு-1669. 78) பிஜப்பூர் ஆட்சியாளர் ஷெர்கான் லோடிக்கு வழங்கப்பட்ட மானியத்தின்
கீழ் மார்ட்டின் என்பவர் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவிய ஆண்டு – 1673. 79) இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாக
மாறிய இடம் - பாண்டிச்சேரி. 80) பாண்டிச்சேரியில் உள்ள செயின்ட் லூயிஸ் கோட்டையை கட்டியவர்-
பிரான்காய்ஸ் மாட்டின். 81) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ்
டியூப்ளே நியமனம் செய்யப்பட்ட ஆண்டு – 1742. 82) சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர் - 1731 ஜோதன்பர்க். 83) எந்த கம்பெனியின் வெற்றி சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றத்திற்கு
ஊக்குவிப்பாக இருந்தது - டச்சு கிழக்கிந்திய கம்பெனி, ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 84) இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர்
- அல்போன்சோ - டி – அல்புகர்க். 85) ஜரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டு பிடிப்பதில்
முதன்மையாக இருந்த நாடு - போர்ச்சுகல் 86)
1453 ம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிள் யாரால்
கைப்பற்றப்பட்டது – துருக்கி. 87) சர் வில்லியம் ஹாக்கின்ஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர் – இங்கிலாந்து. 88) இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை - செயின்ட்
ஜார்ஜ் கோட்டை. 89) இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர் – பிரெஞ்சுக்காரர்கள். 90) தரங்கம்பாடி யாருடைய வர்த்தக மையமாக இருந்தது- டேனியர்கள். 91) இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்த முகலாயப்
பேரரசர் – ஜஹாங்கீர். 92) பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் யாரால் நிறுவப்பட்டது - கால்பர்ட். 93) பொருத்துக: கம்பெனிகள் நிறுவப்பட்ட ஆண்டு. i) டச்சுக்காரர்கள் - 1602 ii) ஆங்கிலேயர்கள் - 1600 iii) டேனியர்கள் - 1616 iv) பிரெஞ்சுக்காரர்கள் - 1664 | 
ஐரோப்பியர்களின் வருகை 2025 TNTET Paper - 2
அக்டோபர் 23, 2025
0
Contents 
Tags
 

minnal vega kanitham