| சிறகின் ஓசை |
|---|
|
1. பறவைகள் இடம் பெயர்தலை எவ்வாறு அழைப்பர்? வலசை போதல் 2. பெரும்பாலும் எந்த வகை பறவைகள் வலசை போகின்றன? நீர்வாழ்
பறவைகள் 3. பறவைகள் எவற்றிற்காக இடம் பெயர்கின்றன? உணவு, இருப்பிடம்,
தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் 4. பறவைகள் எவற்றை அடிப்படையாக கொண்டு இடம் பெயர்கின்றன? நிலவு,
விண்மீன், புவிஈர்ப்புப் புலம் 5. பறவைகள் பொதுவாக எத்திசையில் வலசை செல்கின்றன? வடக்கிலிருந்து
தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் 6. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை எது? கப்பல்
பறவை 7. கப்பல் பறவை தரை இறங்காமால் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கும்?
400 கிலோமீட்டர் 8. கப்பல் பறவைக்கு வழங்கும் வேறு பெயர்கள் என்ன? கப்பல் கூழைக்கடா,
கடற்கொள்ளைப் பறவை 9. "நாராய், நாராய், செங்கால் நாராய்" என்னும் பாடலை
எழுதியவர் யார்? சத்திமுத்தப்புலவர் 10. "தென்திசைக்
குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் பாடலை எழுதியவர் யார்? சத்திமுத்தப்புலவர் (2023
TNUSRB SI), (2023 TNTET Paper -2) 11. சத்திமுத்தப்புலவர்
எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்? ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு 12. “தென்திசைக் குமரிஆடி
வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் எந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன? பறவைகள்
வலசை வந்த செய்தி (2023 TNUSRB SI) 13. ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் எந்த பறவைகள் வருவது
தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது? செங்கால் நாரைகள் 14. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது? சிட்டுக்குருவி 15. ஆண் சிட்டுக்குருவியின் தொண்டைப்பகுதி எந்த நிறத்தில் இருக்கும்?
கருப்பு நிறத்தில் 16. ஆண் சிட்டுக்குருவியின் உடல்ப்பகுதி எந்த நிறத்தில் இருக்கும்?
அடர்பழுப்பு நிறம் 17. பெண் சிட்டுக்குருவியின் உடல்ப்பகுதி எந்த நிறத்தில் இருக்கும்?
மங்கிய பழுப்பு நிறம் 18. சிட்டுக்குருவி எப்படி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது? கூடுகட்டி 19. கூடுகட்டிய பின் சிட்டுக்குருவி எத்தனை முட்டைகள் வரை இடும்
மூன்று முதல் ஆறு முட்டைகள் 20. சிட்டுக்குருவி எத்தனை நாட்கள் அடைகாக்கும்? 14 நாட்கள் 21. இமயமலைத் தொடரில் எத்தனை மீட்டர் உயரத்தில் கூட பறவைகள் வாழ்கின்றன?
4000 22. சிட்டுக்குருவியின்
வாழ்நாள் எத்தனை வருடங்கள் ஆகும்? பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் (2023
TNTET Paper -2) 23. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்? டாக்டர்
சலீம் அலி 24. இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி யார்? டாக்டர்
சலீம் அலி 25. தன்
வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் "சிட்டுக்குருவியின் வீழ்ச்சி" (The fall
of sparrow) என்று பெயரிட்டவர் யார்? டாக்டர் சலீம் அலி [2022 TNTET Paper -1], (2023 TNTET Paper -2) 26. "காக்கை
குருவி எங்கள் சாதி" என்று கூறியவர் யார்? பாரதியார் 27. உலகிலேயே நெடுந்தொலைவு (22000 கி. மீ) பயணம் செய்யும் பறவை
எது? ஆர்டிக் ஆலா 28. பறவை பற்றிய படிப்பு? ஆர்னித்தலாஜி 29. உலக சிட்டுக்குருவிகள் நாள்? மார்ச் 20 30. சிட்டுக்குருவி வாழ
முடியாத பகுதி எது? துருவப்பகுதி (2021 MHC Exams) 31. பறவைகளின் வலசை போகக் காரணங்களுள் ஒன்று? தட்பவெப்பநிலை 32. மிக நீண்ட தொலைவு
பறக்கும் பறவை எது? ஆர்டிக் ஆலா [2022 TNTET Paper -1] 33. சிட்டுக் குருவி
– பெயர்க்காரணம் பெற்றது? விரைவாக பறந்து செல்வதால் (2022TNTET
Paper 1) |
| Previous Year Questions |
|---|
|
1. "தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர்
ஆயின்" என்னும் அடிகளில் பறவைகள் வலசை வந்த செய்தியைக் கூறியவர் யார்? (6th
New Book சிறகின் ஓசை) (2023 TNUSRB SI) a) சத்தி முத்தப் புலவர் b) கபிலர் c) பரணர் d) ஒளவையார் 2. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி
_____ (MHC Exam 2021) a. துருவப்பகுதி b. இமயமலை c. இந்தியா d. தமிழ்நாடு 3. 1500 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு பறைவகள்
வலசை வருவது பற்றி 'தென் திசைக்குமரி ஆடி வட திசைக்கு ஏகுவீர் ஆயின்' என்று பாடிய புலவர்
யார்? (2023 TNTET Paper -2) (A) பரணர் (B) கணியன் பூங்குன்றன் (C) சத்திமுத்தி புலவர் (D) குட புலவியனார் 4. சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர்
________. [2022 TNTET Paper -1] (A) சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சி (B) சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை. (C) பறவை மனிதரின் வாழ்க்கை. (D) நானும் சிட்டுக் குருவியும் 5. ஆர்டிக் ஆலா – என்பது _______. [2022 TNTET
Paper -1] (A) பயணிகள் கப்பல் (B) கடல் வாழ் தாவரம் (C) கடல் வாழ் விலங்கு (D) ஒரு வகை பறவை 6. சிட்டுக் குருவி – பெயர்க்காரணம் பெற்றது :
(2022 TNTET Paper -1) (A) சிறியதாக இருப்பதால் (B) சிட்டென்று பறப்பதால் (C) விரைவாக பறந்து செல்வதால் (D) வீட்டில் கூடு கட்டுவதால் 7. சிட்டுக் குருவியின் வாழ்நாள் எவ்வளவு?
(2023 TNTET Paper -2) A. 6-7 ஆண்டுகள் B. 3-10 ஆண்டுகள் C. 10-16 ஆண்டுகள் D. 10-13 ஆண்டுகள் 8. "சிட்டுக்குருவியின் வீழ்ச்சி” (The
fall of sparrow) - என்னும் தன் வரலாற்று நூலின் ஆசிரியர் யார்? (2023 TNTET Paper
-2) A. முகமது அலி B. சையது முகமது C. சலீம் அலி D. சலீம் காதர் |

minnal vega kanitham