ஒளி-பிறந்தது
1.
அப்துல்கலாம் அவர்களுக்கு தமிழில் பிடித்த நூல் எது? திருக்குறள்
2.
"அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல்
ஆகா அரண்" என்ற குரல் யார் வாழ்க்கைக்கு வலு சேர்த்தது? அப்துல்கலாம்
3.
பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் 300 கிராம் எடை உள்ள செயற்கைக் கால்கள்
எதைக் கொண்டு உருவாக்கப்பட்டன? கார்பன் இழையை
4.
பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படும் ஏவுகணையின் பெயர்கள் என்ன? அக்னி மற்றும்
பிரித்வி
5.
அப்துல்கலாம் அவர்களுக்கு ‘லிலியன் வாட்சன்’ எழுதிய எந்த நூல் மிகவும் பிடிக்கும்?
விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps) (அதைப் படித்தபோது அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றேன்)
6.
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்தியா எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அப்துல்கலாமின்
மூன்று பதில்கள் எவை?
i.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை,
ii.
நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக் கோள்கள் சூரிய சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும்,
iii.
செவ்வாய் கோளில் மனித இனம் குடியேறி இருக்கும்.
7.
இந்தியா நிலவுக்கு அனுப்பிய செயற்கைகோளின் எடை எவ்வளவு? 525 கிலோ
8.
உலகின் முதல் விஞ்ஞானிகள் என்று யாரைக் அப்துல்கலாம் குறிப்பிடுகிறார்? குழந்தைகள்
9.
வெற்றி பெற குழந்தைகளுக்கு இரண்டு வழிகள் உண்டு என்று அப்துல்கலாமின் அறிவுரை என்ன?
i.
அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள்
ii.
வியர்வை! வியர்வை! வியர்வை
கிழவனும்-கடலும்
1.
கிழவனும் கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது? 1954
2.
கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர் யார்? எர்னெஸ்ட் ஹெமிங்வே
3.
கிழவனும் கடலும் என்ற கதையின் நாயகன் யார்? சாண்டியாகோ
4.
கிழவனும் கடலும் என்ற கதையில் சாண்டியாகோவுடன் மீன்பிடிக்க கற்றுக்கொள்ள உடன்வரும்
சிறுவனின் பெயர் என்ன? மனோலின்
மனம்-கவரும்-மாமல்லபுரம்
1.
மற்போரில் சிறந்தவன் யார்? நரசிம்மவர்மன்
2.
நரசிம்மவர்மனின் சிறப்பு பெயர் என்ன? மாமல்லன்
3.
பஞ்சபாண்டவர் இரதம் எங்கு உள்ளது? மாமல்லபுரம்
4.
நரசிம்மவர்மனின் காலம் என்ன? ஏழாம் நூற்றாண்டு
5.
மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள் எவை?
1.
அர்ச்சுனன் தபசு 2. கடற்கரைக் கோவில் 3. பஞ்சபாண்டவர் ரதம் 4. ஒற்றைக்கல் யானை 5. குகைக்கோவில்
6. புலிக்குகை 7. திருக்கடல் மல்லை 8. கண்ணனின் வெண்ணெய்ப் பந்து 9. கலங்கரை விளக்கம்
6.
நரசிம்மருக்கு பாறையின் நிழல் எதை போன்று தெரிந்தது? யானை
7.
நரசிம்மவர்மனின் தந்தை பெயர் என்ன? மகேந்திரவர்ம பல்லவர்
8.
எத்தனை தலைமுறைகளில் உருவாக்கப்பட்டவை மாமல்லபுர சிற்பங்கள்? நான்கு
9.
மனிதர்கள், விலங்குகள், பறவைகள் எல்லாம் உயிர் உள்ளவை போல எந்த பாறையில் காணப்படுகிறது?
அர்ச்சுனன் தபசு
10.
சிற்பக் கலை வடிவமைப்புகள் நான்கு வகைப்படும் – அவை 1. குடைவரைக் கோயில்கள் 2. ஒற்றைக்கல்
கோயில்கள் 3. கட்டுமானக் கோயில்கள் 4. புடைப்புச் சிற்பங்கள்
11.
இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம்? மாமல்லபுரம்
12.
தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடம் எங்கு உள்ளது? மாமல்லபுரம்
13.
மழைக்காலத்தில் இரு பாறைகளுக்கு நடுவே மழைநீர் பாய்ந்து வருவது எதை போன்று உள்ளது?
ஆகாய கங்கை ஓடி வருவதைப் போல
14.
‘அர்ச்சுனன் தபசு’ - ன் வேறு பெயர் என்ன? ‘பகீரதன் தவம்’
15.
சிற்பக்கலையின் உச்சம் எது? அர்ச்சுனன் தபசு
16.
மாமல்லபுரத்தை இப்போது எவ்வாறு அழைக்கிறார்கள்? மகாபலிபுரம்
தமிழ்நாட்டில்-காந்தி
1.
காந்தி அருங்காட்சியகம் எங்கு உள்ளது? மதுரை
2.
காந்தியடிகள் முதன் முதலாக சென்னைக்கு வந்த ஆண்டு எது? 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி
மாதம்
3.
ரெளலட் சட்டம் எதிர்ப்பு போராட்டம் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் யாருடைய வீட்டில்
நடைப்பெற்றது? இராஜாஜி
4.
இராஜாஜியின் வீட்டில் காந்தியடிகள் அருகில் அமர்ந்தவர் யார்? பாரதியார்
5.
"தமிழ்நாட்டுக் கவிஞர்”, "தமிழ்நாட்டு சொத்து என்று இராஜாஜி யாரைக் குறிப்பிட்டார்?
பாரதியார்
6.
இந்தியாவின் சொத்து என்று பாரதியாரை குறிப்பிட்டவர் யார்? காந்தியடிகள்
7.
காந்தி அவர்களை பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க அழைத்தவர் யார்? பாரதியார்
8.
“இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?
” என்று காந்தியடிகள் யாரிடம் கூறினார்? பாரதியார்
9.
காந்தியடிகள் யாரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்? பாரதியார்
10.
காந்தியடிகள் மதுரைக்கு வருகை தந்த ஆண்டு எது? 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
11.
காந்தியடிகள் தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை எந்த நகருக்கு சேரும்?
தமிழ்நாடு - மதுரை
12.
உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் பூண்டவர்? காந்தியடிகள்
13.
காந்தியடிகள் காரைக்குடியில் எந்த ஊரில் தங்கி இருந்தார்? கானாடுகாத்தான்
14.
உயர்வு தாழ்வு நிகழ்வு நடந்தால் காந்தியடிகள் எந்த இடங்களுக்கு செல்ல மறுத்துவிட்டார்?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குற்றால அருவி
15.
காந்தியடிகள் தமிழை எப்போது கற்கத் தொடங்கினார்? தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில்
16.
காந்தியை கவர்ந்த தமிழ்க்கையேடு எழுதியவர்? ஜி. யு. போப்
17.
காந்தியை கவர்ந்த தமிழ்க்கையேடு? திருக்குறள்
18.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்? காந்தியடிகள்
19.
1937 ஆம் ஆண்டு இலக்கிய மாநாடு எங்கு நடைப்பெற்றது? சென்னை
20.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்ப்புக் குழு தலைவர்? உ. வே. சாமிநாதர்
21.”இந்தப்
பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று
காந்தி யாரைப் பற்றி கூறினார்? உ. வே. சாமிநாதர்
22.
காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் ----- ? மதுரை
23.
இலக்கிய மாநாடு நடைபெற்ற இடம்? சென்னை
24.
தமிழ்நாட்டுக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? பாரதியார்
25.
தமிழ்க் கையேடு என அழைக்கப்படுபவர் யார்? ஜி. யு. போப்

minnal vega kanitham