| நூல்வெளி |
|---|
|
இயல் 5.1 ஆசாரக்கோவை
• ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். • இவர் பிறந்த ஊர் கயத்தூர். • ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது. |
| நூல்வெளி |
|---|
|
இயல் 5.2 கண்மணியே கண்ணுறங்கு
• தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தால் என்பதற்கு நாக்கு என்று பொருள் நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது. • குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு. |
| தெரிந்து தெளிவோம் |
|---|
|
இயல் 5.3 தமிழர் பெருவிழா
• தெரிந்து தெளிவோம் • வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது. • தெரிந்து தெளிவோம் • தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. • தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது. • தெரிந்து தெளிவோம் • திருவள்ளுவர் கி.மு (பொ.ஆ.மு) 31இல் பிறந்தவர். எனவே, திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31ஐக் கூட்டிக்கொள்ள வேண்டும். (எ.கா.) 2018 + 31 - 2049 • தெரிந்து தெளிவோம் • அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. • பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாடப்படுகிறது. • குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது. |
| தெரிந்து தெளிவோம் |
|---|
|
இயல் 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்
• தெரிந்து தெளிவோம் • மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள் • 1. அர்ச்சுனன் தபசு • 2. கடற்கரைக் கோவில் • 3. பஞ்சபாண்டவர் ரதம் • 4. ஒற்றைக்கல் யானை • 5. குகைக்கோவில் • 6. புலிக்குகை • 7. திருக்கடல் மல்லை • 8. கண்ணனின் வெண்ணெய்ப் பந்து • 9. கலங்கரை விளக்கம் • தெரிந்து தெளிவோம் • சிற்பக் கலை வடிவமைப்புகள் நான்கு வகைப்படும். • குடைவரைக் கோயில்கள் • ஒற்றைக் கல் கோயில்கள் • கட்டுமானக் கோயில்கள் • புடைப்புச் சிற்பங்கள் • இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம். |
| நூல்வெளி |
|---|
|
இயல் 6.1 நானிலம் படைத்தவன் (முடியரசன்)
• முடியரசனின் இயற்பெயர் துரைராசு. • பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். • திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர். • இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. |
| நூல்வெளி |
|---|
|
இயல் 6.2 கடலோடு விளையாடு
• நூல் வெளி • உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலோ நாட்டுப்புறப் பாடலாகும். • காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர். • ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும். • இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. தெரிந்து தெளிவோம் நெய்தல் திணை • நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும் • மக்கள் : பரதவர், பரத்தியர் • தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் • பூ : தாழம்பூ |
| தெரிந்து தெளிவோம் |
|---|
|
இயல் 6.3 வளரும் வணிகம்
• தெரிந்து தெளிவோம் • தந்நாடு விலைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி ............. உமணர் போகலும் - நற்றிணை-183 • பாலொடு வந்து கூழொடு பெயரும் ............. குறுந்தொகை - 23 • பொன்னொடு வந்து கறியொடு பெயரும்..... அகநானூறு 149 |

minnal vega kanitham