TNPSC Group 2 பொது தமிழ் - டெய்லி டெஸ்ட் அட்டவணை
விவரம்: இங்கே TNPSC Group 2 தேர்விற்கான பொது தமிழ் பகுதிக்கான தினசரி பயிற்சி தேர்வுகள் (Daily Test) பட்டியலாக வழங்கப்பட்டுள்ளன.
தேதி | தேர்வு தலைப்பு |
---|---|
16-07-2025 | Test - 1 நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி Test - 2 திருக்குறள் (6th & 7th புதிய புத்தகம்) |
17-07-2025 | Test - 3 திரிகடுகம், இன்னாநாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் Test - 4 திருக்குறள் (8th & 9th புதிய புத்தகம்) |
18-07-2025 | Test - 5 உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி இலக்குவனார், நாமக்கல் கவிஞர் Test - 6 திருக்குறள் (10th & 11th புதிய புத்தகம்) |
19-07-2025 | Test - 7 தேவநேய பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் Test - 8 திருக்குறள் (12th புதிய புத்தகம்), (6th to 12th பழைய புத்தகம்) |
20-07-2025 | Test - 9 தி.யு.போப், வீரமாமுனிவர் Test - 10 பாவேந்தர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
21-07-2025 | Test - 11 டி.கே.சிதம்பரனாதர், தாராபாரதி, தமிழ் ஒளி, முடியரசன், கி.வா.ஜகந்நாதர் Test - 12 திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் |
22-07-2025 | Test - 13 வேலுநாச்சியார், காயிதே மில்லத் Test - 14 கண்ணதாசன், குன்றக்குடி அடிகளார், தமிழின் தொன்மை, சிறப்பு தொடர்பான செய்திகள் |
Where to Study
அலகு 7 இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)
- ● ஏழாம் வகுப்பு - பருவம் 2-இயல் 2 -அழியாச் செல்வம்
- ● 6 ஆம் வகுப்பு தமிழ் பழையது பருவம் 1 - இயல் -2
- ● ஆறாம் வகுப்பு பழையது பருவம் 1 - இயல் 3 - நான்மணிக்கடிகை
- ● ஏழாம் வகுப்பு - பருவம் 3 -இயல் 1 - விருந்தோம்பல்
- ● 6 ஆம் வகுப்பு தமிழ் பழையது -பருவம் 2- இயல் 1
- ● ஏழாம் வகுப்பு பழையது பருவம் 1 - முதுமொழிக்காஞ்சி
- ● ஏழாம் வகுப்பு பழையது - பருவம் 2-இயல் 1 - திரிகடுகம்
- ● 12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் - இயல் 4 - அறவியல் இலக்கியங்கள்
- ● ஒன்பதாம் வகுப்பு - இயல் 5 -சிறுபஞ்சமூலம்
- ● ஏலாதி பழையது பத்தாம் வகுப்பு
- ● எட்டாம் வகுப்பு - இயல் 7 -அறிவுசால் ஔவையார்
- ● ஆறாம் வகுப்பு - பருவம் 2 இயல் 1 மூதுரை
- ● 12 ஆம் வகுப்பு இயல் 4 புறநானூறு - ஔவையார்
- ● 7 ஆம் வகுப்பு தமிழ் பழையது -பருவம் 1- இயல் 3 - கல்விக்கு எல்லை இல்லை
- ● 6 ஆம் வகுப்பு தமிழ் பழையது -பருவம் 2- இயல் 3 புறநானூறு
- ● ஒன்பதாம் வகுப்பு - இயல் 1- திராவிட மொழிக் குடும்பம்
- ● ஒன்பதாம் வகுப்பு - இயல் 9 உலகத் தமிழ் மாநாடு (விரிவாகும் ஆளுமை)
- ● ஆறாம் வகுப்பு - பருவம் 1 இயல் 1 - வளர்தமிழ்
- ● 10 ஆம் வகுப்பு தமிழ் பழையது - இயல் 1 உயர்தனிச் செம்மொழி
- ● 9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 1 - திராவிட மொழிகள்
- ● 9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 - இயல் 3 - கடற்பயணம்
- ● 9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 2 உலகளாவிய தமிழ்ர்
- ● 8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 1 - தமிழ்ர் வானியல்
- ● 7 ஆம் வகுப்பு தமிழ் பழையது பருவம் 1 - இயல் 1 செம்மொழித் தமிழ்
- ● ஆறாம் வகுப்பு பழையது முதல் பருவம் தமிழ்த்தாத்தா
- ● 12 ஆம் வகுப்பு இயல் 4. பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் -உ.வே.சா
- ● பத்தாம் வகுப்பு -இயல் 1 தமிழ்ச்சொல் வளம்
- ● 8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 -இயல் 2 - தேவநேய பாவாணர்
- ● பத்தாம் வகுப்பு - இயல் 1 அன்னை மொழியே
- ● ஆறாம் வகுப்பு - பருவம் 1 - இயல் 1 - தமிழ்க்கும்மி
- ● 9 ஆம் வகுப்பு தமிழ் பழையது பருவம் 1- இயல் 3 ஓய்வும் பயனும்
- ● எட்டாம் வகுப்பு பழையது - ஜி.யு.போப்
- ● 11 ஆம் வகுப்பு - இயல் 4 - ஜி.யு.போப்
- ● பத்தாம் வகுப்பு - இயல் 9 - தேம்பாவணி
- ● 8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 1 இயல் 1 - தமிழ் வளர்த்த சான்றோர்கள்
- ● 8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2 - இயல் 2- தேம்பாவணி
- ● ஒன்பதாம் வகுப்பு - இயல் 5 - குடும்ப விளக்கு
- ● ஏழாம் வகுப்பு - பருவம் 2 -இயல் 2 - இன்பத்தமிழ்க் கல்வி
- ● ஆறாம் வகுப்பு - பருவம் 1 இயல் 1 -இன்பத்தமிழ்
- ● 11 ஆம் வகுப்பு - இயல் 7 - புரட்சிக்கவி
- ● 8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 3 - விழுதும் வேரும்
- ● 7 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 3 எங்கள் தமிழ்
- ● 6 ஆம் வகுப்பு தமிழ் பழையது பருவம் 2- இயல் 1 இசையமுது
- ● ஏழாம் வகுப்பு - பருவம் 3 இயல் 1 -திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்-டி.கே.சி
- ● 11 ஆம் வகுப்பு - இயல் 5 டி.கே.சிதம்பரநாதர்
- ● ஏழாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 2 ஒப்புரவு நெறி
- ● பத்தாம் வகுப்பு -இயல் 8 காலக்கணிதம்
- ● ஏழாம் வகுப்பு - பருவம் 3 இயல் 3 - மலைப்பொழிவு
- ● 9 ஆம் வகுப்பு தமிழ் பழையது பருவம் 1 இயல் 2 - கண்ணதாசன்
- ● ஏழாம் வகுப்பு - பருவம் 3 -இயல் 3 - கண்ணியமிகு தலைவர்
- ● ஆறாம் வகுப்பு பருவம் 3 -இயல்1 - பாரதம் அன்றைய நாற்றங்கால்
- ● 6 ஆம் வகுப்பு தமிழ் பழையது பருவம் 2 -இயல் 3 - திண்ணையை இடித்து தெருவாக்கு
- ● ஆறாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 1 - வேலுநாச்சியார்
- ● 8 ஆம் வகுப்பு தமிழ் பழையது பருவம் 2 -இயல் 1 - இந்திய விடுதலைப் போரில்
- ● ஆறாம் வகுப்பு - பருவம் 2 -இயல் 1 - துன்பம் வெல்லும் கல்வி
- ● 6 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 1 - செய்யும் தொழிலே தெய்வம்
- ● ஆறாம் வகுப்பு பருவம் 2 -இயல் 3 - நானிலம் படைத்தவன்
- ● 8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 2 - யார் கவிஞன்
- ● ஒன்பதாம் வகுப்பு - இயல் 2 - பட்டமரம் உருத்திரங்கண்ணனார் :
- ● ஏழாம் வகுப்பு - பருவம் 2 இயல் 1 கலங்கரை விளக்கம்
- ● ஏழாம் வகுப்பு - பருவம் 3 - இயல் 1 வயலும் வாழ்வும் - கி.வா.ஜகந்நாதன்
- ● ஏழாம் வகுப்பு இயல் 1 -எங்கள் தமிழ் நாமக்கல் கவிஞர்
- ● 9 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 3 - இயல் 1 பெண்மை
- ● 1. ஒழுக்கமுடைமை - 10 th Old book, 10th new book
- ● 2. பொறையுடைமை - 9th old book-Term 1, 12th old book, 9th new book.
- ● 3. ஊக்க முடைமை 6th new book term 3, 6th new book tenm - 2
- ● 4. விருந்தோம்பல் - 6th new book term - 2
- ● 5. அறன் வலியுறுத்தல் - 6th new book Term - 3
- ● 6. ஈகை - 6th new book term - 3
- ● 7. பெரியாரைத் துணைக் கோடல் 10th Old book
- ● 8. வினை செயல்வகை - 7th new book term-3
- ● 9. அவையஞ்சாமை - 7th new book term - 3
- ● 10. கண்ணோட்டம் - அதிகாரம் 58
- ● 11. அன்புடைமை - 6th old book term -1, 6th new book term - 1
- ● 12. கல்வி - 7th old book term 3, 7th new book term - 2
- ● 13. நடுநிலைமை - 8th new book term -1
- ● 14. கூடா ஒழுக்கம் - 8th new book term - 1
- ● 15. கல்லாமை - 8th new book term - 1
- ● 16. செங்கோன்மை - 8th new book term - 2
- ● 17. பண்புடைமை- 8th old book term 3, 8th new book term -1
- ● 18. நட்பாராய்தல் - 8th new book term-2
- ● 19. புறங்கூறாமை - 7th new book term - 1
- ● 20. அருளுடைமை - 7th new book term-1
மாதிரி வினா விடைகள்
ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள்
(1) சுக்கு
(2) திப்பிலி
(3) கண்டங்கத்திரி
(4) சிறுநாவற்பூ
A) (1) மட்டும்
B) (2) மட்டும்
C) (3) மட்டும்
D) (4) மட்டும்
பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க. “'தூற்றின்' கண் தூவிய வித்து”
A) பழமொழி நானூறு
B) மூதுரை
C) நாலடியார்
D) திரிகடுகம்
”தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” – என்று புகழ்ந்துரைத்தவரைக் கண்டறிக.
A) தந்தை பெரியார்
B) அறிஞர் அண்ணா
C) ம.பொ.சிவஞானம்
D) ப. ஜீவானந்தம்
டி.கே.சிதம்பரநாதருடன் தொடர்பில்லாதது எது?
(1) தமிழ் எழுத்தாளர்
(2) திறனாய்வாளர்
(3) வழக்கறிஞர்
(4) பேராசிரியர்
A) (1) மட்டும்
B) (2) மட்டும்
C) (3) மட்டும்
D) (4) மட்டும்
கூற்று [A] : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.
காரணம் [R] : ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு.
A) [A] சரி [R] தவறு
B) [A] மற்றும் [R] இரண்டும் சரி
C) [A] மற்றும் [R] இரண்டும் தவறு
D) [A] தவறு [R] சரி
கூற்று [A] : உ.வே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று அழைக்கப்படுகிறார்.
காரணம் [R]: அழிவு நிலையில் இருந்த வெவ்வேறு சுவடிகளைப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி அச்சிட்டுப் புத்தகமாக இலக்கியங்களை வழங்கினார். தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியினை மேற்கொண்டார்.
A) [A] சரி ஆனால் [R] தவறு, [R] என்பது [A]ஐ விளக்கவில்லை
B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A] ஐ விளக்கியுள்ளது
C) [A] மற்றும் [R] இரண்டும் தவறு
D) [A] தவறு ஆனால் [R] சரி
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.
(1) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது.
(2) பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது.
(3) திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஹீராஸ் பாதிரியார்.
(4) திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
A) (1) மட்டும்
B) (2) மட்டும்
C) (3) மட்டும்
D) (4) மட்டும்
‘நான்மணிக்கடிகை’ என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயரைச் சுட்டுக.
A) நாயனார்
B) நல்லந்துவனார்
C) நாகனார்
D) சேந்தனார்
‘மண்ணோடி யைந்த மரத்தனையர்’ என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
A) மனமார விருந்தினரை உபசரியாதவர்
B) பண்புடன் பழகாதவர்
C) இரக்கம் இல்லாதவர்
D) மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர்
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்
A) இரா. இளங்குமரனார்
B) க.அப்பாத்துரையார்
C) தேவநேயப் பாவாணர்
D) சி.இலக்குவனார்
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.
A) கோலாமி
B) பர்ஜி
C) கொண்டா
D) கண்ணெழுத்துகள்
சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க.
தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச்
சொல்ல வல்லவர் ______
A) கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்
B) பிறர் மனத்தில் நன்கு பதியும்படி சொல்லுவார்
C) முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவார்
D) அரிய செயல்களை விரைந்து செய்து முடிப்பார்
சரியான இணையைக் கண்டறிக:
(1) தாராபாரதி - ஆசியஜோதி
(2) முடியரசன் - வீரகாவியம்
(3) கவிமணி - இதய ஒலி
(4) இரசிகமணி - விரல் நுனி வெளிச்சங்கள்
A) (2) – சரி
B) (1) – சரி
C) (4) – சரி
D) (3) – சரி
அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
“தகுதியான்” வென்று விடல்
A) பெருமை
B) பொறுமை
C) கல்வி
D) பண்பு
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்: பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது.
A) பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து
B) பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
C) பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல்
D) ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து
minnal vega kanitham