1) ABCDE = P1Q2R3S4T5 என இருந்தால் பின்வருவனவற்றுள் Q2BFV7A என்பதற்கு சமமானது எது?
A) BQ2V7GP1
B) BQ2U6EP1
C) BQ2V7EP1
D) BQ2U6GP1
2) கோபி ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும் அதை ரூ. 1,200-க்கு கூடுதலாக விற்றிருந்தால் இலாபம் 20% ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க.
A) ரூ.15,000
B) ரூ.16,000
C) ரூ.14,000
D) ரூ.15,500
3) 500 இன் 30% மதிப்பில் 20% என்ன?
A) 30
B) 150
C) 75
D) 100
4) கொடுக்கப்பட்ட தொடரிலிருந்து விடுபட்ட எண்ணைக் காண்க. 4, 18, 2, 100, 180, 294, 448
A) 48
B) 50
C) 58
D) 60
5) முதல் n இயல் எண்களின் கூடுதல் 253 எனில், n-இன் மதிப்பு காண்க.
A) 22
B) 18
C) 24
D) 16
6) fox=cat எனில் xerox என்பது எதனை குறிக்கும்?
A) terct
B) tcroa
C) tcrot
D) terat
7) மூன்று பகடைகள் ஒன்றாக உருட்டப்படும்போது அனைத்து பகடையிலும் ஒரே எண் கிடைக்க நிகழ்தகவு என்ன?
A) 1/6
B) 1/216
C) 1/36
D) 1/2
8) 66 ச.செ.மீ வளைபரப்புடைய ஒரு நேர்வட்ட உருளையின் உயரம் 7 செ.மீ எனில், உருளையின் விட்டம் காண்க.
A) 2 cm
B) 4 cm
C) 6 cm
D) 3 cm
9) இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ. 80,000. முதல் ஆண்டு ஆண்டிற்கு 4% குறைகிறது. இரண்டாம் ஆண்டு 4% அதிகரிக்கிறது எனில் அதன் தற்போதைய விலை என்ன?
A) ரூ.76,800
B) ரூ.80,000
C) ரூ.80,128
D) ரூ.79,872
10) ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும், இரண்டாவது அலைபேசி ஒவ்வொரு 30 நிமிடங்களிலும்,மூன்றாவது அலைபேசி ஒவ்வொரு 40 நிமிடங்களிலும், நான்காவது அலைபேசி ஒவ்வொரு 50 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும் ?
A) பிற்பகல் 1 மணி
B) முற்பகல் 1 மணி
C) பிற்பகல் 3 மணி
D) முற்பகல் 3 மணி
11) x³-8y³ மற்றும் x²-k²y² ன் மீப்பெரு பொது வகுத்தி x + ky எனில் kன் மதிப்பு
A) 2 or-2
B) +2
C) -2
D) 0
12) தனி வட்டி மூலம் அசல் ரூ. 2,000, 8% வட்டிவீதத்தில் இரட்டிப்பாக எவ்வளவு மாதம் ஆகும்?
A) 144 மாதங்கள்
B) 150 மாதங்கள்
C) 120 மாதங்கள்
D) 140 மாதங்கள்
13) 3, 2.7 மற்றும் 0.09 ன் மீ.சி.ம
A) 2.7
B) 0.27
C) 0.027
D) 27
14) கீழ்க்காண்பவற்றில் எது ³√7 மற்றும் ⁴√5 இவற்றிற்கு இடையில் அமையும்?
A) √2
B) √3
C) √4
D) √5
15) ஒரு செவ்வக வடிவ நிலத்தின் ஒரு பக்க அளவு 15 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 17 மீ எனில், நிலத்தின் பரப்பளவை காண்க.
A) 80 m²
C) 110 m²
B) 100 m²
D) 120 m²
16) 1, 2, 2, 3, 3, 3 முகமதிப்புகள் கொண்ட இரு பகடைகள் உருட்டப்படும் பொழுது முதல் பகடையின் முக மதிப்பை விட இரண்டாவது பகடையின் முக மதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புகள் எத்தனை?
A) 3
B) 5
C) 8
D) 11
17) ரூ. 10,890 ஐ A மற்றும் B என்ற இரு குழுக்களுக்கு 4:5 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தால் B குழுவிற்கு கிடைக்கும் தொகை என்ன?
A) ரூ.1,210
B) ரூ.4,840
C) ரூ.6,050
D) ரூ.5,445
18) cat=abc
dog=def என இருந்தால் tan/cot என்பது பின்வருவனவற்றுள் எதனால் குறிக்கப்படலாம்?
A) cba/aec
B) cba/ace
C) cbn/ace
D) cbn/aec
19) E & G B D M 4 N K H 2 A C Z S V 3 F 1 J L O Q 5 P R வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் தொடர் எது? GDR BMP D45 ?
A) MNQ
B) 4NQ
C) MKO
D) M4Q
20) A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் 12 நாட்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
A) 6 நாட்கள்
B) 4 நாட்கள்
C) 8 நாட்கள்
D) 3 நாட்கள்
21) ஒரு நீச்சல் குளம் 24 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்கள் அந்தக் குளத்தில் குதிக்கும் போது, நீரின் உயரம் ஒரு செ.மீ உயர்கிறது. ஒரு ஆண் சராசரியாக வெளியேற்றும் நீரின் அளவு 0.1 மீ^3 எனில் அந்த நீச்சல் குளத்தில் எத்தனை ஆண்கள் உள்ளனர்?
A) 32
B) 36
C) 42
D) 46
22) ஆண்டு வட்டி விகிதம் 16 2/3% எனில் ரூ. 68,000க்கு ஒன்பது மாதங்களுக்கு தனிவட்டி என்ன?
A) ரூ.7,500
B) ரூ.8,500
C) ரூ.6,500
D) ரூ.5,500
23) A:B:C=2:3:4 எனில் A/B: B/C: C/A ன் மதிப்பு
A) 8:9:10
B) 8:16:24
C) 8:9:24
D) 24:9:8
24) கூட்டம் துவங்குவதற்கு 20 நிமிடம் முன்னமே சுனில் என்பவர் 8.50 மணிக்கு சென்றார். அங்கு கூட்டம் துவங்குவதற்கு 30 நிமிடம் முன்னரே வந்து விட்டதாக உணர்ந்தார். ஒரு மனிதர் கூட்டத்திற்கு 40 நிமிடம் காலதாமதமாக வந்தார் எனில் கூட்டம் துவங்க குறித்த நேரம் என்ன?
A) 8.00
B) 8.05
C) 8.10
D) 8.20
25) ‘B’ என்பவர் ‘A’ என்பவரை விட 20% அதிகமாக வேலை செய்கிறார். A ஒரு வேலையை 7 1/2 மணி நேரத்தில் செய்து முடிக்கிறார் எனில், B மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை மணி நேரம் எடுத்துக் கொள்வார்?
A) 5 hours
B) 5 1/2 hours
C) 6 hours
D) 6 1/2 hours
minnal vega kanitham