Type Here to Get Search Results !

Time And Work TNPSC Group 2


2014 – 2024 TNPSC Group 2/2A காலம் மற்றும் வேலை
ஆண்டு வினா எண்ணிக்கை
2014 Group 22
2015 Group 21
2016 Group 22
2017 Group 23
2018 Group 21
2019 Group 22
2022 Group 22
2024 Group 22

Group 2 கணக்கு கேள்விகள் - 10 மாதிரிகள்
மாதிரி 0 – Basic
1) A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் 12 நாட்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? (2024 Group 2)
A) 6 நாட்கள்
B) 4 நாட்கள்✔
C) 8 நாட்கள்
D) 3 நாட்கள்
மாதிரி 1 – மடங்கு
மாதிரி 2 – சதவீதம்
1) 'A' ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். 'B' என்பவர் Aஐ விட 60% திறமையானவர். எனில் அதே வேலையை 'B' எத்தனை நாட்களில் முடிப்பார். (20-04-2023 TNPSC) (2016 TNPSC Group 2) (2017, 2018 TNPSC)
(A) 8 நாட்கள்
(B) 8 1/2 நாட்கள்
(C) 7 நாட்கள்
(D) 7 1/2 நாட்கள்✔
2) ‘B’ என்பவர் ‘A’ என்பவரை விட 20% அதிகமாக வேலை செய்கிறார். A ஒரு வேலையை 7 1/2 மணி நேரத்தில் செய்து முடிக்கிறார் எனில், B மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை மணி நேரம் எடுத்துக் கொள்வார்? (2024 Group 2)
(A) 5 hours
(B) 5 1/2 hours
(C) 6 hours✔
(D) 6 1/2 hours
மாதிரி 3 – விகிதங்கள்
மாதிரி 4 – நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
1) ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தை படிக்கும் ஒருவர் 20 பக்கங்களை படிக்க 2 மணி நேரமாகிறது. அவர் அதே வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களை படிக்க எவ்வளவு நேரமாகும்? (2022 Group 2)
a. 3 மணிநேரம்
b. 4 மணிநேரம்
c. 5 மணிநேரம்✔
d. 4.5 மணிநேரம்
2) ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120 எனில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் அப்புத்தகத்தின் மொத்த பக்கங்கள் எத்தனையாக இருக்கும் (2019 Group 2)
a. 170 பக்கங்கள்
b. 180 பக்கங்கள்
c. 175 பக்கங்கள்✔
d. 185 பக்கங்கள்
3) 100 ஆட்கள் ஒரு வேலையை 7 நாட்களில் முடிக்கக் கூடும் எனில் அதே வேலையை 35 நாட்களில் முடிக்க எத்தனைப் பேர் தேவைப்படுவர்? (2017 Group 2)
a. 20 ஆட்கள்✔
b. 50 ஆட்கள்
c. 30 ஆட்கள்
d. 25 ஆட்கள்
4) 12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள் (2019 Group 2)
a. 16
b. 24✔
c. 26
d. 54
மாதிரி 5 – நேர் மற்றும் எதிர் மாறல்
1) 7 பேர் ஒரு வேலையை தினம் 9 மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 10 பேர் தினம் 7 மணிநேரம் செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்? (2016 Group 2)
a. 28 நாட்கள்
b. 30 நாட்கள்
c. 32 நாட்கள்
d. 27 நாட்கள்✔
2) 6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்? (2018 Group 2) (13/01/2021 TNPSC)
a. 10 நாட்கள்
b. 15 நாட்கள்
c. 20 நாட்கள்✔
d. 25 நாட்கள்
3) 5 நபர்கள் 5 வேலைகள் 5 நாட்களில் செய்து முடிப்பார் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ________ நாட்களில் செய்து முடிப்பார் [11-01-2022 TNPSC], [2022 Group 2], (8th New Book)
a. 5✔
b. 6
c. 50
d. 10
4) 7 சிலந்திகள் 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால் 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாட்களில் செய்யும்? (2014 Group 2)
a. 1
b. 7/2
c. 7✔
d. 49
5) 12 அச்சுக் கோப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 60 பக்கங்களை முடிப்பர் 20 மணி நேரத்தில், 200 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோப்பவர்கள் தேவை? (2015 Group 2)
a. 8
b. 10✔
c. 12
d. 11

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.