Type Here to Get Search Results !

thirukkural


6th New & Old Tamil Book
ஆசிரியர் குறிப்பு:திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். • இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர். இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.
• இவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார். நூல்குறிப்பு
• இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
• இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை எனவும் கூறுவர். திருக்குறள் 'உலகப் பொதுமறை' எனப் போற்றப்படுகிறது.
• திருக்குறளில் அன்புடைமை', 'இனியவை கூறல்' ஆகிய அதிகாரங்கள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை
• கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு. எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044 (கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.)

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.