Type Here to Get Search Results !

நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு


நாலடியார்
நாலடியார் (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 2)
நூல்குறிப்பு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார்.
இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது.
அறக்கருத்துகளைக் கூறுவது.
'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.
இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி;
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி; இப்பழமொழி நாலடியாரின் பெருமையைக் காட்டும்; திருக்குறளின் சிறப்பையும் உணர்த்தும். ‘‘நாலு’’ என்பது நாலடியார்; ‘‘இரண்டு’’ என்பது திருக்குறள்.
 பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம்
சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்.
பத்துப்பாட்டில் பத்துநூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினெட்டு நூல்கள். இவற்றை, 'மேல்கணக்கு நூல்கள்' எனக் கூறுவர்.
சங்கநூல்களுக்குப்பின் தோன்றியநூல்களின் தொகுப்பு, 'பதினெண்கீழ்க்கணக்கு' என வழங்கப்படுகிறது.
இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன.
பதினெண் என்றால், பதினெட்டு என்பது பொருள்.
இந்நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறுவர்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.
 நாலடியார் (7th தமிழ் புதிய புத்தகம் இயல் - 2)
நூல் வெளி
நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.
பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது? நாலடியார்

நான்மணிக்கடிகை (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 3)

ஆசிரியர் குறிப்பு:
• நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார்.  
• விளம்பி என்பது ஊர்ப்பெயர்; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
நூல் குறிப்பு :
• நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள்.
• நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள்.
• ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது.

பழமொழி நானூறு
பழமொழி நானூறு (விருந்தோம்பல்) (7th தமிழ் புதிய புத்தகம் இயல் - 7)
நூல் வெளி
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
இது நானூறு பாடல்களைக் கொண்டது.
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.
பழமொழி நானூறு (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 4)
ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார்.
முன்றுறை என்பது ஊர்ப்பெயர்.
அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும்.
இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.
நூல் குறிப்பு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு.
நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது.
இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
இப்பாடலில் வரும் பழமொழி, 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்பது.
• இதற்குக் 'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' என்பது பொருள்.

• நாலடியார் நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு. - சமணமுனிவர்
வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற. -சமண முனிவர்
நான்மணிக்கடிகை
மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்
தனக்குத் தகைசால் புதல்வர்; - மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு - விளம்பிநாகனார்
பழமொழி நானூறு
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு - நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்
ஒன்றாகு முன்றிலோ இல் - முன்றுறை அரையனார்

முதுமொழிக்காஞ்சி (7th தமிழ் புதிய புத்தகம் இயல் - 2)
முதுமொழிக்காஞ்சி (7th தமிழ் புதிய புத்தகம் இயல் - 2)
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: மதுரை கூடலூர் கிழார்
பிறந்த ஊர்: கூடலூர்
சிறப்பு: இவர் தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள்.
காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.
நூல் குறிப்பு :
முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான
இந்நூல், உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
இந்நூல், அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது.
இதில் பத்து அதிகாரங்கள் உள்ளன.
ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்கள் உள்ளன.
இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.
 நூல் பயன்: முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.

ஏலாதி (10th தமிழ் புத்தகம் இயல் - 1)
ஏலாதி (10th தமிழ் ப புத்தகம் இயல் - 1)
ஆசிரியர் குறிப்பு :
ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு.
இவர், சமண சமயத்தவர் என்பர்.
இவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துக்களை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார்.
இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு.
இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
 நூற்குறிப்பு :
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று.
இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.
இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.
ஏலம் என்னும் மருந்துப்பொருளை முதன்மையாகக்கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
இம்மருந்து, உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும்.
• அதுபோல, இந்நூலின் நற்கருத்துகள், கற்போரின் அறியாமையை அகற்றும்.
வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி நுழையா -இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து. கணிமேதாவியார்

முதுமொழிக்காஞ்சி (7th தமிழ் புத்தகம் இயல் - 2)
ஆசிரியர் குறிப்பு:
• பெயர்: மதுரை கூடலூர் கிழார்
• பிறந்த ஊர்: கூடலூர்
• சிறப்பு: இவர் தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள்.
• காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.
நூல் குறிப்பு :
• முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.
• பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான
• இந்நூல், உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
• இந்நூல், அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது.
• இதில் பத்து அதிகாரங்கள் உள்ளன.
• ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்கள் உள்ளன.
• இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.
நூல் பயன்: முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.

சிறுபஞ்சமூலம் (9th தமிழ் புதிய & பழைய புத்தகம்)
ஆசிரியர் குறிப்பு:
• இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர்.
• காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
• இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கராவர்.
• பெரும்பான்மை பொது அறக்கருத்துக்களும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
நூற்குறிப்பு:
• சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இதன் ஆசிரியர் காரியாசான்.
• இந்நூலில், கடவுள் வாழ்த்துடன் தொண்ணூற்றேழு வெண்பாக்கள் உள்ளன.
• கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல்நோயைத் தீர்ப்பன.
• அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்தும் மக்கள் மனநோயைப் போக்குவன. ஆகையால், இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.
நூல் வெளி
• தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின.
• அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
• அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
• ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள்.
• அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன.
• இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது.
• அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
• இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.
• சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்,
• மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
• காரி என்பது இயற்பெயர்.
• ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர்.
• மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.