Type Here to Get Search Results !

Top 50 lessons || Lesson - 23

0
Contents
12th பொருளாதாரம் : நிதிப் பொருளியல்

1) பொது நிதி என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிதிப் பொருளியல்
2) பொதுநிதி என்னும் பாடம் அரசியலுக்கும் பொருளியலுக்கும் இடையே எல்லைக்கோடாக திகழ்கிறது. இது பொது அதிகார அமைப்பின் வரவு செலவுகளை பற்றியும், அது ஒன்றோடொன்று சரி செய்வது பற்றியும் கருத்தில் கொள்கிறது" என்று கூறியவர்? டால்டன்
3) "அரசின் வருவாய் மற்றும் செலவுகளின் இயல்பையும் கொள்கைகளையும் ஆராய்வதே பொது நிதியியல் ஆகும்" என கூறியவர்? ஆடம் ஸ்மித்
4) நவீன காலத்தில் பொது நிதியியல் ஐந்து துணைப்பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது அவை?
I) பொது வருவாய்
II) பொது செலவு
III) பொது கடன்
IV) நிதி நிர்வாகம்
V) நிதி கொள்கை
5) நிதிக்கொள்கையின் கருவிகள்?
I) வரிகள்
II) மாணியங்கள்
III) பொதுக்கடன்
IV) பொதுச்செலவு
6) அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குவது? பொது நிதி
7) தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களின் வருவாய். செலவு, கடன் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குவது? தனியார் நிதி
8) பொதுநிதி மற்றும் தனியார் நிதிக்கு இடையேயான ஒற்றுமைகள்?
I) பகுத்தறியும் தன்மை இரண்டும் குறைந்த செலவில் அதிக நலத்தை பெறுவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது
II) கடனுக்கான வரையறை தனது வருவாய்க்கு அப்பால் செலவு செய்வதில்லை
III) வளங்களின் பயன்பாடு - பொது மற்றும் தனியார் துறைகள் வரையறுக்கப்பட்ட வளங்களையே கொண்டுள்ளது
IV) நிர்வாகம் - நிர்வாக திறனானது அரசு மற்றும் தனியாரின் செயல் திறனை பொருத்து அமைகிறது
9) பொதுநிதி மற்றும் தனியார் நிதிக்கு இடையேயான வேற்றுமைகள்?
I) வருமான மற்றும் செலவு சரிகட்டல் - அரசு செலவினை மதிப்பீடு செய்து வருவாயை எழுப்ப முயல்கிறது. தனிநபர்கள் வருகாய்க்கு ஏற்ப செலவினை வைத்து கொள்வார்கள்
II) கடன் -அரசானது உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வழிகள் மூலம் கடனை பெறலாம். தனியார் இவ்வாறு கடனை பெற இயலாது
III) பணம் அச்சடிக்கும் உரிமை அரசு வேண்டுமென்றால் பணத்தை அச்சடிக்கலாம். தனியார் பணத்தை உருவாக்க இயலாது
IV) நடப்பு மற்றும் எதிர்கால முடிவுகள் அரசானது எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டு நீண்டகால முடிவினை மேற்கொள்கிறது. தனியாரானது குறுகிய கால திட்டங்களுக்கான நிதியை கொண்டவை ஆகும்
10) ஆடம் ஸ்மித் பொதுசெலவினை அரசின் பணிகள் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தியுள்ளார்?
I) பாதுகாத்தல் பணிகள்
II) வணிக பணிகள்
III) வளர்ச்சி பணிகள்
11) பொதுச்செலவு அதிகரிப்பதற்கான காரணங்கள்?
I) மக்கள் தொகை வளர்ச்சி - 1951 ல் 36.1 கோடியாக இருந்த மக்கள் தொகை 2011 ல் 121 கோடியாக உயர்ந்துள்ளது
II) பாதுகாப்பு செலவு - 1990 - 1991 ல் 10,874 கோடியாக இருந்த பாதுகாப்பு செலவு 2018-19 ல் 2,95,511 கோடியாக அதிகரித்துள்ளது
III) அரசு மானியங்கள் - 1991ம் ஆண்டில் மத்திய அரசின் மாணியத்திற்கான செலவு 9581 கோடியிலிருந்து 2018-19 ல் 2,29,715,67 கோடியாக அதிகரித்துள்ளது
IV) கடன் சேவைகள் - மத்திய அரசின் வட்டி செலுத்தல்களுக்கான தொகை 1990-91 ல் 21500 கோடியிலிருந்து 2018-19 ல் 5,75,794 கோடியாக அதிகரித்துள்ளது
V) வளர்ச்சி திட்டங்கள் - நீர்ப்பாசனம், இரும்பு மற்றும் எஃகு, எரிசக்தி, தொலை தொடர்பு போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகளவு முதலீடு தேவைப்படுகிறது
VI) நகரமயமாக்கள் - 1950-51ல் 17% மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்ந்தனர். தற்போது நகர மக்கள் தொகை 43% க்கும் அதிகமாக உள்ளது. தற்போது 1 மில்லியன் மக்கள் தொகைக்கு மேல் 54 நகரங்கள் உள்ளன.
V) தொழில்மயமாக்கல்
VI) மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மானியங்கள் அதிகரிப்பு
12) பொது வருவாய் _______ ஆக வகைப்படுத்தப்படுகிறது? 2
I) வரி வருவாய்
II) வரியற்ற வருவாய்
13) வரி என்பது "ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் அரசிடமிருந்து எந்தவொரு நன்மையும் எதிர்பாராமல் அரசுக்கு கட்டாயம் செலுத்தக்கூடியதாகும்" என கூறியவர்? அனடோல் முராட்
14) "வரி என்பது பொது அதிகார அமைப்பினால் விதிக்கப்பட்டதை செலுத்த வேண்டிய ஒரு கட்டாய பங்களிப்பாகும். செலுத்தப்பட்ட தொகைக்கு சமமான பலனை எதிர்பாராமல் செலுத்த வேண்டியதாகும். இது தண்டத்தொகை அல்லது சட்டபூர்வமான குற்றத்திற்காக விதிக்கப்படுவதல்ல' என கூறியவர்? டால்டன்
15) சில வரி வருவாய் மூலங்கள்:
I) வருமான வரி
II) நிறுவன வரி
III) விற்பனை வரி
IV) கூடுதல் கட்ட
V) செஸ் (வரிக்கு வரி)
16) வரியல்லாத ஆதாரங்களிலிருந்து அரசினால் பெறப்படுகிற வருவாய்? வாரிசாராடவருவாய்
17) வழிசாரா வருவாயின் ஆதாரங்கள்:
I) கட்டணம்
II) தண்டத்தொகை
III) பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய்கள்
IV) மேம்பாட்டுக்கான சிறப்பு நீர்வைகள்
V) அன்பளிப்புகள், மானியங்கள் மற்றும் உதவிகள்
VI) மரண தீர்வை
18) ஆடம் ஸ்மித் கருத்துப்படி எத்தனை புனித விதிகள் உள்ளன? 4
I) செலுத்தும் திறன் பற்றிய விதி
II) நிச்சயத்தன்மை விதி
III) வசதி விதி
IV) சிக்கன விதி
19) தனி நபரின் வருமானம் மீது விதிக்கப்படும் வரி? நேர்முக வரி
I) இவ்வரியின் சுமையை பிறருக்கு மாற்ற இயலாது
II) நேர்முக வரி வளர்வீத தன்மை கொண்டது
20) நேர்முக வரியின் நன்மைகள்?
I) சமத்துவம் - வரி அடிப்படையை பொறுத்து வரிவீதம் மாறும்
II) நிச்சயத்தன்மை
III) நெகிழும் தன்மை
IV) சிக்கனம் -நேர்முக வரிகளை வசூலிப்பதற்கான செலவு குறைவு
21) நேர்முக வரியின் தீமைகள்?
I) பிரபலமின்மை
II) உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது
III) வசதி குறைவு
IV) வரி ஏய்த்தல்
22) பொருள்களையே அல்லது பணிகளையோ வாங்கும் நபர் மீது விதிக்கப்படுகிற வரி? மறைமுக வரி
23) சில மறைமுக வரிகள்.
I) உற்பத்தி வரி
II) விற்பனை வரி
III) சுங்கத்தீர்வை
IV) கேளிக்கை வரி
V) சேவை வரி
24) மறைமுக வரிகளின் நன்மைகள்?
I) பரந்து காணப்படுதல்
II) சமத்துவம்
III) சிக்கனத்தன்மை
IV) வசதியானது
25) புகையிலை மது போன்ற பொருள்கள் மீதான வரி எவ்வாறு அழைக்கப்படுகிறது? பாவ வரி
26) மறைமுக வரியின் தீமைகள்?
I) வசூலிக்கும் செலவு அதிகம்
II) நெகிழ்ச்சியற்ற தன்மை
III) தேய்வீதம்
IV) உறுதியின்மை
V) குடிமை உணர்வின்மை
27) இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட வரி? சரக்கு மற்றும் சேவை வரி
28) சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது? 2017, மார்ச் 29
29) GST நடைமுறைப்படுத்தப்பட்டது எப்போது? ஜூலை 1, 2017
30) GST எத்தனை வகைப்படும்? 3
I) CGST -மாநிலத்திற்குள்ளே நடைபெறும் விற்பணையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவது
II) SGST - மாநிலத்திற்கும் நடைபெறும் விற்பனையில் மாநில அரசால் வசூலிக்கப்படுவது
III) IGST -மாநில அரசுகளுக்கிடையேயான விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவது
31) VAT என்பது? அடித்தள விளைவில்லாத பல்முனை வரி
32) GST என்பது? அடித்தள விளைவில்லாத ஒருமுனை வரி
33)"கடன் என்பது அரசு கருவூலத்தால் கடன் வழங்கியவர்களுக்கு வட்டியும், அசலும் கொடுப்பதற்கான உத்தரவாதம் ஆகும். நடப்பு நிதி பற்றாக்குறையை சரி செய்வதற்காக திரட்டப்படும் நிதி ஆகும்" என கூறியவர்? பிலிப் E டெய்லர்
34) பொதுக்கடன் என்பது நிதிக் கருவிகள் வாயிலாக அரசனது தனியார் துறையிலுள்ள தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் பெறுவதாகும்" என கூறியவர்? கார்ல் எஸ். ஷோப்
35) கடன் மாற்றுதல் கடன் பளுவை குறைக்கிறது என்றவர்? டால்டன்
36) பொதுக்கடனின் வகைகள்?
I) உள்நாட்டு பொதுக்கடன்
II) வெளிநாட்டு பொதுக்கடன்
37) பொதுக்கடன் அதிகரிப்பதற்கான காரணங்கள்?
I) போர் மற்றும் போர் கால ஆயத்தம்
II) சமுதாய தேவைகள்
III) பொருளாதார முன்னேற்றம் மற்றும் நிதி பற்றாக்குறை
IV) வேலைவாய்ப்பு
V) பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல்
VI) மந்தத்தை தடுத்தல்
38) பொதுக்கடனை திரும்ப செலுத்தும் முறைகள்?
I) மூழ்கும் நிதி - கடனுக்கென அரசு தனியொரு நிதியினை ஏற்படுத்தும், இதனை மூழ்கும் நிதி என்பர்
II) கடன் மாற்றுதல் பழைய கடன் புதிய கடனாக மாற்றப்படுகிறது
III) வரவு செலவு திட்ட உபரி
VI) பகுதியாக செலுத்துதல் அரசு பொதுக்கடனை சம தவணைகளாக செலுத்துகிறது
V) கடன் மறுப்பு அரசு ஏற்கனவே செலுத்துவதாக உறுதியளித்த கடமையை மறுக்கும்
VI) வட்டி வீதத்தை குறைத்தல்
VII) மூலதன தீர்வை
39) பட்ஜெட் என்ற பதம் பொளஜெட் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது? பிரெஞ்சு (இதன் பொருள் சிறிய தோல் பை என்பதாகும்)
40) "பட்ஜெட் என்பது முதல் நிலையிலான ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது வருவாய் மற்றும் செலவு திட்டத்தை உள்ளடக்கிய ஆவணமாகும்" எனக்கூறியவர்? ரேனி ஸ்டோ
41) வரவு செலவு திட்டமானது குறிப்பிட்ட காலத்தின் நிதி ஏற்பாடுகளை வெளிப்படுத்துகிறது. இது வழக்கமான ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது" என கூறியவர்? பாஸ்டபிள் 
42) மத்திய வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறும் சரத்து? 112
43) மாநில வரவு செலவு திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறும் சரத்து 202
44) நொண்டி வாத்து வரவு செலவு திட்டம் என அழைக்கப்படுவது? நிதிக்கு வாக்கெடுப்பு வரவு செலவு திட்டம்
45) வரவு செலவு திட்டத்தின் வகைகள்?
I) வருவாய் வரவு செலவு திட்டம்
II) மூலதன பட்ஜெட்
III) துணை வரவு செலவு திட்டம்
IV) நிதிக்கு வாக்கெடுப்பு வரவு செலவு திட்டம்
V) பூஜ்ய வரவு செலவு திட்டம் செயல்திறன் வரவு செலவு திட்டம்
VI) சமநிலை மற்றும் சமனற்ற வரவு செலவு திட்டம்
46) இந்திய அரசு பூஜ்ஜிய வரவு செலவு திட்டத்தை எப்போது தாக்கல் செய்தது? 1987-88
47) வரவு செலவு திட்டத்தின் வெளியீட்டின் அடிப்படையில் வரவு செலவு திட்டம் அமைந்தால் அது ? செயல்திறன் வரவு செலவு திட்டம்
48) செயல்திறன் வரவு செலவு திட்டம் உலகில் முதன்முதலில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது? அமெரிக்கா
49) இந்தியாவில் செயல்திறன் வரவு செலவு திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சாதனை திட்டம்
50) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கிற வருவாயும் திட்டமிடப்பட்டுள்ள செலவும் சமமாக இருந்தால் அது? சமநிலை வரவு செலவு திட்டம் (அரசின் திட்டமிட்ட வருவாய் அரசின் எதிர்நோக்கும் செலவுகள்)
51) அரசு எதிர்பார்க்கிற வருவாயும் திட்டமிடப்பட்டுள்ள செலவும் சமமாக இல்லாது இருந்தால் அது? சமநிலையில்லா வரவு செலவு திட்டம்
52) சமநிலையில்லா வரவு செலவு திட்டம் வகைப்படும்? 2
I) உபரி வரவு செலவு திட்டம் = அரசு எதிர்பார்க்கிற வருவாய் > திட்டமிடப்பட்டுள்ள செலவு
II) பற்றாக்குறை வரவு செலவு திட்டம் =அரசு எதிர்பார்க்கிற வருவாய் < திட்டமிடப்பட்டுள்ள செலவு
53) வரவு செலவு திட்ட செயல்முறைகள் ______ ஐ உள்ளடக்கியது?
I) வரவு செலவு திட்டம் தயாரித்தல்
II) வரவு செலவு திட்டம் தாக்கல் செய்தல்
III) வரவு செலவு திட்டத்தை செயல்படுத்துதல்
54) இந்தியாவில் அரசு கணக்குகள் மூன்று முறைகளில் பராமரிக்கப்படுகிறது அவை?
I) தொகுப்பு நிதி
II) அவசர நிதி
III) பொது கணக்கு
55) வரவு செலவு திட்டத்தை கட்டுப்படுத்தும் பாராளுமன்ற குழுக்கள்?
I) பொது கணக்கு குழு
II) மதிப்பீட்டு குழு
56) இந்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் நான்கு வகையான பற்றாக்குறைகள் உள்ளன அவை?
I) வருவாய் பற்றாக்குறை
II) வரவு செலவு திட்ட பற்றாக்குறை
III) நிதி பற்றாக்குறை
IV) முதன்மை பற்றாக்குறை
57) அரசின் வருவாய் செலவினம், வருவாய் வரவை விட அதிகமாக இருந்தால் அது? வருவாய் பற்றாக்குறை
58) வருவாய் பற்றாக்குறை (RD) = மொத்த வருவாய் செலவினம்(RE) - மொத்த வருவாய் வரவுகள் (RR) (RE-RR > 0)
59) வருவாய் மற்றும் மூலதன கணக்குகளின் மொத்த வரவுக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளியே _____ ஆகும்? வரவு செலவு திட்ட பற்றாக்குறை
60) வரவு செலவு திட்ட பற்றாக்குறை = மொத்த செலவு - மொத்த வரவு
61) நிதிப்பற்றாக்குறை = வரவு செலவு திட்ட பற்றாக்குறை -  அரசின் அங்காடி கடன்களும் ஏனைய பொறுப்புகளும் 
62) நிதி பற்றாக்குறையிலிருந்து வட்டி செலுத்தலை கழித்த பின் உள்ள பற்றாக்குறை ஆகும்? முதன்மைப்பற்றாக்குறை
63) முதன்மை பற்றாக்குறை =  நிதிப்பற்றாக்குறை - வட்டி செலுத்தல்
64) மத்திய பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளது? 100
65) மாநில பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளது? 61
66) இணைப்பு பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளது? 52
67) மைய அரசின் வருவாய் மூலங்கள்?
• தொழில் நிறுவங்கள் மீதான வரி
• பணம், நாணயங்கள், அந்நிய செலவாணி
• சுங்கவரி, ஏற்றுமதி வரி
• புகையிலை மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஏணைய பொருள்களுக்கான கலால் வரி
• வேளாண்மை நிலங்கள் தவிர்த்த பண்ணை வரி
• அயல்நாட்டு கடன்கள்
• நீதிமன்றங்கள் விதிக்காக மத்திய பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள்
• இந்திய அரசால் அல்லது மாநிலங்களால் அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள்
• தபால் துறையின் சேமிப்பு வங்கி
• தொலை தொடர்பு துறையின் வருவாய்கள்
• மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்கள்
• மத்திய அரசின் பொதுக்கடன்
• இரயில்வே
• வில்லை கட்டணம்
• இந்திய ரிசர்வ் வங்கி
• வேளாண் வருவாய் தவிர்த்த வருமான வரி
• பங்குச்சந்தை பரிவர்த்தனைகளில் முத்திரை வரி தவிர்த்த வேறு வரி
• செய்தித்தாள் மீதான வரி
68) மாநில அரசின் வருவாய் மூலங்கள்?
• தல வரி
• வேளாண் நிலங்கள் மீதான வரி
• மது மற்றும் போதை பொருள்கள் மீதான கலால் வரி
• பண்ணை வரி
• நீதிமன்றங்கள் விதிக்காக மாநில பட்டியலில் உள்ள கட்டணங்கள்
• நில வருவாய்
• மத்திய பட்டியலில் இல்லாத ஆவணங்களுக்கான வில்லை கட்டணம்
• வேளாண் வருமான வரி
• நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி
• கனிம வளங்கள் எடுப்பதற்கான உரிம வரி
• மின்சார நுகர்வு மற்றும் விற்பனைக்கான வரி
• உள்ளூர் பகுதியில் நுகர்வு மற்றும் விற்பனை பொருள்களுக்கான நுழைவு வரி
• செய்தித்தாள் தவிர்த்த இதர பொருள்கள் மீதான விற்பனை வரி
• வாகன வரி
• விலங்குகள் மற்றும் படகுகள் மீதான வரி
• வியாபாரம் மற்றும் தொழிலாளர்கள் மீதான வரி
• சாலை மற்றும் தீர் வழி மார்க்கமாக செல்லும் பயணிகள் மற்றும் பொருள்கள் மீதான வரி
• பொழுதுபோக்குகள் மற்றும் சூதாட்டம் மீதான வரி
• சாலை சுங்க கட்டணம்
69) மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் பற்றி குறிப்பிடும் சரத்து? 269
70) மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்?
• விவசாய நிலம் தவிர்த்த இதர சொத்துக்கள் மீதான வரி
• வேளாண் நிலம் தவிர்த்த பண்ணை வரி
• இரயில்வே மற்றும் சரக்கு கட்டணங்கள்
• பங்கு சந்தை மற்றும் எதிர்கால சந்தை பரிவர்த்தனைகளில் முத்திரை வரிகளை தவிர்த்த வேறு வரிகள்
• செய்தித்தாள் மீதான வரி
• இரயில், கடல்வழி மற்றும் ஆகாய மார்க்கமாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான வரி
• மாநிலங்களுக்கிடையே பண்டங்கள் விற்பனை மற்றும் வாங்குதல் மீதான வரி (செய்தித்தாள் தவிர)
71) மத்திய அரசால் விதிக்கப்பட்டு, மாநில அரசு வசூலித்து பயன்படுத்தும் வளங்கள் பற்றி குறிப்பிடும் சரத்து? 268 (யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசே வசூலிக்கும்)
72) மத்திய அரசால் விதிக்கப்பட்டு, மாநில அரசு வசூலித்து பயன்படுத்தும் வளங்கள்?
I) வில்லை கட்டணம்
II) சுங்க வரி
III) மருத்துவ மற்றும் கழிவறை மீதான வரி
73) மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள் பற்றி குறிப்பிடும் சரத்து? 270 மற்றும் 272
74) மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள்?
I) வேளாண்மை வருவாய் தவிர்த்த இதர வருமான வரி வருவாய்
II) இந்திய அரசின் மத்திய பட்டியலில் உள்ள மத்திய கலால் வரி
75) கூட்டரசு நிதியின் கொள்கைகள்?
• சுதந்திரம்
• சமத்துவம்
• ஒரே மாதிரியான தன்மை
• போதுமான வளங்களை பெற்றிருத்தல்
• நிதி வசதி
• ஒருங்கிணைத்தல் மற்றும் ஒன்றுபடுதல்
• செயல்திறன்
• நிர்வாக சிக்கனம்
• பொறுப்பேற்பு
76) முதலாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1951
77) முதலாவது நிதிக்குழுவின் தலைவர்? K.C. நியோகி (முதலாவது நிதிக்குழு 1952 - 1957 வரை செயல்பட்டது)
78) இரண்டாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1956
79) இரண்டாவது நிதிக்குழுவின் தலைவர்? K. சந்தானம் (இரண்டாவது நிதிக்குழு 1957-62 வரை செயல்பட்டது)
80) மூன்றாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1960
81) மூன்றாவது நிதிக்குழுவின் தலைவர்? A.K.சந்தா (மூன்றாவது நிதிக்குழு 1962 - 66 வரை செயல்பட்டது)
82) நான்காவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1984
83) நான்காவது நிதிக்குழுவின் தலைவர்? P.V. ராஜ்மன்னார் (நான்காவது நிதிக்குழு 1966 - 69 வரை செயல்பட்டது)
84) ஐந்தாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1968
85) ஐந்தாவது நிதிக்குழுவின் தலைவர்? மகாவீர் தியாகி (ஐந்தாவது நிதிக்குழு 1969-74 வரை செயல்பட்டது)
86) ஆறாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1972
87) ஆறாவது நிதிக்குழுவின் தலைவர்? K. பிரம்மானந்த ரெட்டி (ஆறாவது நிதிக்குழு 1974-79 வரை செயல்பட்டது)
88) ஏழாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1977 
89) ஏழா ஏழாவது நிதிக்குழுவின் தலைவர்? J.M. சாலட் (ஏழாவது நிதிக்குழு 1979 - 84 வரை செயல்பட்டது)
90) எட்டாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1983
91) எட்டாவது நிதிக்குழுவின் தவைவர்? Y.B. சவான் (எட்டாவது நிதிக்குழு 1984-89 வரை செயல்பட்டது)
92) ஒன்பத ஒன்பதாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1987
93) ஒன்ப ன்பதாவது நிதிக்குழுவின் தலைவர்? N.K.P. சால்வே (ஒன்பதாவது நிதிக்குழு 1989-95 வரை செயல்பட்டது)
94) பத்தாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1992
95) பத்தாவது நிதிக்குழுவின் தலைவர்? K.C.பந் (பத்தாவது நிதிக்குழு 1995 - 2000 வரை செயல்பட்டது)
96) பதினொன்றாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1998
97) பதினொன்றாவது நிதிக்குழுவின் தலைவர்? A.M. குஸ்ரோ (பதினொன்றாவது நிதிக்குழு 2000 - 05 வரை செயல்பட்டது)
98) பன்னிரெண்டாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 2002
99) பன்னிரெண்டாவது நிதிக்குழுவின் தலைவர்? C. ரங்கராஜன் (பன்னிரெண்டாவது நிதிக்குழு 2005 - 2010 வரை செயல்பட்டது)
100) பதிமூன்றாவது நிதிக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு? 2007
101) பதிமூன்றாவது நிதிக்குழுவின் தலைவர்? Dr. வஜய் L கேல்கார் (பதிமூன்றாவது நிதிக்குழு 2010 -15 வேரை செயல்பட்டது)
102) பதினான்காவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 2013
103) பதினான்காவது நிதிக்குழுவின் தலைவர்? Dr. Y.V. ரெட்டி (பதினான்காவது நிதிக்குழு 2015-20 வரை செயல்பட்டது)
104) பதினைந்தாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 2017
105) பதினைந்தாவது நிதிக்குழுவின் தலைவர்? N.K. சிங
106) பதினைந்தாவது நிதிக்குழு செயல்படும் காலம்? 2020-2025
107) இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து படி நிதிக்குழு சட்டபூர்வ அமைப்பாகும்? 280
108) நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படுகிறது? 5
I) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்படுகிறது.
II) இது ஒரு தற்காலிகமான அமைப்பாகும்
109) 15 வது நிதிக்குழு எப்போது அமைக்கப்பட்டது? நவம்பர் 2017
110) நிதிக்குழுவின் பணிகள் பற்றி கூறும் சரத்து 280 (3)
111) கிராம ஊராட்சியின் வருவாய் ஆதாரங்கள்?
I) பொது சொத்து வரி
II) நிலம் மீதான வரி
III) தொழில் வரி
IV) விலங்குகள் மற்றும் வாகனங்கள் மீதான வரி
112) மாவட்ட வாரியங்களின் வருவாய் ஆதாரங்கள்?
I) மாநில அரசிடமிருந்து பெறும் மானிய உதவி
II) நில தீர்வைகள்
III) சுங்க கட்டணம்
IV) திட்டங்களுக்கான மானியங்கள்
V) பொருட்காட்சிகளிலிருந்து பெறப்படுகின்ற வருமானம்
113) நகராட்சி அமைப்புகளின் வருவாய் ஆதாரங்
I) சொத்து மீதான வரிகள்
II) நுழைவு வரி
III) தொழில் வரி
IV) திரையரங்கு வரி
V) மானியங்கள்
114) மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள்?
I) சொத்து மீதான வரி
II) வாணிபம் மற்றும் வேலைவாய்ப்பு மீதான வரி
III) திரையரங்கு மற்றும் காட்சி வரி
IV) விளம்பரங்கள் மீதான வரி
V) முனைம வரி மற்றும் நுழைவு வரி
115) "நிதிக்கொள்கை என்பது தேசிய வருமானத்தின் மீது விரும்பத்தகுந்த விளைவை ஏற்படுத்தவும் மற்றும் விரும்பத்தகாத விளைவுகளை தவிர்க்கவும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் பற்றிய கொள்கையாகும்" இது யார் கூறியது? ஆர்தர் ஸ்மிதீஸ்
116) நிதிக்கொள்கை என்பது நாட்டின் பொருளாதார நோக்கங்களை அடைவதற்கு பயன்படுத்தப்படும் பொது நிதி அல்லது செலவு. வரி. பெறுதல்கள் மற்றும் நிதி நிர்வாகம் சார்ந்த கொள்கையாகும்" என கூறியவர்? பியுனெர்
117) நிதிகருவிகள் என்பவை!
I) வரி விதித்தல்
II) பொதுச்செலவு
III) பொதுக்கடன்
118) நிதிக்கொள்கையின் நோக்கங்கள்?
I) முழு வேலைவாய்ப்பு
II) விலை நிலைத்தன்மை
III) பொருளாதார வளர்ச்சி
IV) சமமான பகிர்வு
V) நாணய மாற்று வித சமநிலை
VI) மூலதன உருவாக்கம்
VII) சமவட்டார வளர்ச்சி


கருத்துரையிடுக

0 கருத்துகள்