1. நாடு பிடிக்கும் கிழக்கிந்திய கம்பெனியின் நோக்கத்திற்கு முதல் எதிர்வினை – யாரிடம் இடமிருந்து வெளிப்பட்டது - பூலித்தேவர்.
2. ஒரு பகுதி ஒரு இராணுவ முகாம் (அ) ஒரு சிற்றரசையோ குறிக்கும் சொல் - பாளையம்.
3. பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் எவ்வாறு குறிப்பிட்டனர் – போலிகார் (Poligar)
4. இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்குக் கப்பம் கட்டும் குறுநில அரசைக் குறிக்கின்ற தமிழ்ச்சொல் - பாளையம் .
5. வாரங்கல்லை சார்ந்த எந்த அரசர் ஆட்சிக்காலத்தில் காகதீய அரசில் பாளையக்காரர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது – பிரதாபருத்ரன்.
6. 1529 இல் மதுரை நாயக்கராக பதவியேற்றவர்- விஸ்வநாத நாயக்கர்.
7. 1529 - மதுரை நாயக்கராக பதவியேற்ற விஸ்வநாத நாயக்கர் அவர்தம் அமைச்சரான அரியநாதரின் உதவியோடு-தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார்.
8. பாளையக்காரர் காவல் காக்கும் கடமை - படிக்காவல் , அரசுக்காவல்.
9. பரம்பரை பரம்பரையாக எத்தனை பாளையக்காரர்கள் இருந்தனர் - 72.
10. கிழக்கில் இருந்த பாளையக்காரர்கள்:
1. சாத்தூர்
2. நாகலாபுரம்
3. எட்டயபுரம்
4. பாஞ்சாலங்குறிச்சி
11. மேற்கில் இருந்த பாளையக்காரர்கள்:
1. ஊத்துமலை
2. தலைவன்கோட்டை
3. நடுவக்குறிச்சி
4. சிங்கம்பட்டி
5. சேத்தூர்
12. பூலித்தேவரின் புரட்சி - (1755 - 1767)
13. ஆற்காட்டு நவாபின் சகோதரர் – மாபூஸ்கான்.
14. கர்னல் ஹெரான் தலைமையிலான கம்பெனியின் படை ஒன்றை அழைத்துக் கொண்டு மாபூஸ்கான் திருநெல்வேலிக்குச் சென்ற ஆண்டு- 1755 மார்ச்.
15. மதுரை ,திருநெல்வேலிப் பகுதிகளில் நவாப் சந்தா சாகிப்பின் முகவர்களாக செயல்பட்டு வந்த மூன்று பத்தாணிய அதிகாரிகள்-மியானா , முடிமையா, நபிகான் கட்டாக்.
16. பூலித்தேவரை ஆதரவளிக்காத பாளையக்காரர்கள் :
1. சிவகிரி பாளையக்காரர்கள்.
2. எட்டயபுரம் பாளையக்காரர்கள்.
3. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள்.
17. ஆங்கிலேயருக்கு ஆதாவளித்த மன்னர்கள்:
1. புதுக்கோட்டை
2. இராமநாதபுரம்
18. களக்காட்டில் நடைபெற்றப் போரில் யாருடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன- மாபூஸ்கான்.
19. கான்சாகிப் என்றும் தமது மதமாற்றத்திற்கு முன்பு மருதநாயகம் என்றும் அழைக்கப்பட்டவர் - யூசுப்கான்.
20. நெற்கட்டும்செவல், வாசுதேவநல்லூர் , பனையூர் பூலித்தேவரின் மூன்று கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஆண்டு-1761 மே 16.
21. பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய யூசுப்கான் மீது நம்பிக்கை துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டு- 1764.
22. பூலித்தேவர் நெற்கட்டும்செவலை மீண்டும் கைப்பற்றிய ஆண்டு-1764.
23. கேப்டன் கேம்ப்பெல் என்பவரால் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு -1767.
24. பூலித்தேவரின் படைப் பிரிவுகளில் ஒன்றனுக்கு தலைமை ஏற்றவர் – ஒண்டிவீரன்.
25. இராமநாதபுரத்தின் அரசர் செல்லமுத்து சேதுபதிக்கு ஒரே பெண் வாரிசாக பிறந்தவர்- வேலுநாச்சியார். 1730-1799 .
26. வேலுநாச்சியார் வல்லமை பெற்றிருந்த மொழி -ஆங்கிலம், பிரெஞ்சு, உருது. குதிரையேற்றத்திலும், வில்வித்தையிலும் திறமையானவராக விளங்கினார்
27. சிவகங்கை மன்னர் - முத்துவடுகநாதர்.
28. 16 - வது வயதில் வேலுநாச்சியார் - முத்துவடுகநாதரை மணந்தார்.
29. வேலு நாச்சியாரின் கணவர்- முத்துவடுகநாதர்.
30. வேலுநாச்சியார் மகள்- வெள்ளச்சி நாச்சியார்.
31. ஆற்காட்டு நவாப், லப்டினன்ட் கர்னல் பான் ஜோர் ,தலைமையிலான கம்பெனி படைகளும் இணைந்து காளையார்கோவில் அரண்மனையைத் தாக்கிய ஆண்டு - 1772. போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார்.
32. வேலுநாச்சியார் கோபால நாயக்கரின் பாதுகாப்பில் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்- 8.
33. வேலுநாச்சியாரின் சார்பில் ஹைதர் அலிக்கு, தளவாய் எழுதிய கடிதத்தில் ஆங்கிலேயரைத் தோற்கடிக்க 5000 கலாட்படைகளும் 5000 குதிரைப் படைகளும் அனுப்பும்படி கோரியவர் -தாண்டவராயனார்.
34. தளவாய் - இராணுவத் தலைவர்.
35. ஹைதர் அலியின் திண்டுக்கல் கோட்டை படைத்தலைவர்-சையது.
36. கோபால நாயக்கரை தலைவராகக் கொண்ட திண்டுக்கல் கூட்டமைப்பில் இருந்த நாயக்கர்கள் :
1. மணப்பாறையின் - லட்சுமி நாயக்கர்.
2. தேவதானப்பட்டியின் - பூஜை நாயக்கர்.
37. கோயம்புத்தூரை மையமாக கொண்டு பிரிட்டிஷாரை எதிர்த்தவர் - கோபால நாயக்கர்.
38. வேலுநாச்சியார் யாருடைய இராணுவ உதவியோடு சிவகாங்கையை மீண்டும் கைப்பற்றினார்- கோபால நாயக்கர், ஹைதர் அலி.
39. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்க அதிகாரத்தை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர் - வேலுநாச்சியார்.
40. வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழி- குயிலி.
41. உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவைத் தலைமையேற்று வழிநடத்தியவர் - குயிலி.
42. உடையாள் - என்பவர் குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில் புரிந்த பெண்ணின் பெயர்.
43. 1780 -தனக்குத்தானே நெருப்பு வைத்துக்கொண்டு சென்று பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கிலிருந்த அனைத்துத் தளவாடங்களையும் அழித்தவர் - குயிலி.
44. வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம் - 1790-1799.
45. வீரபாண்டிய கட்டபொம்மன் தந்தை - ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.
46. ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் இறப்பிற்குப் பின் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக தனது 30 -வயதில் பொறுப்பேற்றவர்- வீரபாண்டிய கட்டபொம்மன்.
47. ஆங்கிலேயருடன் நவாப் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின்படி பாஞ்சாலங்குறிச்சியின் வரி வசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனி பெற்ற ஆண்டு - 1781.
48. வசூலிக்கும் வரியில் எத்தனை பங்கு நவாப்பிற்கு ஒதுக்கப்பட்டது – 1/6 பங்கு.
49. 1798 கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவை எத்தனை பகோடாக்களாக இருந்தது- 3310 பகோடா.
50. 1798 ஆகஸ்ட்- 18 ல் இராமநாதபுரத்தில் வந்து தன்னைச் சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணை பிறப்பித்தவர் – ஜாக்சன்
51. கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனைச் சந்தித்த ஆண்டு-1798-செப்டம்பர் 19.
52. ஜாக்சனின் முன்பு கட்டபொம்மன் எத்தனை மணி நேரம் நிற்க வைக்கப்பட்டார்-3 மணி நேரம்.
53. கலெக்டர் ஜாக்ஸனைப் பணி இடைநீக்கம் செய்த ஆளுநர் - எட்வர்ட் கிளைவ்.
54. கட்டபொம்மன் ஆளுநர் குழுவின் முன்பாக ஆஜராகி ராமநாதபுரத்தில் நிகழ்ந்தவற்றை விளக்கம் அளித்த ஆண்டு - 1798 டிசம்பர் 15.
55. ஜாக்சன் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவரது இடத்தில் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார் - எஸ்.ஆர். லூஷிங்டன்.
57. 1799 மே - மதராஸில் வெல்லஸ்லி பிரபு இருந்த திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை - திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டாவர் -
58. கட்டபொம்மனைச் சரணடையக் கோரிய நிபந்தனையொன்று வழங்கப்பட்டது- 1799 செப்டம்பர் 1.
59. பானெர்மென் யாரை தூதனுப்பி கட்டபொம்மனைச் சரணடையுமாறு கேட்டுக்கொண்டார்- இராமலிங்கர்.
60. 1799 - செப்டம்பர் 5 - பாஞ்சாலங்குறிச்சியில் முழுப் படைகளையும் கொண்டுவந்து நிறுத்தினார்- பானெர்மென்.
61. கட்டபொம்மன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பாளையக்காரரைத் தங்களோடு இணைக்க முயன்ற பகுதி - சிவகிரி பாளையக்காரர்.
62. எங்கு நடைபெற்ற மோதலில் சிவசுப்ரமணியனார் கைது செய்யப்பட்டார்- கள்ளர்பட்டி.
63. சிவசுப்ரமணியனார் நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்ட நாள் - செப்டம்பர் 13.
64. கட்டபொம்மனக்கு துரோகமிழைக்கப்பட்ட மன்னர்கள்:
1. எட்டயபுரம்
2. புதுக்கோட்டை
65. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் - கயத்தாறு.
66. முத்துவடுகநாதரின் திறமையான படைத் தளபதிகள்- மருது சகோதரர்கள்.
1. பெரிய மருது என்ற வெள்ள மருது - 1748-1801 .
2. சின்ன மருது - 1753-1801.
67. எந்த போரில் முத்துவடுகநாதர் இறந்தபின் வேலுநாச்சியாருக்கு அரசுரிமையை மீட்டுக்கொடுக்க மருது சகோதரர்கள் அரும்பாடுபட்டனர் - காளையார்கோவில்.
68. திண்டுக்கல்லின் கோபால நாயக்கர், ஆனைமலையின் யதுல் நாயக்கர் ,போன்ற அருகாமையிலிருந்த பாளையங்களை உள்ளடக்கிய தென்னிந்தியக் கூட்டமைப்பை ஏற்படுத்தினார்- சிவகங்கையின்-மருதுபாண்டியர்.
69. மருது சகோதரர்களின் கலகம் -1800-1801.
70. மருது சகோதரர்களின் கலகம் – இரண்டாவது பாளையக்காரர் போர்.
1. சிவகங்கை - மருது சகோதரர்கள்.2. திண்டுக்கல் - கோபால நாயக்கர்.3. மலபார் - கேரள வர்மா.4. மைசூர் - கிருஷ்ணப்பா, துண்டாஜி.
71. கட்டபொம்மனின் சகோதரர்கள் - ஊமைத்துரை, செவத்தையா.
72. 1801 பிப்ரவரி ஊமைத்துரையும் ,செவத்தையாவும் தப்பி கமுதியில் பதுங்கியிருப்பதை அறிந்த சின்ன மருது அவர்களைத் தமது தலைமையிடமான - சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார்-
73. 1801 ஜூன் - பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து மருது சகோதரர்கள் நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய வெளியிட்ட பிரகடனம் - திருச்சிராப்பள்ளி பேரறிக்கை.
74. திருச்சிராப்பள்ளி பேரறிக்கை ஒட்டப்பட்ட இடங்கள்:
1. திருச்சியில் உள்ள நவாப்பின் கோட்டை.
2. ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச்சுவர்.
75. சின்ன மருது எத்தனை ஆட்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக திரட்டினார்-20,000.
76. ஆங்கிலேயர்கள் திருச்சியிலும், தஞ்சாவூரிலும் இருந்த கலகக்காரர்களைத் தாக்கிய ஆண்டு- மே 1801.
77. இராமநாதபுரத்தின் அருகே அமைந்த திருப்பத்தூர் கோட்டையில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட ஆண்டு- 1801-அக்டோபர் – 24.
78. ஊமைத்துரையும், செவத்தையாவும் பிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்டனர்-1801 - நவம்பர் 16.
79. கலகக்காரர்களில் எத்தனை பேர் பிடிக்கப்பட்டு மலேயாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்- 73.
80. மருது சகோதரர்களின் கலகம்- தென்னிந்தியப் புரட்சி.
81. 1801 ஜூலை-31 - ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கை:
1. பிரிட்டிஷார் நேரடியாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதோடு பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்தது.
2. அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு ,படைகளும் கலைக்கப்பட்டன.
82. 1756 - இல் - தீர்த்தகிரி என்ற பெயரோடு பழையகோட்டை மன்றாடியார் பட்டம் பெற்ற மதிப்புமிகு குடும்பத்தில் பிறந்தார்- தீரன்.
83. கொங்குப்பகுதியில் திப்புவின் திவான் என்பவரால் வரி வசூலிக்கப்பட்டது - முகம்மது அலி.
84. தீரன் சின்னமலை பிறந்த ஆண்டு- 1756 -1805
85. சிலம்பு, வில்வித்தை, குதிரையேற்றம் மட்டுமல்லாமல் நவீன போர் முறைகளையும் கற்றுத்தேர்ந்தவர் - தீரன்.
86. திப்புவின் இறப்பிற்குப் பிறகு ஒரு கோட்டையை எழுப்பிய தீரன் சின்னமலை அவ்விடத்தைவிட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார் அவ்விடம் - ஓடாநிலை.
87. வேலூர் புரட்சி -1806.
88. 1799-இல் நடந்த ஆங்கிலேய-மைசூர் போரின் முடிவில் எந்த இணைக்கப்பட்டது- கோயம்புத்தூர்.
89. கட்டபொம்மன் எதிர்ப்பு எந்த ஆண்டு -1799.
90. மருது சகோதரர்களின் எதிர்ப்பு எந்த ஆண்டு- 1801.
91. திப்புவின் மகன்களும் அவர்தம் குடும்பத்தினரும் எந்த கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்- வேலூர்.
92. புதிய இராணுவ விதிமுறையை வெளியிட்டவர்- சர் ஜான் கிரடாக்.
93. ஜூலை 10 அன்று அதிகொலையிலேயே- படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர்- முதல் , 23 படைப்பிரிவு.
94. கோட்டைக் காவற்படையின் முதல் பலி - கர்னல் பேன்கோர்ட்.
95. 23 - படைப்பிரிவைச் சேர்ந்த - கர்னல் மீக்காரஸ் கொல்லப்பட்டார்.
96. பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாவர்- லெப்டினென்ட் எல்லி லெப்டினென்ட் பாப்ஹா.
97. ஆற்காட்டின் குதிரைப்படைத் தளபதியாக இருந்தவர்- கர்னல் ஜில்லஸ்பி.
98. கர்னல் ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தவர்- மேஜர் கூட்ஸ்.
99. கேப்டன் யங்கின்- தலைமையிலான குதிரைப் படைப்பிரிவுடன் காலை 9 மணியளவில் கர்னல் ஜில்லஸ்பி கோட்டையை வந்தடைந்தார்.
100. திப்புவின் மூத்த மகன் - பதே ஹைதர்.
101. கோட்டையில் மட்டும் எத்தனை வீரர்கள் பிணமாகக் கிடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது- 800.
102. திருச்சிராப்பள்ளியிலும், வேலூரிலும் எத்தனை வீரர்கள் விசாரணையை எதிர்நோக்கி சிறையிலடைக்கப்பட்டார்கள்- 600.
103. வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்- கல்கத்தா.
104. கர்னல் ஜில்லஸ்பிக்கு எத்தனை பகோடாக்கள் வெகுமதியாக அளிக்கப்பட்டது- 7000.
105. யார் யார் புரட்சி நடக்கக் காரணமானவர்கள் என்று கருதப்பட்டு அவர்களைப் பணிநீக்கம் செய்ததோடு, அவர்கள் இங்கிலாந்துக்கு திருப்பியழைத்துக் கொள்ளப்பட்டார்கள்- தலைமைத் தளபதி ஜான் கிரடாக், உதவித் தளபதி அக்னியூ, ஆளுநர் வில்லியம் பெண்டிங்.
106. 1806 - ஆம் ஆண்டு புரட்சியானது வேலூர் கோட்டையுடன் முடியாமல் பெல்லாரி, வாலாஜாபாத் ஹைதராபாத், பெங்களூரு, நந்திதுர்க்கம்,சங்கரிதுர்க்கம் ஆகிய இடங்களிலும் அது எதிரொலித்தது.
107. கர்நாடகப் போர்களில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கடனாகப் பணத்தை வாங்கியவர்- ஆற்காட்டு நவாப்.
108. சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்- பூலித்தேவர்.
109. சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்- நாகலாபுரம்.
110. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்- மருது சகோதரர்கள்.
111. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது -1806 ஜூலை - 10.
112. வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்- சர் ஜான் கிரடாக்.
minnal vega kanitham