Type Here to Get Search Results !

Simple Interest 2025 Group 4

0
Class - 1

1) பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும். [7th New Book Back]
(A) ₹ 200
(B) ₹ 10
(C) ₹ 100✔
(D) ₹ 1,000

2) ₹5000 க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளி்ல கிடைக்கும் தனிவட்டி யாது? (09-11-2024 TNPSC), (2019 Group 8)
(A) ₹25
(B) ₹2500✔
(C) ₹250
(D) ₹500

3) அசோக் ரூ.10,000 ஆண்டுக்கு 8% என்ற வட்டி வீதத்தில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார். 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியை காண்க. (2019 TNPSC)
(A) 2,000
(B) 40,000
(C) 4,000✔
(D) 5,000

4) ₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (7th New Book), (18-11-2024 TNPSC)
(A) ₹ 5,000
(B) ₹ 6,000✔
(C) ₹ 7,000
(D) ₹ 8,000

5) ஸ்டீபன் என்பவர் தனது வங்கியின் சேமிப்புக் கணக்கில்  ₹ 10,000 ஐ 2% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்தார் எனில், 4 ஆண்டுகளின் முடிவில் அவர் பெறும் தனிவட்டி எவ்வளவு? (7th New Book)
(A) ₹ 500
(B) ₹ 600
(C) ₹ 700
(D) ₹ 800✓

6) ₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க? (7th New Book), (05-02-2024 TNPSC)
(A) ₹ 6,000
(B) ₹ 6,300✔
(C) ₹ 7,000
(D) ₹ 7,300

7) அரவிந்த் என்பவர் ₹ 8,000 ஐ, ஆகாஷ் என்பவரிடமிருந்து ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதம் கடனாகப் பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த் செலுத்த வேண்டிய தனிவட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க? (7th New Book)
(A) ₹ 9,000
(B) ₹ 9,100
(C) ₹ 9,120✔
(D) ₹ 9,150

8) அர்ஜுன் ஒரு வங்கியிலிருந்து ஆண்டுக்கு 5% வட்டி வீதம் ₹ 5000 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகளின் முடிவில் அவர் செலுத்த வேண்டிய வட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க? (7th New Book)
(A) ₹ 5,500
(B) ₹ 5,720
(C) ₹ 5,750✔
(D) ₹ 5,850

9) சாந்தி ஒரு வங்கியிலிருந்து, ஆண்டுக்கு 12% வட்டி வீதம் ₹6,000 ஐ 7 ஆண்டுகளுக்குக் கடனாகப் பெற்றார் எனில், 7 ஆண்டுகள் கழித்து அவர் எவ்வளவு பணத்தைச் செலுத்தினால் கடன் தீரும்? (7th New Book)
(A) ₹ 11,000
(B) ₹ 11,020
(C) ₹ 11,040✔
(D) ₹ 11,140

10) ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு ₹ 4,500 அசலுக்கு மொத்தத் தொகை ₹ 5,000 கிடைத்தால், அதனுடைய தனிவட்டி (7th New Book Back)
(A) ₹ 500✔
(B) ₹ 200
(C) 20%
(D) 15%


Class - 2

11) ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி விகிதத்தில் மூன்று மடங்கு ஆவதற்கு பிடிக்கும் காலம் (2018 Group 4) (2017, 2018 Group 2), (10-03-2023 TNPSC)
(A) 20 ஆண்டு
(B) 22 ஆண்டு
(C) 25 ஆண்டு✔
(D) 30 ஆண்டு

12) ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டிவீதம் என்னவாக இருக்க வேண்டும் (2019 Group 4)
(A) 10%✔
(B) 20%
(C) 50%
(D) 25%

13) ஒரு குறிப்பிட்ட தொகை ஆண்டிற்கு எந்த வட்டி விகிதத்தில் இருந்தால், அந்த தொகை 16 வருடங்களில் இரு மடங்காகும்? (12-08-2024 TNPSC)
(A) 7 3/4 %
(B) 6 3/4 %
(C) 8 2/3 %
(D) 6 1/4 %✔

14) ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில், வட்டி வீதத்தைக் காண்க. (அசல் P = ₹ 100 என வைக்க வேண்டும்). [7th New Book], (29-01-2023 TNPSC), (05-12-2023 TNPSC), (14-05-2023 TNPSC)
(A) 20%
(B) 25%✔
(C) 30%
(D) 35%

15) ஒரு அசலானது 2 ஆண்டுகளில் 9/4 மடங்கு ஆகும் எனில் அதன் வட்டி விகிதம் எவ்வளவு? (2016 Group 4)
(A) 69 1/2%
(B) 67 1/2%
(C) 62 1/2%✔
(D) 61 1/2%

16) ஒரு தொகை ஆண்டிற்கு 8% தனிவட்டி வீதத்தில் அத்தொகையை போல இரு மடங்காகிறது எனில் எடுத்துக் கொள்ளும் காலம் (2017 Group 1)
(A) 13 1/3 ஆண்டுகள்
(B) 12 1/2 ஆண்டுகள்✔
(C) 10 1/2 ஆண்டுகள்
(D) 9 ஆண்டுகள்

17) ஆண்டொன்றுக்கு 20 தனிவட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் தொகை இருமடங்கு ஆகும்? (26-10-2024 TNPSC), (2014 Group 1)
(A) 5 வருடங்கள் 3 மாதங்கள்
(B) 5 வருடங்கள்✔
(C) 5 வருடங்கள் 6 மாதங்கள்
(D) 5 வருடங்கள் 9 மாதங்கள்

18) தனிவட்டி மூலம் அசல் ₹2000, 8% வட்டி வீதத்தில் இரட்டிப்பாக எவ்வளவு மாதம் ஆகும்? (2024 Group 2)
(A) 144
(B) 150✔
(C) 120
(D) 140

19) தனிவட்டி வீதத்தில் ஒரு அசலானது 15 ஆண்டுகளில் மும்மடங்காகும் எனில் எத்தனை ஆண்டுகளில் 5 மடங்காக கிடைக்கும்? (12-07-2024 TNPSC)
(A) 25 ஆண்டுகள்
(B) 30 ஆண்டுகள்✔
(C) 36 ஆண்டுகள்
(C) 40 ஆண்டுகள்

20) குறிப்பிட்ட ஆண்டுகளில் ஓரு அசலானது ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 4 மடங்காகிறது. அதே அசலானது, அதே ஆண்டுகளில் 8 மடங்காக வேண்டுமெனில் தனிவட்டி வீதம் என்ன? (15-03-2023 TNPSC)
(A) 11 3/5%
(B) 11 2/3%✔
(C) 12 3/5%
(D) 12 2/3%

21) ஒரு அசல் தனிவட்டியில் 7 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் நான்கு மடங்காகும்?
(A) 11 ஆண்டுகள்
(B) 21 ஆண்டுகள்✓
(C) 31 ஆண்டுகள்
(D) 41 ஆண்டுகள்

22) ஒரு அசல் தனிவட்டியில் 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் எட்டு மடங்காகும்?
(A) 20 ஆண்டுகள்
(B) 24 ஆண்டுகள்
(C) 28 ஆண்டுகள்✓
(D) 32 ஆண்டுகள்

23) ஒரு அசல் குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் நான்கு மடங்காக மாறுகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் ஏழு மடங்காக மாறும்?
(A) 6 ஆண்டுகள்✔
(B) 12 ஆண்டுகள்
(C) 8 ஆண்டுகள்
(D) 24 ஆண்டுகள்

24) தனிவட்டியில் அசலானது n ஆண்டுகளில் இரட்டிப்பாகும் எனில், அது எத்தணை ஆண்டுகளில் m மடங்கு ஆகும்? (2023 GROUP 3A)
(A) m
(B) mn
(C) (m-1) x n✔
(D) mn-1

25) ஒரு குறிப்பிட்ட தொகையானது தனிவட்டியானது அசலில் 9/16 மடங்குக்கு சமம். வட்டி விகிதமும் வருடமும் எண் மதிப்பில் சமமாக இருக்கும் போது வட்டி விகிதத்தையும் வருடத்தையும் காண்க? [2019 Group 3A]
(A) 8 1/2%, 8 1/2
(B) 7%, 7
(C) 7 1/2℅, 7 1/2✔
(D) 8℅, 8

26) ஒரு தொகையின் தனிவட்டியானது அசலின் 4/9 ஆகவும் மற்றும் அதன் காலமும் வட்டி வீதமும் சமம் எனில் ஆண்டு வட்டி வீதம் யாது? (18-08-2023 TNPSC)
(A) 6 1/3%
(B) 6 2/3%✔
(C) 5 1/3%
(D) 5 2/3%

28) ஒரு குறிப்பிட்ட அசலுக்ககான தனிவட்டியின் மதிப்பு அசலை போல 16/25 மடங்கு. மேலும் வட்டி வீதமும், காலமும் சமம் எனில், வட்டி விகிதத்தின் மதிப்பு?
(A) 5%
(B) 6%
(C) 8%.
(D) 10%

29) ஒரு குறிப்பிட்ட அசலுக்கு கிடைக்கும் தனிவட்டியானது அசலில் 1/4 பங்கு ஆகும். மேலும் ஆண்டுகளின் எண்ணிக்கையும் வட்டிவீதமும் சமம் எனில் வட்டிவீதம் என்ன?
(A) 6%
(B) 4%
(C) 5%.
(D) 10%


Class - 3

30) ஒரு சாதாரண ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் ரூ.900-க்கு 73 நாட்களுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க. (21-12-2022 TNPSC)
(A) ₹14.40✔
(B) ₹15.50
(C) ₹15.40
(D) ₹14.50

31) அசல் ₹3000 ஆனது 6 1/4% வருட வட்டி வீதத்திற்கு 4 பிப்ரவரி 2005 முதல் 18 ஏப்ரல் 2005 வரை உள்ள காலத்தில் கிடைக்கும் தனிவட்டி காண்க. (21-01-2024 TNPSC)
(A) ₹36.50
(B) ₹37.50✔
(C) ₹38.50
(D) ₹39.50

32) ராகுல் ராகுல் 7/6/2020 அன்று ரூ. 4000 கடனாகப் பெற்று அதை 19/8/2020 அன்று திரும்ப செலுத்தினார். 5℅ வட்டி கணக்கிடப்பட்ட அவர் செலுத்திய தொகை எவ்வளவு
(A) 4040✔
(B) 4080
(C) 4500
(D) 4150

33) ரூ.12,000க்கு, 9% ஆண்டு வட்டிவீதத்தில், 21 மே 1999இல் இருந்து 2 ஆகஸ்ட் 1999 வரை கிடைக்கும் தனிவட்டி
(A) ரூ.230
(B) ரூ.172
(C) ரூ.194
(D) ரூ.216✓

34) 14% தனிவட்டி விகிதத்தில் ரூ. 1400 ஆனது 5.2.1994 முதல் 19.4.1994 வரை முதலீடு செய்யப்பட்டால் கிடைக்கும் மொத்த தொகை (2014 Group 1)
(A) 1539
(B) 1437
(C) 1439.20✔
(D) 1469.20

35) ரூ. 2500, 13% ஆண்டு வட்டி வீதத்தில் வைப்பு நிதியாக செலுத்தினால், 146 நாட்களில் பெறப்படும் தொகையை காண்க
(A) 2630✔
(B) 2530
(C) 2500
(D) 130

36) 219 நாட்கள் = ________ ஆண்டு. (7th New Book), (13-02-2023 TNPSC)
(A) 73/4
(B) 73/122
(C) 5/3
(D) 3/5✔

37) ₹ 6,750 க்கு 219 நாட்களுக்கு 10% வட்டி வீதம் தனிவட்டி காண்க. (10-03-2023 TNPSC), (2014 Group 4) (2018 TNPSC)
(A) ₹ 415
(B) ₹ 395
(C) ₹ 425
(D) ₹ 405✔

38) ரூ. 1500 க்கு 292 நாட்களுக்கு 10% வட்டிவீதம் தனிவட்டி காண்க.
(A) 220
(B) 1620
(C) 125
(D) 120✔

39) ₹10950க்கு 10% வட்டி வீதத்தில் 42 நாட்களுக்கான தனிவட்டி? (05-02-2024 TNPSC)
(A) ₹116
(B) ₹74
(C) ₹126✔
(D) ₹1108



Class - 4

40) ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ.1000ஆனது, ரூ.1150 ஆக மாறுகிறது. வட்டிவீதம் 3% கூடுதலாக இருப்பின், அதன் தற்போதைய மொத்த மதிப்பு. (TNPSC-GII- 2014)
(A) ₹.1400
(B) ₹.1300
(C) ₹.1140
(D) ₹.1240✓

41) ரூ.800 ஆனது, தனிவட்டி வீதத்தில், 3 ஆண்டுகளில் ரூ.920 ஆக மாறுகிறது. அதன் வட்டிவீதம் 3% அதிகரிக்கப்பட் டால், கிடைக்கும் மொத்தத்தொகை (2013 Group 2)
(A) ₹ 1092
(B) ₹ 992✓
(C) ₹ 1882
(D) ₹ 1182

42) குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ரூ.800 ஆனது, மூன்றாண்டு களில் ரூ.956ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிகரித்தால், மூன்றாண்டுகளுக்குப்பின், அவருக்குக் கிடைக்கும் தொகை (TNPSC - GIV - 2013)
(A) ₹ 1020.80
(B) ₹ 1025
(C) ₹ 1052✓
(D) ₹ 1080.20

43) விக்னேஷ் 2 ஆண்டுகளுக்கு 4 % வட்டி வீதத்தில் ₹10000 கடனாக பெற்றார். இந்தப் பணத்தை சஞ்சையிடம் 2 ஆண்டுகளுக்கு 6 சதவீத வட்டி வீதத்தில் கடனாகக் கொடுத்தார். இந்தப் பரிமாற்றத்தில் அவருக்கு கிடைத்த ஓர் ஆண்டின் லாபம் என்ன? (2024 Group 4)    
(A) 200✓    
(B) 400    
(C) 600    
(D) 800    

44) ஒருவர் ரூ.5000ஐ, 4% வட்டிவீதத்தில், 2 ஆண்டுகளுக்குக் கடனாகப் பெறுகிறார். அன்றே, அந்த தொகையை தனது நண்பருக்கு 6 1/4% வட்டி வீதத்தில், 2 ஆண்டுகளுக்குக் கடனாகக் கொடுத்தார் எனில், 2 ஆண்டுகள் முடிவில் அவர் அடையும் இலாபம்.
(A) ₹ 180
(B) ₹ 210
(C) ₹ 225✓
(D) ₹ 240

45) ஒருவர் ரூ.8000ஐ, 5% வட்டிவீதத்தில், 3 ஆண்டுகளுக்குள் கடனாகப் பெறுகிறார். அன்றே, அந்த தொகையை தனது உறவி னர்க்கு 8% வட்டிவீதத்தில், 3 ஆண்டுகளுக்குக் கடனாகக் கொடுத்தார் எனில், 3 ஆண்டுகள் முடிவில் அவர் அடையும் இலாபம்.
(A) ₹ 600
(B) ₹ 660
(C) ₹ 720.
(D) ₹ 810

46) ஒருவர் ₹2000 ஐ 6% தனிவட்டிக்கு கடன் வாங்குகிறார். ஓர் ஆண்டு முடிவில் ₹1000 ஐ திருப்பி செலுத்துகிறார் எனில் அவர் அக்கடனை இரண்டாம் ஆண்டு முடிவில் முழுவதுமாக முடிக்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் (2024 Group 4)    
(A) ₹1240    
(B) ₹1180✓    
(C) ₹1120    
(D) ₹1200    

47) ஒருவர் 5% தனி வட்டியில் ரூ.200 கடனைப் பெறுகிறார். அவர் 1 வருட இறுதியில் ரூ.100 திருப்பித் தருகிறார். 2 வருட முடிவில் தனது கடனை அடைக்க, அவர் செலுத்த வேண்டிய தொகை
(A) Rs 105    
(B) Rs 110    
(C) Rs 115✓   
(D) Rs 115.50


Class - 5

48) ஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க. (2019 TNPSC)
(A) ரூ.5,000✓
(B) ரூ.3,000
(C) ரூ.2,000
(D) ரூ.1,000

49) ஆண்டு வட்டி 14% எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ. 210 எனில் அந்த தொகை (2019 TNPSC)
(A) 480
(B) 600
(C) 500✓
(D) 630

50) ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் ஒரு ஆண்டுக்கு ரூ.500 தனிவட்டியாக தரும் அசல் எவ்வளவு? (18-09-2021 TNPSC)
(A) 50,000
(B) 30,000
(C) 10,000✓
(D) 5,000

51) அருண் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 15% வட்டி வீதம் 3 ஆண்டுகள் கழித்து ₹450 தனி வட்டியாக செலுத்தினால் அசலைக் காண்க. (07-05-2023 TNPSC)
(A) 800
(B) 900
(C) 1,000✓
(D) 2,000

52) ஆண்டுக்கு 6% வட்டி வீதம் 5 ஆண்டுகளில் தனிவட்டி ₹60 பெறுவதற்கான அசல் என்ன? (01-04-2023 TNPSC)
(A) ₹800
(B) ₹600
(C) ₹400
(D) ₹200✓

53) குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க. (08-02-2023 TNPSC), (7th New Book)
(A) ₹ 3,250
(B) ₹ 3,550
(C) ₹ 3,750✓
(D) ₹ 3,000


Class - 6

54) மூன்றாண்டுகளில் 6% தனிவட்டி வீதம் மொத்த தொகை ₹11,800 அளிக்கும் அசலைக் காண்க. [2021 Group 1]
(A) ₹ 8,000
(B) ₹ 9,000
(C) ₹ 10,000✓
(D) ₹ 9,500

55) ஒரு குறிப்பிட்ட தொகையானது 10% வட்டி வீதம் 5 ஆண்டுகளுக்கு ₹ 10,050 கிடைக்கிறது எனில் அசல் எவ்வளவு? [22-01-2022 TNPSC], [08-02-2023 TNPSC] [7th New Book]
(A) ₹ 6,500
(B) ₹ 6,700✓
(C) ₹ 6,000
(D) ₹ 3,350

56) ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹10,080 ஆகிறது எனில் அசலை காண்க (23/05/2022 TNPSC)
(A) 7200✓
(B) 7000
(C) 6200
(D) 7300

57) ஒரு அசல் தொகை ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹20100 ஆக உயர்ந்தது எனில் அசலைக் காண்க. (12-08-2024 TNPSC)
(A) ₹13400✓
(B) ₹10050
(C) ₹40200
(D) ₹15100

58) ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதம் ரூ. 17,000 ஆகக் கிடைக்கிறது எனில் அசலைக் காண்க (07-11-2021 TNPSC), (21-01-2024 TNPSC), (08-02-2025 TNPSC)
(A) ரூ. 14,000
(B) ரூ. 12,500✓
(C) ரூ. 15,200
(D) ரூ. 13,500


Class - 7

59) பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2000 அசலுக்கு ஓராண்டுக்கு ₹ 200 ஐ தனிவட்டியாகக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்? [7th New Book Back] (20-04-2023 TNPSC)
(A)10%✓
(B)20%
(C)5%
(D)15%

60) ரூ.2000க்கு 2 ஆண்டுக்கு தனி வட்டி ரூ.120 எனில் வட்டி வீதம் எவ்வளவு? (2019 Group 8)
(A) 3℅✓
(B) 2℅
(C) 1℅
(D) 5℅

61) ஒரு வங்கியானது சேமிப்பு தொகையாக வைக்கப்பட்ட ₹3,000க்கு 2 ஆண்டுகளுக்கு ₹240ஐ தனி வட்டியாக வழங்குகிறது எனில் அவ்வங்கி வழங்கும் வட்டி வீதத்தைக் காண்க. (07-05-2023 TNPSC)
(A) 3%
(B) 4%✓
(C) 5%
(D) 6%

62) ₹1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம் (2022 Group 4)
(A) 0.1%
(B) 0.2%
(C) 0.3%✓
(D) 0.4%

63) ரூபாய் 500க்கு 2 ஆண்டுகளில் இரண்டு வங்கிகளின் தனிவட்டிக்கான வித்தியாசம் ரூ. 2.50 எனில் அவ்வங்கிகளின் வட்டி வீதங்ளுக்கு இடையேயான வித்தியாசம் எவ்வளவு? (2019 TNPSC)
(A) 1%
(B) 0.5%
(C) 2.5%
(D) 0.25%✓

64) ரூ. 4,000 ஆனது 4 ஆண்டுகளில் ரூ. 5,000 ஆகிறது எனில் கணக்கிடப்பட்ட தனிவட்டி விகிதம் யாது? (2013 VAO)
(A) 6 1/4%✓
(B) 6 %
(C) 5 1/2%
(D) 6 2/4%

65) பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹ 8,500 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹ 11,050 ஐச் செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு? (7th New Book)
(A) 10%✓
(B) 20%
(C) 5%
(D) 15%

66) தனிவட்டியின் கீழ் 60 ஆண்டுகளில் 1 ரூபாய், 9 ரூபாய் ஆக மாறுகிறது எனில், ஆண்டு வட்டி வீதம் % யாது? (06-11-2021 TNPSC)
(A) 15%
(B) 13 1/3%✓
(C) 12%
(D) 18%

67) கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 46,900 க்கு 2 ஆண்டுகளுக்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 53,466 எனில், வட்டி வீதத்தைக் காண்க (7th New Book) (10-03-2023 TNPSC)
(A) 5%
(B) 6%
(C) 7%✓
(D) 8%


Class - 8

68) எத்தனை ஆண்டுகளில் ரூ. 3000 அசலானது, 4% வட்டி வீதத்தில் ரூ. 240 ஐத் தனிவட்டியாகத் தரும்?
A) 2✓
B) 3
C) 4
D) 5

69) ₹5,000 ஆனது, 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில், ₹5,800 ஆக மாறும்? (15-03-2023 TNPSC)
(A) 2 ஆண்டுகள்✓
(B) 4 ஆண்டுகள்
(C) 3 ஆண்டுகள்
(D) 5 ஆண்டுகள்

70) எத்தனை ஆண்டுகளில் ₹2000 ஆனது ஆண்டுக்கு 10% தனிவட்டியில் ₹3600 ஆக மாறும்? (29-01-2023 TNPSC)
A) 2 ஆண்டுகள்
B) 16 ஆண்டுகள்
C) 8 ஆண்டுகள்✓
D) 10 ஆண்டுகள்

71) எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும். (7th New Book) (07/11/2021 TNPSC) (11-01-2022 TNPSC), [08-01-2022 TNPSC], [22-01-2022 TNPSC]
a. 2 ஆண்டுகள்
b. 3 ஆண்டுகள்
c. 3 1/2 ஆண்டுகள்
d. 3 1/3 ஆண்டுகள்✓

72) ஆண்டுக்கு 6% வட்டிவீதத்தில் ஒரு தொகை ₹ 17800 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 19936 ஆக உயரும்? (7th New Book)
a. 1
b. 2✓
c. 3
d. 4

73) ஆண்டுக்கு 13% வட்டி வீதத்தில் ஒரு தொகை ₹ 16,500 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 22,935 ஆக உயரும்? (7th New Book)
a. 1
b. 2
c. 3✓
d. 4


Class - 9

74) ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ₹8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசலை காண்க. (2019 TNPSC)    
(A) ₹ 12,000    
(B) ₹ 6,880    
(C) ₹ 6,000✓    
(D) ₹ 5,780    

75) ஒரு தொகை தனிவட்டியில் 3 வருடத்திற்கு ரூ. 815 ஆகிறது. 4 வருடத்திற்கு ரூ.854 ஆகிறது என்றால் அந்த தொகை எவ்வளவு? (2018 TNPSC), (18-11-2024 TNPSC)
(A) ரூ. 650    
(B) ரூ. 690    
(C) ரூ. 698✓    
(D) ரூ. 700    

76) ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 6,200 எனவும், 3 ஆண்டுகளில் ₹ 6,800 எனவும் உயர்கிறது எனில் அந்தத் தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க. (7th New Book)    
(A) அசல் = 5,000, வட்டி = 10%    
(B) அசல் = 6,000, வட்டி = 10%    
(C) அசல் = 5,000, வட்டி = 12%✓    
(D) அசல் = 6,000, வட்டி = 12%    

77) ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ₹8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தை காண்க (2019 Group 1)
(A) அசல் = 6,000, வட்டி = 8%✓    
(B) அசல் = 6,600, வட்டி = 8%    
(C) அசல் = 6,000, வட்டி = 7%    
(D) அசல் = 6,600, வட்டி = 7%    


Class - 10

78) ரூ. 7500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதத்திற்கான தனி வட்டியை காண்க (2019 Group 4)     
a. 600    
b. 700    
c. 800    
d. 900✔    

79) ரூ. 68,000-க்கு ஆண்டு வட்டி 16 2/3% விதத்தில் 9 மாதங்களுக்கு தனி வட்டி ரூ. ______ ஆக இருக்கும் (2024 Group 2)    
a. 8200    
b. 8300    
c. 8400    
d. 8500✔    

80) ஆண்டொன்றில் 5% தனி வட்டி வீதத்தில் 2 ஆண்டுகள் 6 மாதத்திற்கு ₹6400 வினால் பெறப்படும் தொகை என்ன? (13-07-2024 TNPSC)
அ) 800
ஆ) 7200✔
இ) 640
ஈ) 7040

81) ரூ. 5,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1,600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க ? (2019 Group 2)    
a. 20%     
b. 22%     
c. 18%     
d. 24%✓

82) கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000 இக்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க (7th New Book)    
a. 7%✔    
b. 8%    
c. 9%    
d. 10%    

83) அசல் ₹ 46,000 ஐ 1 ஆண்டு 9 மாதக் காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 52,440 ஆக உயர்ந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book)    
a. 7%    
b. 8%✔    
c. 9%    
d. 10%    


கருத்துரையிடுக

0 கருத்துகள்