Type Here to Get Search Results !

TNPSC Group 4 Notification 2025

0

TNPSC Group 4 Exam Details in Tamil: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2025 பற்றிய முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம். அதாவது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி, தேர்வு எழுதுவதற்கான தகுதிகள், பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள்கள் என அனைத்தையும் பார்க்கலாம்.

What is TNPSC Group 4?

குரூப் 4 தேர்வு என்றால் என்ன?:- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு என்பது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) மேற்க்கொள்ளப்படும் ஒரு வகையான தகுதி தேர்வாகும்.

இத்தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர் போன்ற பதிவிகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இத்தேர்வை TNPSC ஆண்டுத்தொறும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வு பற்றிய முழுவிவரங்களையும் இங்கு பார்ப்போம்.

TNPSC Group 4 Notification 2024 in Tamil

தேர்வின் பெயர் TNPSC Group IV
பதவியின் பெயர் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரை வாளர், மற்றும் நில அளவர்
தேர்வு முகமை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
காலிப்பணியிடங்கள் 6244
கல்வி தகுதி பத்தாம் வகுப்பு
சம்பளம் ரூ. 19500 – ரூ. 75900
அதிகாரபூர்வ அறிக்கை முழுவிவரம்

குரூப் 4 தேர்வு முக்கிய நாட்கள் 2024: வரும் ஜூன் 9, 2024 இல் நடாத்தப்பட உள்ள குரூப் 4 தேர்வு ஆனது பின்வரும் தேதிகளை பின்பற்றி நடைபெறும். கடேசி நேர பதற்றத்தை தவிர்க்க, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளான 28 பிப்ரவரி 2024 -க்குள் விண்ணப்பியுங்கள்.

அறிவிப்பு வெளியாகிய நாள் 30 ஜனவரி 2024
விண்ணப்பம் தொடங்கும் நாள் 30 ஜனவரி 2024
விண்ணப்பிக்க இறுதி நாள் 28 பிப்ரவரி 2024
குரூப் 4 தேர்வு நாள் 9 ஜூன் 2024
தேர்வு முடிவு வெளியாகும் நாள்
ஆகஸ்ட் 2024

TNPSC Group 4 Qualification 2024

குரூப் 4 தேர்வு எழுத தகுதிகள்: கல்வி மற்றும் வயது ஆகியவை இத்தேர்வை எழுதுவதற்கான அடிப்படை தகுதி ஆகும்.

இத்தேர்வை எழுத குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதை பொறுத்தவரையில், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.

மேலும் அதிகபட்ச வயதானது விண்ணப்பதாரரின் கல்வி மற்றும் பிரிவை (Community) பொறுத்து மாறுபடும்.

TNPSC Group 4 Age Limit in Tamil 2024

வயது வரம்பு: குரூப் 4 தேர்வு எழுதுவதற்கான வயதானது 1 ஜூலை 2024 தேதியை அடிப்படியாக கொண்டு கணக்கிடப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10ஆம் வகுப்பு மட்டும் படித்தவர்களுக்கான வயதை கொடுத்துள்ளோம்.

பிரிவு

10ஆம் வகுப்பு மட்டும்
படித்தவர்களுக்கான
அதிகபட்ச வயது

பொது பிரிவினர் 30 +2
MBC, BC, BC(M) 32 +2
SC, SC(A), ST 35 +2
ஆதரவற்ற விதவைகள் 35 +2

பொதுப்பிரிவினர் தவிர மற்ற பிரிவை சேர்ந்த 10ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்களுக்கு அதிகபட்ச வயது 60 ஆகும்.

TNPSC Group 4 Exam Pattern in Tamil 2024

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறை: குரூப் 4 தேர்வானது 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வானது இரண்டு பகுதிகளை கொண்டது. அவற்றின் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளோம்.

பாடப்பெயர் வினாக்கள் எண்ணிக்கை மதிப்பெண்
பொது தமிழ் 100 150
பொது அறிவு 75 112.5
கணிதம் 25 37.5
மொத்தம் 200 300
Note: கடந்த காலங்களில், தேர்வர்கள் பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துகொள்ளும் வகையில் இருந்தது. ஆனால் தற்போது பொதுஆங்கிலம் நீக்கப்பட்டு, பொதுத்தமிழ் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது.

TNPSC Group 4 Syllabus in Tamil 2024

குரூப் 4 தேர்வு 2024 பாடத்திட்டம்: குரூப் 4 பாடத்திட்டத்தை (Syllabus) 10 ஆம் வகுப்பு தரத்தில் வடிவமைத்துள்ளது TNPSC.

TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தின் சுருக்கிய வடிவத்தை கீழே கொடுக்கின்றோம், பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொது தமிழ்

  • இலக்கணம்
  • இலக்கியம்
  • தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

பொது அறிவு / General Studies

  • பொது அறிவியல்
  • நடப்புநிகழ்வுகள்
  • புவியியல்
  • இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
  • இந்திய ஆட்சியியல்
  • இந்திய பொருளாதாரம்
  • இந்திய தேசிய இயக்கம்
  • தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு, சமூக அரசியல் இயக்கங்கள்
  • தமிழக வளர்ச்சி நிர்வாகம்
  • திறனறிவு மற்றும் புத்திகூர்மை தேர்வு

FAQ’s – TNPSC Group 4 Details in Tamil 2024

கேள்வி: பட்டப்படிப்பு முடித்துளேன் நான் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா?

பதில்: 10ஆம் வகுப்பு குரூப் 4 தேர்வுக்கு கல்வி தகுதி 10ஆம் வகுப்பு, ஆகவே பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு என எது முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

கேள்வி: எனக்கு இப்போதுதான் 18வயது தொடங்கியுள்ளது நான் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா?

பதில்: குரூப் 4 தேர்வுக்குவிண்ணப்பிக்க 18வயது தொடங்கினால் மட்டும் போதாது 18 வயது முடிந்திருக்க வேண்டும்.

கேள்வி: குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் தமிழில் இருக்குமா? ஆங்கிலத்தில் இருக்குமா?

பதில்: வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இருக்கும்.

கேள்வி: ஒருவர் எத்தனை முறை குரூப் 4 தேர்வை எழுதலாம்?

பதில்: எத்தனை முறை வேண்டுமானலும் குரூப் 4 தேர்வை எழுதலாம், குரூப் 4 தேர்வுக்கான அடிப்படை தகுதியை பூர்த்திசெய்தால்.

கேள்வி: குரூப் 4 தேர்வு 2024 எப்போது நடத்தப்படும்?

பதில்: குரூப் 4 தேர்வு ஜூன் 9, 2024 -இல் நடத்தப்பட உள்ளது

சில பயனுள்ள பக்கங்கள்

TNPSC Group 4 2025 Important Dates

Event Dates
Date of Notification 25.04.2025
Last date and time for submission of online application 24.05.2025
Application Correction Window period 29.05.2025 to 31.05.2025
Date and time of examination 12.07.2025

TNPSC Group 4 Vacancies 2025

Post Name Vacancies
Village Administrative Officer 215
Junior Assistant (Non-Security) 1621
Junior Assistant 11
Junior Assistant (Security) 46
Junior Revenue Inspector 239
Junior Executive (Office) 1
Junior Assistant cum Typist 2
Typist 1100
Steno Typist (Grade – III) 368
Personal Clerk 2
Assistant 54
Field Assistant 19
Forest Guard

(Tamil Nadu Forest Subordinate Service)

62
Forest Guard with Driving Licence 35
Forest Watcher 71
Forest Watcher (Tribal Youth) 24
Forest Guard

(Tamil Nadu Forest Plantation Corporation Ltd)

15
Forest Watcher 50
Total 3935

TNPSC Group 4 Age Limit

Post Name Age Limit
VAO, Forest Guard, Forest Guard with Driving Licence, Forest Watcher, and Forest Watcher (Tribal Youth). 18 to 32 years
for all the posts 21 years to 32 years

Syllabus

Official Notification

கருத்துரையிடுக

0 கருத்துகள்