1) கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. |
---|
வினாக்கள் 1. எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது? – உலகப் புத்தக நாள் 2. புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது? – ராயப்பேட்டை YMCA மைதானம் 3. புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது? – 11 நாட்கள் 4. புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு? – அனுமதி இலவசம் 5. புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது? – 10 சதவீத கழிவு
|
2) பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. |
---|
விபத்தில்லா வாகனப் பயணம்
சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம். ● ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும். ● சந்திப்புச் சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள் ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்விடங்களில் இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதி செய்த பிறகே கடந்து செல்ல வேண்டும். ● சாலைச்சந்திப்பில் நுழையும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். ● தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, அவை தடையின்றிச் செல்வதற்குக் கண்டிப்பாக வழிவிட வேண்டும். ● எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். ● மலைச்சாலைகள், மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும். வினாக்கள் 1. விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்? -சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டினால் விபத்துக்களை தவிர்க்கலாம். 2. கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை? – தீயணைப்பு வாகனம், அவசர சிகிச்சை ஊர்தி 3. சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்? – ஏற்கனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் தர வேண்டும். 4. மலைச்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறை யாது? - மலைச்சாலைகள், மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும். 5. வாகனம் செலுத்தும் முறையை எழுதுக. – வாகனத்தை சாலையின் இடப்புறம் செலுத்த வேண்டும்.
|
3) |
---|
கட்டுரை எழுதத் தொடங்கும்முன் அதனைப்பற்றிய கருத்துகள் பல எழுதுபவரின் எண்ணத்தில் தோன்றுதல் வேண்டும். பொருளுக்கேற்பக் கூறுதல், வரிசைப்படுத்துதல், சுருக்கமாகக் கூறுதல் முதலிய சிறந்த இயல்புகளைக் கேட்டல் திறன் வாயிலாக ஒருவர் கற்றுக் கொள்ளலாம். கற்றல் கேட்டல் ஆகிய இவ்விரண்டனை மட்டும் பெற்றிருக்கும் ஒருவர், ஓர் அகரமுதலிக்கு இணையானவர் ஆவார். ஏனெனில், அகரமுதலி ஒருவர் அறிந்துகொள்ள விரும்பும் விவரங்களை மட்டும் தருமேயன்றி, அவற்றைத் தொடர்புபடுத்திக் கூறாது. ஒருவர் தாம் அறிந்து கொண்டதனைப்பற்றி நன்கு சிந்தித்து ஆராய்தல் வேண்டும். சிந்தனையின் விளைவே சிறந்த அறிவாகும். கருத்துகளை ஆராய்ந்து தொடர்புபடுத்துதலே தெளிந்த அறிவாகும். ஒருவர் புத்தகப்பூச்சியாக மட்டும் இருந்துவிடாமல், இயற்கையில் உள்ளனவற்றையும் காணுதல் வேண்டும். ஏனெனில், பட்டறிவுக்கல்வி அனைவருக்கும் இன்றியமையாததாகும். 'மற்றவர்கள் கூறுவதனைவிட நான் என்ன காண்கின்றேன்?' என்னும் வினா ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் எழுதல் வேண்டும். நாள்தோறும் நம்வாழ்வில் காண்பனவற்றை எழுதியும், வருணித்தும், விவரித்தும்வரின் நமது சிந்திக்கும் திறனும் கட்டுரை எழுதும் வன்மையும் பெருகும் என்பது திண்ணம்.
வினாக்கள்
1. உரைப்பத்தியின் மையக் கருத்து யாது? -
2. அகரமுதலிக்கு இணையானவர் யார்? – கற்றல் கேட்டல் ஆகிய இரண்டினை மட்டும் பெற்றிருப்பவர் அகரமுதலிக்கு இணையானவர் ஆவார். 3. புத்தகப்பூச்சி என யாரை அழைக்கிறோம்? - வெறுமனே புத்தகங்ளை படிப்பதை மட்டும் செய்து அந்த கருத்துக்களை சிந்தனை செய்யாதவரை புத்தகப்பூச்சி என்கிறோம். 4. பட்டறிவுக்கல்வி ஏன் தேவை? – மற்றவர்கள் கூறுவதனைவிட நான் என்ன காண்கிறேன் என்பதே இன்றியமையாதது. 5. சிந்தனையின் விளைவாகத் தோன்றுவது எது? - சிறந்த அறிவு
|
4) |
---|
சுவாமி வேதாசலத்தின் மகள் நீலாம்பிகை அம்மையார் ஆவார். அவர், தம் தந்தையாரையே நல்லாசிரியராகப் பெறும் பேறு பெற்றார். தம் தந்தையாரிடம் தமிழும் இசையும் பயின்றார். அவர்தம் முயற்சியால் பதின்மூன்றாம் வயதிலேயே மேடையேறிச் சொற்பொழிவாற்றினார்.
ஒரு நாள் மாலையில், சோலையில் நீலாம்பிகையுடன் உலாவிக் கொண்டிருந்தார் வேதாசலம். அப்போது இராமலிங்க வள்ளலார் அருளிய திருவருட்பாப் பாடலை அடிகள் பாடினார்.
'பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறுந் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் ....' என்னும் அப்பாடலை உள்ளமுருக, உயிருருக ஓதி முடித்தார். பின்னர், மகளிடம், 'நீலா! இப்பாடலில் உள்ள 'தேகம்' என்னும் வடசொல்லுக்கு மாறாக, 'யாக்கை' என்னும் தமிழ்ச்சொல் ஆளப்பட்டிருந்தால் இப்பாடலின் சொல்லோசை மேலும் இனிமையாக இருக்குமன்றோ ? பிறமொழிச் சொற்கள் தமிழில் கலப்பதனால்தான் தமிழின் இனிமை குறைகிறது' என்றார் வேதாசலம். அது கேட்ட மகள் தந்தையாரிடம், 'அப்படியானால் நாம் இனிப் பிறமொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்' என்றார். மகளின் அன்பும் அறிவும் கலந்த வேண்டுகோளை ஏற்று, சுவாமி வேதாசலம் என்னும் தம் வடமொழிப் பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் என்று மாற்றி வைத்துக்கொண்டார். வினாக்கள் 1. உரைப்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழறிஞர் யார்? - மறைமலையடிகள் 2. சுவாமி வேதாசலம் என்னும் பெயர் எங்ஙனம் மறைமலையடிகள் ஆயிற்று? - வடமொழிப்பெயரான சுவாமி வேதாசலம் என்றும் பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் என்று ஆயிற்று. 3. 'தேகம்' எனவும் 'யாக்கை' எனவும் குறிப்பிடப்படும் சொல்லின் பொருள் யாது? - உடம்பு 4. திருவருட்பாப் பாடலை இயற்றியவர் யார்? – இராமலிங்க வள்ளலார் 5. உன் நண்பனின் பெயர் வடசொல்லில் அமைந்திருந்தால், அதனை எவ்வாறு தனித்தமிழில் கூறுவாய்?- |
5) |
---|
வ. சுப. மா., எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வயிரவன்கோவில் சுப்பிரமணியனார் மகனார் மாணிக்கம் என்பார் பல்லாண்டுகளாகத் தமிழுக்கு நிலைத்த தொண்டாற்றியவர். அவர்தம் இளமைக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. வ. சுப. மா., தம் பதினெட்டாம் வயதில், பர்மாவின் (இன்றைய மியான்மர்) தலைநகரான இரங்கூனில் ஓர் அங்காடியில் வேலை செய்தார். ஒருநாள், அங்காடியின் உரிமையாளர் தம்மைத் தேடி ஒருவர் வருவார் எனவும், அவர் வரும்போது தாம் இல்லை எனக் கூறும்படியும் வ. சுப. மாணிக்கத்துக்குக் கட்டளையிட்டார். ஆனால், அவருக்கு மறுமொழியாக, 'அங்காடியின் உரிமையாளர் வெளியில் சென்றிருந்தால் இல்லை என்பேன்; அவர் இருக்கும்போது கேட்டால் எவ்வாறு இல்லை எனச் சொல்வது ? நான் அப்படியெல்லாம் பொய் கூறமாட்டேன்' என உரிமையாளரிடம் வ. சுப. மாணிக்கம் உறுதியாகக் கூறினார். இதனால், சினம் கொண்ட உரிமையாளர் அன்றே அவரை வேலையிலிருந்து நீக்கி, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிவிட்டார். இந்நிகழ்வே, பிற்காலத்தில் வ. சுப. மாணிக்கத்தைப் 'பொய் சொல்லா மாணிக்கம்' எனப் பெருமையோடு அழைக்கக் காரணமாக அமைந்தது.
வினாக்கள் 1. உரைப்பத்தியில் கூறப்பெறும் தமிழறிஞர் யார்? – வயிரவன் கோயில் சுப்பிரமணியனார் மகனார் மாணிக்கம் 2. வ. சுப. மா., தம்முடைய பதினெட்டாம் வயதில் எங்கு வேலை செய்தார்? -பர்மாவின் தலைநகராக இரங்கூனில் ஓர் அங்காடியில் 3. அங்காடி உரிமையாளரிடம் வ. சுப. மா., கூறிய மறுமொழி யாது? – அங்காடியின் உரிமையாளர் வெளியில் சென்றிருந்தால் இல்லை என்பேன், அவர் இருக்கும்போது கேட்டால் எவ்வாறு இல்லை எனச்சொல்லுவது? 4. வ. சுப. மா.,வின் வாழ்வில் நடந்த நிகழ்வு அவரை எங்ஙனம் பெருமைப்படுத்தியது? பொய் சொல்லா மாணிக்கம் என பெருமையோடு அழைக்கக் காரணமாக அமைந்தது. 5. இவ்வுரைப்பத்தியால் நீ அறிந்துகொள்வது என்ன? – உண்மையை பேசுதல் நன்மை தரும்.
|
6) |
---|
அருவிகளைக் காணச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பலர் அருவியில் நீராடி மகிழ்கின்றனர். மூலிகைகள் கலந்து வீழும் அருவியில் இயற்கையாகக் குளிக்காமல், செயற்கை வேதிப்பொருள்களைக் (சோப்பு, ஷாம்பு) குளிக்கப் பயன்படுத்துகின்றனர். அங்கு வாழும் காட்டுவிலங்குகள் இயற்கை நீரைக் குடிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. நீர் மாசடைய நாமே காரணமாக இருக்கிறோம்.
வானில் பறக்கும் பறவையோ நீரில் நீந்தும் மீனோ நீர்நிலைகளை மாசுபடுத்துவதில்லை. மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம் என்பதனை நீ அறிந்துள்ளாய் அல்லவா ? இந்தியாவில் எட்டில் ஒரு பங்கு அளவே காடுகள் உள்ளன. இவை மழைவரக் காரணமாக உள்ளதோடு மட்டுமல்லாமல், வனவிலங்குகளுக்குப் புகலிடமாகவும் உள்ளன.
மண் அரிப்பைத் தடுத்தல், சிற்றாறுகள் தோன்றக் காரணமாக இருத்தல், தொழில் வளர்ச்சிக்கு உதவுதல், மருந்துப் பொருள்கள், மூலிகைகள் தருதல் என எண்ணற்ற நன்மைகள் நமக்குக் காடுகளால் கிடைக்கின்றன. காட்டு விலங்குகளிடமிருந்து தந்தம், தோல், நறுமணப்பொருள், தேன் முதலிய பல்வகைப் பொருள்கள் கிடைக்கின்றன.
வினாக்கள் 1. அருவிநீர் மாசடையக் காரணம் என்ன? - மனிதர்கள் செயற்கை வேதிப்பொருள்களைப் பயன்படுத்தி அருவியில் குளிப்பதால் அருவி நீர் மாசடைகிறது. 2. இந்தியாவில் எத்தனை மடங்கு காடுகள் உள்ளன? - எட்டில் ஒரு பங்கு 3. தாவரங்கள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன? – மண் அரிப்பைத் தடுத்தல், சிற்றாறுகள் தோன்றக் காரணமாக இருத்தல், தொழில் வளர்ச்சிக்கு உதவுதல், மருந்துப்பொருட்கள், மூலிகைகள் தருதல் 4. காட்டுவிலங்குகளினால் நமக்கு விளையும் நன்மைகள் யாவை? – தந்தம், தோல், நறுமணப்பொருள், தேன் 5. தாவரங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளுள் இரண்டனைக் கூறுக. - மரம் வெட்டுவதை தவிர்த்தல், மரங்களை நடுதல்
|
7) பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க. |
---|
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினைப் பேணு தற்கே பெண்கட்குக் கல்வி வேண்டும் கல்வியைப் பேணுதற்கே கல்வியில்லாத பெண்கள் களர்நிலம் அந்நிலத்தில் புல்விளைந்திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை வினாக்கள் 1. யாருக்குக் கல்வி வேண்டும்? - பெண்களுக்கு 2. பெண்களுக்குக் கல்வி ஏன் வேண்டும்? – உலகினை காப்பதற்காக 3. கல்வியில்லாத பெண்கள் எதற்கு ஒப்பாவர்? - களர்நிலம் 4. களர்நிலத்தில் எது விளையும்? – புல் விளையும் 5. பாடலுக்கேற்ற தலைப்பு இடுக. - பெண்கல்வி
|
8) பாடலைப்படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. |
---|
வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன வூர்கள் நகர்க ளெங்கும் பலபல பள்ளி தேடு கல்வியி லாததொ ரூரைத் தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழியிலை கண்டீர். வினாக்கள் 1. வீடுதோறும் என்ன தேவை?- 2. வீதிதோறும் எத்தனை பள்ளிகள் அமைத்தல் வேண்டும்? - ஒன்றிரண்டு 3. நாடுமுற்றிலும் உள்ளன எவை? - ஊர்கள் 4. கேடு தீர்ப்பவள் யார்? - 5. இப்பாடலுக்குத் தலைப்பு ஒன்றனைத் தருக. |
9) கீழ்க்காணும் பாடலைப் படித்துப் பொருளுணர்ந்து, வினாக்களுக்கு விடையளிக்க. |
---|
கிளையினிற் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி யெண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும். - பாரதிதாசன், அழகின் சிரிப்பு வினாக்கள் 1. பாடலில் குறிப்பிடப்படும் மரம் எது? - ஆலமரம் 2. குரங்கு விழுதென்று எதனைத் தொட்டது? - பாம்பை 3. பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எது? – விளக்கினைத் தொட்ட பிள்ளைப் போல 4. குரங்கு தன் வாலை என்னவென்று நினைத்தது? – பாம்பு என்று நினைத்தது 5. பிள்ளை என்னும் பொருள் தரும் சொற்கள் இரண்டனைக் கூறுக. - |
minnal vega kanitham