கலைச்சொல் அறிவோம் | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Aesthetics - அழகியல், முருகியல்
Terminology - கலைச்சொல் Airtifacts - கலைப் படைப்புகள் Myth - தொன்மம் பிற மொழிச் சொற்களைத் தமிழ்சொற்களாக மாற்றி எழுதுக. புதிர் உங்களிடம். ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும். விடை : தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால் ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்டுகளில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள் ஆல் தி பெஸ்ட்!
|
நூல் வெளி |
---|
பாடம் 6.2. பூத்தொடுத்தல் - உமா மகேஸ்வரி
நூல் வெளி • கவிஞர் உமா மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். • தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார். • இவர், நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார்; • கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார். பாடம் 6.3. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் நூல் வெளி • குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது. • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ். • இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். • பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ். • பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும். • இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும். • குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு. • இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்; • கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார். i. இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி. ii. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) - சிற்றில், சிறுபறை, சிறுதேர் iii. பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) - கழங்கு, அம்மானை, ஊசல் பாடம் 6.4. கம்பராமாயணம் – கம்பர் நூல் வெளி • கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்“ எனப் பெயரிட்டார். • இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது. • இது ஆறு காண்டங்களை உடையது. • கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை. • அவற்றுள் அழகுணர்ச்சிமிக்க சில கவிதைகள் பாடப்பகுதியாக அமைந்துள்ளன. • "கல்வியில் பெரியவர் கம்பர்", "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்; • சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்; • திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்; • "விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்" என்று புகழ்பெற்றவர்; • சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது முதலிய நூல்களை இயற்றியவர். பாடம் 6.5. பாய்ச்சல் - சா. கந்தசாமி நூல் வெளி • 'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சிறுகதை தொகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம்பெற்றுள்ளது. • இதன் ஆசிரியர் சா.கந்தசாமி. • இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். • இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார். • விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார். • சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார். • நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார். • தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில. |
Boxs |
---|
பாடம் 6.1. நிகழ்கலை
யார் இவர்? • தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். • "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர். • இவர் தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புது விதமான நாடகங்களை உருவாக்கியவர். • அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர். • இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. • இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார். • இவர்தான் கூத்துப்பட்டறை ந. முத்துசாமி என்ற கலைஞாயிறு. பாடம் 6.3. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் செங்கீரைப் பருவம் • செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர். • இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும். • அணிகலன்கள் 1. சிலம்பு, கிண்கிணி - காலில் அணிவது 2. அரைநாண் - இடையில் அணிவது 3. சுட்டி - நெற்றியில் அணிவது 4. குண்டலம், குழை - காதில் அணிவது 5. சூழி - தலையில் அணிவது |
Book Back |
---|
1) ஓயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?
அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர் ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது. ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர். [விடை : ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.] 2) கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது? அ) கரகாட்டம் என்றால் என்ன? ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்? இ) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை? ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை? [விடை: கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?] |
இலக்கணக்குறிப்பு: |
---|
குண்டலமும் குழைகாதும் - எண்ணும்மை
ஆடுக - வியங்கோள் வினைமுற்று |
சொல்லும் பொருளும் |
---|
பண்டி - வயிறு
அசும்பிய - ஒளிவீசுகிற முச்சி - தலையுச்சிக் கொண்டை கா - என்பதற்குப் பாரந்தாங்கும் கோல் என்று பொருள். |
minnal vega kanitham