கலைச் சொல்லாக்கம் |
---|
1. மனிதம் - (Humane) மனிதப் பண்புகளாகிய நற்பண்புகளைக் குறிப்பது 2. ஆளுமை - (Personality) புறத்தோற்றத்தை மட்டும் குறிப்பது அல்ல நற்பண்புகள் ஆளுமைத் தன்மை, தலைமைப் பண்புகளையும் குறிப்பது. 3. பண்பாட்டுக் கழகம் - (Cultural academy) பண்பாடு, நாகரிகத்தைப் பறைசாற்றும் அமைப்பு 4. வசனகவிதை - (free verse) இலக்கணத்துக்குள் கட்டுப்படாது. பேசுவது போல் கருத்தைக் கூறுவது. 5. உவமையணி - (Simitee) ஒரேதன்மையை உரைப்பது. 6. உருவக அணி - (Metabhor) உவமை. உவமேயம் ஒன்றே என்று தோன்றக் கூறுவது. |
பொருத்தமான நிறுத்தற்குறியிடுக. |
---|
ஆசிரியர் மாணவர்களிடம் மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று என்று கூறினார்.
பிள்ளைத் தமிழ் நூல்கள் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன. அடடா என்று சிலிப்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபாரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது. விடை : ஆசிரியர் மாணவர்களிடம், "மாணவர்களே! கடவுளையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி, எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று'' என்று கூறினார். பிள்ளைத்தமிழ் நூல்கள்: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ் முதலியன. “அடடா! என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில், குமரகுருபரரின் 'மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' மிகச்சிறந்ததாகத் திகழ்கிறது. |
bbbbbbbbbbbbbbb |
---|
nnnnnnnnnnnnnnnnnnnnnn |
மொழி பெயர்க்க. |
---|
A deer, a turtle, a crow and arat were friends. One day the deer was caught in a hunter's trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter's path to distract him. The hunter left the deer, assuming it dead, and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.
விடை : ஒரு மான், ஒரு கடல் ஆமை, ஒரு காகம், ஓர் எலி ஆகியவை நட்பு கொண்டிருந்தன. ஒருநாள் வேடன் வலைவிரித்து மானைப் பிடித்து விட்டான். நண்பர்கள் மானைக் காப்பாற்ற திட்டம் தீட்டின. மானை, நீ இறந்தது போல் அசைவின்றி படுத்துக் கொள் என்றன. காகம், இறந்து போன மாதிரி படுத்திருந்த மான் மீது அமர்ந்து கொத்த தொடங்கியது. கடல் ஆமை வேடனின் வழிமறித்தது; அவனை அலைக்கழித்தது, வேடன் வலையில் அகப்பட்ட மான் இறந்து விட்டது என எண்ணி சென்று அதனை விட்டு விடுகிறான். கடல் ஆமை இன்னும் வேடனை அலைக்கழித்தபடியே இருக்கிறது. அதற்குள் எலி வலையைக் கடித்து மானைக் காப்பாற்றத் தொடங்கியது. மானை விடுத்த வேடன் கடலாமையைப் பிடிக்க எண்ணியபோது காகம் ஆமையை கொத்திக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து சென்று சிறிய கடலாமையை வேடனிடம் இருந்து காத்தது. இந்தப் பஞ்சதந்திரக் கதை குழுவாக இணைந்து ஒன்றுபட்டு செயல்பட்டால் பல சாதனைகளைப் புரியலாம் என்பதை உணர்த்துகிறது. 1. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன - இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது? அ) கொம்பு ஆ) மலையுச்சி இ) சங்கு ஈ) மேடு விடை: ஆ) மலையுச்சி 2. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை அ) நிலையற்ற வாழ்க்கை ஆ) பிறருக்காக வாழ்தல் இ) இம்மை மறுமை ஈ) ஒன்றே உலகம் விடை: ஈ) ஒன்றே உலகம் 3. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல் அ) ஒரு சிறு இசை ஆ) முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறத்தல் விடை: அ) ஒரு சிறு இசை 4. யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்? அ) குறிஞ்சி ஆ) மருதம் இ) பாலை ஈ) நெய்தல் விடை: இ) பாலை 5. கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி? அ) சொல் பின்வருநிலையணி ஆ) பொருள் பின்வருநிலையணி இ) சொற்பொருள் பின்வருநிலையணி ஈ) வஞ்சப் புகழ்ச்சியணி விடை: ஆ) பொருள் பின்வருநிலையணி |
இலக்கணக் குறிப்பு |
---|
உருண்டது, போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள் சரிந்து - வினையெச்சம் அனைவரும் - முற்றும்மை. களைஇய - சொல்லிசை அளபெடை, பெருங்கை, மென் சினை - பண்புத் தொகைகள், பொளிக்கும் - செய்யும் என்னும் வினைமுற்று, பிடிபசி - ஆறாம் வேற்றுமைத் தொகை, அன்பின - பலவின்பால் அஃறிணை வினைமுற்று, |
சொல்லும் பொருளும் |
---|
1. நசை-விருப்பம்; 2. நல்கல் -வழங்குதல்; 3. பிடி - பெண்யானை; 4. வேழம் -ஆண்யானை; 5. யா- ஒரு வகை மரம் (பாலை நிலத்தில் வளர்வது); 6. பொளிக்கும் - உரிக்கும்; 7. ஆறு-வழி இமயத்துக் "கோடு" உயர்ந்தன்ன - இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது? அ) கொம்பு ஆ) மலையுச்சி இ) சங்கு ஈ) மேடு விடை: ஆ) மலையுச்சி |
சொற்றொடர் உருவாக்குக |
---|
1. செந்தமிழும் சுவையும் போல விடை : தவைவன் தலைவியாக நீவிர் இருவரும் செந்தமிழும் சுவையும் போல இணைந்தே மகிழ்வுடன் இனிதாய் வாழுங்கள். 2. பசுமரத்தாணிபோல விடை : குழந்தைப் பருவத்தில் நான் மனனம் செய்த பாரதியார் பாடல்கள் அனைத்தும் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது. 3. உள்ளங்கை நெல்லிக்கனி போல விடை : என் தமிழாசிரியர் நடத்திய அணியிலக்கணம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாகப் புரிந்தது. 4. அத்தி பூத்தாற்போல விடை : என் மாமாவின் வருகை அத்தி பூத்தாற்போல் என்றாவது நிகழ்வதால் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். 5. மழைமுகம் காணாப் பயிர் போல விடை : தன் குடும்பத்தை விட்டு விடுதிக்குச் சென்ற கமலா, மழைமுகம் காணாப் பயிர் போல சோர்வுற்று வாடிக் காணப்பட்டாள். |
bbbbbbbbbbbbbbb |
---|
nnnnnnnnnnnnnnnnnnnnnn |
minnal vega kanitham