Type Here to Get Search Results !

சொல்லும் பொருளும் (7th New Tamil Book)

சொல்லும் பொருளும்
இயல் - 1

• ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்
•
குறி - குறிக்கோள்
•
விரதம் – நோன்பு
•
பொழிகிற – தருகின்ற
•
பொருள் - செல்வம், நற்செயல்
•
அச்சம் - பயம்
•
அறம் - நற்செயல்
•
போக்கி - நீக்கி
•
நெறி - வழி
•
ஒப்புமை - இணை
•
அற்புதம் – வியப்பு
•
முகில் - மேகம்
•
உபகாரி - வள்ளல்
•
கவி - கவிஞன் (அல்லது) புலவன்
•
தென்றல் - தெற்கிலிருந்து வீசும் காற்று
•
அருள் – இரக்கம்

இயல் – 2

• ஈன்று - தந்து
• கொம்பு - கிளை
• அதிமதுரம் - மிகுந்த சுவை
• களித்திட - மகிழ்ந்திட
• நச்சரவம் - விடமுள்ள பாம்பு
• விடுதி - தங்கும் இடம்
• பரவசம் - மகிழ்ச்சிப் பெருக்கு
• துஷ்டி கேட்டல் - துக்கம் விசாரித்தல்

 இயல் – 3

• சிற்றில் - சிறு வீடு
•
கல் அளை - கற்குகை
•
யாண்டு - எங்கே
•
ஈன்ற வயிறு - பெற்றெடுத்த வயிறு

• யாண்டு – எங்கு

• குடில் - வீடு
•
சூரன் - வீரன்
•
பொக்கிஷம் - செல்வம்
•
சாஸ்தி - மிகுதி
•
விஸ்தாரம் - பெரும்பரப்பு
•
வாரணம் - யானை
•
பரி - குதிரை
•
சிங்காரம் – அழகு
•
கமுகு – பாக்கு

இயல் – 4

• மதலை - தூண்
•
ஞெகிழி - தீச்சுடர்
•
அழுவம் - கடல்
•
வேயா மாடம் - வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்
•
சென்னி - உச்சி
•
உரவுநீர் - பெருநீர்ப் பரப்பு
•
கரையும் – அழைக்கும்

• அழுவம் – கடல்

• தூண் – மதலை

• உரு - அழகு
•
போழ - பிளக்க
•
வங்கூழ் - காற்று
•
நீகான் - நாவாய் ஓட்டுபவன்
•
வங்கம் - கப்பல்
•
எல் - பகல்
•
கோடு உயர் - கரை உயர்ந்த
•
மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்

• வங்கூழ் - காற்று 

• புலால் - கடல் 

இயல் – 5

• எத்தனிக்கும் - முயலும்
• வெற்பு - மலை
• கழனி - வயல்
• நிகர் - சமம்
• பரிதி - கதிரவன்
• அன்னதோர் - அப்படிஒரு
• கார்முகில் - மழைமேகம்
• துயின்றிருந்தார் – உறங்கியிருந்தார்

• மலை – வெற்பு

• வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்
•
கோட்படா - ஒருவரால் கொள்ளப்படாது
• வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி கொடுத்தலும்
• விச்சை - கல்வி
•
வவ்வார் – கவர முடியாது
• எச்சம் – செல்வம்

இயல் – 6

• பிரும்மாக்கள் - படைப்பாளர்கள்
•
நெடி - நாற்றம்
• மழலை - குழந்தை
•
வனப்பு - அழகு
•
பூரிப்பு - மகிழ்ச்சி
• மேனி - உடல்
• வண்கீரை - வளமான கீரை
• முட்டப்போய் - முழுதாகச் சென்று
• மறித்தல் - தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
• பரி - குதிரை
• கால் - வாய்க்கால், குதிரையின் கால்

 இயல் – 7

• மாரி - மழை
• வறந்திருந்த - வறண்டிருந்த
• புகவா - உணவாக
• மடமகள் - இளமகள்
• நல்கினாள் - கொடுத்தாள்
• முன்றில் - வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது
• குழி - நில அளவைப்பெயர்
• சாண் - நீட்டல் அளவைப்பெயர்
• மணி - முற்றிய நெல்
• சும்மாடு - பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்
• சீலை - புடவை
• மடை - வயலுக்கு நீர் வரும் வழி
• கழலுதல் – உதிர்தல்

 

இயல் –  8

• வையம் - உலகம்
•
வெய்ய - வெப்பக்கதிர் வீசும்
• சுடர்ஆழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
• இடர்ஆழி - துன்பக்கடல்
• சொல் மாலை - பாமாலை
• தகளி - அகல்விளக்கு
• ஞானம் - அறிவு
• நாரணன் - திருமால்
•
அந்தம் - முடிவு
• ஆதி – முதல்

• இடர் – துன்பம்

• அன்பு - தகளி
• ஆர்வம் - நெய்
• சிந்தை - இடுதிரி
• ஞானம் - விளக்கு
•
வித்து - விதை
•
ஈன – பெற
• நிலன் - நிலம்
• களை - வேண்டாத செடி
•
பைங்கூழ் - பசுமையான பயிர்
•
வன்சொல் – கடுஞ்சொல்

• விளைநிலம் - இன்சொல்
•
விதை – ஈகை

•  களை - வன்சொல்
•
உரம் – உண்மை

 இயல் –  9

• சாந்தம் - அமைதி
• மகத்துவம் - சிறப்பு
• பேதங்கள் - வேறுபாடுகள்
• தாரணி - உலகம்
• தத்துவம் - உண்மை
• இரக்கம் - கருணை


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.