Type Here to Get Search Results !

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் (6th New Tamil Book)

0
வரிசை மாறியுள்ன சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக. (6th New Tamil Book)
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.


2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.

பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.


3. மிகப்பெரிய சாண்டியாகோ மீளைப் பிடித்தார்

சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.


4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.

இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி.


பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக
1. சிந்தனை கொன் அறிவியல்

அறிவியல் சிந்தனை கொள்.


2. சொல் தெளிந்து ஐயம்

ஐயம் தெளிந்து சொல்.


3. கேள் ஏன் என்று

ஏன் என்று கேள்.


4. வெல்லும் என்றும் அறிவியலே

அறிவியலே என்றும் வெல்லும்.



முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.
1. முளையிலே விளையும் தெரியும் பயிர்

விளையும் பயிர் முளையிலே தெரியும்


2. ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை

கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்.


3. யாவரும் கேளிர் யாதும் ஊரே

யாதும் ஊரே யாவரும் கேளிர்


4. நன்றும் பிறர்தர தீதும் வாரா

தீதும் நன்றும் பிறர்தர வாரா


5. வெல்லும் வாய்மையே

வாய்மையே வெல்லும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்