Type Here to Get Search Results !

வினா எழுத்துகள்

1
where to study
• இந்த தலைப்பில் முழு மதிப்பெண் பெறுவதற்கு படிக்க வேண்டிய தலைப்புகள்
i) வினா எழுத்துகள் (6th New Tamil Book)
ii) வினா வகை (10th New Tamil Book)
iii) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் கீழே புத்தக குறிப்புகளும் ஒரிஜினல் தேர்வில் கேட்கப்பட்ட மாதிரி வினாக்களும் இணைக்கப்பட்டுள்ளது

வினா எழுத்துகள்
வினா எழுத்துகள்
• வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்.
• சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும்.
• சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும்.
• ஏ, யா,ஆ,ஓ,ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
❖ மொழியின் முதலில் வருபவை - எ, யா (எங்கு, யாருக்கு)
❖ மொழியின் இறுதியில் வருபவை - ஆ,ஓ (பேசலாமா,தெரியுமோ)
❖ மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை - ஏ (ஏன், நீதானே)
அகவினா
• எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துக்களுக்குப் பொருள் இல்லை.
• இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
புறவினா
• அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
• இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.

பத்தியைப் படித்து வினாக்கள் அமைக்க. (6th தமிழ் இயல் - 5)
முகிலன் பொங்கல் விழாக் கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்குச் செவலை என்ற காளை இருந்தது. அக்காளையை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்துக் கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான்.
(எ. கா.) முகிலன் யார் வீட்டிற்குச் சென்றான்?
விடை
1. முகிலன் எதற்காகத் தாத்தா வீட்டிற்குச் சென்றான்?
2. முகிலனின் தாத்தா வீட்டில் என்ன இருந்தது?
3. முகிலனின் வழக்கம் என்ன?
4. முகிலன் தாத்தாவிற்கு எவ்வாறு உதவுவான்?
5. முகிலன் தன் தாத்தா பாட்டியோடு எவ்விழாவைக் கொண்டாடுவான்?

பத்தியில் உள்ள வினாச் சொற்களை எடுத்து எழுதுக. (6th தமிழ் இயல் - 6)
செழியன் துணிக்கடைக்குச் சென்றான். விற்பனையாளர் ஒருவரிடம் ஆயத்த ஆடைகள் பகுதி எங்கு உள்ளது?” என்று வினவினான். "யாருக்கு ஆடை வேண்டும்? உனக்கா பெரியவர்களுக்கா?" என்று கேட்டார் விற்பனையாளர். "ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? சிறுவர்களுக்கான ஆடைகள் இல்லையோ?' என்று வினவினான். “நீ கேட்பது உன் அளவுக்குரிய ஆடைதானே? அதோ அந்தப் பகுதியில் இருக்கிறது" என்றார் விற்பனையாளர்.
விடை
பத்தியில் உன்ன வினாச்சொற்கள் :
1. எங்கு ?
2. யாருக்கு?
3. ஏன்?
4. இல்லையோ?
5. ஆடைதானே?

சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக. (7th தமிழ் இயல் - 7)
அறிந்து பயன்படுத்துவோம்.
• ஏதேனும் ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவப்படுவது வினாவாகும். வினா கேட்கப் பயன்படுத்தும் சொற்கள் வினாச்சொற்கள் எனப்படும்.
• ‘எது, என்ன, எங்கு, எப்படி, எத்தனை, எப்பொழுது, எவற்றை, எதற்கு, ஏன், யார், யாது, யாவை போன்றன வினாச் சொற்கள் ஆகும்.
சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக.
1. நெல்லையப்பர் கோவில் --------- உள்ளது?
விடை : எங்கு
2. முதல் ஆழ்வார்கள் --------- பேர்?
விடை : மூன்று
3. --------- சொற்களைப் பேச வேண்டும்?
விடை : எப்படிப்பட்ட
4. அறநெறிச் சாரம் பாடலை ---------?
விடை : யார்
5. அறநெறிச் சாரம் என்பதன் பொருள் ---------?
விடை : யாது
பின்வரும் தொடரைப் படித்து வினாக்கள் எழுதுக.
பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள்.
(எ.கா.) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?
1. பூங்கொடி யாருடன் பள்ளிக்குச் சென்றாள்?
2. பூங்கொடி எப்பொழுது பள்ளிக்குச் சென்றாள்?
3. பூங்கொடி தோழியுடன் எங்கு சென்றாள்?

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
வினா வகை (10th New Book)
வினா வகை (10th New Book)
அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என்று வினா ஆறு வகைப்படும்.

விடை வகை (10th New Book)
சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்று விடை எட்டு வகைப்படும்.
முதல் மூன்று வகையும் நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும் அடுத்த ஐந்து விடைகளும் குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம்.

மாதிரி வினாத்தாள்
வினா எழுத்துகள்
1) சரியான வினாச்‌ சொல்‌ அமைந்த வாக்கியத்தைச் சுட்டுக.
a) கவிதையை எழுதியவர்‌ என்ன?
b) செல்வத்துப்‌ பயன்‌ எத்தனை?
c) தமிழகத்தின்‌ முதலமைச்சர்‌ யார்‌?
d) பொய்கையாழ்வார்‌ எவற்றை பிறந்தார்‌ ?
c) தமிழகத்தின்‌ முதலமைச்சர்‌ யார்‌?

2) தொடரைப்‌ படித்து ஏற்ற வினாவைத் தேர்ந்தெடு
பூங்கொடி தன்‌ தோழியுடன்‌ திங்கட்கிழமை காலையில்‌ பேருந்தில்‌ ஏறிப்‌ பள்ளிக்குச்‌ சென்றாள்‌.
a) பூங்கொடி தன்‌ தோழியுடன்‌ ஏன்‌ சென்றாள்‌?
b) பூங்கொடி எந்தப்‌ பள்ளிக்குச்‌ சென்றாள்‌?
c) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச்‌ சென்றாள்‌?
d) பூங்கொடி யார்‌, யாருடன்‌ சென்றாள்‌?
c) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச்‌ சென்றாள்‌?

3) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு.
a) அறிவுநம்பி அமெரிக்கா சென்றார்‌
b) நேற்று புயல்‌ வீசியதால்‌ பள்ளிக்கு விடுமுறை
c) அந்தோ என்‌ செல்வம்‌ பறிபோயிற்றே
d) இது எப்படி நடந்தது
d) இது எப்படி நடந்தது

4) சரியான வினாச்சொல்லைத்‌ தேர்ந்தெடு மக்களின்‌ வாழ்க்கைத்‌ தரம்‌ உயர்வதில்‌ செயற்கைக்கோளின்‌ பங்கு ————?
a) யார்‌?
b) ஏன்‌?
c) யாது?
d) யாவை?
c) யாது?

5) சரியான வினாச்‌சொல்லைத்‌ தேர்ந்தெடு ஆழ்வார்கள்‌ ———— பேர்‌ ?
a) எத்துணை
b) எத்தனை
c) எப்போது
d) எப்பொழுது
b) எத்தனை

6) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு “ஆத்திசூடியின்‌ ஆசிரியர்‌ ————?”
a) எப்படி
b) எது
c) ஏன்‌
d) யார்‌
d) யார்‌

7) சரியான வினாச்‌சொல்லைத்‌ தேர்ந்தெடுக்க. திருக்குறளில்‌ உள்ள குறட்பாக்கள்‌ ————?
a) எவ்வளவு
b) எத்தனை
c) யாவை
d) எவை
b) எத்தனை

8) சரியான வினாச்சொல்லைத்‌ தோந்தெடுக்க. குற்றாலக்‌ குறவஞ்சியைப்‌ பாடியவர்‌ ————?
a) எவர்‌
b) எது
c) யார்‌
d) ஏன்‌
c) யார்‌

9) சரியான வினாச்சொல்லைத்‌ தேர்ந்தெடு. நாயன்மார்கள்‌ ———— பேர்‌ ?
a) என்ன
b) எப்படி
c) எத்தனை
d) எவ்வாறு
c) எத்தனை

10) சரியான வினாச்‌சொல்‌ அமைந்த தொடரைத்‌ தேர்க.
a) இனஎழுத்துகள்‌ என்றால்‌ எப்போது?
b) இனஎழுத்துகள்‌ என்றால்‌ யார்‌?
c) இனஎமுத்துகள்‌ என்றால்‌ ஏன்‌?
d) இனஎழுத்துகள்‌ என்றால்‌ என்ன?
d) இனஎழுத்துகள்‌ என்றால்‌ என்ன?

11) சரியான வினாச்சொல்லைத்‌ தேர்ந்தெடு : நெல்லையப்பர்‌ கோவில்‌ ———— உள்ளது ?
a) எவ்விடம்‌
b) எங்கு
c) ஏன்‌
d) எதற்கு
b) எங்கு

12) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு : அறநெறிச்சாரம்‌ பாடலை எழுதியவர்‌
a) எவர்‌
b) யாவர்‌
c) யாரால்‌
d) யார்‌
d) யார்‌

13) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு : ஐம்பெருங்காப்பியங்கள்‌ ————
a) என்ன
b) எது
c) யாவை
d) யாது
c) யாவை

14) வினா எழுத்துகளைத்‌ தேர்ந்தெடு :
a) எ, யா, ஆ
b) ஓ, ஆ, உ
c) அ, இ, உ
d) அ, யா, இ
a) எ, யா, ஆ

15) கீழ்க்காணும்‌ விடைக்குப்‌ பொருந்தாத வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்‌தெடு :
“பாட்டுக்கொரு புலவன்‌” என பாராட்டப்பட்டவர்‌ பாரதியார்‌.
a) யார்‌?
b) எப்படி?
c) ஏன்‌?
d) எவ்வாறு?
c) ஏன்‌?

16) சரியான வினாச்‌ சொல்லை இட்டு எழுது.
நெல்லையப்பர்‌ கோவில்‌ ———— உள்ளது?
a) எது
b) யாவை
c) எங்கு
d) என்ன
c) எங்கு

17) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தோந்தெடு
அறநெறிச்‌ சாரம்‌ பாடலை எழுதியவர்‌ ———— ?
a) எவ்வாறு
b) எப்படி
c) ஏன்‌
d) யார்‌
d) யார்‌

18) சரியான வினாச்‌ சொல்லை இட்டு நிரப்புக.
தீ விபத்து ஏற்பட்டால்‌ செய்யக்‌ கூடாதவை ———— ?
a) எவை
b) ஏன்‌
c) எப்படி
d) யாவை
d) யாவை

19) சரியான வினாச்சொல்‌ எது?
நெல்லையப்பர்‌ கோவில்‌ ———— உள்ளது?
a) எப்படி
b) எத்தனை
c) எங்கு
d) என்ன
c) எங்கு

20) தாமரை தன்‌ தோழியுடன்‌ ஞாயிற்றுக்கிழமை மாலையில்‌ கடை வீதிக்குச்‌ சென்றாள்‌ – இவ்வாக்கியத்துக்கு பொருத்தமற்ற வினாச்‌சொல்‌ இடம்‌பெற்றுள்ள தொடரைச்‌ சுட்டுக.
a) தாமரை எங்குச்‌ சென்றாள்‌?
b) தாமரை எப்படிச்‌ சென்றாள்‌?
c) தாமரையுடன்‌ சென்றது யார்‌?
d) தாமரை எப்பொழுதுச்‌ சென்றாள்‌?
b) தாமரை எப்படிச்‌ சென்றாள்‌?

21) சரியான வினாச்‌ சொல்‌ எது?
மனப்பாடச்‌ செய்யுளைப்‌ படித்தாயா?
a) அறியாவினா
b) கொடைவினா
c) அறிவினா
d) ஏவல்வினா
d) ஏவல்வினா

22) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு. ஆழ்வார்கள்‌ ———— பேர்‌?
a) எப்படி
b) எத்தனை
c) ஏன்‌
d) என்ன
b) எத்தனை

23) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு.
a) நெல்லையப்பர்‌ கோவில்‌ எங்கு உள்ளது?
b) நெல்லையப்பர்‌ கோவில்‌ எங்கு ஆனது?
c) நெல்லையப்பர்‌ கோவில்‌ கற்களால்‌ ஆனது?
d) நெல்லையப்பர்‌ கோவிலில்‌ பெருஞ்சுவர்‌ உள்ளது?
a) நெல்லையப்பர்‌ கோவில்‌ எங்கு உள்ளது?

24) சரியான வினைச்சொல்லைத்‌ தேர்ந்தெடு.
a) ஆழ்வார்கள்‌ எத்தனை பேர்‌?
b) ஆழ்வார்கள்‌ பத்து பேர்‌?
c) ஆழ்வார்கள்‌ தங்கும்‌ இடம்‌?
d) ஆழ்வார்கள்‌ பாடிய பாடல்‌?
a) ஆழ்வார்கள்‌ எத்தனை பேர்‌?

25) சரியான வினைச்சொல்லைத்‌ தேர்ந்தெடு:
a) அறநெறிச்சாரம்‌ என்பதன்‌ பொருள்‌ என்ன?
b) அறநெறிச்சாரம்‌ அறிவுடையது?
c) அறநெறிச்சாரம்‌ விளக்கம்‌ தருவது?
d) அறநெறிச்சாரம்‌ பொருள்‌ அறிவது?
a) அறநெறிச்சாரம்‌ என்பதன்‌ பொருள்‌ என்ன?

26) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு. கூவல்‌ என்று அழைக்கப்படுவது –
a) எதனால்‌ எது
b) எதற்கு
c) எது
d) எவை
c) எது

27) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு கண்ணி என்பதன்‌ விளக்கம்‌ ————
a) யாது
b) எவை
c) யாவை
d) எது
a) யாது

28) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு : பொய்கையாழ்வார்‌ ———— பாமாலை சூட்டுகிறார்‌?
a) எதற்காக
b) என்ன
c) எவற்றை
d) எங்கு
a) எதற்காக

29) சரியான சொல்‌ எது ? பெண்ணுக்குரிய கடமை ————
a) யார்‌?
b) யாது?
c) ஏன்‌?
d) எப்படி?
b) யாது?

30) ஜெயகாந்தன்‌ சிறுகதைகள்‌ இருக்கிறதா? என்று நூலகரிடம்‌ வினவுதல்‌ – இது எவ்வகை வினா?
a) கொடை வினா
b) கொளல்‌ வினா
c) ஏவல்‌ வினா
d) அறிவினா
b) கொளல்‌ வினா

31) இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினவுதல்‌ என்ன வகை வினா?
a) அறிவினா
b) ஏவல்‌ வினா
c) கொடை வினா
d) ஐய வினா
d) ஐய வினா

32) வினாவின்‌ வகையைக்‌ கணடறிக ‘வீட்டில்‌ தக்காளி இல்லை. நீ கடைக்குச்‌ செல்கிறாயா?’ என்று அக்கா தம்பியிடம்‌ வினவி வேலையைச்‌ சொல்லுதல்‌
a) அறியா வினா
b) கொளல்‌ வினா
c) ஏவல்‌ வினா
d) ஐயவினா
c) ஏவல்‌ வினா

33) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு. அறநெறிச்சாரம்‌ பாடலை எழுதியவர்‌ ————
a) யார்‌?
b) என்ன?
c) எப்படி?
d) எவ்வாறு?
a) யார்‌?

34) மாணவரிடம்‌, “இந்த கவிதையின்‌ பொருள்‌ யாது”? என்று ஆசிரியர்‌ மாணவரிடம்‌ கேட்டல்‌
a) அறியா வினா
b) ஐய வினா
c) கொடை வினா
d) அறி வினா
d) அறி வினா

35) “இங்கு நகரப்‌ பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர்‌ கேட்டது எவ்வகை வினா?
a) ஐய வினா
b) அறி வினா
c) அறியா வினா
d) கொளல்‌ வினா
c) அறியா வினா

36) வினா வகைகளைக்‌ கண்டறி: “வீட்டில்‌ அரிசி இல்லை” “நீ கடைக்குச்‌ செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம்‌ வினவி வேலையைச்‌ சொல்லுதல்‌
a) ஐய வினா
b) அறி வினா
c) அறியா வினா
d) ஏவல் வினா
d) ஏவல் வினா

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham