குடும்ப விளக்கு - பாரதிதாசன் |
---|
நூல் வெளி
● குடும்ப விளக்கு, குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது; கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது; குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானதும் இன்றியமையாததும் ஆகும். ● இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. ● பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம். ● இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார். ● பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள். ● இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் 'பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்' என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. ● இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. |
சிறுபஞ்சமூலம் - காரியாசான் |
---|
நூல் வெளி
● தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம். ● ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள். அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன. இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன. ● சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான், ● மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர். ● காரி என்பது இயற்பெயர். ● ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர். ● மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது. தெரிந்து தெளிவோம் சாதனைக்கு வயது தடையன்று 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார். 11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி 'பாரதி' என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார். 15ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ. 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர். 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ. |
முத்துலெட்சுமி (1886 - 1968) |
---|
● தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
● இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். ● சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். ● சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. ● தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர். ● அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர். |
மூவலூர் இராமாமிர்தம் (1883 - 1962) |
---|
● தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி ; எழுத்தாளர்; திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.;
● தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர். ● தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது. |
பேரறிஞர் அண்ணா |
---|
நூல் வெளி
● வீட்டிற்கோர் புத்தகசாலை என்னும் இப்பகுதி பேரறிஞர் அண்ணாவின் வானொலி உரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ● இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர். ● எழுத்தாளரான அண்ணாவைத் தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைத்தனர். ● சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பெஒளி வரை பல படைப்புகளைத் தந்தவர். ● அவரது பல படைப்புகள் திரைப்படங்களாயின. தம்முடைய திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர் இவரே. ● 1935இல் சென்னை , பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார். ● ஹோம் ரூல், ஹோம்லேண்ட், நம்நாடு, திராவிடநாடு, மாலைமணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் இருந்தார். ● முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்றதும் இருமொழிச் சட்டத்தை உருவாக்கினார். ● சென்னை மாகாணத்தைத் 'தமிழ்நாடு' என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார் ● அண்ணாவின் சிறுகதைத் திறன் - ப.373 - முனைவர் பெ. குமார். |
Book Back |
---|
1. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
அ) சிறுபஞ்சமூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன. ஆ) இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்? இ) என்னண்ணே ! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை! ஈ) வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக. விடை : இ) என்னண்ணே ! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை! 2. பூவாது காய்க்கும், மலர்க்கை அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது? அ) பெயரெச்சம் , உவமைத்தொகை ஆ) எதிர்மறைப் பெயரெச்சம் , உருவகம் இ) வினையெச்சம், உவமை ஈ) எதிர்மறை வினையெச்சம் , உவமைத்தொகை விடை : ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை. 3. பொருத்தமான விடையைத் தேர்க. அ) சிறுபஞ்ச மூலம் - 1. காப்பிய இலக்கியம் ஆ) குடும்ப விளக்கு - 2. சங்க இலக்கியம் இ) சீவக சிந்தாமணி - 3. அற இலக்கியம் ஈ) குறுந்தொகை - 4. தற்கால இலக்கியம் க) அ - 3, ஆ - 4, இ - 1, ஈ - 2 உ) அ - 2, ஆ - 3, இ - 1, ஈ - 4 ங) அ - 3, ஆ - 1, இ - 4, ஈ - 2 ச) அ - 4, ஆ - 1, இ - 2, ஈ - 3 விடை : க) அ - 3, ஆ - 4, இ - 1, ஈ - 2 4) சரியான கூற்றினைத் தெரிவு செய்க. அ) 'ஆ' என்பது எதிர்மறை இடைநிலை. ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு. இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம். 1. ஆ, இ சரி; அ தவறு 2. அ, இ, சரி; ஆதவறு 3. மூன்றும் சரி 4. மூன்றும் தவறு விடை : 3) மூன்றும் சரி 5) மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக. அ) கலைக்கூடம், திரையரங்கம், ஆடுகளம் , அருங்காட்சியகம் ஆ) கடி , உறு, கூர், கழி இ) வினவினான், செப்பினான் , உரைத்தான் , பகன்றான் ஈ) இன், கூட, கிறு, அம்பு விடை : ஈ) இன், கூட, கிறு, அம்பு |
இலக்கணக்குறிப்பு |
---|
● மாக்கடல் - உரிச்சொல்தொடர்;
● ஆக்கல் - தொழில்பெயர்; ● பொன்னே போல் - உவம உருபு; ● மலர்க்கை - உவமைத்தொகை; ● வில்வாள் - உம்மைத்தொகை; ● தவிர்க்காணா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ● அறிவார், வல்லார் - வினையாலணையும் பெயர்கள் ● விதையாமை, உரையாமை - எதிர்மறைத் தொழிற்பெயர்கள் ● தாவா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
சொல்லும் பொருளும்: |
---|
● வையம் - உலகம்;
● மாக்கடல் - பெரிய கடல், ● இயற்றுக - செய்க; ● மின்னாளை - மின்னலைப் போன்றவளை; ● மின்னாள் – ஒளிரமாட்டாள். ● தணல் - நெருப்பு; ● தாழி - சமைக்கும் கலன்; ● அணித்து - அருகில். ● தவிர்க்க ஒணா – தவிர்க்க இயலாத; ● யாண்டும் – எப்பொழுதும். ● மூவாது - முதுமை அடையாமல்; ● நாறுவ - முளைப்ப, ● தாவா - கெடாதிருத்தல் |
கலைச்சொல் அறிவோம் |
---|
● சமூக சீர்திருத்தவாதி : (Social reformer)
தன் கொள்கைகளாலும், செயல்களாலும் சமூக நிலையை மாற்ற முயற்சிப்பவர். ● தன்னார்வலர் (volunteer) தானாகவே முன் வந்து சக மனிதர்க்கும், சமூகத்துக்கும் நற்செயல் செய்பவர். ● களர் நிலம் (Saline soil) நற்பயிர்கள் வளர இயலாத பண்படாத உவர் நிலம் ● சொற்றொடர் (Sentence) ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் அமைந்து பொருள் தரும் வகையில் அமைவது |
பிழை நீக்கி எழுதுக : |
---|
1. மதீனா சிறந்த இசைவல்லுநர் வேண்டும்
விடை : மதீனா சிறந்த இசைவல்லுநராக வேண்டும் 2. நல்ல தமிழுக்கு எழுதுவோம் விடை : நல்ல தமிழில் எழுதுவோம் 3. பவள விழிதான் பரிசு உரியவள். விடை : பவளவிழிதான் பரிசுக்கு உரியவள். 4. துன்பத்தால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான் விடை : துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவன் தான் வெற்றியைப் பெறுவான். 5. குழலியும் பாடத் தெரியும் விடை : குழலிக்கும் பாடத் தெரியும் |
minnal vega kanitham