Type Here to Get Search Results !

Day 30 New syllabus அடிப்படையில் 9th தமிழ் இயல் - 4

0
ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.
குவிந்து - குவித்து; சேர்ந்து - சேர்த்து; பணிந்து - பணித்து; பொருந்து - பொருத்து; மாறு - மாற்று.
(எ.கா) விரிந்தது - விரித்தது.
அ) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
ஆ) ஆற்றில் அடித்து வந்த மணல் குவிந்தது; வாங்கிய மணலை வீட்டுக்கு முன்பு குவித்து வைத்தோம்.
இ) கையில் காசு சேர்ந்தது; சேர்ந்த காசுகளைச் சிறுசேமிப்பில் சேர்த்து வைத்தோம்.
ஈ) ஆசிரியர் சொல்லுக்கு மாணவர்கள் பணிந்து நடந்தனர். விடுமுறையில் இன்னின்ன பாடங்களைப் படித்து வருமாறு பணித்திருக்கிறார்.
உ) பின்வரும் சொற்களைப் பின்குறித்த பிறசொற்களோடு பொருந்துமாறு பொருத்திக் காட்டுக.
ஊ) பிறருடைய தீயவழியில் இருந்து நீ மாறு; அவர்களை உன் வழிக்கு மாற்று.

கலைச்சொல் அறிவோம்
ஒளிப்படி இயந்திரம் (Photo copier)
ஜெராக்ஸ் (Xerox) (ஒளி நகல்)
சீரோகிராஃபி (Xerography)
எழுத்துமுறை (dry writing)
தொலைநகல் இயந்திரம் (Fax)
பான்டெலிகிராஃப் (Pantelegraph)
காமா ஃபேக்ஸ் (Gamma Fax)
தானியங்கிப் பண இயந்திரம் (Automated Teller Machine)
அட்டை தேய்ப்பி இயந்திரம் (Swiping Machine)
கட்டணம் செலுத்தும் கருவி (payment terminal)
விற்பனைக் கருவி (point of sale terminal)
சில்லு (chip)
திறன் அட்டைகளாக (smart cards)
வருடப்படுகிறது (scanning)
ஆளறிசோதனைக் கருவி (Biometric Device)
வானூர்தியியல் (Aeronautics)
வான்பயண மின்னணுவியல் (Avionics)
கூட்டமைப் பொருள்கள் (Composites)
திறன்பேசி (Smart phones)
ஆய்வுப் பயண ஊர்தி இறங்குதலை (exploration vehicle lander)
ரோவர் (rover) எனப்படும் ஆராயும் ஊர்தி
இசை (Tune)
கலைச்சொல் அறிவோம்
ஏவு ஊர்தி – Launch Vehicle
பதிவிறக்கம் - Download
ஏவுகணை - Missile
பயணியர் பெயர்ப் பதிவு - PNR (Passenger Name Record)
கடல்மைல் - Nautical Mile
மின்னணு இயந்திரங்கள் - Electronic devices
காணொலிக் கூட்டம் - Video Conference

இலக்கணக்குறிப்பு
பண்பும் அன்பும், இனமும் மொழியும் - எண்ணும்மைகள்.
சொன்னோர் - வினையாலணையும் பெயர்.
உணர்ந்தோர் - வினையாலணையும் பெயர்.

பின்வரும் பத்தியில் இடம்பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை எழுதுக.
நாக்குதான் ஐம்புலன்களிலேயே ரொம்ப வீக்கு! அதற்கு நான்கு ஆதார ருசிகள்தாம் தெரியும். எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரையின் தித்திப்பு, காபியின் கசப்பு, உப்பு. இவை தவிர ஸேவரி என்று சொல்கிற டேஸ்ட் எல்லாம் இந்த நான்கு ஆதார ருசிகளின் கலப்புதான். இந்த ருசிகளைத் தொட்டு அறிய நாக்கில் வெவ்வேறு இடங்கள் உண்டு. தித்திப்பு - நுனி நாக்கு , உப்பு - பரவலாக, குறிப்பாக நுனியில் . கசப்பு - உள்நாக்கு. புளிப்பு , ஸேவரி - நாக்கின் வலது - இடது புறங்கள்! ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் 9,000 சுவை அரும்புகள் உண்டு . அலட்டல் வேண்டாம். குழந்தையின் நாக்குடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. ஏதாவது மருந்தை நாக்கில் தொட்டால் குழந்தைகள் என்னமாக எக்ஸ்பிரஷன் காட்டுகின்றன! சுவைக்கு வாசனையும் சேரவேண்டும். இரண்டும் ஒத்துழைத்தால் தான் பாதாம் அல்வா, ஐஸ்க்ரீம் போன்றவற்றை ரசிக்க முடியும். மூக்கைப் பிடித்துக் கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுப் பாருங்கள். ஜில்லென்று இருக்கும். அவ்வளவே. கூடவே சூடும், உணவின் தோற்றமும் முக்கியம். மூக்குக்கு மொத்தம் ஏழு வாசனைகள். கற்பூர வாசனை, பெப்பர்மிண்ட் வாசனை, மலர்களின் வாசனை, மஸ்க் என்னும் அரபு சேக் செண்ட் வாசனை, ஈத்தர் அல்லது பெட்ரோல் வாசனை , அழுகிய முட்டை வாசனை, காட்டமான அமில வாசனை. இந்த ஏழு வாசனைகளின் கலப்புகளால் நம்மால் ஆயிரக்கணக்கான வாசனைகளை உணர முடிகிறது. (ஏன்? எதற்கு? எப்படி? - சுஜாதா)
சொற்கள் - தமிழாக்கம்
1. ரொம்ப வீக்கு - நிரம்ப சபலம்
2. ஆதார ருசிகள் - அடிப்படைச் சுவைகள்
3. காபி - குழம்பி, கோப்பி, கொட்டை வடிநீர்
4. ஸேவரி - காரசுவையுண்டி
5. டேஸ்ட் - சுவை
6. ருசிகள் - சுவைகள்
7. சராசரி - ஏறத்தாழ
8. அலட்டல் - மிகைப்படுத்திச் சொல்லுதல்
9. எக்ஸ்பிரஷன் - விளைவுகள்
10. வாசனை - நறுமணம்
11. அல்வா - இனிப்புக்களி
12. ஐஸ்க்ரீம் - பனிக்குழைவு
13. ரசிக்க - களிக்க
14. ஜில்லென்று - குளிர்ச்சி என்று
15. கற்பூர வாசனை - சூடம் நறுமணம்
16. பெப்பர்மிண்ட் வாசனை - புதினாச்சுவையுள்ள மிட்டாய்கள்
17. மஸ்க் அரபுசேக் செண்ட் - ஆண்மானிலிருந்து எடுக்கப்பெற்ற வாசனைத் திரவியம்
18. ஈத்தர் - தீப்பற்றக் கூடிய பொருள்.
19. பெட்ரோல் வாசனை - கல்நெய் (கன்னெய்)
20. அமில வாசனை - காடிப் புளியம்.

ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக. (விலங்கு, எழுதி, அகல், கால், அலை)
அ) எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
ஆ) எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் கால் ஐ வை.
இ) கைப்பொருளைக் கடல் அலை யில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
ஈ) வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
உ) எழுத்தாணி கொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

அகராதியில் காண்க.
இமிழ்தல், இசைவு, துவனம், சப்பலை, துகலம்
விடை:
இமிழ்தல் - இனிதாதல், ஒலித்தல், கக்குதல்
இசைவு - இணக்கம், சம்மதி, பொருத்து தகுதி, ஏற்றது, உடன்பாடு, ஓட்டம்
துவனம் - அக்கினி, நெருப்பு
சபலை - இலக்குமி, திப்பிலி, நா, மின்னல், வேசி
துகலம் – பங்கு

கருத்துரையிடுக

0 கருத்துகள்