திருக்குறள் |
---|
நூல் வெளி
● உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல், திருக்குறள். ● இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை இந்நூல். ● இது முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ● தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. ● இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். ● இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ● இந்நூலைப் போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை. ● உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள். ● தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல். ● பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். ● இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்கள் உண்டு. |
கலைச்சொல் அறிவோம் |
---|
● அகழாய்வு - Excavation
● நடுகல் - Hero Stone ● புடைப்புச் சிற்பம் - Embossed sculpture ● கல்வெட்டியல் - Epigraphy ● பண்பாட்டுக் குறியீடு - Cultural Symbol ● பொறிப்பு - Inscription |
இலக்கணக் குறிப்பு |
---|
● தோரணவீதியும், தோமறு கோட்டியும் - எண்ணும்மைகள்
● காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம் - இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கத் தொகைகள் ● மாற்று மின், பரப்புமின் - ஏவல் வினைமுற்றுகள் ● உறுபொருள் - உரிச்சொல்தொடர் ● தாழ்பூந்துறை - வினைத்தொகை ● பாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை ● நன்பொருள், தண்மணல், நல்லுரை - பண்புத்தொகைகள் |
சொல்லும் பொருளும் |
---|
● சமயக் கணக்கர் - சமயத் தத்துவவாதிகள், ● பாடைமாக்கள் - பல மொழிபேசும் மக்கள் கும்கன்றுகடி, ● தோம் - தற்கும், கோட்டி மன்றம், பொலம் போன், வேதிகை நின்னை , தாம்கரண், ● தாலம்-மாலை, ● கரலிகைக் கொடி - சிறு சிறு கொடியாகப் பல கோடிகள் கட்டியது. ● காமுன்று கொடி - கொம்புகளில் கட்டும் கொடி, ● விவோதம் - நணியாலான கொடி, ● வரி- மழை, செங்கும்சினம், கலாம் போர், இருக்கு. ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு) |
மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக. |
---|
விடை:
● எ. கா : மேலும் கீழும்: ஆரிப் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான். ● 1. மேடும் பள்ளமும்: சேரி மக்களின் வாழ்க்கை மேடும் பள்ளமும் கொண்டதாக இருக்கிறது. ● 2. நகமும் சதையும்: மும்தாஜும் தமிழரசியும் நகமும் சதையும் போல இணைபிரியாத் தோழிகள். ● 3. முதலும் முடிவும்: இது போன்ற தவறுகள் முதலும் முடிவும் ஆக இருக்கட்டும் என்று ஆசிரியர் அவர்களிருவரையும் எச்சரித்தார். ● 4. கேளிக்கையும் வேடிக்கையும்: எங்கள் ஊர்த் திருவிழா கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்ததாக இருந்தது. ● 5. கண்ணும் கருத்தும்: அன்பழகன் கண்ணும் கருத்துமாகப் படித்துத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான். |
பொன்மொழிகளை மொழி பெயர்க்க. |
---|
1. A nation's culture resides in the hearts and in the soul of its people -Mahatma Gandhi ● நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். 2. The art of people is a true mirror to their minds - Jawaharlal Nehru ● மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி 3. The biggest problem is the lack of love and charity - Mother Teresa ● அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது. 4. You have to dream before your dreams can come true - A.P.J. Abdul Kalam ● உங்கள் கனவு நனவாகும் வரை, கனவு காணுங்கள். 5. Winners don't do different things; they do things differently - Shiv Khera ● வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும்வித்தியாசமாக செய்கிறார்கள். |
Book Back |
---|
1. பொருந்தாத இணை எது?
அ) ஏறுகோள் - எருதுகட்டி ஆ) திருவாரூர் – கரிக்கையூர் இ) ஆதிச்சநல்லூர் - அரிக்கமேடு ஈ) பட்டிமன்றம் - பட்டி மண்டபம் விடை: ஆ) திருவாரூர் – கரிக்கையூர் 2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக. அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல். ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான. இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல். ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல். விடை: ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் 3. சொற்றொடர்களை முறைப்படுத்துக. அ) ஏறுதழுவுதல் என்பதை ஆ) தமிழ் அகராதி இ) தழுவிப் பிடித்தல் என்கிறது i) ஆ, அ, இ ii) ஆ, இ, அ iii) இ, ஆ, அ iv) இ, அ, ஆ விடை : i) ஆ, அ, இ 4. ஐம்பெருங்குழு, எண்பேராயம் - சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம் அ) திசைச்சொற்கள் ஆ) வடசொற்கள் இ) உரிச்சொற்கள் ஈ) தொகைச்சொற்கள் விடை: ஈ) தொகைச்சொற்கள் |
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க. |
---|
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று காங்கேயம்' கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேயம் மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வினாக்கள்: 1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக. அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை? ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது? இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது? ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது? விடை: காங்கேயம் இனக் காளைகள் 2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக. அ) கர்நாடகம் ஆ) கேரளா இ) இலங்கை ஈ) ஆந்திரா விடை: இ) இலங்கை 3. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன. அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன. ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன. இ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன. ஈ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன. விடை: அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன. 4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகைத் தொடர்? அ) வினாத் தொடர் ஆ) கட்டளைத்தொடர் இ) செய்தித்தொடர் ஈ) உணர்ச்சித்தொடர் விடை: இ) செய்தித்தொடர் |
bbbbbbbbbbbbbbb |
---|
பொருள் எழுதித் தொடரமைக்க. கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை; அலை : கடலலை - இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாவுள்ளது. அழை : வரவழைத்தல் - என் நண்பர்களை வரவழைத்துள்ளேன் கரை : ஆற்றின் ஓரம் - ஆற்றங்கரையில் தென்னை மரங்கள் செழித்து வளர்ந்து உள்ளன. கறை: படிவது கறை - சட்டையில் கறை படிந்துள்ளது. குளவி : பூச்சி வகைகளுள் ஒன்று - வாசல் நிலைப்படியில் குளவி : கூடுகட்டியிருக்கிறது. குழவி : குழந்தை - குழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்) வாளை : மீன்களில் ஒருவகை - நீர் நிலைகளில் வாளை மீன் துள்ளிக் குதித்தது. வாழை : வாழை மரம் - திருமணப் பந்தலில் வாழை மரங்கள் கட்டினர். பரவை : பரந்துள்ள கடல் - மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றூர் பரவை. பறவை : பறப்பவை - காலைப் பொழுதில் பறவைகள் பாடும். மரை : மான், தாமரை - தாமரை நீர் நிலையில் மலரும். மறை : வேதம் - வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன. |
அகராதியில் காண்க. |
---|
இயவை, சந்தப்பேழை, சிட்டம், தகழ்வு, பௌரி இயவை : வழி, மூங்கில் அரிசி, துவரை, தோரை நெல், காடு சந்தப்பேழை : சந்தனப் பெட்டி சிட்டம் : நூல் சிட்டம், எரிந்து கருகியது, பெருமை அறிவு, நீதி, உயர்ந்து தகழ்வு : அகழ், அறிவு, உண்கலம் பௌரி : பெரும் பண்வகை. |
பொருள்தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக. |
---|
கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள் தரும் வகையில் ஒரு சொல்லில் தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக. இறுதித் தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.
காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழைக் மின்கம்பிகள்.
விடை: 1. வைக்காதீர்கள் 2. மழைக் காலங்களில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள் 3. மழைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள் 4. மழைக் காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது கவனக் குறைவுடன் காலை வைக்காதீர்கள் |
minnal vega kanitham