இலக்கணக்குறிப்பு |
---|
● வெந்து, வெம்பி, எய்தி - வினையெச்சங்கள்
● மூடுபனி - வினைத்தொகை, ● ஆடுங்கிளை – பெயரெச்சத் தொடர் ● கருங்குவளை, செந்நெல் - பண்புத் தொகைகள். ● விரிமலர் - வினைத்தொகை ● தடவரை - உரிச்சொல் தொடர் ● மூதூர், நல்லிசை, புன்புலம் - பண்புத்தொகைகள்; ● நிறுத்தல் - தொழிற்பெயர் ; ● அமையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ● நீரும் நிலமும், உடம்பும் உயிரும் - எண்ணும்மைகள்; ● அடு போர் - வினைத்தொகை. ● கொடுத்தோர் - வினையாலணையும் பெயர். |
தமிழ்ஒளி |
---|
நூல் வெளி
● கவிஞர் தமிழ்ஒளி (1924-1965) புதுவையில் பிறந்தவர். ● பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர்: ● மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர். நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை. ● இப்பாடப்பகுதி தமிழ் ஒளியின் கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. அறிவை விரிவு செய் 1. அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன் 2. தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன் 3. தண்ணீர் தேசம் - வைரமுத்து 4. வாய்க்கால் மீன்கள் - வெ. இறையன்பு 5. மழைக்காலமும் குயிலோசையும் - மா. கிருஷ்ணன் |
கலைச்சொல் அறிவோம் |
---|
● குமிழிக் கல் - Conical Stone
● நீர் மேலாண்மை - Water Management ● பாசனத் தொழில்நுட்பம் - Irrigation Technology ● வெப்ப மண்டலம் - Tropical Zone |
சொல்லும் பொருளும் |
---|
● குந்த - உட்கார, கந்தம் - மணம்
● மிசை - மேல் , விசனம் – கவலை ● மா - வண்டு; ● மது - தேன் ; ● வாவி - பொய்கை. ● வளர் முதல் - நெற்பயிர் ; ● தரளம் - முத்து; ● பணிலம் - சங்கு; ● வரம்பு - வரப்பு. ● கழை - கரும்பு ; ● கா - சோலை ; ● குழை - சிறு கிளை; ● அரும்பு - மலர் மொட்டு; ● மாடு - பக்கம்; ● நெருங்கு வளை - நெருங்குகின்ற சங்குகள் ; ● கோடு - குளக்கரை. ● ஆடும் - நீராடும் ; ● மேதி - எருமை ; ● துதைந்து எழும் - கலக்கி எழும்; ● கன்னி வாளை - இளமையான வாளைமீன். ● சூடு - நெல் அரிக்கட்டு ; ● சுரிவளை - சங்கு ; ● வேரி - தேன். ● பகடு - எருமைக்கடா ; ● பாண்டில் - வட்டம் ; ● சிமயம் - மலையுச்சி. ● நாளிகேரம் - தென்னை ; ● நரந்தம் - நாரத்தை ; ● கோளி - அரசமரம் ; ● சாலம் - ஆச்சா மரம் ; ● தமாலம் - பச்சிலை மரம்; ● இரும்போந்து - பருத்த பனைமரம் ; ● சந்து - சந்தன மரம் ; ● நாகம் - நாகமரம் ; ● காஞ்சி - ஆற்றுப்பூவரசு ● யாக்கை - உடம்பு, ● புணரியோர் - தந்தவர், ● புன்புலம் - புல்லிய நிலம், ● தாட்கு - முயற்சி, ஆளுமை; ● தள்ளாதோர் இவண் தள்ளாதோரே - குறைவில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள். தெரிந்து தெளிவோம் ● அகழி, ஆழிக்கிணறு, உறைக்கிணறு, அணை, ஏரி, குளம், ஊருணி, கண்மாய், கேணி - எனப் பல்வேறு பெயர்களில் நீர்நிலைகள் உள்ளன. |
அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுக. |
---|
1. Every flower is a Soul blossoming in nature - Gerard De Nerval
விடை : ● மொழி பெயர்க்க : எல்லாப் பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது. ● பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. 2. Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek விடை : ● மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனமே முதலில் எனக்குப் பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான். ● பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும். 3. An early morning walk is a blessing for the whole day - Henry David Thoreau விடை : ● மொழி பெயர்க்க : அதிகாலை நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும். ● பழமொழி : நன்றாய்த் தொடங்கும் செயல் நன்றாகவே முடியும். (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை. 4. Just living is not enough .... one must have sunshine, freedom and a little flower - Hans Christian Anderson விடை : ● மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும். ● பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும், வெறும் வாழ்வு வீணே. பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க. 1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல. விடை : ● நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல நல்லார் சொன்ன அறிவுரை தீயவர்க்கும் போய்ச் சேர்ந்தது. 2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும். விடை : ● நெடுஞ்சாலையில் அடிபட்டுக்கிடந்தவரை வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் காப்பாற்றியது தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் எனத் தெரிந்து கொண்டேன். 3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும். விடை : ● அப்பா கூறிய அறிவுரை மூர்க்கத்தனமாகச் செயல்பட்ட என் அண்ணனையும் மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் எனத் திருத்தியது. 4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது. விடை : ● தேர்வை முடித்துவிட்டு கிரிக்கெட் போட்டிக்குச் செல்லலாம் என்று அப்பா சொன்னதைக் கேட்டு கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது எனப் புரிந்து கொண்டேன். |
பிழை நீக்கி எழுதுக |
---|
1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது. விடை : ● சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார். 2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள். விடை : ● மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான். 3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன: விடை : ● மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது. 4 .நீலனும் மாலனும் அவசர காலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம். விடை : ● நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள். 5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான். விடை : ● சூறாவளியின் போது மேல் மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பித்தனர். |
Book Back |
---|
1) பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.
● அ) மனிதனையும் விலங்குகளையும் (வேறு) வேறுபடுத்துவது மொழியாகும். ● ஆ) திராவிட மொழிகள் சில, பொதுப்பண்புகளை (பெறு) பெற்றிருக்கின்றன. ● இ) காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ். ● ஈ) என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) தேடிக் கொண்டிருக்கிறேன். 2) ‘மிசை' - என்பதன் எதிர்ச்சொல் என்ன? அ) கீழே ஆ) மேலே இ) இசை ஈ) வசை விடை : அ) கீழே 3) பொருத்தமான விடையை எடுத்து எழுதுக. கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ......... அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ..... அ) வந்தான், வருகிறான் ஆ) வந்துவிட்டான், வரவில்லை இ) வந்தான், வருவான் ஈ) வருவான், வரமாட்டான் விடை : ஆ) வந்துவிட்டான், வரவில்லை |
minnal vega kanitham