மரபுத்தொடர்கள் |
---|
அறிந்து பயன்படுத்துவோம்.
மரபுத்தொடர்கள், • நாம் பேச்சிலும் எழுத்திலும் சில மரபுத்தொடர்கனைப் பயன்படுத்துகிறோம். • அத்தொடர்கள் நம்முடைய கருத்துகளுக்கு வலுச்சேர்க்கின்றன. • சில மரபுத்தொடர்களுக்கு நேரடிப்பொருள் கொள்ளாமல், அவற்றின் உட்பொருளை அறிந்து பயன்படுத்த வேண்டும். (எ.கா.) 1. திண்டுக்கல், பூக்கள் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நகரமாக விளங்குகிறது. கொடிகட்டிப் பறத்தல் - புகழ்பெற்று வினங்குதல் 2. அவர் ஓர் அவசரக்குடுக்கை. அவசரக்குடுக்கை - எண்ணிச் செயல்படாமை பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக. 1. ஆயிரங்காலத்துப் பயிர் – அ) இயலாத செயல் 2. கல்லில் நார் உரித்தல் – ஆ) ஆராய்ந்து பாராமல் 3. கம்பி நீட்டுதல் – இ) இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இருக்காது 4. கானல்நீர் – ஈ) நீண்டகாலமாக இருப்பது 5. கண்ணை மூடிக்கொண்டு – உ) விரைந்து வெளியேறுதல் 1. ஆயிரங்காலத்துப் பயிர் – ஈ) நீண்டகாலமாக இருப்பது 2. கல்லில் நார் உரித்தல் – அ) இயலாத செயல் 3. கம்பி நீட்டுதல் – உ) விரைந்து வெளியேறுதல் 4. கானல்நீர் – இ) இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இருக்காது 5. கண்ணை மூடிக்கொண்டு – ஆ) ஆராய்ந்து பாராமல் பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக. 1. வாழையடி வாழையாக
முகலாய மன்னர்கள் வாழையடி வாழையாக இந்தியாவை ஆட்சி செய்தனர்.
2. முதலைக்கண்ணீர்
மாலினி முதலைக்கண்ணீர் வடித்து தான் நினைத்தகாரியத்தை சாதித்துக்கொண்டாள்.
3. எடுப்பார் கைப்பிள்ளை
சீதையைப் பொறுத்த மட்டில் இராமன் ஓர் எடுப்பார் கைப்பிள்ளை; சொந்தச் சிந்தனை அற்றவன்.
|
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் |
---|
1) 'அக்களத்து' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அ + களத்து ஆ) அக் + களத்து இ) அக்க + அளத்து ஈ) அம் + களத்து [விடை : அ) அ + களத்து]
2) கதிர் + ஈௗ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) கதிரென ஆ) கதியீன இ) கதிரீன ஈ) கதிரின்ன [விடை : இ) கதிரீன]
3)'வாசலெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) வாசல் + எல்லாம் ஆ) வாசல் + எலாம் இ) வாசம் + எல்லாம் ஈ) வாசு + எல்லாம் [விடை : அ) வாசல் + எல்லாம்]
4) 'பெற்றெடுத்தோம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) பெறு + எடுத்தோம் ஆ) பேறு + எடுத்தோம் இ) பெற்ற + எடுத்தோம் ஈ) பெற்று + எடுத்தோம். [விடை : ஈ) பெற்று + எடுத்தோம்]
5) கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) கால்லிறங்கி ஆ) காலிறங்கி இ) கால் இறங்கி ஈ) கால்றங்கி [விடை : ஆ) காலிறங்கி]
|
கலைச்சொல் அறிவோம். |
---|
ஆங்கிலச் சொற்கள் - தமிழ்ச்சொற்கள்
❖ டெக்ஸ் - ஜவுளியகம் அல்லது துணியகம் ❖ போன் - தொலைபேசி ❖ லாரி – சரக்குந்து ❖ டெம்போ - விசை வேக உந்து ❖ கார் - மகிழுந்து ❖ ஷிப்ட் - முறை ❖ பீம் - தறிக்கட்கடை ❖ டிசைன் - வடிவமைப்பு ❖ ஜக் கார்டுகள் - சித்திர நெசவு ❖ பெட்ஷீட் - படுக்கை விரிப்பு ❖ டீ - தேநீர் ❖ டேப் - ஒலிப்பேழை ❖ டாட்டா - போய் வருக கலைச்சொல் அறிவோம். 1. நூல் – Thread 2. தறி – Loom 3. பால்பண்ணை – Dairy farm 4. தோல் பதனிடுதல் – Tanning 5. தையல் – Stitch 6. ஆலை – Factory 7. சாயம் ஏற்றுதல் – Dying 8. ஆயத்த ஆடை – Ready made |
சொல்லும் பொருளும் |
---|
❖ வாரி – வருவாய்
❖ எஞ்சாமை – குறைவின்றி ❖ முட்டாது - தட்டுப்பாடின்றி ❖ ஓட்டாது - வாட்டம் ❖ வைகுக - தங்குக ❖ ஓதை - ஓசை ❖ வெரீஇ - அஞ்சி ❖ யாணர் - புதுவருவாய். 1) கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் அ) பெருமழை இ) எடைமிகுந்த மழை ஆ) சிறு மழை ஈ) எடை குறைந்த மழை [விடை : அ) பெருமழை] 2) ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு .......... அ) காவிரி அ) பவானி இ) நொய்யல் ஈ) அமராவதி [விடை : ஈ) அமராவதி] |
வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
அ) நீலகிரி ஆ) கரூர் இ) கோயம்புத்தூர் ஈ) திண்டுக்கல் [விடை : இ) கோயம்புத்தூர்] கோடிட்ட இடங்களை நிரப்புக. 1. 'மாங்கனி நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் சேலம் . 2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் சின்னாளப்பட்டி (திண்டுக்கல்) 3. சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது. 4. பின்னலாடை நகரமாக திருப்பூர் விளங்குகிறது. |
minnal vega kanitham