Type Here to Get Search Results !

Day 22 New syllabus அடிப்படையில் 8th தமிழ் இயல் - 4

0
கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
❖ மா – மாவிலை, மாமரம், மாங்காய்
❖ தேன் – மலர்த்தேன், தேன்சிட்டு, தேன்கூடு
❖ மலர் – தேன்மலர்
❖ செம்மை – சேயிலை, செங்குருவி, செந்தேன்
❖ சிட்டு – சிட்டுக்குருவி, தேன்சிட்டு
❖ கனி – மாங்கனி, கனிமரம், தேன்கனி
❖ குருவி – சிட்டுக்குருவி, குருவிக்கூடு
❖ இலை – மாவிலை
❖ காய் – மாங்காய், காய்கனி
❖ கூடு – தேன்கூடு, குருவிக்கூடு
❖ முட்டை – குருவிமுட்டை
❖ மரம் – மாமரம், செம்மரம்

நிறுத்தக்குறிகள்
காற்புள்ளி (,)
1. பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.
(எ.கா) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.
2. கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.) அன்புள்ள நண்பா,
3. வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்.
(எ.கா.) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.
4. மேற்கோள் குறிகளுக்கு (*) முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.) குழந்தை நிலவைப் பார்த்து,"நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.
5. முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும்.
(எ.கா)ச.ஆண்டான், எஸ் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.
அரைப்புள்ளி (;)
1. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.) கரிகாலன் சுங்கை வரை படையெடுத்துச் சென்றான்; கனக விசயருடன் போரிட்டான்.
2. உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.) நல்லவன் வாழ்வான், தீயவன் தாழ்வான்.
முக்காற்புள்ளி ( : )
சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற்புண்ணி வரும்.
(எ.கா.) முத்தமிழ் இயல், இசை, நாடகம்.
முற்றுப்புள்ளி (.)
1. சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.
2. சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) திரு. வி.க. மா.க.அ. ஊ.ஒ.ந.நி.பள்ளி
3. பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) நெ.து. சுந்தரவடிவேலு
வினாக்குறி ( ? )
வினாப்பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி இட வேண்டும்.
(எ.கா) சேக்கிழார் எழுதிய நூல் எது?
வியப்புக்குறி ( ! )
மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
(எ.கா) தமிழின் இனிமைதான் என்னே! - வியப்பு
பாம்பு: பாம்பு! - அச்சம்
அந்தோ! இயற்கை அழிகிறதே! - அவலம்
ஒற்றை மேற்கோள் குறி (' ')
தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போதும், இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும்போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்.
(எ.கா.) 'நல்ல' என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
● கூட்டத்தின் தலைவர், "அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது
'தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்" என்று அறிவித்தார்.
இரட்டை மேற்கோள்குறி (“ “)
நேர்கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும்.
(எ.கா) திரு. வி.க. மாணவர்களிடம்," தமிழ்க் காவியங்களைப் படியுங்கள்; இன்பம் நுகருங்கள்" என்று கூறினார்.

பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
1. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.
2. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.
3. தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது
தமிழ்மொழி செம்மையானது, வலிமையானது, இளமையானது.
4. கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்
கபிலன், “தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேட்டான்.
5. திரு வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது
திரு. வி. க. எழுதிய ‘பெண்ணின் பெருமை‘ என்னும் நூல் புகழ்பெற்றது.
பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம் மாவட்ட நூலகம் கினை நூலகம் ஊரிப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்.
விடை
‘நூல் பல கல்‘ என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகமாகும். நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். ‘எனக்கு பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்‘ என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்! அறிவு வளம் பெறுவோம்!

திரு.வி.க.
நூல் வெளி
● திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்;
● சிறந்த மேடைப் பேச்சாளர்:
தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர்.
● இவர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
1) 'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கலன் + லல்லால்
ஆ) கலம் + அல்லால்
இ) கலன் + அல்லால்
ஈ) கலன் + னல்லால்
[விடை : இ) கலன் + அல்லால்]
2) 'கோயிலப்பா ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கோ + அப்பா
ஆ) கோயில் + லப்பா
இ) கோயில் + அப்பா
ஈ) கோ + இல்லப்பா
[விடை : இ) கோயில் + அப்பா]
3) பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) பகைவென்றாலும்
ஆ) பகைவனென்றாலும்
இ) பகைவன்வென்றாலும்
ஈ) பகைவனின்றாலும்
[விடை : ஆ) பகைவனென்றாலும்]

கலைச்சொல் அறிவோம்.
❖ நிறுத்தக்குறி - Punctuation
❖ அணிசலன் - Ornament
❖ திறமை - Talent
❖ மொழிபெயர்ப்பு - Translation
❖ விழிப்புணர்வு - Awareness
❖ சீர்திருத்தம் - Reform

சொல்லும் பொருளும்
❖ கலன் - அணிகலன்
❖ முற்ற – ஒளிர
❖ தடம் - அடையாளம்
❖ அகம்பாவம் – செருக்கு

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.

கருத்துரையிடுக

0 கருத்துகள்