பாரதிதாசன் |
---|
நூல் வெளி
• கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன். • இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர். • பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். • இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது. • பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. |
நாலடியார் |
---|
நூல் வெளி
• நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். • இது நானூறு வெண்பாக்களால் ஆனது. • இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர். • திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. • இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம். |
பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக. |
---|
ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி
(எ.கா.) ஆறு - ஈ ஆறு கால்களை உடையது. தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது. 1. விளக்கு - பாடலின் பொருள் விளங்கியது. அகல் விளக்கைக் கோவிலில் ஏற்றுவர். 2. படி - வாயிற் படியில் அமராதே! இளமையிலேயே படிக்க வேண்டும். 3. சொல் - மூத்தோர் சொல் அமுதம். தஞ்சை சொல்(நெல்) வளம் மிகுந்தது. 4. கல் - காய்த்த மரம் கல் அடிபடும். இளமையில் கல். 5. மாலை - மாலைநேரத்தில் விளையாட வேண்டும். பூமாலை தொடுத்தாள். 6. இடி - இடி மின்னலுடன் மழை பெய்தது. மரத்தின் மீது வண்டி இடித்துவிட்டது. |
கலைச்சொல் அறிவோம் |
---|
• கோடை விடுமுறை - Summer Vacation
• குழந்தைத் தொழிலாளர் - Child Labour • பட்டம் - Degree • கல்வியறிவு - Literacy • நீதி - Moral • சீருடை - Uniform • வழிகாட்டுதல் - Guidence • ஒழுக்கம் - Discipline |
ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும் |
---|
தெரிந்து தெளிவோம்
ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும் • 1. ஆ- பசு • 2. ஈ- கொடு • 3. ஊ- இறைச்சி • 4. ஏ- அம்பு • 5. ஐ- தலைவன் • 6. ஓ - மதகுநீர் தாங்கும் பலகை • 7. கா- சோலை • 8. கூ- பூமி • 9. கை- ஒழுக்கம் • 10. கோ-அரசன் • 11. சா- இறந்துபோ • 12. சீ- இகழ்ச்சி • 13. சே- உயர்வு • 14. சோ- மதில் • 15. தா - கொடு • 16. தீ- நெருப்பு • 17. தூ- தூய்மை • 18. தே- கடவுள் • 19. தை- தைத்தல் • 20. நா- நாவு • 21. நீ- முன்னிலை ஒருமை • 22. நே- அன்பு • 23. நை- இழிவு • 24. நோ வறுமை • 25. பா- பாடல் • 26. பூ- மலர் • 27. பே - மேகம் • 28. பை- இளமை • 29. போ- செல் • 30. மா- மாமரம் • 31. மீ- வான் • 32. மூ - மூப்பு • 33. மே- அன்பு • 34. மை- அஞ்சனம் • 35. மோ- மோத்தல் • 36. யா- அகலம் • 37. வா- அழைத்தல் • 38. வீ- மலர் • 39. வை- புல் • 40. வௌ - கவர் • 41. நொ- நோய் • 42 . து- உண். நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ________ அ) 40 ஆ) 42 இ) 44 ஈ) 46 [விடை : ஆ. 42]
|
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் |
---|
1) ‘ஏடெடுத்தேன்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) ஏடே + தேன் ஆ) ஏட்டு + எடுத்தேன் இ) ஏடு + எடுத்தேன் ஈ) ஏ + டெடுத்தேன் [விடை : இ. ஏடு + எடுத்தேன்]
2) 'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ அ) துயின்று + இருந்தார் ஆ) துயில் + இருந்தார் இ) துயின்றி + இருந்தார் ஈ) துயின் + இருந்தார் [விடை : அ. துயின்று + இருந்தார்]
3) என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________ அ) என்றுஉரைக்கும் ஆ) என்றிரைக்கும் இ) என்றரைக்கும் ஈ) என்றுரைக்கும் [விடை : ஈ. என்றுரைக்கும்]
4) ‘வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________ அ) வாய்த்து + ஈயின் ஆ) வாய் + தீயின் இ) வாய்த்து + தீயின் ஈ) வாய் + ஈயீன் [விடை : அ. வாய்த்து + ஈயின்]
5)'கேடில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ அ) கேடி + இல்லை ஆ) கே + இல்லை இ) கேள்வி + இல்லை ஈ) கேடு + இல்லை [விடை : ஈ. கேடு + இல்லை]
6) எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________ அ) எவன் ஒருவன் ஆ) எவன்னொருவன் இ) எவனொருவன் ஈ) ஏன்னொருவன் [விடை : இ. எவனொருவன்]
7) ‘உயர்வடைவோம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ அ) உயர் + வடைவோம் ஆ) உயர் + அடைவோம் இ) உயர்வு + வடைவோம் ஈ) உயர்வு + அடைவோம் [விடை :ஈ. உயர்வு + அடைவோம்]
8) இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________ அ) இவைஎல்லாம் ஆ) இவையெல்லாம் இ) இதுயெல்லாம் ஈ) இவயெல்லாம் [விடை : ஆ. இவையெல்லாம்]
|
1) காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ________
அ) கல்வி
ஆ) காலம் அறிதல்
இ) வினையறிதல்
ஈ) மடியின்மை
[விடை : ஆ. காலம் அறிதல்]
2) ‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாடியவர் ________
அ) திருக்குறளார்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
[விடை : இ. பாரதியார்]
சொல்லும் பொருளும் |
---|
• எத்தனிக்கும் - முயலும்
• வெற்பு - மலை • கழனி - வயல் • நிகர் - சமம் • பரிதி - கதிரவன் • அன்னதோர் - அப்படிஒரு • கார்முகில் - மழைமேகம் • துயின்றிருந்தார் - உறங்கியிருந்தார் பின்வருவனவற்றுள் ‘மலை'யைக் குறிக்கும் சொல் அ) வெற்பு ஆ) காடு இ) கழனி ஈ) புவி [விடை : அ. வெற்பு]
பொருத்துக. வினா 1. கழனி - கதிரவன் 2. நிகர் - மேகம் 3. பரிதி - சமம் 4. முகில் - வயல் விடை 1. கழனி - வயல் 2. நிகர் - சமம் 3. பரிதி - கதிரவன் 4. முகில் - மேகம் • வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம் • கோட்படா - ஒருவரால் கொள்ளப்படாது • வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி கொடுத்தலும் • விச்சை - கல்வி • வவ்வார் – கவர முடியாது • எச்சம் – செல்வம் |
minnal vega kanitham