Type Here to Get Search Results !

Day 10 New syllabus அடிப்படையில் 7th தமிழ் இயல் - 1

1
வெ. இராமலிங்கனார்
நூல் வெளி
நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர்.
• இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
• காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.
மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

உடுமலை நாராயணகவி
நூல் வெளி
பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி.
• இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.
தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.
• நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
1) ‘குரலாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------
அ) குரல் + யாகும்
ஆ) குரல் + ஆகும்
இ) குர + லாகும்
ஈ) குர + ஆகும்
[விடை : ஆ) குரல் + ஆகும் ]
2) வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ----------

அ) வான்ஒலி
ஆ) வானொலி
இ) வாவொலி
ஈ) வானெலி
[விடை : ஆ) வானொலி ]
3) “இரண்டல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------

அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல
[விடை : ஈ. இரண்டு + அல்ல]
4) ‘தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------

அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்
[விடை : அ. தந்து + உதவும்]
5) ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) ஒப்புமைஇல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்புஇல்லாத
[விடை : இ. ஒப்புமையில்லாத]

சொல்லும் பொருளும்
• ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்
• குறி - குறிக்கோள்
• விரதம் – நோன்பு
• பொழிகிற – தருகின்ற
• பொருள் - செல்வம், நற்செயல்
• அச்சம் - பயம்
• அறம் - நற்செயல்
• போக்கி - நீக்கி
• ‘நெறி' என்னும் சொல்லின் பொருள் ----------
அ) வழி
ஆ) குறிக்கோள்
இ) கொள்கை
ஈ) அறம்
[விடை : அ வழி]
• ஒப்புமை - இணை
• அற்புதம் – வியப்பு
• முகில் - மேகம்
• உபகாரி - வள்ளல்
• கவி - கவிஞன் (அல்லது) புலவன்
• தென்றல் - தெற்கிலிருந்து வீசும் காற்று
• அருள் - இரக்கம்

கலைச்சொல் அறிவோம்
1. ஊடகம் - Media
2. மொழியியல் - Linguistics
3. ஒலியியல் – Phonology
4. இதழியல் - Journalism
5. பருவ இதழ் - Magazine
6. பொம்மலாட்டம் - Puppetry
7. எழுத்திலக்கணம் - Orthography
8. உரையாடல் - Dialogue
9. இரட்டை வழக்கு மொழி - Diglossic Language

உயர்திணை அஃறிணை உயர்திணை
கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.
வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்.
உயர்திணை
முகிலன், கயல்விழி, தலைவி, ஆசிரியர், சுரதா
அஃறிணை
வயல், குதிரை, கடல், புத்தகம், மரம்
தொகைச் சொற்களை விரித்து எழுதுக.
(எ.கா) இருதிணை - உயர்திணை, அஃறிணை.
முக்கனி - மா, பலா, வாழை.
முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.
நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு.
ஐவகைநிலம் - குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை.
அறுசுவை - இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு.

இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.
1. அரசுக்கு தவறாமல் வரி செலுத்த வேண்டும்.
ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.
2. மழலை பேசும் மொழி அழகு.
இனிமைத் தமிழ் மொழி எமது.
3. அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை நடை பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி நடை.
4. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்.
எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்.
5. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் சென்றனர்.
குழந்தையை மெதுவாக நட என்போம்.
6. நீதி மன்றத்தில் தொடுப்பது வழக்கு.
'நீச்சத் தண்ணி குடி' என்பது பேச்சு வழக்கு.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham