மரபுத் தொடர்கள் (8th New Tamil Book இயல் 1 மொழி அறிவு) |
---|
தமிழ் மொழிக்கெனச் சில சொல் மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்படுகின்றன.
பறவைகளின் ஒலிமரபு ● ஆந்தை அலறும் ● காகம் கரையும் ● சேவல் கூவும் ● குயில் கூவும் ● கோழிகொக்கரிக்கும் ● புறா குனுகும் ● மயில் அகவும் ● கிளி பேசும் ● கூகை குழறும் தொகை மரபு ● மக்கள் கூட்டம் ● ஆநிரை ● ஆட்டு மந்தை வினைமரபு ● சோறு உண் ● தண்ணீர் குடி ● பூக் கொய் ● முறுக்குத் தின் ● கூடை முடை ● இலை பறி ● சுவர் எழுப்பு ● பால் பருகு ● பானை வனை சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. கோழி ………………………. (கூவும் / கொக்கரிக்கும்) 2. பால் …………………….. (குடி / பருகு) 3. சோறு ……………………… (தின்/ உண்) 4. பூ ………………………. (கொய் / பறி) 5. ஆ ……………………. (நிரை / மந்தை ) விடை 1. கொக்கரிக்கும் 2. பருகு 3. உண் 4. கொய் 5. நிரை மரபுப் பிழையை நீக்கி எழுதுக. சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள், அம்மா தந்த பாலைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள். விடை சேவல் கூவும் சத்தம் கேட்டுக்கயல் கண்விழித்தாள். பூக்கொய்ய நேரமாகிவிட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக்கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள். |
மரபுச்சொற்கள் (5th New Tamil Book இயல் 1) |
---|
மரபுச்சொற்கள்
● நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு. ஒலி மரபுச் சொற்கள் ● குரங்கு அலப்பும் ● புலி உறுமும் ● குயில் கூவும் ● யானை பிளிறும் ● ஆடு கத்தும் ● ஆந்தை அலறும் ● சிங்கம் கர்ச்சிக்கும், முழங்கும் ● மயில் அகவும் ● நாய் குரைக்கும் ● பாம்பு சீறும் விலங்குகளின் இளமைப்பெயர் மரபுச் சொற்கள் ● ஆட்டுக் குட்டி ● யானைக் கன்று ● கோழிக் குஞ்சு ● சிங்கக் குருளை ● குதிரைக் குட்டி ● புலிப் பறழ் ● குரங்குக் குட்டி ● கீரிப் பிள்ளை ● மான் கன்று ● அணிற்பிள்ளை வினைமரபுச் சொற்கள் ● அம்பு எய்தார் ● ஆடை நெய்தார் ● சோறு உண்டான் ● கூடை முடைந்தார் ● பூ பறித்தாள் ● மாத்திரை விழுங்கினான் ● நீர் குடித்தான் ● சுவர் எழுப்பினார் ● முறுக்கு தின்றாள் ● பால் பருகினான் தாவரங்களின் உறுப்புப்பெயர் மரபுச் சொற்கள் ● மா, பலா, வாழை - இலை ● ஈச்சம், தென்னை, பனை - ஓலை ● கம்பு, கேழ்வரகு, சோளம் - தட்டை ● நெல், புல், தினை - தாள் ● அவரை, கத்தரி, முருங்கை, வெள்ளரி - பிஞ்சு பூச்சிகள், பறவைகள், விலங்குகள் - இருப்பிட மரபுச் சொற்கள் ● கரையான் புற்று ● மாட்டுத் தொழுவம் ● கோழிப் பண்ணை ● சிலந்தி வலை ● நண்டு வளை ● ஆட்டுப் பட்டி ● குதிரைக் கொட்டில் ● குருவிக் கூடு ● எலி வளை ● யானைக்கூடம் Book Back சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 1. நம் முன்னோர்கள் ஒரு சொல்லை சொல்லியவாறே நாமும் சொல்வது அ) பழைமை ஆ) புதுமை இ) மரபு ஈ) சிறப்பு [விடை : இ) மரபு] 2. யானை ------------- அ) கத்தும் ஆ) பிளிறும் இ) கூவும் ஈ) அலறும் [விடை : ஆ) பிளிறும்] 3. 'ஆந்தை அலறும்' – என்பது ------------ அ) ஒலி மரபு ஆ) வினை மரபு இ) இளமைப்பெயர் மரபு ஈ) இருப்பிடப் பெயர் மரபு [விடை : அ) ஒலி மரபு] 4. புலியின் இளமைப் பெயர் …………………. அ) புலிப்பறழ் ஆ) புலிக்குட்டி இ) புலிக்கன்று ஈ) புலிப்பிள்ளை’ [விடை : அ) புலிப்பறழ்] 5. 'பூப்பறித்தாள்' என்பது ---------- அ) வினை மரபு ஆ) பெயர் மரபு இ) ஒலி மரபு ஈ) இளமைப்பெயர் மரபு [விடை : அ) வினை மரபு] ஆ. ஒலி மரபுகளைப் பொருத்துக. 1. சிங்கம் – கூவும் 2. அணில் – அலப்பும் 3. மயில் – முழங்கும் 4. குயில் – கீச்சிடும் 5. குரங்கு – அகவும் விடை 1. சிங்கம் – முழங்கும் 2. அணில் – கீச்சிடும் 3. மயில் – அகவும் 4. குயில் – கூவும் 5. குரங்கு – அலப்பும் இ. உயிரினங்களின் படங்களுக்கு உரிய ஒலிமரபை வட்டமிடுக. விடை ஈ. வினை மரபுகளைப் பொருத்துக. 1. நீர் – பறித்தாள் 2. முறுக்கு – எய்தான் 3. உணவு – குடித்தான் 4. அம்பு – தின்றான் 5. பூ – உண்டான் விடை 1. நீர் – குடித்தான் 2. முறுக்கு – தின்றான் 3. உணவு – உண்டான் 4. அம்பு – எய்தான் 5. பூ – பறித்தாள் மரபு என்றால் என்ன? நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு. |
(10th தமிழ் New Book இயல் 4 பொது) |
---|
இருதிணை
ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர். ஐம்பால் பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால்-பகுப்பு, பிரிவு). இஃது ஐந்து வகைப்படும். உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது. அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது. உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் வீரன், அண்ணன், மருதன் - ஆண்பால் மகள், அரசி, தலைவி - பெண்பால் மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால் அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும். எ.கா. யானை, புறா, மலை அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும். எ.கா. பசுக்கள், மலைகள் மூவிடம்: தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும். |
10th Old Tamil Book |
---|
மரபுச்சொற்கள் பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர். “நாய் கத்தியது" எனக் கூறுகிறோம். அவ்வாறு கூறுதல் கூடாது. "நாய் குரைத்தது” என்பதே உரிய மரபுத்தொடர். இவ்வாறு வரும் சில மரபுகள் குறித்து இங்குக் காண்போம்.
ஒலிமரபு ● ஆடு கத்தும் ● ஆந்தை அலறும் ● எருது எக்காளமிடும் ● காகம் கரையும் ● குதிரை கனைக்கும் ● கிளி பேசும் ● குரங்கு அலப்பும் ● குயில் கூவும் ● சிங்கம் முழங்கும் ● கூகை குழறும் ● நரி ஊளையிடும் ● கோழி கொக்கரிக்கும் ● புலி உறுமும் ● சேவல் கூவும் ● பூனை சீறும் ● புறா குனுகும் ● யானை பிளிறும் ● மயில் அகவும் ● எலி கீச்சிடும் ● வண்டு முரலும் வினை மரபு ● அம்பு எய்தார். ● ஆடை நெய்தார். ● உமி கருக்கினாள். ● ஓவியம் புனைந்தான். ● கூடை முடைந்தார். ● சுவர் எழுப்பினான். ● செய்யுள் இயற்றினான். ● சோறு உண்டான். ● தண்ணீர் குடித்தான். ● பால் பருகினாள். ● பூப் பறித்தாள். ● மரம் வெட்டினான். ● மாத்திரை விழுங்கினான். ● முறுக்குத் தின்றான். |
8th Old Tamil Book |
---|
மரபுச்சொற்கள் யானைக்குட்டி, யானைக்கன்று மேற்காணும் இருசொற்களில் மரபு பிறழ்ந்த சொல்லை உங்களால் கண்டறிய முடிகிறதா? யானைக்குட்டி என்பது மரபு பிறழ்ந்த சொல். யானைக்கன்று என்பதே மொழிமரபுக்கு ஏற்ற சொல். முன்னோர் எச்சொல்லை எப்படி வழங்கினரோ அச்சொல்லை அப்படியே ஏற்று நாமும் வழங்குதல் மரபு. நாம் நாள்தோறும் பயன்படுத்தும் மரபுச்சொற்கள் சிலவற்றை அறிவோம். விலங்குகளின் இளமைப்பெயர்கள் அணிற்பிள்ளை ● யானைக்கன்று ● நாய்க்குட்டி ● கீரிப்பிள்ளை ● சிங்கக்குருளை ● புலிப்பறழ் ● மான்கன்று ● பூனைக்குட்டி ● எருமைக்கன்று ● ஆட்டுக்குட்டி ● குதிரைக்குட்டி ● குரங்குக்குட்டி ● கழுதைக்குட்டி ● பன்றிக்குட்டி ● எலிக்குட்டி விலங்குகளின் வாழிடங்கள் ● ஆட்டுப்பட்டி ● குதிரைக்கொட்டில் ● கோழிப்பண்ணை ● மாட்டுத்தொழுவம் ● யானைக்கூடம் ● வாத்துப்பண்ணை விலங்கு பறவை இனங்களின் ஒலிமரபு ● ஆந்தை அலறும் ● கழுதை கத்தும் ● காக்கை கரையும் ● கிளி கொஞ்சும்/பேசும் ● நரி ஊளையிடும் ● புலி உறுமும் ● மயில் அகவும் ● யானை பிளிறும் ● குதிரை கனைக்கும் ● குயில் கூவும் ● கோழி கொக்கரிக்கும் ● சிங்கம் முழங்கும் தாவர உறுப்புப் பெயர்கள் ● ஈச்ச ஓலை ● சோளத்தட்டை மாவிலை ● வேப்பந்தழை தாழை ● மடல் தென்னையோலை ● மூங்கில் இலை ● கமுகங்கூந்தல் ● பனையோலை ● பலாஇலை ● வாழைஇலை ● நெற்றாள் காய்களின் இளநிலை ● அவரைப்பிஞ்சு ● தென்னங்குரும்பை ● மாவடு ● முருங்கைப்பிஞ்சு ● வாழைக்கச்சல் ● வெள்ளரிப்பிஞ்சு செடி கொடி மரங்களின் தொகுப்பிடம் ● ஆலங்காடு ● கம்பங்கொல்லை ● பனந்தோப்பு ● சவுக்குத்தோப்பு ● சோளக்கொல்லை ● பலாத்தோப்பு ● தென்னந்தோப்பு ● தேயிலைத்தோட்டம் ● பூந்தோட்டம் பொருள்களின் தொகுப்பு ● ஆட்டுமந்தை ● திராட்சைக்குலை ● மாட்டுமந்தை ● கற்குவியல் ● வேலங்காடு ● யானைக்கூட்டம் ● சாவிக்கொத்து ● பசுநிரை ● வைக்கோற்போர் பொருளுக்கேற்ற வினைமரபு ● சோறு உண் ● பழம் தின் ● கோலம் இடு ● தீ மூட்டு ● நீர் குடி ● பால் பருகு ● பாட்டுப் பாடு ● தயிர் கடை ● கவிதை இயற்று ● விளக்கை ஏற்று ● படம் வரை ● கூரை வேய் |
minnal vega kanitham