Type Here to Get Search Results !

அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)

0
Part C: Language - General English or General Tamil (SSLC Standard - 100 Questions) பொதுத் தமிழ்
அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)
எழுத்து:
• பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்- சந்திப்பிழை - குறில், நெடில் வேறுபாடு - லகர, ளகர, ழகர வேறுபாடு - னகர, ணகர வேறுபாடு - ரகர, றகர வேறுபாடு - இனவெழுத்துகள் அறிதல் - சுட்டு எழுத்துகள் - வினா எழுத்துகள் - ஒருமைப் பன்மை அறிதல்.
சொல்:
•வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் - அயற்சொல் - தமிழ்ச்சொல், எதிர்ச்சொல் வினைச்சொல் - எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் - இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்

எழுத்து:
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
1) “இன்மொழி” – பிரித்துஎழுதுக: (12/03/2022 TNPSC)
(அ) இன்+ மொழி
(ஆ) இ + மொழி
(இ) இன்ன + மொழி
(ஈ) இனிமை + மொழி
2) சேர்த்தெழுதுக–ஓடை + ஆட (12/03/2022 TNPSC)
(அ) ஓடைஆட
(ஆ) ஓடையாட
(இ) ஓடையோட
(ஈ) ஓடைவாட
3)பிழை திருத்துக–சரியான எண்ணடையைத் தெரிவு செய்க: ஓன்று+மரம் (12/03/2022 TNPSC)
(அ) ஒருமரம்
(ஆ) ஓர் மரம்
(இ) ஒன்று மரம்
(ஈ) மூன்றும் சரி

சந்திப்பிழை
1) சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக: (2022 TNPSC)
1. நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பேன்
2. நேரத்தை சரியாகக் கடைபிடிப்பேன்
3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது
4. வாழ்க்கைப் பயணமே வேறுப்பட்ட பாடங்களை கற்றுத் தருகிறது
(அ) 1 மற்றும் 3
(ஆ) 2 மற்றும் 4
(இ) 2 மற்றும் 3
(ஈ) 1 மற்றும் 4

குறில், நெடில் வேறுபாடு
1) குறில் நெடில் அடிப்படையில் பொருள் வேறுபாடு காண்க. (2022 TNPSC)
விடு-வீடு
(A) தங்குமிடம் - விட்டுவிடுதல்
(B) விட்டுவிடுதல்- தங்குமிடம்
(C) விட்டுவிடுதல் - தவிர்த்துவிடுதல்
(D) தங்குமிடம் - தாங்குமிடம்
2) குறில் நெடில் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்க. (2022 TNPSC)
சிலை - சீலை
(A) சிற்பம் - புடவை
(B) புடவை - சிற்பம்
(C) கற்சிலை - ஓவியம்
(D) சிற்பம் - ஒழுக்கம்

லகர, ளகர, ழகர வேறுபாடு - னகர, ணகர வேறுபாடு - ரகர, றகர வேறுபாடு
1) வலி, வளி, வழி - ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
a) துன்பம், காற்று, நெறி
b) காற்று, நெறி, துன்பம்
c) நெறி, காற்று, துன்பம்
d) துன்பம், நெறி, காற்று
2) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக.
a) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின
b) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின
c) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசிந
d) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசிந
3) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் கண்டறிக [பரவை - பறவை]
a) பரவுதல் - பறத்தல்
b) ஆழி - இறகு
c) பரப்புதல் - பெயர்ச்சொல்
d) கடல் - புள்

இனவெழுத்துகள் அறிதல்
1) "ஐ", "ஔ" என்ற எழுத்துக்களின் இன எழுத்துகளைக் கண்டறிக (2022 TNPSC)
(A) அ.இ
(B) இ, உ
(C) ஈ, ஓ
(D) அய், அவ்
இனவெழுத்துகள் அறிதல்
6th தமிழ் இயல் 4 - இன எழுத்துகள்

சுட்டு எழுத்துகள் - வினா எழுத்துகள்
1) சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை ஆகிய மூன்று விடைகளை எவ்வாறு அழைப்பர்? (2022 TNPSC)
(அ) மறைமுக விடைகள்
(ஆ) வெளிப்படை விடைகள்
(இ) குறிப்பு விடைகள்
(ஈ) நேரெதிர் விடைகள்
2) விடை வகைகள்:- 'கடைத்தெரு எங்குள்ளது? என்ற வினாவிற்கு. 'இப்பக்கத்தில் உள்ளது' எனக்கூறல் (2023 TNPSC)
(A) ஏவல் விடை
(B) சுட்டு விடை
(C) நோவிடை
(D) மறைவிடை
3) பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது? (2018 Group 2)
(A) கொளல் வினா
(B) அறியா வினா
(C) ஐய வினா
(D) ஏவல் வினா
4) சரியான வினாச்சொல் அமைந்த தொடரைத் தேர்க. (2022 TNPSC)
(A) இனஎழுத்துகள் என்றால் எப்போது?
(B) இனஎழுத்துகள் என்றால் யார்?
(C) இனஎழுத்துகள் என்றால் ஏன்?
(D) இனஎழுத்துகள் என்றால் என்ன?

ஒருமைப் பன்மை அறிதல்.
1) ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக: (2022 TNPSC)
(அ) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கின்றன.
(ஆ) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கின்றார்கள்
(இ) பறவைகள் கண்டம் விட்டு கண்டம பறக்கின்றது
(ஈ) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கிறார்

சொல்:
வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல்
1) ‘வா’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று? (2024 Group 4)
(A) வந்தாள்
(B) வந்த
(C) வந்து
(D) வந்தவர்
2) தா என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்? (2024 Group 4)
(A) தந்து
(B) தந்த
(C) தந்தது
(D) தந்தவர்
3) வேர்ச்சொல்லை தேர்வு செய்க
மலர் வீட்டுக்குச் சென்றாள்? (2024 Group 4)
(A) சென்ற
(B) செல்ல
(C) செல்
(D) சென்று

பெயரெச்சம் வகை அறிதல்
1) இலக்கணக்குறிப்புத் தருக – குற்றமிலா, சிந்தாமணி (9th New தமிழ் இயல் 1)
அ) 6ம் வேற்றுமைத்தொகை
ஆ) முதல் வேற்றுமைத்தொகை
இ) 8ம் வேற்றுமைத்தொகை
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2) இலக்கணக் குறிப்புத் தருக – தேர்ந்த (9th தமிழ் புதிய புத்தகம் இயல் 7)
அ) பெயரெச்சம்
ஆ) வியங்கோள் வினைமுற்று
இ) வினையெச்சம்
ஈ) வினைத்தொகை
பெயரெச்சம் வகை அறிதல்
அ) தெரிநிலைப் பெயரெச்சம்
ஆ) குறிப்புப் பெயரெச்சம்
இ) எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என வகைப்படும்.

அயற்சொல் - தமிழ்ச்சொல்
அயற்சொல் - தமிழ்ச்சொல்
i) நிர்ப்பந்தம் - வலுக்கட்டாயம்
ii) நிர்வாகம் - நடத்துகை, பொறுப்பு, ஆளுமை

எதிர்ச்சொல் வினைச்சொல்
---------------

எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல்
---------------

இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்
1) இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக. (2022 TNPSC)
மாறு, மாற்று
(A) மாறுபாடு அறிந்து மாற்று
(B) மனிதராக மாறு, மற்றவரையும் மாற்று
(C) மாறுபாடு அற்ற சமூகமாக மாறு
(D) மனிதராக மாரு சமூகத்தை மாற்று
2) இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக. (2022 TNPSC)
சேர்ந்து - சேர்த்து
(A) மாணவர்கள் சேர்த்து சண்டையிட்டனர் ஆசிரியர் சேர்ந்து வைத்தார்.
(B) மாணவர்கள் சேர்ந்து சண்டையிட்டதால் ஆசிரியர் சேர்த்து வைத்தார்
(C) ஆசிரியர் சேர்ந்து வைத்தார் மாணவர்கள் சேர்த்து சண்டையிட்டனர்
(D) மாணவர்கள் சேர்த்தார்களா? ஆசிரியர் சேர்ந்து வைத்தார்
3) ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக. (சரியானதை தேர்ந்தெடு) (2022 TNPSC)
விரிந்தது - விரித்தது
(A) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது; மயில் தோகையை-விரிந்தன.
(B) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
(C) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரிந்தன.
(D) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது: மயில் தோகையை விரித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்