Book Back பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் |
---|
1) அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஆகும்.
அ) அறிவுடைமை ஆ) அறிவு உடைமை இ) அறியுடைமை ஈ) அறிஉடைமை [விடை : அ) அறிவுடைமை] 2) இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் அ) இவை எட்டும் ஆ) இவையெட்டும் இ) இவ்வெட்டும் ஈ) இவ்எட்டும் [விடை : ஆ) இவையெட்டும்] 3) நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) நன்றி+யறிதல் ஆ) நன்றி+அறிதல் இ) நன்று+அறிதல் ஈ) நன்று+யறிதல் [விடை : ஆ) நன்றி+அறிதல்] 4) பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) பொறுமை+உடைமை ஆ) பொறை +யுடைமை இ) பொறு+யுடைமை ஈ) பொறை +உடைமை [விடை : ஈ) பொறை +உடைமை] Proof 5) 'பாட்டிசைத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) பாட்டி+சைத்து ஆ) பாட்டி + இசைத்து இ) பாட்டு + இசைத்து ஈ) பாட்டு + சைத்து [விடை : இ) பாட்டு+இசைத்து] 6) 'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) கண்+உறங்கு ஆ) கண்ணு + உறங்கு இ) கண்+றங்கு ஈ) கண்ணு+றங்கு [விடை : அ) கண்+உறங்கு] 7) வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) வாழையிலை ஆ) வாழைஇலை இ) வாழைலை ஈ) வாழிலை [விடை : ஆ) வாழைஇலை] 8) கை+அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) கைமர்த்தி ஆ) கை அமர்த்தி இ) கையமர்த்தி ஈ) கையைமர்த்தி [விடை : இ) கையமர்த்தி] 1) உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் அ) மறைந்த ஆ) நிறைந்த இ) குறைந்த ஈ) தோன்றிய [விடை : அ) மறைந்த] 9) "தாலாட்டு" - பிரிக்கும் முறை அ) தா + லாட்டு ஆ) தாலா + அட்டு இ) தா + இல் + ஆட்டு ஈ) தால் + ஆட்டு [விடை: ஈ) தால் + ஆட்டு] 10) பொங்கல் +அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) பொங்கலன்று இ) பொங்கலென்று ஆ)பொங்கல் அன்று ஈ) பொங்கஅன்று [விடை : அ) பொங்கலன்று] 11) போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) போகி + பண்டிகை ஆ) போ + பண்டிகை இ) போகு + பண்டிகை ஈ) போகிப் + பண்டிகை [விடை : அ) போகி + பண்டிகை] 12) பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) பொருளு+டைமை ஆ) பொரு+ளுடைமை இ) பொருள்+உடைமை ஈ) பொருள்+ளுடைமை [விடை : இ) பொருள்+உடைமை] 13) உள்ளுவது+எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) உள்ளுவதுஎல்லாம் ஆ) உள்ளுவதெல்லாம் இ) உள்ளுவத்தெல்லாம் ஈ) உள்ளுவதுதெல்லாம் [விடை : ஆ) உள்ளுவதெல்லாம்] 14) பயன்+இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) பயனிலா ஆ) பயன்னில்லா இ) பயன்இலா ஈ) பயன்இல்லா [விடை : அ) பயனிலா] 15) “அசைவிலா" பிரிக்கும் முறை அ) அசை + விலா ஆ) அசைவு + இலா இ) அசை + வில் + ஆ ஈ) அசைவி + இலா [விடை: ஆ) அசைவு + இலா] |
கலைச்சொல் அறிவோம். |
---|
1. நல்வரவு – Welcome
2. சிற்பங்கள் – Sculptures 3. சில்லுகள் – Chips 4. ஆயத்த ஆடை – Readymade Dress 5. ஒப்பனை – Makeup 6. சிற்றுண்டி – Tiffin |
ஆசாரக்கோவை |
---|
நூல் வெளி
• ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். • இவர் பிறந்த ஊர் கயத்தூர். • ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது. |
கண்மணியே கண்ணுறங்கு |
---|
நூல் வெளி
• தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தால் என்பதற்கு நாக்கு என்று பொருள் நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது. • குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு. |
சொல்லும் பொருளும் |
---|
• நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை
• ஒப்புரவு - எல்லோரையும் சமமாக பேணுதல் • நட்டல் - நட்புக் கொள்ளுதல் • நந்தவனம் - பூஞ்சோலை • பண் - இசை • பார் - உலகம் • இழைத்து - பதித்து 1. “பார்” என்ற சொல்லின் பொருள் _____ அ) கடை ஆ) உலகம் இ) கடவுள் ஈ) கன்னன் விடை: ஆ) உலகம் 2. “பண்” சொல் தரும் பொருள் ______ அ) இசை ஆ) உணவு இ) கோயில் ஈ) புகழ் விடை: அ) இசை 3. “தால்" என்னும் சொல் தரும் பொருள் ______ அ) பாதம் ஆ) கால் இ) நாக்கு ஈ) நெல் விடை : இ) நாக்கு தொகைச்சொற்களின் விளக்கம் • முத்தேன் - கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன் • முக்கனி - மா, பலா, வாழை • முத்தமிழ் - இயல், இசை, நாடகம் |
லகர, ளகர, ழகர வேறுபாடு னகர, ணகர வேறுபாடு ரகர, றகர வேறுபாடு |
---|
மணம் - மனம்
மேலே உள்ள இரண்டு சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு. இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம். ண, ன, ந ல, ழ, ள ர,ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும். ண, ன, ந - எழுத்துகள் ண - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது. ன - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது. ந - நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது. (ட், ண்) (த், ந்) (ற், ன்) ஆகியவை இன எழுத்துகள். இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும், தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும், றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன. தெரிந்து தெளிவோம் சொற்களில் ண, ன இடம்பெறும் வகை ட என்னும் எழுத்துக்கு முன் ண் வரும் (எ.கா.) கண்டம், வண்டி, நண்டு ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும் (எ.கா.) மன்றம், நன்றி, கன்று ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் என்பதை உணர்க. (எ.கா) வாணம் - வெடி பணி - வேலை வானம்-ஆகாயம் ல, ள, ழ – எழுத்துகள் ல - நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது 'வ' போல இருப்பதால் 'வகர லகரம்' என்கிறோம். ள - நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது 'ன' போல இருப்பதால் 'னகர னகரம்' என்று கூறுவர். ழ - நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் முகரம் தோன்றும். (எகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது 'ம' போல இருப்பதால் 'மகர ழகரம்' என்று கூறுவது இலக்கண மரபு. பொருள் வேறுபாடு உணர்க. விலை - பொருளின் மதிப்பு விளை - உண்டாக்குதல் விழை - விரும்பு இலை - செடியின் இலை இளை - மெலிந்து போதல் இழை - நூல் இழை ர, ற – எழுத்துகள் ர - நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம். ற - நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம். பொருள் வேறுபாடு உணர்க ஏரி - நீர்நிலை கூரை - வீட்டின் கூரை ஏறி - மேலே ஏறி கூறை - புடவை |
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. |
---|
1. சிரம் என்பது _____ (தலை / தளை ) விடை : தலை 2. இலைக்கு வேறு பெயர் _____ (தளை / தழை) விடை : தழை 3. வண்டி இழுப்பது ____ (காலை/காளை) விடை : காளை 4. கடலுக்கு வேறு பெயர் ____ (பரவை / பறவை) விடை : பரவை 5. பறவை வானில் _____ (பறந்தது/பரந்தது) விடை : பறந்தது 6. கதவை மெல்லத் _____ (திறந்தான் / திரந்தான்) விடை : திறந்தான் 7. ____ வீசும். (மனம்/மணம்) விடை : மணம் 8. புலியின் ____ சிவந்து காணப்படும். (கன்/கண்) விடை : கண் 9. குழந்தைகள் _____ விளையாடினர். (பந்து/பன்து) விடை : பந்து 10. வீட்டு வாசலில் ______ போட்டனர். (கோலம்/கோளம்) விடை : கோலம் |
தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக. |
---|
1) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின. என் விட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின. 2) தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர். தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர். 3) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது. வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது. சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக. 1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில் 2. மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன் 3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும் 4. மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில் [விடை : 3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்] |
ல, ள, ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க. |
---|
1. அலகு – பறவை மூக்கு அளகு – பெண் பறவை அழகு – வனப்பு 2. அலை – திரை, திரி அளை – தயிர் அழை – கூப்பிடு 3. இலை – தழை இளை – மெலி இழை – நூல் 4. ஒலி – ஓசை ஒளி – வெளிச்சம் ஒழி – கெடு 5. கலை – வித்தை களை – நீக்க கழை – மூங்கில் 6. கிலி – அச்சம் கிளி – ஒரு பறவை கிழி – துண்டாக்கு 7. தலை – சிரசு தளை – கட்டுதல் தழை – இலை 8. தால் – நாக்கு தாள் – கால், பாதம் தாழ் – பணி 9. வலி – வலிமை வளி – காற்று வழி – பாதை 10. வால் – விலங்குகளின் வால் பகுதி வாள் – கத்தி வாழ் – உயிர் வாழ். |
மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம் ஒலித்துக் காட்டுக. |
---|
1. அரம் – ஒரு கருவி
2. அறி – தெரிந்து கொள் 3. உரிய – சொந்தமான 4. அருகு – பக்கம் 5. அரை – பாதி 6. இரங்கு – மனமுருகு 7. இறங்கு – கீழிறங்கு 8. உரை – சொல் 9. கூரை – முகடு 10. தரு – மரம் 11. மாரி – மழை 12. மறை – வேதம் 13. மறம் – வீரம் 14. ஆழி – கடல் 15. குழம்பு – காய்கறிக் குழம்பு 16. சோளம் – தானியம் 17. ஆணை – கட்டளை 18. கணி – கணக்கிடு 19. வளி – காற்று 20. விழி – கண்திற |
பத்தியைப் படித்து வினாக்கள் அமைக்க. |
---|
முகிலன் பொங்கல் விழாக் கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்குச் செவலை என்ற காளை இருந்தது. அக்காளையை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்துக் கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான்.
(எ. கா.) முகிலன் யார் வீட்டிற்குச் சென்றான்? விடை 1. முகிலன் எதற்காகத் தாத்தா வீட்டிற்குச் சென்றான்? 2. முகிலனின் தாத்தா வீட்டில் என்ன இருந்தது? 3. முகிலனின் வழக்கம் என்ன? 4. முகிலன் தாத்தாவிற்கு எவ்வாறு உதவுவான்? 5. முகிலன் தன் தாத்தா பாட்டியோடு எவ்விழாவைக் கொண்டாடுவான்? |
வாழை+இலை=வாழையிலை
பதிலளிநீக்குminnal vega kanitham